http://i160.photobucket.com/albums/t...psknv3icjz.jpg
Printable View
Has every playback singer given such evergreen hits - 1st song for Top Personalities. Sivajisenthil Sir?
https://www.youtube.com/watch?v=rfdw0GQ7yhc
https://www.youtube.com/watch?v=yHfBRUdJ0Ts
https://www.youtube.com/watch?v=op4GivMzxNY
https://www.youtube.com/watch?v=AbvkoEfKEk0
Inspired by the above song?
https://www.youtube.com/watch?v=tvwLDMyoeJ8
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய எம்ஜிஆர் சாம்ராஜ்ஜியம் .
சினிமாவிலும் அரசியலிலும் யாராலும் அசைக்க முடியாத எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லை யாராலும் உச்சரிக்க முடியாமல் இருக்க முடியாது .திரை உலகினர் அனைவரும் எம்ஜிஆரின் பன்முக திறைமைகளை பாராடடி அவர் வகுத்த பாதையில் செல்ல முயற்சிக்கிறார்கள் . அரசியலில் எம்ஜிஆரின் ஆளுமைகளை உணர்ந்து பார்க்கிறார்கள் . ஆனால் இரு தரப்பினரும் வெற்றிகளை அடைய முடியவில்லை . எம்ஜிஆர் என்ற மாமனிதரின் செல்வாக்கு , புகழ் , கலை உலகில் அவர் உண்டாக்கிய பிம்பம் , இனி யாராலும் எட்டி பிடிக்க முடியாது .எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே .
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் - செல்வாக்கு அவர் மறைவிற்கு பின்னரும் 27 ஆண்டுகளாக தொடர்வது உலக சாதனை .அரசியல் தலைவராக , கலை உலக சக்ரவர்த்தியாக எம்ஜிஆர் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த போவது எதிர் கால சாதனையாகும் .
விரைவில் வர இருக்கும் ''உலகம் சுற்றும் வாலிபன் '' திரைப்படமும் , 2016 அல்லது அதற்கு முன்பாக நடக்கவுள்ள தமிழக சட்ட சபை தேர்தலும் எம்ஜிஆரின் சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிரூபணம் செய்ய உள்ளது .
ஆதிகாலத்தில் எல்லாம் திரைப்பட விநியோகம் சதவீத அடிப்படையில் திரையிடப்படும், விநியோகஸ்தரும், திரையரங்கங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை வசூலில் எடுத்துக்கொள்வார்கள், அதாவது சுமார் 40% ,மீதி 60% தயாரிப்பாளருக்கு, இம்முறையில் விநியோகஸ்தர்கள், திரையரங்கங்கள் முதலில் பணம் முதலீடு செய்ய தேவையில்லை.
பின்னர் படம் கிடைக்க போட்டி உருவாகவே ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் எடுத்து திரையிட்டால் நல்ல வசூலாகும் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்கள் முன்னதே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து ஏரியா வாங்க ஆரம்பித்தனர் ,இப்படியாக எம்.ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி பணம் செலுத்தும் முறை உருவாகியது.
எம்ஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றால் மிகையல்ல, அவரது படங்கள் நிச்சயம் விநியோகஸ்தரை காலை வாரிவிடாது என்ற நம்பிக்கையில் ,படம் துவங்கிய அன்றே ஏரியா விற்பனை ஆகி தயாரிப்பாளர் கையில் பணம் கிடைத்துவிடும், அதை வைத்தே தயாரிப்பாளர்கள் படத்தினை எடுத்து முடிப்பார்கள்.
இதனால் எம்.ஜி.ஆர் என்பதையே மினிமம் கியாரன்டி .ராமசந்திரன் என சொல்வார்களாம்.
COURTESY-MGR- The Real Box Office King
பிரபலமான மனிதர்களில் இரண்டுவகை உண்டு. புகழ் பெற்ற பிரபலங்கள் ஒருவகை, அந்தப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் மாதம்பட்டி சிவகுமார். நடிகர் சத்யராஜுக்கு அண்ணன்முறை. “நான் இன்றைக்கு இந்த அளவு புகழ் பெற்றவனாக வந்திருக்கிறேன்னா அதுக்கு அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான் காரணம்” என்று சத்யராஜால் அடையாளம் காட்டப்படுபவர். விஜய், அஜீத், சூர்யா துவங்கி சிம்பு வரையிலும் இளைய தலைமுறையின் எந்தப் பெரிய நடிகர்கள் நடித்தாலும் எல்லாரின் படங்களிலும் காமெடியில் கலக்குபவர் நடிகர் சத்யன். அந்த சத்யனின் தந்தை இவர்.
கோயம்புத்தூர் பகுதியில் மாதம்பட்டி சிவகுமாரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. எம்.என்.எஸ் என்றும் மாதம்பட்டிக்காரர் என்றும் அறியப்படுபவர். குறுநில மன்னர் பரம்பரை. ஒரு காலத்தில் ஏகப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரராயிருந்து பின்னர் அவ்வளவையும் விற்று நிறையப் படங்கள் எடுத்து (நினைவிருக்கிறதா? சின்னத்தம்பி பெரிய தம்பி) தற்போது விவசாயம் பார்க்கக் கூடிய அளவு மட்டும் நிலத்தை மட்டும் வைத்து நிர்வகித்து வருபவர். இவரது அன்புப் பட்டியல் மிகப்பெரியது. அந்த அன்புப் பட்டியலில் ஒருமுறை விழுந்து விட்டால் போதும். அவர்கள் விக்கித்துப் போகும் அளவுக்கு அன்பாலும் உபசரிப்பாலும் திக்குமுக்காடச் செய்துவிடுவார். அவர்களின் பிறந்த நாளை அவர்களுக்கே தெரியாமல் குறித்துவைத்துக் கொள்வார். பிறகு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் பெற்றவர்களிடமி ருந்தும் வாழ்க்கைத் துணையிடமிருந்தும் வாழ்த்து வருகிறதோ இல்லையோ முதல் வாழ்த்து இவரிடமிருந்து வந்துவிடும்.
மிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …….எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர்.“ எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே?”’ நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்” என்கிறார்.
“சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது? இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா ” என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.இசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக் ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.
Cortesy- net
ரொம்ப நாள் கழிச்சு அடுத்துஅடுத்து தியேட்டரில் இரண்டு சினிமா பார்த்தேன்.
சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, யாரும் இல்ல. சரின்னு டிவியா போட்டா, கேடிவில வாத்தியார் நடிச்ச குடியிருந்த கோயில். எம்ஜிஆர் பட்டைய கிளப்பின படம். அதிலும் "என்னை தெரியுமா" பாட்டும், "என் வாளும் உன் விழியும்" பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள். கிளைமாக்ஸ் ல அண்ணன் எம்ஜிஆர் சண்டை போட்டுகிட்டே தம்பி எம்ஜிஆர் பார்த்து "இது எப்படி"ன்னு கேட்பாரு. செம ஸ்டைலான சீன் அது. சண்டை காட்சில வாத்தியார் மாதிரி leg lock போடுறதுக்கு யாராலும் முடியாது. செமைய என்ஜாய் பண்ணினேன்.
COURTESY - NET