http://s28.postimg.org/lbfg4kpml/DSC00728.jpg
COMING SOON AT ROYAL THEATRE, COIMBATORE
Printable View
http://s28.postimg.org/lbfg4kpml/DSC00728.jpg
COMING SOON AT ROYAL THEATRE, COIMBATORE
மன்னாதி மன்னன் -சிறப்பு பார்வை
------------------------------------------------------
வெளியான நாள்:19/10/1960 -தீபாவளி வெளியீடு.
54 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
1974-ல் தான் முதன் முறையாக பிரபாத் அரங்கில் பார்க்க
வாய்ப்பு கிடைத்தது. பின்பு, பாரகன்,தங்கம், பத்மநாபா , மேகலா போன்ற பல அரங்குகளில் பார்த்து ரசித்துள்ளேன்.
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் இப்படத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது . உண்மையில் 25 வயது இளைஞனைப் போல் காட்சி அளிப்பார்.
1.அச்சம் என்பது மடமையடா -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.காரில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்களில் ஒன்று.
கருத்தாழமிக்க, கொள்கை முழக்கமிடும் பாடல்.அவருக்கு
மிகவும் பொருந்திய பாடல்களில் ஒன்று. அனைத்து தரப்பினரும் விரும்பி ரசிக்கும் பாடல்.
2.ஆடாத மனமும் உண்டோ -பாடலில் இசைக்கருவிகளை பயன்படுத்தும் விதம் இயல்பாக இருக்கும்.மிகவும் அழகாக தோன்றுவார். ஈடேதும் இல்லாத கலைச்சேவையில் தனி இடம் கொண்ட உமைக்கண்டு இப்பூமியில் ....
பசுந்தங்கம் உனது எழில் அங்கம் - வைர வரிகள்.
3.கனிய கனிய மழலை பேசும் - அருமையான காதல் பாடல்.
4.கண்கள் இரண்டும் - அந்த காலத்தில் வானொலியில் அடிக்கடி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்ட பாடல்.
5.நீயோ நானோ யார் நிலவே - சோகத்திலும், ரசமான, இனிமையான காதல் பாடல்.
6.அழகு ராணி - ரசிக்கும்படியான பாடல்.
7.கலையோடு கலந்தது உண்மை -நாட்டிய பேரொளி பத்மினியின் அற்புத நடனமும், மெல்லிசை மன்னர்களின் இசையும் அபாரம் .
8.காவிரித்தாயே - கேட்கும்படியான சோகப் பாடல்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். - பத்மினி போட்டி நடனம் படத்தின்
ஹை லைட்ஸ் . மக்கள் திலகம் தனது நடன திறமையை
அற்புதமான அங்க அசைவுகளால் காட்டி அசத்தி கைதட்டல்கள் பெற்ற காட்சிகள்.
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு , தோற்றவரை நையாண்டி செய்யும் குலதெய்வம் ராஜகோபாலிடம் ,
ஒருவரை அழித்துதான் வாழவேண்டும் என்கிற நிலையில் நாம் இல்லை. போட்டியில் தோற்றவர்களின் மனம் புண்படுத்தாது நடந்து கொண்டு அவர்களை தேற்றுவதுதான் நமது பணியாக இருக்க வேண்டும்.வீண் குழப்பம் விளைவிக்காது கலைந்து செல்லுங்கள் என்று பேசும் வசனம் அருமை.
கரிகால சோழன் (எம்.ஜி.சக்கரபாணி ) காலில் சேர நாட்டு மாலையை அணிவிக்காமல் , தன கழுத்தில் அணிந்து உடன் தன் கால்களால் தட்டுகளை எட்டி உதைத்து ,மன்னன் முன் எதிரிகளை பந்தாடும் காட்சிகள் அபாரம். அதற்கு முன்
தான் நிரபராதி என மக்கள் முன் பேசும் வீர வசனங்களில் கனல்பொறி பறக்கும். உறையூரில் இருந்து தப்பித்து ,கரிகால சோழன் மகளை கவர்ந்து ( அஞ்சலி தேவி ), பின்
பி. எஸ்.வீரப்பாவுடன் மோதும் சண்டை காட்சிகள் மெய்சிலிர்க்கும்.
மொத்தத்தில் விறுவிறுப்புக்கு குறைவில்லாத படம்.
நடேஷ் ஆர்ட்ஸ் பிக்சர்சின் வெற்றிப்படம்.
1970 முதல் 1990 வரை அதிக திரை அரங்குகளில் அடிக்கடி திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடிய படம்.
நேற்று சன்லைப் தொலைகாட்சியில் இறுதியாக பார்த்து
ரசித்த படம்.
http://i59.tinypic.com/i5vqc3.jpg
http://s10.postimg.org/3zyxyxqnt/DSC00725.jpg
COMING SOON AT ROYAL THEATRE - COIMBATORE.
ROYAL THEATRE INSIDE COMPOUND WALL.