Quote:
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 3.
படம்:வெளிவந்த ஆண்டு: 1968
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்.
நடிகர் திலகம் மோதும் வில்லன்: கே.பாலாஜி
இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்.
'என் தம்பி' திரைக்காவியத்தில் இடம் பெற்ற அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த கத்திச் சண்டை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் அனல் பறக்கும் கத்தி வீச்சு. அதுவும் படு ஸ்டைலாக. தம்பி வேண்டுமென்றே சண்டைக்கு அழைத்தவுடன் மறுத்து ஒதுங்குவதும், பின்னர் தம்பியின் கொலை வெறியை எண்ணி தற்காப்பின் பொருட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டு பின்னர் புகுந்து விளையாடுவதும் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது.
கத்திச் சண்டை தொடங்கும் போது அந்த கோட்டை படு ஸ்டைலாக கழற்றும் லாவகம்...(இந்த இடத்தில் பின்னணி இசையில் கொடி நாட்டிப் பின்னிஎடுத்திருப்பார் எம்.எஸ்.வி).
கத்தியை எடுத்து முத்தம் கொடுப்பது போன்ற பாவனயில் நிற்கும் அந்த standing pose...
முதலில் தன் தம்பி மூர்க்கத்தனமாகத் தன்னைத் தாக்கத் தொடங்கி தன்னை கொலை செய்யுமளவிற்கு போய் விட்டவுடன் அதிர்ந்து, அடுத்த கணமே தம்பியாவது... மண்ணாவது...என்று தன் பாதுகாப்புக்காக அவனைத் தள்ளி விட்டு விட்டு புருவங்களை ஏற்றி படுஅலட்சியமாக அவனை எதிர்கொள்ளும் விதம்...
பின் சிரித்துக் கொண்டே தம்பியின் வாள் வீச்சை எதிர்கொண்டு, அவனைத் தவிடுபொடியாக்கி, தம்பியின் கத்தியும் தன் கைக்கு வந்தவுடன் அந்தக் கத்தியைத் தீட்டுவது போல தன் கத்தியில் ஒரு உரசு உரசி, கத்தியை அவனிடம் தூக்கிப் போடும் லாவகம்.
விஷம் தோய்ந்த கத்தியை அவன் தன்னைக் கொல்லப் பயன்படுத்தியுள்ளான் என தெரிந்து, அதிர்வுற்று, தம்பியிடம், "விஸ்வம், நீ மாறவே மாட்டியாடா?...என்று வேதனைப்பட்டு திரும்புவது.
என்று நடிகர் திலகத்தின் ஸ்டைல் சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும் அற்புத சண்டைக்காட்சி.
ஒரு இடம் கூட 'டூப்'போடாமல் தலைவர் அசத்திய கத்திச்சண்டை.
கத்தியை எடுத்து நடிகர் திலகம் ஸ்டைலாக நிற்கையில் தியேட்டர்களில் விண்ணைப் பிளந்த ஆரவாரத்தையும்,கரகோஷத்தையும் தட்டிச் சென்ற, நடிகர் திலகம் ரசிகர்களால் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத (மற்ற ரசிகர்களையும் வியக்க வைத்த) சூப்பர் சண்டைக்காட்சியாயிற்றே! ஏன்! நடிகர் திலகமே ரசித்து மகிழ்ந்த பெருமையைப் பெற்ற சண்டைக் காட்சியாயிற்றே!
முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக
for your reference the video is given here again: