http://i60.tinypic.com/6hs4tj.jpg
Printable View
பதிலுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
தாங்கள் கூறியபடி புரட்சித் தலைவர் பாரத் விருதுக்கு தகுதியுள்ளவர்தான். அவரை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக நீங்கள் கூறியபடி கருணாநிதி அதை வாங்கிக் கொடுத்தாரோ என்னவோ தெரியாது. ஆனால், அப்படி கூறப்பட்டதற்காக அந்த விருதை தூக்கி எறிந்தார் புரட்சித் தலைவர். அந்தப் பட்டம் வேண்டும் என்று கருணாநிதியை அவர் வற்புறுத்தியதாகவும் கருணாநிதியே கூறியதில்லை. அந்தப் பட்டத்தை புரட்சித் தலைவர் விரும்பியதோ, அல்லது லாபி செய்ததோ அல்லது திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு கிடைக்காமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தவரோ அல்ல. அதற்கான செயல்களில் ஈடுபட்டவரும் அல்ல. அதோடு, ரிக்க்ஷாகாரன் படத்தில் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ரிக்க்ஷாகாரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அந்தப் படத்தில் தலைவர் நடித்திருப்பார். மஞ்சுளாவை காப்பாற்ற ராமதாஸ் கூட்டத்தை சைக்கிள் ரிக்க்ஷாவை ஓட்டியபடியே ஹாண்ட்பாரில் படாமல் அற்புதமாக சிலம்பு சண்டையிட்டு அதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது, தலைவர் மீது வக்கீல் குற்றம் சுமத்துவார். அதற்கெல்லாம் பதிலளித்து விட்டு மிகவும் இயல்பாக, ‘‘நடந்ததை நான் சொல்லிட்டேன். நடக்காததை வக்கீலய்யா சொல்லிட்டாரு. நடக்கப் போவதை நீங்கதான் சொல்லணும்’’ என்று நீதிபதியைப் பார்த்து தலைவர் கூறுவார். இந்த ஒரு காட்சிக்கே அவருக்கு பாரத் விருது கொடுக்கலாம்.
என் பதிலும் பாரத் விருது பற்றிய விவாதத்துக்கானது அல்ல. அந்தப் பட்டத்துக்காக சதிவலை, சகோதரரான பொன்மனச் செம்மல் திரு.சிவாஜி கணேசனுக்கு எதுவும் செய்யவில்லை, அதிமுக ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டது போன்ற கருத்துக்களுக்காகத்தான்.
மேலும், நீங்கள் கூறியபடி, திமுகவை விட அதிமுக ஆட்சிக் காலத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு அதிகமாகவே செய்தார்கள். இறப்பதற்கு முன் திரு.சிவாஜி கணேசன் அவர்களை சந்திக்க புரட்சித் தலைவர் விரும்பினார். ஆனால், அதற்கு முன் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. இந்த சந்திப்பு நடந்திருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை திரு.சிவாஜி கணேசனே பதிவு செய்துள்ளார்.
புரட்சித் தலைவரின் பிறந்த நாளுக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்ததற்கும் பதிலுக்கும் மீண்டும் நன்றி.
அன்புள்ள : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
இனிய நண்பர் திரு ரவிகிரணுக்கு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் .1960-1977 வரை நடந்த திரையுலக நிகழ்வுகள் மற்றும் தமிழக அரசியல் பற்றிய பல தகவல்களை படித்தும் , பிறர் சொல்லியும் , கேட்டு இருக்கிறேன் . அந்த வகையில் நடக்காத ஒன்றை நடந்ததாகவும் , கற்பனை வளத்துடன் யாரயோ நினைத்து தாக்கும் ''இயலாமையும்'' அறிந்து அவர்களை பதிவிடுவதை பற்றி பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? விட்டு விடுங்கள் கலைவேந்தன் .
BRETTS ROAD SALEM http://i62.tinypic.com/2ynp7rk.jpg
CHERY ROAD SALEM http://i61.tinypic.com/2rejdzs.jpg
வள்ளுவர் சிலை அருகில், சேலம் http://i58.tinypic.com/2m2apee.jpg
புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்.
ஜெயா டிவி - சரித்திரம் போற்றும் காவியத் தலைவன்
விஜய் டிவி - மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
ராஜ் டிவி - எம்.ஜி.ஆர் தி லெஜண்ட்
கேப்டன் டிவி - நெஞ்சம் நிறைந்த புரட்சித் தலைவர்
நியூஸ் 7 - ஆயரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர்
சன் லைப் - பாரத் ரத்னா எம்.ஜி.ஆர்
தீரன் டிவி - ஹாப்பி பர்த்டே எம்.ஜி.ஆர்
புதிய தலைமுறை - நேர்பட பேசு ~ எம்.ஜி.ஆர் புகழ் தொடர்கிறது
http://i61.tinypic.com/2cfy2w8.jpg