-
பாராட்டுக்களுக்கு நன்றி வாசுதேவன், காவிரிக்கண்ணன் மற்றும் சேகர் சார்.
http://imageshack.us/scaled/landing/143/tpathak0001.jpg
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நேற்று 08.02.2013 முதல் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியமான தங்கப் பதக்கம் திரையிடப் பட்டுள்ளது. சிறப்பான வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல்.
இத்தகவலைத் தந்த திருச்சி செல்வம், மற்றும் ராமஜெயம் நண்பர்களுக்கு மிக்க நன்றி.
-
என் விருப்பம்
எனக்கு 10 வயதிருக்கும்போது இப்பாடலில் மயங்கினேன்..
40 ஆண்டுகள் கழித்தும் மயக்கம் குறையவில்லை.
பாட்டுக்கோட்டை கட்டிய பட்டுக்கோட்டையார் - எத்தனை எளிய சரளமான கருத்துள்ள வரிகள்
மெல்லிசை மன்னர்கள் - என்ன எளியோருக்கான துள்ளல் தாளம், லயம்
சந்திரபாபு - என்ன பொருத்தமான சுறுசுறுப்பான துணை
டி. எம். எஸ் - எத்தனை பாந்தமான குரல், நயம்..
Prop - எனப்படுவதைக் கையாளும் திறன்..
இங்கே ரிக்*ஷா நடிகர்திலகத்தால் எத்தனை அழகாய்க் கையாளப்படுகிறது..!
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும்பேச்சு..
என் வாழும் நெறி தந்த இவ்வரிக்காகவே பதிபக்தி படப்பாடல் என் மனதுக்கு நெருக்கம்.. விருப்பம்!
http://www.youtube.com/watch?v=PafwC_0zKxc
-
டியர் காவிரிக் கண்ணன்,
தாங்கள் கூறிய படி பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் தனி பாணி தான். காலத்தைக் கடந்து நிற்கும் கருத்தாழமிக்க வரிகள். இந்தப் பாடலிலேயும் சமுதாயத்திற்கு இன்றைக்கும் பொருந்தும் வகையில் வரிகள் அமைந்துள்ளது அவர்களுடைய முன்னோக்குப் பார்வையினை எடுத்துக் காட்டுகிறது. நடிகர் திலகத்தின் பாடல்களில் இது போன்ற அபூர்வமான பாடல்களை தாங்கள் மேலும் மேலும் தர வேண்டும் என்பது என் விருப்பம்.
-
My Choice என் விருப்பம்
மாங்காய் பாலுண்டு - காவேரி - இசை ஜி.ராமநாதன் - குரல் சி.எஸ்.ஜெயராமன்
நடிகர் திலகத்தின் நடிப்பு ஒரு முழுமையான இலக்கண ஏடு என்பதற்கு ஓர் உதாரணம், அவருடைய நடனக் காட்சிகள். எந்த வித நடனமானாலும் அவருடைய தனித்துவம், அதனுடைய சிறப்பு அதில் மிளிரும். பல ரசிகர்கள் அதிகம் அறிந்திராத சில படங்கள் அல்லது பாடல் காட்சிகளில் அவருடைய சிறப்பான நடனங்கள் எடுத்துக் கூறவேண்டியது நம் கடமை. அந்த வரிசையில் மட்டுமின்றி, என் விருப்பமான பாடலாகவும் இந்தப் பாடல் காட்சி சேர்கிறது. மாங்காய்ப் பாலுண்டு என்று துவங்கும் இப்பாடலை நாம் அடுத்து திரைப் பட்டியலில் இடம் பெற இருக்கும், காவேரி திரைப்படத்தில் காணலாம். நம் அருமை நண்பர் பார்த்தசாரதி அவர்கள் நடிகர் திலகத்தின் வாயசைப்பின் சிறப்பைப் பற்றி இங்கே ஏற்கெனவே மிக அழகாக விவரித்துள்ளார். அதனை மேலும் வலுவாக்கிடும் வண்ணம் அமைந்தது இப்பாடல். இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் குரலின் தன்மைக்கேற்றவாறு இப்பாடலில் நடிகர் திலகத்தின் வாயசைப்பு இருக்கும். இந்த வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ். பாடிய பாடல், ஏ.எம். ராஜா பாடிய பாடல் போன்று ஒவ்வொரு பாடகரின் பாடல் காட்சிக்கும் அவர் வாயசைத்துள்ள விதத்தை கவனித்தால் தான் புரியும்.
இப்பாடல் காட்சியில் அவருடைய நளினமான நடனத்தைப் பாராட்டுவதா, கண்களில் காட்டும் வசீகரத்தை சொல்வதா, புன்னகையின் மகத்துவத்தை சொல்வதா, கால்களில் அவர் காட்டக் கூடிய தாளத்தை சொல்வதா, சரியான நேரக் கட்டில் பின்னால் சென்றவாறே பாட்டிற்கு வாயசைத்துக் கொண்டே நடன அசைவையும் செய்து கொண்டே அவர் நம்மை கட்டிப் போடும் மந்திரத்தை சொல்வதா ...
பாருங்கள் .... உணருங்கள் ...
http://youtu.be/XvLNA-AewBE
-
-
Rare Photo of NT is simply superb.
-
Mr Raghavendra Sir,
I have one suggestion.When you post the NT's movies one by one, you
can also post the views of NT at the bottom of the every film. It has
been posted by Mr Pammalar long time back and it will be very opt for
this thread.
It is only a suggestion.
-
Really a very valuable suggestion. Shall definitely try to do it.
-
காவேரி படப் பதிவுகளுக்கும் பாடல் சுட்டிகளுக்கும் நன்றி ராகவேந்திரா அவர்களே..
நீங்கள் சொன்னதுபோல் மாங்காய்ப்பால் பாடலில் நடிகர்திலகம் காட்டும் நவரச பாவங்கள் - பன்முகத் திறமையைப் பறைசாற்றும் சான்றுகள்..
அன்பு வாசு முன்னர் அளித்த காவேரி நாயகரின் கலைவண்ணப் படம் அழகோ அழகு. நன்றி!
-
வெள்ளை உடையில் சமூகக் கறுப்பைச் சாடும் புயலைக் காண-
''உண்டு'' என்று சொல்ல எப்படி உதடுவைத்தால் மொழியின் அழகு சிதறாமல் உச்சரிக்கலாம் எனக் கற்க -
காமிரா எங்கிருக்கிறது.. எந்த கோணத்திலும் அழகாய்த் தெரியும் தம் முகத்தை அதிகபட்சம் எப்படி அதன் கண்களுக்கு விருந்தாக்கலாம் என்பதன் அரிச்சுவடி அறிய...
இதோ லக்ஷ்மி கல்யாணம் பாட(ல்)ம் - என் விருப்பம்!
http://www.youtube.com/watch?v=RABmwdzsOYw