-
http://i59.tinypic.com/21oslki.jpg
http://i59.tinypic.com/jucz7q.jpg
திரு.பாஸ்கர் அவர்களே,
‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தக பதிவுக்கு நன்றி. சிவந்த மண் திரைப்படம் (இந்தியையும் சேர்த்து) கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் நஷ்டம் என்று ஸ்ரீதர் கூறியிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
//கணக்கு பார்த்தபோது ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம்தான். கண்ணை மூடிக்கொண்டு இஷ்டப்படி செலவு செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு புரிந்தது.செலவில் சிக்கனம் காட்டியிருந்தால் லாபமில்லாவிட்டாலும் நஷ்டத்தையாவது தவிர்த்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டம் என்றாலும்கூட சிவந்தமண் எனக்கு திருப்தி அளித்த படம். சிவாஜியுடன் நான் இணைந்து பணியாற்றிய அந்தப்படம் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப ஆறுதல்//
இதைத்தான் ஸ்ரீதர் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் சித்ராலயாவுக்கு நஷ்டம் என்று கூறியிருக்கிறார். சிவந்த மண் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியுள்ளது. நல்ல வசூலும் கிடைத்துள்ளது. ஆனால், போட்ட முதலீடு அளவுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இதைத்தான் அந்தப் பதிவிலும் சிவந்த மண்ணுக்குப் பிறகு ஸ்ரீதருக்கு இறங்கு முகம் என்று குறிப்பிட்டுள்ளனர். பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் ஸ்ரீதர் இதைத்தான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதாக கூறியிருந்தார்.
சரி. நீங்கள் முதலில் என்ன சொன்னீர்கள்? அதை எழுதியது ஸ்ரீதரே அல்ல என்று கூறினீர்கள். பின்னர், கல்கியில் வந்தது போல புத்தகத்தில் இல்லை என்றீர்கள். அதை எழுதியவர் சிவந்தமண் பற்றி ஸ்ரீதர் கூறியதை மறைத்து பொய் எழுதிவிட்டார் என்று கூறினீர்கள்.
ஆனால், இப்போது ஸ்ரீதர்தான் எழுதினார். கல்கியிலும் புத்தகத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றெல்லாம் சொல்லவில்லையா? நீங்கள் கூறியுள்ளபடி...
//எந்த விஷயத்தயும் விமர்சிக்கலாம்! ஆனால் நாம் சொல்லும் செய்திகளில் பொய், புரட்டு இருக்ககூடாது! எந்த ஒரு செய்தியையும் அதை சொன்னவர்கள் சொன்ன அர்த்தத்தில்
கூறாமல் மாற்றி வேறு அர்த்தம் கொள்ளும்படி திரித்து எழுதகூடாது! மீண்டும் கூறுகிறேன் நண்பரே என் பதிவுகளில் வேகம் இருக்கலாம், ஆனால் ஒரு
போதும் உண்மையற்ற செய்திகளோ, திரித்து எழுதுவதோ இருக்காது! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!//
அதையே நானும் உங்களுக்கு கூறுகிறேன்.
நாடோடி மன்னன் படம் குறித்து பெரியவர் சொன்னது உண்மைதான். படம் நன்கு வசூல் செய்தாலும் தயாரிப்பு செலவு மிக அதிகம் அந்தக் காலத்தில். அதனால்தான் பெரிசாக பொருள் கிடைக்கவில்லை என்று திரு.சக்ரபாணி அவர்கள் அப்படி கூறியிருக்கிறார். அதேதான் சிவந்த மண்ணிலும் நடந்திருக்கிறது. நன்றாக ஓடினாலும் எதிர்பார்த்தது வசூல் ஆகவில்லை.
நீங்கள் கூறினீர்கள் நம்நாட்டை விட சிவந்த மண் அதிக சென்டர்களில் 100 நாள் ஓடியது என்று. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், வசூல் ரீதியாக பார்த்தால் சிவந்தமண்ணை விட நம்நாடு அதிகம் (ஓவர் ஆல் தமிழ்நாடு) என்றுதான் ஆரம்பத்தில் இருந்து கூறிவருகிறோம்.
முக்கியமான விஷயம். திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன். சந்தேகம் இருப்பவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
திரையுலகில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தான் மக்கள் திலகத்தை சந்தித்து உதவி கோரியது குறித்தும், மக்கள் திலகம் உதவியது குறித்தும் அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.25,000த்தை உரிமைக்குரல் சம்பளத்தில் கழித்துக் கொண்டார் என்றும் அந்த புத்தகத்தில் உள்ளது. திரு.ஆர்.கே.எஸ். கூறியபடி அவற்றையும் பதிவிட்டு உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,
‘சித்ரா/ சக்தி பெயர் மாற்றம் தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியவன் நான்’ என்று கூறியிருக்கிறீர்கள். மனதுக்குள்ளேயே தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அது எனக்குத் தெரியாது. இப்போதுதான் முதல் முறையாக வெளிப்படையாக அறிவிக்கிறீர்கள். தவறு என்று ஒப்புக் கொண்டதற்கும் தவறை திருத்தியதற்கும் நன்றி.
நானும் ஒப்புக் கொள்கிறேன். ராஜராஜசோழன் படம் ராம் தியேட்டரில் வெளியானதாக தவறாக சொல்லிவிட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். எப்படி உங்களுக்கு தவறு ஏற்பட்டதோ அதே போன்ற தவறுதான் எனக்கும் ஏற்பட்டு விட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
ஆனால், ராம் தியேட்டரில் படம் வெளியாகவில்லை என்றாலும் கூட ராஜராஜசோழன் படம் தமிழகத்தின் எந்த ஒரு திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடவில்லை. அதிகபட்சமாக 97 நாட்கள் (என்று நினைவு) ஓடியது. அந்த திரையரங்கின் பெயரை நீங்கள் ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள். இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இரண்டு தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியதாக திரு.வினோத் அவர்கள் கூறியதற்கு மறுப்பு தெரிவித்தீர்கள்.
‘சத்தியத்தில் 160 நாட்கள் என்றே வைத்துக் கொண்டாலும் அது 175 ஆகிவிடாதே’ என்று கூறினீர்கள். அதேபோல, 97 என்பது 100 ஆகிவிடாதே.
உங்களுக்கு எப்படி சக்தி/சித்ரா தடுமாற்றம் ஏற்பட்டதோ, எனக்கு எப்படி ராம் தியேட்டர் தடுமாற்றம் ஏற்பட்டதோ அதேபோலத்தான் சாந்தியில் உள்ள கல்வெட்டிலும் ராஜராஜசோழன் 100 நாட்கள் ஓடியதாக தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அவர்களும் செய்யவில்லை. எல்லாரும் மனிதர்கள்தானே.
அதேபோல, சாதனை சிகரங்களில் நீங்கள் கூறியுள்ளபடி, சென்னையில் ராஜா திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடவில்லை. 2 தியேட்டர்களில்தான் ஓடியது. நீங்கள் அகஸ்தியாவையும் சேர்த்திருக்கிறீர்கள்.
இதுபற்றி, மக்கள் திலகம் திரியில் சமீபத்தில் குமார் சார் தெரிவித்தபோது நீங்கள் மறுக்கவில்லை. ஆனால், துள்ளிவருகுது வேல் பட விளம்பரம் தொடர்பாக குமார் சார் தவறுதலாக தேதியை மாற்றி சொல்லியபோது உடனே மறுப்பு தெரிவித்தீர்கள். அதுபோல, ராஜா 2 தியேட்டர்களில்தான் சென்னையில் ஓடியது என்று திரு.குமார் சார் கூறியதை நீங்கள் மறுக்கவில்லை.
சொல்லப்போனால், ராஜா திரைப்படம் தேவிபாரடைசில் 60வது நாளின்போதே 100 நாளுடன் படம் கடைசி என்று பத்திரிகையில் விளம்பரம் வேறு கொடுக்கப்பட்டது. அதிலும் 100வது நாள் அன்று இரவுக்காட்சி படம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல, திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடவில்லை. ஆதாரம்.
1. சாந்தி தியேட்டர் கல்வெட்டில் 100 நாள் ஓடியதாக குறிப்பிடப்படவில்லை.
2. நண்பர் திரு.சந்திரசேகர் வெளியிட்ட வரலாற்றின் வரலாறு (நக்கீரன் பதிப்பகம்) புத்தகத்தின் இறுதியிலும் அந்தப் படம் 100 நாட்கள் ஓடியதாக குறிப்பிடப்படவில்லை.
3. கடந்த வியாழக்கிழமை அன்று கூட நண்பர் திரு.ஆதிராம் அவர்கள் திருவருட் செல்வர் சுமாராகத்தான் ஓடியது என்று குறிப்பிட்டிருந்தாரே. என்னை நம்ப வேண்டாம். அவரை நம்பலாமே.
என்னைப் பற்றி நிறைய அனுமானங்கள் வைத்திருக்கிறீர்கள். நான் தஞ்சாவூர்காரன் என்பது உட்பட. நான் தனிப்பட்ட முறையில் கேட்ட கேள்விகளுக்கு கழக அரசியல்பாணி என்று கூறுகிறீர்கள். எதற்காக கழகங்களை இழுக்கிறீர்கள்?
ஒருவர் எந்த நடிகருக்கும் ரசிகராக இருக்கட்டும். எந்தக் கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கட்டும். அது அவர்கள் விருப்பம், உரிமை. கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் இருக்கட்டும். அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால், இந்த மண்ணில் பெரியார் என்று ஒருவர் பிறக்காமல் போயிருந்தால் இன்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ள தமிழர்கள் மாடு மேய்க்கத்தான் போயிருப்பார்கள். இதை நன்றி உள்ள, மனசாட்சி உள்ள எந்த தமிழனும் மறக்கவோ, மறுக்கவோ மாட்டான். இது ஒன்றே போதும். நான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்பதை பெருமிதத்துடன் கூறிக்கொள்ள.
‘கோபத்தோடு வராதீர்கள் நண்பராக வாருங்கள் ’என்று கூறுகிறீர்கள். நான் எப்போது விரோதியாக வந்தேன்? எல்லாரும் எப்போதும் எனக்கு நண்பர்கள்தான். நீங்கள்தான் கோபப்பட்டீர்கள்.
‘சரடு விடுகிறேன்’ என்று கூறினீர்கள். திரு.சைலேஷ் இதை சுட்டிக் காட்டியதும் வருத்தம் தெரிவித்ததுடன் ‘உங்களை அல்ல’ என்று குறிப்பிட்டீர்கள்.
எனக்கு ராஜராஜசோழன் போபியா என்றீர்கள். ஆனால், தேவையே இல்லாமல் கழகங்களை இந்த விவாதத்தில் இழுக்கும் நீங்கள்தான் அண்ணா, பெரியார், கழகங்கள் என்ற பெயர்களை கேட்டாலே இடிகேட்ட நாகம் போல நடுங்குகிறீர்கள் என்று கருதுகிறேன்.
‘அண்ட....’ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். இதற்குத்தான் நான் பதில் சொன்னேன்.
எல்லாவற்றையும் விட உச்சமாக பொழுதுபோக்கு அரங்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை ஒப்பிட்டு என்னை குத்திக்காட்டினீர்கள். திரு.யுகேஷ் பாபு சுட்டிக்காட்டியபோது அதை திருத்திக் கொண்டதற்கும் மன்னிப்பு கோரியதற்கும் நன்றி. இருந்தாலும், ‘நாங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் போக விரும்பும் இடம்’ என்று சமாளித்திருப்பதுடன் மறுபடியும் கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த தலத்தில் நம்பிக்கையாளர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் (அங்கு மட்டும்) என்பது உங்களுக்குத் தெரியாதா?
வாதத்தை வாதத்தால் சந்தியுங்கள். சாதனை சிகரங்களில் இருக்கும் தவறான தகவல்களை (பொய்யான என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை) அம்பலப்படுத்துகிறானே? மறுக்க முடியவில்லையே? என்ற ஆத்திரத்தில் வழிபாட்டு தலத்தை குறிப்பிட்டு என்னை குத்திக்காட்டுவது நியாயமா?
நீங்கள் பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரிப்படிப்பையும் தாண்டி அதிகம் படித்தவர் என்று உங்கள் எழுத்துக்களில் இருந்து தெரிகிறது. அப்படிப்பட்ட நீங்கள், வரைமுறை கடந்து வழிபாட்டுத் தலத்தைக் கூறி தாக்குவதும் கிண்டல் செய்வதும் உங்களைப் போன்ற மெத்தப்படித்த நூலோர்களுக்கு அழகல்லவே? வருத்தப்படுகிறேன் திரு. முரளி அவர்களே.
இதற்கும் கூட ‘நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள். சாதுர்யமாக எழுதுகிறீர்கள், நான் அப்படி சொல்லவில்லை’ என்றெல்லாம் சாமர்த்தியமாக பதிலளிப்பீர்கள்.என்றாலும் இந்த விவாதத்தில் இதற்கு மேல் உங்களுடன் எதிர்வாதம் செய்யப்போவதில்லை. தங்களின் உயர்ந்த பண்புக்கு மிக்க நன்றி திரு.முரளி அவர்களே.
ஆனால், நல்லோரும் நடுநிலையாளர்களும் நான் சொல்வதில் உள்ள நியாயத்தை சிந்திக்கட்டும் என்று அருள் கூர்ந்து வேண்டுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
-
-
-
சில நாட்களாக எனக்கு கிடைத்த அனுபவம் ....
நாம் எந்த மாதிரி சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது தெளிவாகிறது..
பெரிய படிப்பினை...
மனிதர்களை அவர்கள் சுபாவத்தை புரிந்து கொள்ள மேலும் பல சந்தர்ப்பம் ...
தனிப்பட்ட ஒரு மனித விமர்சனம், தவறு என்று தெரிந்தாலும் அதை உணராமல் மற்றவர் மீது பழி போடுவது, நான் எனது தான் ...என்றுள்ள இன்றைய அரசியல் சூழ்ச்சி எங்கிருந்து வந்தது என புரிய வைப்பது , திறமையை மதிக்காமல் ஒருவரை தாழ்த்துவதில் இன்பம் காண்பது, ஊடக இருட்டடிப்பு , சுயநலம் கருதி எண்ணம் செயல் வாழ்க்கை என எல்லாவற்றிலும் போலியை வெளிக்காட்டுவது....மனதுக்குள் உண்மையை நினைத்தாலும் வெளியில் மாற்றிச் சொல்வது ....நடுநிலைமை, நியாயம் பள்ளி பாடத்தில் தான் உள்ளது ...
இது தான் நாம் வாழ்க்கையில் கற்ற பாடமா ? சொன்ன சொல்லை திரும்ப பெற முடியாது ஆனால் எழுதிய எழுத்தை கூடவா திரும்பி படிக்க முடியாது ?
எழுத கூடாது என நினைத்தேன் ஆனால் மனசாட்சி கேட்கவில்லை ....
என்னவோ போங்க நாம் சொல்லித்தான்...எல்லாம் மாறபோகிறதா ?
நம்ம சாதனையை பேச நிறைய விஷயம் இருக்கு ...சரக்கும் இருக்கு ....அப்புறம் என்ன ??
சுந்தர பாண்டியன்
-
திரு கலைவேந்தன் அவர்களே!
கல்கியில் ஸ்ரீதர் எழுதிய தொடரை நான் அந்த காலத்திலேயே படித்தவன் என்று என் பதிவுகளில் பலமுறை கூறியுள்ளேன்!
நீங்கள் சந்திரமௌலி புத்தகத்தில் இருந்ததாக பதிவிட்டவை ஸ்ரீதரால் எழுதபட்டவை அல்ல என்பது தான் என் வாதம்!
சந்திர மௌலி புத்தகத்தை நான் இன்றுவரை படித்தது இல்லை! சென்னை நண்பர் அனுப்பிய அந்த புத்தகத்தின் ஜெராக்ஸ் பக்கங்களை தான் நானும் பார்த்தேன்! நீங்கள் பதிவிட்ட அண்டப்புளுகு பதிவுகள் கல்கியிலும் இல்லை! நீங்கள் கூறிய புத்தகத்திலும் இல்லை! என்பது இப்போது எல்லோருக்கும்
புரிந்து விட்டது! இப்போது தமிழ் சிவந்தமண் லாபம் தான் , ஹிந்தி தர்த்தி நஷ்டம், மொத்தத்தில் நஷ்டம் என்று தான் கூறினேன் என்று மாற்றி பேசுகிறீர்கள்!
உங்கள் பொய் பதிவுகளில் அப்படியா சொன்னீர்கள்? உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது!
உண்மையில் தூங்குபவர்களை எழுப்பிவிடலாம்! தூங்குவது போல நடிப்பவர்களை எந்த காலத்திலும் எழுப்ப முடியாது!
பொதுவான பார்வையாளர்கள் உண்மை எது? பொய் எது? என்று முடிவு செய்யட்டும்!
நன்றி !
-
அன்பு நண்பர்களே !
சிவந்தமண் நஷ்டம் என்று ஒப்பாரி வைத்தவர்கள் நம் உண்மை பதிவுகளை பார்த்தபிறகு ஹிந்தியில் தான் நஷ்டம்! தமிழில் லாபம் ! மொத்தத்தில் நஷ்டம்
என்று தான் கூறினோம் என்று வழக்கம் போல் plate மாற்றி போடுகிறார்கள்!
ஸ்ரீதர் எல்லா மொழிகளிலும் எடுத்து நஷ்டம் அடைவதற்கு சிவாஜி எப்படி பொறுப்பாவார்? கொஞ்சமாவது நியாயமாக பேச வேண்டாமா?
சினிமாவில் சிவாஜி தன் அபார நடிப்பாற்றலால் பெரும் வரலாற்று சாதனை படைத்தார்! அரசியலில் நேரத்துக்கு தகுந்தாற்போல மாற்றி பேசும் திறமை
இல்லாததால் வெற்றிபெற முடியவில்லை !
நன்றி !