RARE ADVT FROM NET
http://i62.tinypic.com/2u6ch6t.jpg
Printable View
RARE ADVT FROM NET
http://i62.tinypic.com/2u6ch6t.jpg
Sathya Sir,
One sincere request, please apply watermark before posting. The only reason is one person is making money out of it. he is publishing many things saying that he did it. If he wants let him publish but let that have your name as well. I want to register the same request to Professor Sir, Sri. CS Kumar and as a matter of fact to everyone. You know your efforts to safeguard such treasures but someone will publish so that people will think that he is the custodian Thalaivar's records?
I do not want to mention the name of the individual over here. Prevention is better than cure.
Thanks.
பொன்மனச் செம்மலின் புகழ் பாடும் மக்கள் திலகம் திரி பாகம் 16 - ஐ தொடங்கியுள்ள சகோதரர் திரு.வி.பி.சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அண்ணா நாளிதழ்களின் அற்புதமான ஆவண பதிவுகளுக்கும் பாராட்டுக்கள். நன்றி.
மக்கள் திலகம் திரியின் 15-வது பாகத்தை நிறைவு செய்து அரிய ஆவணங்களை பதிவிட்ட திரு.குமார் சாருக்கு நன்றிகள்.
என்ன மாயம் இது ? நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் நமது திரியின் கடந்த பாகத்தில் நான் பதிவிட்டபோது 394-வது பக்கத்தில் இருந்தது. நேற்று 6 பக்கங்கள் நிரம்பி 15வது பாகம் முடிந்து நேற்று இரவு 9 மணி அளவில் 16-வது பாகம் தொடங்கப்பட்டு, 19 மணி நேரத்துக்குள் 16 பக்கங்கள் நிறைந்து 17-வது பக்கம் வந்துள்ளது. அலுவல் நெருக்கடிகள் காரணமாக நேற்று திரியை பார்க்க முடியவில்லை. இப்போது பார்த்தால் புதிய பாகம் தொடங்கப்பட்டு இவ்வளவு பக்கங்கள் நிறைந்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். நண்பர்களின் சுறுசுறுப்புக்கு பாராட்டுக்கள்.
மய்யம் தளத்தில் 16-பாகங்களை தொட்டுள்ள முதல் திரி என்ற சாதனையும் பெருமையும் நமக்குத்தான் என்று கருதுகிறேன்.
சிவபுராணத்தில் ‘அவனருளாளே அவன் தாள் வணங்கி....’ என்று வரும். அதுபோல,
தலைவர் அருளாளே அவர் தாள் வணங்கி
சிந்தை மகிழ தலைவர் புராணம் தன்னை தொடர்ந்து பாடுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
So Sweetest Greetings to starts EverGreen Emperor of Cinema World also Political World BharatRatna MGR.,Part 16 -by Mr. VP. Sathya... We expect rare informations about MakkalThilagam... again all wishes to all...
அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுக சாய்ந்து ஓய்ந்துவிடும் என்று பலர் மனக்கணக்கு போட்டார்கள். திமுகவோ மேலும் வலுப்பெற்று வளர்ச்சி அடைந்தது. இது தாங்கிக்கொள்ள முடியாததாகப் பலருக்கும் இருந்தது. இந்த நிலையில்தான் திமுகவிலிருந்து நண்பர் எம்ஜிஆர் பிரிந்தார்.
நாம் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாம். திமுகவைப் பலவீனப்படுத்த எம்ஜிஆரை இந்திரா காந்தி பயன்படுத்திக் கொண்டாரா? இந்திராவின் மனதில் சிலர் ஊன்றிய விஷ விதை தொடர்ந்து வளர்ந்த வண்ணம் இருந்தது. அதனால், திமுகவை ஒதுக்கவும், ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும் என்னென்ன ஆயுதங்கள் வலிய வந்து அவர் கைகளில் விழுந்தனவோ அவை எல்லாவற்றையுமே அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை.
அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார். எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே ? "
- தி இந்து இதழுக்கு கருணாநிதி அளித்த பேட்டியிலிருந்து . ( it is true ?)
## பொய்யும் , புனை சுருட்டும் , தில்லுமுல்லும் ,
திருகு தாளமும் , கருணாநிதி ஜென்மத்தொடு
பிறந்தது என்பதற்கு மேலும் ஒருய் எடுத்துக்காட்டு
இந்த பேட்டி . எம்ஜியார் திமுக விலிருந்து
விலகினாரா ? விலக்கப்பட்டாரா ? இந்திராகாந்தியின்
தூண்டுதலால் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கி இருந்தால் , கட்சி தொடங்கி ஆறே மாதத்தில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் , நின்று மாபெரும்
வெற்றி பெற்று இந்திரா காங்கிரஸ் சை டெபாசிட்
இழக்கச் செய்தாரே ? ஆட்சியில் இருந்த திமுக இன்னும் ஆறாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தால்
திமுக வுக்கும் டெபாசிட் போயிருக்கும் . ஒரு லட்சத்து
அறுபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்ஜியார்
வென்றார் .
அதனைத் தொடர்ந்து , 1974 ல் புதுவை மாநிலத்தில்
புரட்சித்தலைவரின் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது
அப்போது திமுக தனியாக , காமராஜரின் ஸ்தாபன காங்.
இந்திரா காங். இணைந்து போட்டியிட்டது . அந்த மும்முனைப் போட்டியில் எம்ஜியாரே வென்றார் .
உடலால் மறைந்தாலும் கோடானுகோடி
மக்களின் இதயத்தில் வாழும் எம்ஜியாரை , கருணாநிதி
இனியும் விமர்சித்தால் , கருணாநிதியின் முகத் திரை
கிழியும் !