தித்திக்கும் பாடல்கள் - பதிவு 3
எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள்
"ஆயிரம் தான் வாழ்வில் வரும் , நிம்மதி வருவதில்லை ----"
எவ்வளவு உண்மையான வரிகள் - பிறந்தது முதல் நிம்மதியை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே இருக்கிறோம் - கிடைப்பதற்குள் நம் வாழ்க்கை முடிவடைந்து விடுகின்றது -- இதற்குள் எத்தனை வேற்றுமைகள் நம்மிடம் ! எவ்வளவு முரண்பாடுகள் - நம்மில் சிலரே உண்மையில் வாழ்கிறார்கள் - பலர் வாழும் போதே இறந்து விடுகிறார்கள் . ஒருவர் பல இலட்சங்களுக்கு தன்னை இன்சூர் பண்ணி இருந்தார் - அவர் ஒரு நாள் இறந்து விடுகின்றார் - இன்சூரன்ஸ் கம்பெனி அவர் சுற்றதார்களுக்கு பணம் கொடுக்க மறுக்கின்றது - காரணம் அவர் வாழும்போதே இறந்து விட்டாராம் - நடை பிணமாக இருந்த ஒருவர் மீண்டும் எப்படி இறக்க முடியும் ?? வாழ்க்கையில் அன்பு தேவை , பிறரிடம் பரிவு தேவை - பிறரை நம்மை போல எண்ணும் இயல்பு தேவை .
Between DOB ( date of birth ) and DOD ( date of death) there is only one letter that remains untouched - that is "C" - see your life , enjoy the life and let your life be useful to others - you have made meaning to your existence .
ஒரு சாதுவிடம் ஒருவர் சென்றார் - " சுவாமி , வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? " என்று கேட்டார் - அந்த சாது சிரித்துக்கொண்டே கூறினாராம் - வாழ்க்கை என்பது அர்த்தமே இல்லாத ஒன்று - நீதான் அதற்க்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தவேண்டும் --- எப்படி பட்ட அறிவுரை !!
இதோ இந்த பாடலை கேளுங்கள் - அன்பே வா , அன்பே வா என்று உயிர் உருக , மனம் உருக பாடுகிறான் நம் கதாநாயகன் - ஆயிரம் தான் வாழ்வில் வரும் , நிம்மதி வருவதில்லை ---- என்றும் சொல்கிறான் - வான் பறவையை கெஞ்சுகிறான் , அதன் சிறகை தனக்கு தர வேண்டி , பூங் காற்றை உதவிக்கு வர வேண்டுகிறான் - இவைகள் இருந்தால் , வனத்தில் பறந்து சென்று , போனவளை அழைத்து வர முடியுமாம் ---- அன்பு தான் , உள்ளம் என்ற கோயிலிலே என்றும் இருக்கும் தெய்வம் என்பதை உணர்கிறான் - வாழ்க்கை மீண்டும் அவனை வரவேற்க்கின்றது !! அவனால் ஒரு புது அர்த்தத்தை அவனுடைய வாழ்க்கைக்கு தர முடிகின்றது
இந்த பாடல் காதலின் மகத்துவத்தை மட்டும் சொல்ல வில்லை - அன்பின் பெருமையையும் , நிம்மதியின் அவசியத்தையும் வெகு அழகாக மக்கள் திலகம் மூலம் நமக்கெல்லாம் சொல்லிக்கொண்டுருக்கின்றது - வாழ்க்கைக்கு அடிப்படை அவசியம் பணம் மட்டும் அல்ல - மனித நேயம் , தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மை , அன்பை தொலைத்து விடாமல் இருக்கும் கொள்கை இவைகள் தான் - இதை பல பாடல்களில் மக்கள் திலகம் சொல்லியிருந்தாலும் , இந்த பாடலில் அவர் நடித்த விதம், சொன்ன விதம் , மனதில் ஆழமாக பதிந்து விட்டது . இதோ உங்களுக்காக மீண்டும் அந்த அன்பை வரவழைக்கும் பாடல் -----
http://youtu.be/ON3URJu2a2o