அன்பு கார்த்திக் சார்,
தங்களின் மனந்திறந்த பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள். தமிழில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படம் 1964 பொங்கலன்று வெளியான 'கர்ணன்'திரைக்காவியம்தான் என்ற பலருக்குத் தெரியாத உண்மையை உணர்த்தியதிற்கு நன்றிகள் சார்.. பாரகன் தியேட்டர் ஸ்கிரீன் சாந்தி ஸ்க்ரீன் போலவே வடிவமைக்கப் பட்டது என்பதும் எனக்குப் புதிய விஷயம் தான். சென்னையில் இருந்து சற்றேறக்குறைய 250 k.m தொலைவில் கடலூரில் வசித்து வந்ததாலும், ஸ்கூலில் படித்து வந்ததாலும் சென்னையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அன்னை இல்லமும், சாந்தி தியேட்டரும் தான். கடலூர் மற்றும் பாண்டியில் தூள் கிளப்புவோம். எனவே சென்னையைப் பற்றிய பதிவுகளை நீங்களும், நம் ஹப் அங்கத்தினர்களும் பதிவிடும்போது அவற்றை ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவேன். இதற்கெல்லாம் உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
அன்பு
வாசுதேவன்.