மருத்துவமனையில் ரஜினியின் ரவுண்ட்ஸ்
நலம் விசாரித்து நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!
யார் நல்ல மனிதன்?
‘தான் எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும், பிறர் நலன் பற்றிய சிந்தனையை சிந்தையிலிருந்து அகற்றாதவன்’, என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு உதாரண மனிதராகத் திகழ்கிறார் நமது சூப்பர் ஸ்டார்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு...ம் ரஜினி, எப்போதும் படுக்கையில் கிடக்காமல், தாம் இருக்கும் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் பிற நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நலன், குடும்ப சூழல் போன்றவற்றை விசாரித்து வருகிறார்.
ரஜினி தங்களின் படுக்கை அருகே வந்து நின்று நலம் விசாரிப்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இசபெல்லா மருத்துவமனை நோயாளிகள்.
“உடல்நிலை சரியில்லாத போதும்கூட, ரஜினியின் நினைப்பு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதே உள்ளது. பிறரின் நலன் குறித்த அவரது சிந்தனையை அவரது உடல்நிலை எந்த விதத்திலும் தடைப்படுத்தவில்லை”, என்கிறார் ரஜினியின் மருத்துவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள டாக்டர் சாய் கிஷோர்.
“மிக மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி கூட, ரஜினி தன் அருகில் வந்து நின்று நலம் விசாரிப்பதை உணர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. அதான் ரஜினி சார்”, என்கிறார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
“ரஜினிக்காக நிறைய அலுவல்கள் காத்திருக்கின்றன. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம். அவற்றில் முக்கியமான பணிகளை மருத்துவமனையிலிருந்தே அவர் முடிக்க உதவுகிறோம். இதற்கிடையே, எங்கள் மருத்துவமனை வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அவரை நலம் விசாரித்தும், அவருக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லச் சொல்லியும் தொலைபேசி அழைப்புகள் குவிகின்றன…”, என்று தெரிவித்துள்ளது இசபெல்லா மருத்துவமனை நிர்வாகம்.
இரண்டாவது முறை ரஜினி மருத்துவமனைக்கு வரவேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது?
டாக்டர் கிஷோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “அவர் முதல்முறை மருத்துவமனைக்கு வந்து, அன்று மாலையே வீட்டுக்குப் போனதுதான் தவறு. நாங்கள் இரண்டு நாள் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தேவையின்றி பதட்டப்படுவார்கள் என்பதால் அவர் வீடு திரும்பிவிட்டார். அதன் விளைவு நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது.
இப்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் மிக ஆரோக்கியமாக உள்ளார். மார்பு சளியை நீக்கிய பிறகு, மூச்சு விடுவது மிகவும் சீரடைந்துள்ளது. மற்றபடி அவருக்கு வேறு ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் இல்லை. அதுதான் அவரை இத்தனை விரைவில் குணமடைய வைத்துள்ளது,” என்றார்.
இசபெல்லா மருத்துவமனையிலிருந்து நாளை வீட்டுக்கு திரும்பிவிடுவார் ரஜினி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
www.envazhi.com/?p=24890