http://i59.tinypic.com/9r6ln9.jpg
Printable View
எஸ்வி சார்
ஏன் எஸ்வி சார்....முதலில் திரு கலைவேந்தன் அவர்களுக்கு நான் என்ன கேள்வி கேட்டேன் அவர் எனக்கு விளக்கம் அளிக்க ? நான் எதற்கு அவருக்கு கேள்விகேட்கவேண்டும் முதலில் ?
இது கூட புரியாமல் ....ஒரு பதிவு செய்துள்ளீர்கள் அதுதான் எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது !
நான் எழுதியதற்கும்...கலைவேந்தன் சார் பதிவு செய்ததற்கும் இந்த இரண்டு பதிவுகளை சரிவர படிக்காமல் நீங்கள் எழுதியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தயைசெய்து ஒருமுறைக்கு இரண்டு முறை படித்து பாருங்கள்..!
மேலும் நீங்கள் கூறியதைப்போல நானும் 1960 - 1989 வரை நடந்த திரை உலக நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் இவை அனைத்தும் நானும் எந்த கட்சியையும் சாராதவர்களிடம் யாரையும் ஒரு தலைபட்சமாக ஆதரிக்காமல் நடுநிலையாக பேசுபவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறேன்.
முதலில் நடக்காத ஒன்று நடந்ததாக கூறுவதாக நீங்கள் எழுதியது எவ்வளவு முரணான ஒரு வரி என்று சற்று நிதானத்துடன் நினைத்து பாருங்கள் சார் ....
Mgr மன்றங்கள் மு க முத்து மன்றங்களாக மாற்ற வற்புறுத்தல் நடக்கவில்லையா ?...
அல்லது அண்ணாவிற்கு பிறகு ...திரு கருணாநிதியை மக்கள் திலகம் அவர்கள் ஆதரிக்கவில்லையா ?
அல்லது கருணாநிதி ஆதரவு ஒருபக்கம் ...நெடுஞ்செழியன் ஆதரவு ஒருபக்கம் என்ற நிலை தி மு க வில் இருந்ததில்லையா ?
அல்லது...தொடர்ந்த அடக்கு முறை ஆட்சியில் பாதிப்படைந்து தனது ரசிகர்களும் மன்றங்களும் இன்னல்பட மக்கள் திலகம் அவர்கள் கடும் அத்ருப்ப்தி அடையவில்லையா ...அதன் பொருட்டு 70 களின் முடிவிலிரிந்து தொடர்ந்து difference of opinion இருவருக்கும் வரவில்லையா ?
...அதன் முத்தாய்ப்பாக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர் மற்றும் ஆதரவாளர்கள்...திரு mgr அவர்களிடம் தேர்தல் சமயம் நெருங்கும் நேரத்தில் எந்த விதத்திலும் எதிர்மறையாக கருத்து கொள்ளவேண்டாம்..அதனால் பாதிப்பு நமக்குதான் .. அவரை இந்த சந்தர்பத்தில் பகைத்துகொள்ளாமல் இருப்பதே நலம் என்று அறிவுரக்கவில்லையா...இதில் எது கற்பனை என்று நீங்கள் கூறுகிறீர்கள் ?
மேலும் நான் யாரையும் எதற்கும் support செய்து எழுதவில்லை, argument கூட செய்யவில்லை...இப்படி ஒரு நிலையில் இது எதுவுமே புரியாமல் நடுவில் குதித்து ஏன் சார் இப்படி திரி என்பதற்காக திரித்து எழுதுகிறீர்கள்..?
"இயலாமை".."பரிதாபம்" ....இப்படி நீங்கள் காலம் காலமாக பயன்படுத்தும் வார்த்தைகளை பார்த்து உண்மையிலயே எனக்குதான் உங்களை பார்த்து பரிதாபப்பட தோன்றுகிறது சார் !
திரு.ஆர்.கே.எஸ்.
‘அதிமுக ஆட்சியில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது’, ‘பாரத் விருது தொடர்பாக அவருக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னப்பட்டது’ , ‘சகோதரரான பொன்மனச் செம்மல், சிவாஜிக்கு என்ன செய்தார்?’ என்று கூறப்பட்ட கருத்துக்களுக்கு பதிலாகத்தான் திரு.எஸ்.வி. அந்தப் பதிவை போட்டுள்ளதாவும், உங்களைச் சொல்லவில்லை என்றும் கருதுகிறேன். திரு.எஸ்.வி.யும் இதை ஆமோதிப்பார் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்