அன்புச் சகோதரர் பம்மலார் அவர்களுக்கு நம் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல இறையருளாலும் நடிகர் திலகத்தின் ஆசியாலும் அவர் மென்மேலும் வாழ்வாங்கு வாழ்ந்து சீரும் சிறப்போடும் வளமோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
Printable View
அன்புச் சகோதரர் பம்மலார் அவர்களுக்கு நம் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல இறையருளாலும் நடிகர் திலகத்தின் ஆசியாலும் அவர் மென்மேலும் வாழ்வாங்கு வாழ்ந்து சீரும் சிறப்போடும் வளமோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
Wish you many more happy returns of the day Mr Pammalar.
Regards
Dear Mr PAMMALAR ,
Many more happy returns of the day
Thaliavar Song to Mr Pammalar. We require your presence in this thread. Come soon.
http://youtu.be/Gu4t6mhZDK4
வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரை உலக சித்தர், தனது நடிப்பின் மூலம் அயல் நாடுகளில் தமிழனை தலை நிமிர செய்த நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் 85ஆவது பிறந்த நாள்.
இந்த நல்ல நாளில் நடிகர் திலகம் அவர்களின் பல திரைப்படங்கள் தமிழகம் முழுதும் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் திரையிட விருப்பம் தெரிவித்து அதன் தொடர்ச்சியாக ...கீழ்கண்ட திரைப்படங்கள் தமிழக நகரங்களில் திரயிடபடுங்கின்றன !
1) CHENNAI ஓட்டேரி மகாலட்சுமி திரை அரங்கில் SEPTEMBER 26 ONWARDS முதல் நடிகர் திலகம் அவர்களின் இரு வேடங்களில் நடித்த சங்கிலி திரைப்படம் திரயிடபடுகிறது.
http://i501.photobucket.com/albums/e...psf9fb09cf.jpg
2) TRICHY - கெய்ட்டி திரை அரங்கில் DUE TO FANS INSISTENCE THE DATE IS CHANGED FROM SEPTEMBER 26 to OCTOBER 1 ஆம் தேதி முதல் அண்ணன் ஒரு கோவில் திரைப்படம் திரயிடபடுகிறது
http://i501.photobucket.com/albums/e...psceaaeabe.jpg
3) MADURAI சென்ட்ரலில் SEPTEMBER 26 முதல் நடிகர் திலகத்தின் இருவேட நடிப்பில் வெளிவந்த வெள்ளை ரோஜா திரயிடபடுகிறது
http://i501.photobucket.com/albums/e...ps268089ec.jpg
4) COIMBATORE - DELITE திரை அரங்கில் நடிகர் திலகம் அவர்களின் எங்க மாமா திரைப்படம் SEPTEMBER 28 முதல் திரயிடபடுகிறது
http://i501.photobucket.com/albums/e...ps1eefd4ea.jpg
5) நெல்லை - சென்ட்ரலில் SEPTEMBER 26 நடிகர் திலகத்தின் சந்திப்பு திரைபடம் திரையிட இசைவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது
http://i501.photobucket.com/albums/e...pse515c024.jpg
THANKS TO ALL THEATER OWNERS FOR THEIR UNANIMOUS DECISION TO SCREEN NADIGAR THILAGAM FILM ON ACCOUNT OF HIS BIRTHDAY !!!!
சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்
"சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.
"ஆயிரம் நிலவே வா'', "இயற்கை என்னும் இளைய கன்னி'' ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.
அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.
சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி'' என்ற படத்தில், சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. "பொட்டு வைத்த முகமோ'' என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது.
பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன் தேர்ந்தெடுத்தார்."சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.
பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.
பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.
"பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே!
உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை.
எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன்.
நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.
சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.
சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.
சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான "சுமதி என் சுந்தரி''யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம், தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.
http://www.youtube.com/watch?v=NaeKkH0hPus
படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.
1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.
அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
This Scene has so many similarities !!!
http://www.youtube.com/watch?v=AzE8Wtz7SaA
Many Many Happy Returns of the day Pammalar Sir !! - A song dedicated for you !!
http://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY
SOMETHING DIFFERENT - EXTREMELY FINE ART !!!
http://www.youtube.com/watch?v=nlwqwn793Xk