-
Usual Raja sir talk @ Rich India whatever that is.. (hope RI is not a sadhuranga vettai thingy)
Should Raja sir stop saying that he don't attend functions anymore.. This month itself he attend 3 or 4 functions that I know of. :-)
https://www.youtube.com/watch?v=kplopWz--_c
-
இசையின் அமானுஷ்ய பிரம்மாண்டத்தின் முன்னால் திகைத்து நிற்கும் போது நீ மனுஷந்தாண்டா என்று தரைக்கு கொண்டு வருவது பாடல்கள் படமாக்கும் விதத்தில்தான் #மேகா
-ac
-
-
மிகவும் அருமையான படம். நடு வகிடு எடுத்து தலை சீவாத பெண்கள், பெரும்பாலும் இடது பக்கம் வகிடு எடுத்து சீவுவார்கள். மிகவும் அரிதாகவே வலது புறம் எடுத்து , திருமதி. ஜீவா இளையராஜா, கனி மொழி போல. இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். :) இருவருமே ரொம்ப அழகானவர்கள்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...34928221_n.jpg
-
[QUOTE=rajaramsgi;1160516]Usual Raja sir talk @ Rich India whatever that is.. (hope RI is not a sadhuranga vettai thingy)
Should Raja sir stop saying that he don't attend functions anymore.. This month itself he attend 3 or 4 functions that I know of. :-)
ராஜ், நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது. ஆனால், தன்னை பல வேலைகளில் ஈடுபடுத்தி கொள்வது என்பது பல நேரங்களில் நன்மை செய்ய கூடியதே. .அவர் உடல் நலன் குறித்த அக்கறை அவரை விட அவர் ரசிகர்களுக்கே அதிகம் என்பது கண்கூடு. Already he had 2 attacks, அதற்காகவேனும் அவர் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்.
சில மாதங்கள் முன் அவர் , பிரியா படத்தில் வரும் " டார்லிங் டார்லிங்" பாடலை முதன் முறையாக இசை அமைக்க 4 மணி நேரங்களே எடுத்துக் கொண்டது, ஆனால் இசை கச்சேரிக்காக நாங்க practice பண்ணும் பொழுது 2 நாட்கள் எடுத்து கொண்டது. அவ்வளவுதான் சொன்னார். மீடியாவில் அதை முழுவதும் மாற்றி, யாராலும் நான்கு மணி நேரத்தில் இசை அமைக்க முடியாது" உலக இசை அமை பாலர்களுக்கு இளைய ராஜா சவால் " என்று வந்தது.
-
இனியெல்லா..ம் சுகமே -
" இந்த வார்த்தைகளைப் பாடும் போது, கேட்பவர்களுக்கு சுகமாக இருக்க வேண்டும்" கூறியவர் - The Legend called Yesudas
அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இசைமேதை ஜேசுதாஸ் அவர்களின் சிட்னி இசை நிகழ்ச்சி இன்று இரவு 6.40 மணியளவில் தொடங்கி சரியாக 10 மணிக்கு முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியை வெறுமனே தமிழ் நிகழ்ச்சியென்று கூற முடியாது சரிக்குச் சரியாக மலையாளப்பாடல்களும் அத்துடன் ஹிந்திப்பாடல்களும் பாடப்பட்டன.
ஜேசுதாஸ் அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களுள் அவர் மெட்லியாகப் பாடிய பாடல்கள்தான் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக உறவுகள் தொடர்கதை என்ற பாடலை அவர் பாடி நேரடியாகக் கேட்டபோது அந்தக் குரல் என்னை எங்கோ கொண்டு சென்றிருந்தது. இந்தப் பாடலை நேரடியாகப் பார்த்தபடி கேட்டபோது அந்தப் பாடலினுள் ராஜாவால் பின்னப்பட்டுள்ள பேஸ் கிட்டாரினதும் புல்லாங்குழலினதும் வேலைப்பாடுகள் புல்லரிக்க வைத்தன. உண்மையில் இந்த இரண்டு இசைக்கருவிகளும் எவ்வாறு இசைஞானியால் அந்தப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையோ அல்லது பாடலுக்கு அவை கொடுத்துள்ள முழுமையையோ ஒறிஜினல் பாடலில் இன்றுவரை இந்தளவுக்கு நான் கேட்டு ரசித்திருக்கவில்லை. அதற்காக இன்றைய கலைஞர்கள் வித்தியாசமாக சங்கதிகள் புகுத்தி வாசித்தார்கள் என்பது அர்த்தமல்ல. ராஜாவின் ஒறிஜினல் நோட்சைத்தான் வாசித்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் சரியான நேரங்களில் சரியான முக்கியத்துவம் அந்த வாத்தியங்களுக்கு இன்றைய அரங்கின் Sound Engineer ஆல் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்த இரு இசைக்கருவிகளையும் மிகத் துல்லியமாக பாடலின் ஜீவனுடன் சேர்ந்து ஒன்றித்து ரசிக்க முடிந்தது. அந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் இருந்த ஒலித் துல்லியமின்மை அல்லது ஒலித் தொழினுட்ப வறட்சி காரணமாக இந்த வாத்தியங்களின் முக்கியத்துவம் அப்போது முழுமையாக வெளிப்படவில்லை அல்லது உணரப்படவில்லை என நினைக்கிறேன்.
( பாடலைக் கேட்க https://www.youtube.com/watch?v=T71jHjIvEAI )
அந்தப் பாடலின் பல்லவியையும் சரணம் ஒன்றையும் மட்டுமே பாடிய ஜேசுதாஸ் அவர்கள், அதை மெட்லியாகப் பாடியதால் இடையிசைக்கு அவகாசம் கொடுக்கவில்லை. இது என்னமோ போலிருந்தது. ஆனால் அந்தப் பாடலை முடிக்கும் போது இனியெல்லாம் சுகமே என்பதை மிக மென்மையாக அவர் பாடிய விதம் அந்த சுகமே என்ற வார்த்தையை சுக...மே.... என்று மெது மெது வாகவும் மெது மெதுப்பாகவும் அவர் முடித்த விதம் அலாதியானது. அப்படி முடித்து இசைகள் எல்லாம் நிறுத்தியபின் அவர் கூறினார்.
"இந்தப் பாடலின் ஹைலைட்டே இனியெல்லாம் சுகமே என்ற வார்த்தைகள்தான்... எனவே அந்த வார்த்தைகளைப் பாடும் போது கேட்பவர்களுக்கு சுகமாக இருக்க வேண்டும். அங்கே இசைகளின் ஆதிக்கம் இருக்கவே கூடாது .. வார்த்தைகள் சுகமாக காதில் விழ வேண்டும். "
The Legend called Yesudas - கூறியது எங்களுக்குப் புரிகின்றது ஆனால் தமிழிசையின் புதிய இசையமைப்பாளர்களுக்குப் புரியவேண்டுமே ... புரியுமா ???
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...52137913_n.jpg
-kra
-
உங்களுக்குத் தெரியுமா ?
இங்கே நான் பதிந்துள்ள பாடல் அபூர்வ சகோதரர்கள் படத்துக்காக கமல் நடித்துப்படமாக்கப்படது. ஆனால் படத்தின் கதையை மாற்றிய கமல் இந்தப்பாட்டை படத்தில் பாவிக்காமல் இதற்குப் பதிலாக ராஜா கைய வச்சா.. என்ற பாட்டை மீண்டும் படமாக்கி பயன்படுத்தினாராம்..
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் https://www.youtube.com/watch?v=eB1tBFm5nqg#t=19
இந்தப் பாடலை இதற்கு முன்னர் எவராவது கேட்டுள்ளீர்களா ???
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...86119049_n.jpg
-kra
-
-
"வாழ்க்க்கையில் ஏதோ விதமாக சிலர் நுழைவார்கள்.. தங்களின் கால்தடங்களை இதயத்தில் பதிப்பார்கள்.. அதன் பின் வாழ்க்கையை நாம் பார்க்கும் கோணமே மாறியிருக்கும்.. இதைக்கூறியவர் உலகின் தலைசிறந்த கொம்போசர்களில் ஒருவரான Franz Schubert என்பவர்..
ஆம் எனக்கு..
" இளையராஜா"..
ராஜாவின் இசையை கேட்கத்தொடங்கியபின் நான் பார்க்கும் உலகம் இன்னும் அழகாகியது..
https://www.youtube.com/watch?v=i0_rMvHkYws
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...45928623_n.jpg
-kra
-
கவிஞர்களும் வார்த்தை வணிகர்களும் - இரு படம், ஒரே காட்சி முற்றிலும் முரண்பாடான பாடல்கள்..
தமிழ்த் தொலைக்காட்சியொன்றில் இடைக்காலப் பாடல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அடுத்து ஒளிபரப்பானது எஜமான் படப் பாடலொன்று.
எஜமான் காலடி மண்ணெடுத்து . நெற்றியிலை பொட்டு வைச்சோம்..
எஜமான் அவர் சொல்லுக்குத்தான் நாங்க தினம் கட்டுப் பட்டோம்..
உங்களைத்தான் நம்புதிந்த பூமி.. இனி எங்களுக்கு நல்ல வழி காமி.
என்று காசுக்காக ரஜினியைப் பாடிக் கும்பிட்டுக் கொண்டிருந்தது மனிதக் கூட்டமொன்று. நான் ரஜினியின் ர்தீவிர ரசிகன் ஆனால் இந்த பாட்டையும் அதிலுள்ள அக்கிரமத்தையும் ரசிக்க முடியவில்லை.
மிகவும் பிற்போக்குத்தனமாக எழுதப்பட்டுள்ள அந்தப்பாடலின் வரிகளும் ,மனிதர்களை கைகட்டி வாய்பொத்தி நிற்கவைத்து அடிமைகளைப் போல படமாக்கப்பட்டிருந்த விதத்தையும் ஒரு மனிதனாக என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதுவும் தனிமனித சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாக்கும் மேற்கு நடொன்றில் இருந்து அந்தப் பாட்டைப் பார்க்கும் போது, சமூக அக்கறையற்று வணிக நோக்கம் ஒன்றுக்காக மனிதர்களில் வர்க்க வேறுபாட்டை உருவாக்கும் பிற்போக்கான இயக்குனரின் ஆதிக்க மனநிலை இன்னும் பூதாகரமாகவே தெரிந்தது. ,
ஆனால் இந்தப் பாட்டைப் பார்த்து வெறுத்துப்போன மனது இன்னொரு பாடலை நினைக்கவும் செய்தது. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படமொன்றில் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதாநாயகனின் அறிமுகக் காட்சியொன்றுக்கு பாடல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பாடலில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் சமூக அக்கறையும் , மனித சமத்துவமும் , சுதந்திரமும் தொக்கிக் காணப்படுகின்றது. மனித நேயத்தை விதந்துரைக்கின்றது.. மத நல்லிணக்கத்தின் அவசியத்தை உரத்துச் சொல்கின்றது.
அந்தப் பாடலின் சரணத்தில்
உழைக்கும் தோழர்களே ஒன்றுகூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்..
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப்பாருங்கள்.. என்றும்..
காற்றும் , நதியும், வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது ..
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப்பார்ப்பதெல்லாம் மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே.. அமைதி நிலவுமே,,
https://www.youtube.com/watch?v=McuSwmnWtko
என்றும் சமூக அக்கறையுடனும் , பொறுப்புணர்வுடனும் அழகாக எழுதப்பட்டுள்ளது.
.. அங்கே எஜமான் காலடி மண்ணெடுத்து பொட்டு வைக்கச் சொல்கிறார் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார். ஆனால் ஐயா புலமைப்பித்தனோ மேடு பள்ளம் இல்லாத சமுதாயத்தை உன்னுடைய ஒற்றுமையால் உருவாக்கு.. என்று எம்ஜிஆர் என்ற பெரும் சக்தியுடன் சேர்ந்து உரத்துப்பாடுகிறார்.. ஆஹா என்னவொரு அருமையான உற்சாகமூட்டும் வார்த்தைகள் இவை..
அதுசரி கிட்டத்தட்ட ஒரே காட்சி, ஒரே மாதிரியான சூழ்நிலையிலேயே இரு பாடல்களும் எழுதப்பட்டும் எதனால் அவற்றின் கருத்தில் முற்றிலும் முரணான பாரிய வித்தியாசம். காணப்படுகின்றது???? .
இங்கேதான் ஒரு கவிஞன் அல்லது தமிழ்ப் புலவனும் வார்த்தை வணிகர்களும் வித்தியாசப்படுகின்றார்கள்.
பழையபாடலானது மனித நேயத்தையும் , சமூக மேம்பாட்டையும் நினைத்து வாழ்ந்து மறைந்த மாபெரும் மனிதன் எம்ஜிஆருக்காக எழுதப்பட்டது.. எழுதியவர் தமிழின் மேலும் தமிழர்களின் மேலும் உண்மையான பற்றும் பாசமும் கொண்ட ஐயா புலவர் புலமைப்பித்தன். ஆனால் எஜமான் பாடல் மெட்டுக்காக எழுதப்பட்டது. எழுதியவர் படத்தின் இயக்குனர் அவர் சமூக அக்கறையுள்ள கவிஞனாக இருக்க வேண்டிய அவசியமில்லை .. அவரைப் பொறுத்தவரை மெட்டுக்குப் பாட்டெழுதி. ... அவரது நாயகனை குளிர்ச்சிப் படுத்தினால் போதுமானது.. முக்கியமாக வணிக ரீதியில் வெற்றிபெறவேண்டும்.
ஆனால் எம்ஜிஆர் அப்படியல்ல. தனது ஒவ்வொரு பாடல்களுக்கும் மணிக்கணக்கில் செலவழித்திருக்கிறார்.. ஒவ்வொரு வார்த்தைகளின் அர்த்தத்தையும் கூர்ந்து கவனித்திருக்கிறார்.. பாடல்களின் தரத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் செய்யாமலிருந்துள்ளார். அதற்காக
கவிஞர்களைத் தேடித் தேடி தகுதியானவர்களைக் கண்டுபிடித்து புதிதாக அறிமுகப்படுத்தி பயன்படுத்தியுள்ளார்
. அவரின் அந்த சமூகப் பார்வையால்தான் இன்றும் வாழ்கிறார். சோர்ந்தவர்களை தனது பெயர்மூலம் உற்சாகப்படுத்துகிறார்.
ஆரம்பகாலத்தில் M.G.R உடன் புலவர் புலமைப்பித்தன்ஆரம்பகாலத்தில் M.G.R உடன் புலவர் புலமைப்பித்தன்
நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்..
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்..
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்..
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்..
புலவர் புலமைப்பித்தன்.நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்.. கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்.. வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்.. வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்.. புலவர் புலமைப்பித்தன்.
Thanks to KRA