ராஜேஷ்
பாடலாசிரியரைப் பற்றி இங்கே பதிவிடுவது சாலப் பொருத்தமாயிருக்கும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலக ஆரம்ப காலப் பாடலாசிரியர்களைப் பற்றிய ஒரு தொடரை நான் இத்திரியில் துவக்கியிருக்கிறேன். தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1139237
மாயவநாதனைப் பற்றிய அருமையான தகவல் களஞ்சியமாக தங்கள் பதிவு விளங்குகிறது. பாராட்டுக்கள். முன்னரே வேறோர் இடத்தில் குறிப்பிட்டது போல், தண்ணிலவு தேனிறைக்க பாலும் பந்த பாசம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்டது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றி விவரமான தகவல் ஏதும் இல்லை.