TODAY 11.00AM WATCH SUNLIFE
http://i61.tinypic.com/30vyzk2.jpg
Printable View
TODAY 11.00AM WATCH SUNLIFE
http://i61.tinypic.com/30vyzk2.jpg
எம்ஜிஆரின் அடையாளப் படம் படகோட்டி. (TYPICAL MGR FILM) அதில்
ஒரு காதல் ஜோடிப் பாடல் (தொட்டால் பூ மலரும்)
ஒரு காதல் ஜோடி சேரும் பாடல் (பாட்டுக்குப் பாட்டெடுத்து)
ஒரு காதல் பிரிவுப் பாடல் (என்னை எடுத்து தன்னைக் கொடுத்து)
ஒரு எதார்த்தப் பாடல் (தரைமேல் பிறக்க வைத்தான்)
ஒரு தத்துவப் பாடல் (கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)
ஒரு கவர்ச்சிப் பாடல் (அழகு ஒரு ராகம்) நம்பியார் பார்வையில் நாயகி சரோஜா தேவியே வந்து கிளப் டான்ஸ் ஆடுவார் -
ஒரு ஜாலிப் பாடல் (கல்யாணப் பொண்ணு)
ஒரு பூடகப் பாடல் (நானொரு குழந்தை)
என்று வகைக்கு ஒன்றாகப் போட்டுத் தாக்கியிருப்பார் எம்ஜிஆர்.
அனைத்துப் பாடல்களும் வாலியே எழுதியன என்பது குறிப்பிடத்தக்க செய்தி
பின்னர் வந்த பெரும்பாலான படங்களில் அனேகமாக “எம்ஜிஆர்-ஃபார்முலா“பாடல்களை எழுதும் வாய்ப்புகள் வாலிக்கே வழங்கப்பட்டன என்பது திரைப்படத்துடன் கலந்த தமிழகத்தின் அரசியல் வரலாறு!
நான்கு தலைமுறையாக எழுதிக்கொண்டிருந்தவர் வாலி
“எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை –அவன்
எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை” என்றதற்கு ஏற்ப, 82வயது வரை வாழ்ந்தார் என்பதைவிடவும் 80வயதிற்கும் மேல் எழுதிக்கொண்டே இருந்தார் என்பதுதான் ஒரு வியப்பான செய்திதான்.
ரஜினி, கமலுக்கான அம்மா செண்டிமெண்ட் பாடல் சிலவும், சில எம்ஜிஆர் பாடல்களும்
“என்மதமா உன்மதமா ஆண்டவன் எந்த மதம்?
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்“ – முதலான சிலபாடல்களும், பல்லாண்டுகள் அவரைப் பேச வைக்கும் என்பது உண்மைதான்.
கவிஞர் வாலிக்கு 2007ஆம் ஆண்டு, மததிய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
மறக்க முடியாத இவரது பாடல்கள் -
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்,
புதிய வானம் புதிய பூமி,
மூன்றெழுததில் என் மூச்சிருக்கும்,
ஏமாற்றாதே ஏமாறாதே,
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை,
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ,
தரைமேல் பிறக்கவைத்தான்,
எல்லாவற்றிற்கும் மேலாக-எம்ஜிஆர் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவ மனையில் இருந்தபோது தமிழகமே பாடித்துதித்து அழுத -
“இறைவா உன்மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு....
தலைவா உன் காலடியில் என்
நம்பிக்கையின் ஒளிவிளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் - இந்த
ஓருயிரை நீ வாழ வைக்க - இன்று
உன்னிடம் கையேந்தினேன்
உள்ளமதில் உள்ளவரை
அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால்
மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன்
என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு...
இறைவாநீ ஆணையிடு ஆணையிடு ஆணையிடு”
courtesy - vali kavithai
TODAY WATCH 11.00PM SUN TV
http://i58.tinypic.com/t528f8.jpg
எம்ஜிஆர் கையால் ஆட்டோ பெற்றவர்!
கார்வண்ணனின் இளமை பின்னணி மிகுந்த சுவாரஸ்யமானது. அவர் நந்தனம் கல்லூரியில் எம்ஏ படித்தபோது, அன்றைய முதல்வர் அமரர் எம்ஜிஆர் கையால் பரிசு பெற்றிருக்கிறார். பின்னொரு நாள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த முதல்வர் எம்ஜிஆர் பார்வையில் அவர் பட்டுவிட, காரை நிறுத்தி, தன் உதவியாளரை அனுப்பி கார்வண்ணனை அழைத்து வரச் சொன்னாராம் எம்ஜிஆர். அவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு, பரிசு பெறும் அளவு நன்றாகப் படித்த மாணவனான நீ, இப்போது என்ன செய்கிறாய் என விசாரித்தாராம். வேலையில்லாமல் அலைந்து கொண்டிருப்பதை கார்வண்ணன் சொன்னதும், முகவரியை வாங்கிக் கொண்டு இறக்கிவிட்டாராம். அடுத்த சில தினங்களில் அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி மூலம் ஒரு புதிய ஆட்டோவைக் கொடுத்தனுப்பியுள்ளார் எம்ஜிஆர். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்வரை அந்த ஆட்டோவை ஓட்டி பிழைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1990-ல் திரைப்பட இயக்குநரானார் கார்வண்ணன். அப்போது எம்ஜிஆர் அமரராகிவிட்டிருந்தார். அந்த ஆட்டோவை இப்போதும் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருக்கிறார் கார்வண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 1
https://www.youtube.com/watch?v=N4CcrYnAEWc
Thanks to Mr. R. Govindraj (Son of K.P.Ramakrishnan) for forwarding me this link....:-D
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 2
https://www.youtube.com/watch?v=fb6pTOUUJH8
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 3
https://www.youtube.com/watch?v=oso5G0b2BS8
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 4
https://www.youtube.com/watch?v=M0xd25sb3LE
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 5
https://www.youtube.com/watch?v=ncFUdo88Mpo
எம். ஜி. ஆர் ரசிகரின் புதிய முயற்சி - பார் புகழும் சரித்திர நாயகர் - பாகம் 6
https://www.youtube.com/watch?v=-_RglVU-afA