Originally Posted by
RAGHAVENDRA
ஞான ஒளி ... சில நினைவுகள் ... ஏற்கெனவே முன்னர் இடம் பெற்றிருக்கக் கூடும்...
அது வரை நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் செய்திருந்த சாதனைகள் அவ்வளவாக வெளியுலகில் தெரியாமல் இருந்திருந்தாலும் அவற்றையும் நினைவூட்டும் வண்ணம் தன்னுடைய box office ஆளுமையை ஆணித்தரமாக வலுவாக நிலைநிறுத்திய ஆண்டாக 1972 அமைந்தது. 20 ஆண்டுகளில் 200 ஆண்டுகள் பேசப் படக் கூடிய சாதனையை நிகழ்த்தி விட்டு அமைதியாக ஆரவாரமின்றி ஆர்ப்பாட்டமின்றி தொடர்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் 1972 குறிப்பிடத் தக்கதாக அமைந்தது மட்டுமின்றி சிவாஜி ரசிகர்களின் உள்ளத்தில் உவகை பொங்க வைத்து லட்சக்கணக்கான புதிய ரசிகர்களை உருவாக்கிய ஆண்டாகவும் இருந்தது எனலாம்.
ஞான ஒளி திரைப்படத்தைப் பற்றி ஏற்கெனவே கூறியிருந்ததை மீண்டும் நினைவூட்டுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.
முதல் வெளியீட்டில் முதல் இரு நாட்களிலேயே தலைநகராம் சென்னையில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலைக் காட்சியாக திரையிடப் பட்ட முதல் படம் ஞான ஒளியாகும். இவை யனைத்தும் சபாக்களின் காட்சிகள் என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது திரையரங்குகளில் ஆயிரக்கணக்கான காட்சிகளாக புதுப்படங்கள் திரையிடப் படுவதற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும். ஞான ஒளி திரைப்படம் அந்தக் காலத்து நடைமுறையில் ரெகுலர் காட்சிகள் எனப்படும் தினசரி 3 காட்சிகள் மட்டுமின்று கூடுதலாக நடைபெற்றது.
அது மட்டுமா, ஒரே சமயத்தில் சென்னை நகர் மற்றும் சுற்று வட்டாரங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவை திரையிடப் பட்டு ஓடியதும் வரலாறு காணாததாகும். இது போன்ற சாதனைகளை நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதற்கு முன் வெளியான ராஜா வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளோடு நடைபெற்றுக் கொண்டே இருந்த போதும் ஞான ஒளியும் பிரம்மாண்டமான வெற்றியோடு வசூலை வாரிக்குவித்து வெற்றி நடை போட்டதெல்லாம் சாதாரணமான விஷயமல்ல.
படத்தைப் பொறுத்த மட்டில் ஞான ஒளி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் பாப்ஜி. இவர் ஓர் சகல கலா வல்லுநர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் தமிழ்த் திரையுலகில் தன் பங்காற்றியவர். இவரையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது ஞான ஒளி திரைப்படம். இவருக்கும் ஜெய கௌசல்யாவிற்கும் இடையே மிக இனிமையான டூயட் பாடல் இருந்தது. முதல் ஓரிரு நாட்களுக்கு இருந்த இப்பாடல் என்ன காரணத்தாலோ எடுக்கப் பட்டு விட்டது. படத்தின் நீளம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வேகத் தடையாக இருந்திருக்கலாம்.
ஆனால் பாடல் அருமையான பாடல். பல்லவி உள்ளம் போ என்றது எனத் தொடங்கும். இப்பாடலின் மெட்டை விட்டு விடாமல் மெல்லிசை மன்னர் மீண்டும் பயன் படுத்தி காலத்தை வென்று நிற்கும் பாடலைத் தந்து விட்டார். அதுவும் எஸ்.பி.பி.குரல், இதுவும் எஸ்.பி.பி.யின் குரல்.
ஞான ஒளி நினைவுகளை மீண்டும் அசை போட வைத்த கோபால் சாருக்கு நன்றி.