http://i1065.photobucket.com/albums/...psu29weiyq.jpg
தொடரும்
Printable View
http://i1028.photobucket.com/albums/...psvkrhxgxj.jpg
பாடலென்கிற பேரில் வந்த ஒரு
கவிதைக்கு, நடிகர் திலகம்
என்கிற கவிதை வாயசைத்து
நடித்த அதிசயம் 1987-ல்
நடந்தது.
தந்தைக்கும்,மகளுக்குமான
அதீத பாச உணர்வுகளை
மையமாகக் கொண்ட படங்கள்
ஜெயிக்கிற காலத்தில் இருக்கிறோம். ஒரே ஒரு
பாடலுக்குள்ளேயே அத்தகைய
உணர்வுகளை உள்ளடக்கி
நம் இதயம் வென்ற இப்பாடல்
வியப்புக்குரியது.
------------
நடிகர் திலகத்தின் மனத்தின்
நிறம் கொண்ட தூய வெள்ளைக் கால்சட்டை, அடர்சந்தன நிறத்தில் அதனுள்
நுழைத்த மேல்சட்டை, நடிகர் திலகத்தின் துணையோடு
நடக்கும் அவரது வாக்கிங்
ஸ்டிக்...
மாறிக் கொண்டேயிருக்கிற
காலத்திற்கேற்றாற் போல்
தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்திருக்கிறார்..
நடிகர் திலகம்.
அதனால்தான் கடினமான தமிழ்
மற்றும் இசை இலக்கணத்திற்கு உட்பட்ட
பழங்கால நாடக,திரைப்படப்
பாடல்களுக்கு வாயசைத்து
நடித்த அவரால், இந்தப்
புதுக்கவிதைக்கும் கூட அழகூட்ட முடிந்திருக்கிறது.
--------------
இறந்த காலத்தில் இருந்ததாய்
கதையில் சொல்லப்படும் ஒரு
இறக்காத இல்லற வாழ்வின்
அன்பை ஒரு அழகான கவிதைக்குள் சுருக்கி விட்ட
கவிப்பேரரசு வைரமுத்து,
இனிமையாய் இசையூட்டிய
சங்கர்-கணேஷ், அப்பாவும்,
பெண்ணுமாகவே மாறி விட்ட
எஸ்.பி.பி-ஷைலஜா...
மகளாக நடித்த நதியா..
எல்லோரும் வியப்புடன்
வாழ்த்துவதற்குரியவர்கள்.
-----------
"அன்புள்ள அப்பா..
உங்கள் காதல் கதையைக்
கேட்டால் தப்பா?"
-தந்தையென்றாலும் பண்போடு அனுமதி கோரும்
மகளை, கேட்பது காதல் குறித்து
என்பதால் "பொல்லாத பெண்ணப்பா" என்று செல்லமாகக் கடிந்து கொள்வது
ஒரு அழகு.
--------------
மகள் கேட்கிறாள்..
"அப்பா..
நீங்கள் அம்மாவைப் பார்த்தது
எப்போது?
ஞாபகம் உண்டா இப்போது?"
ஆர்வமாய் பதில் சொல்கிறார்
தந்தை...
"முதல் முத்தத்தையும்
முதல் காதலையும்
மறக்க முடியாது மகளே..
அவளை நான் பார்த்தது
மலர்கள், வண்டுகளுக்குப்
பேட்டி கொடுக்கும் ஊட்டியில்."
"அவளை நான் பார்த்தது.."
என்று துவங்கி, "ஊட்டியில்"
என்று முடிக்கும் வரைக்கும்
இடைவிடாமல் பாடல் பாடப்படுகிறது.. ஆனால்..
அதிலும் 'எங்கே முதன்முதலில் பார்த்தோம்?'
என்று யோசிப்பதாய் அவர்
காட்டும் பாவனை ஒரு அழகு.
--------------
"அந்த மலர்க்காட்சியில்
அழகான பூவே
அவள் மட்டுந்தானே"
எனும் போது காட்டும் பெருமிதம் ஒரு அழகு.
--------------
"பூக்களெல்லாம்
அவள் கனிந்த முகம் காண
நாணிக் கோணி
குனிந்து கொண்டன."
-எனப் பாடுகையில் நாணியும்,
கோணியும் இவர் செய்யும்
அசைவுகள் அழகு.
-------------
"உங்கள் மணவாழ்க்கையில்
மலரும் நினைவுகள் உண்டா?"
-மகள், பழைய நினைவுகளைத்
தட்டி எழுப்பி விடுகிறாள்.
"நான் தாயிடம் கூட
பார்த்ததில்லை அந்தப் பாசம்.
அவள் நினைவுகளே
என் சுவாசம்."
-எனும் போது தனக்குள்
தானே கரைந்து போய்..
"அன்புள்ள அப்பா" எனும்
மகளின் குறும்புக் குரல் கேட்டு
சோகத்திலிருந்து உடனே
தன்னை விடுவித்துக் கொள்வது ஒரு அழகு.
----------------
"அப்பா..
அம்மா உங்களை
நல்லா கவனிச்சுக்கிட்டாங்களா?"
-மகளின் ஆசைக் கேள்வி.
துள்ளிக் குதித்து வரும் பதில்..
"சேலையில் எனது
முகம் துடைப்பாள்
நான் சிணுங்கினால்
செல்ல அடி கொடுப்பாள்.
விரல்களுக்கெல்லாம்
சுளுக்கெடுப்பாள்.
என் நகக்கண்ணில் கூட
அழுக்கெடுப்பாள்."
-சுளுக்கெடுப்பதையும்,
அழுக்கெடுப்பதையும் கூட
அந்தந்த வரிகளைப் பாடுகையில் மகளிடம் ஆர்வமாகச் செய்து காட்டுவார்.
எப்படி சுளுக்கெடுப்பது,
எப்படி அழுக்கெடுப்பது என்றெல்லாம் தெரியாத வயதில்லை..மகளுக்கு.
இருப்பினும், மனைவியால்
தான் பெற்ற மகிழ்வான அனுபவங்களை மகளுக்கு
விளங்கச் செய்வதில் இருக்கும்
குழந்தைத்தனமான வேகம்
ஒரு அழகு.
---------------
இரண்டே கண்கள்.
"தாயாய் அவளைப் பார்த்ததுண்டு" -என்று
பாடினால், அவற்றில் தாய்மை
ததும்புகிறது.
"ஒரு தாதியாய் அவளைப்
பார்த்ததுண்டு"- என்று பாடினால், அவற்றில் கருணை
கசிகிறது.
"ஒரு தேன் குடமாய்
அவளைப் பார்த்ததுண்டு"
-என்று பாடினால் அவற்றில்
இனிமை வழிகிறது.
ஆச்சரியத்துக்குரிய அந்தக்
கண்கள் அழகு.
---------------
அன்பான மனைவியைப்
பிரிந்த வேதனை தாங்காமல்
அவர் அழுதுகொண்டே பாடும்
பாடலின் கடைசி வரிகள்..
"என் வானத்தில்
விடிவெள்ளி எழுந்தது..
வெண்ணிலவு மறைந்தது."
இறைவா...!
நடிகர் திலகமென்கிற
வெண்ணிலவையும்
பறி கொடுத்து விட்டு
பரிதாபமாய் இருண்டிருக்கும்
எங்கள் வானத்தில்
எப்போது விடியல் தருவாய்?
https://youtu.be/yXnbMxFpT7A
கோபு
ஓசையில்லாமல் உதவி செய்வதில் தலைவர் நடிகர் திலகம் என்றால் ஓசைப்படாமல் மற்றவரைப் பாராட்டுவதில் நீங்கள் திரியின் திலகமாக விளங்குகின்றீர்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்புகளை நண்பர்களுக்கு அளித்து முன்னணியில் இருக்கும் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
மார்ஷல் நேசமணிக்கு சிலை எழுப்பிய நடிகர் திலகம்
தினமலர் இணையப் பக்கத்திலிருந்து..
மேற்காணும் செய்தி இடம் பெற்ற இணையப்பக்கத்திற்கான இணைப்பு http://www.dinamalar.com/news_detail...377752&Print=1Quote:
'குமரி போராட்டத்தில் 'தினமலர்' பங்கு மகத்தானது'
பதிவு செய்த நாள் 02நவ 2015
சென்னை:''கன்னியாகுமரி, தமிழகத்துடன் இணைவதற்காக நடந்த போராட்டத்தில், 'தினமலர்' நாளிதழின் பங்கு மகத்தானது. குறிப்பாக, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது,'' என, தமிழக பெருவிழாவில், முனைவர், முகிலை ராசபாண்டியன் பேசினார்.
தமிழக பெருவிழாதலைநகர் தமிழ்ச்சங்கம், கன்னியாகுமரி மாவட்ட, வரலாற்று பேரவையின் சார்பில், தமிழக பெருவிழா, சென்னை வண்டலுாரில் நேற்று நடந்தது. விழாவில், சென்னை மாநில கல்லுாரி தமிழ் பேராசிரியரும், தலைநகர் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான, முகிலை ராசபாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளை, தமிழக பெருவிழாவாக, ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். 'தினமலர்' நாளிதழ் சார்பில், சிறப்பு மலர்
வெளியிடப்பட்டு வருகிறது. குமரி போராட்டத்திற்கு, 'தினமலர்' நாளிதழ் பெரும் உறுதுணையாக இருந்தது. அதன் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், குமரி போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றி உள்ளார். தமிழகத்தில் இருந்து கோலார், மலபார் கடற்கரை, ஆந்திரத்தின் பெரும் பகுதி வெளியேறியது. ஆனால், கன்னியாகுமரி மட்டுமே, தமிழகத்துடன் மீண்டும் இணைந்தது.
தமிழக அரசு சார்பில், இந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி போராட்டத்தை முன்னின்று நடத்திய, மார்ஷல் நேசமணிக்கு, சிலை எழுப்புவது குறித்து, அன்றைய முதல்வர் காமராஜரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
காமராஜர், 'ஆகட்டும் பார்க்கலாம்' என்றார். பின் அவர், நடிகர் சிவாஜி கணேசனிடம், நேச
மணிக்கு சிலை அமைக்குமாறு கேட்டார். சிவாஜி கணேசன், 'நீங்கள் உத்தரவிடுங்கள்; செய்கிறேன்' என, பதிலளித்தார். பின், நாகர்கோவில் பேருந்து நிலையத்தில், மார்ஷல் நேசமணிக்கு முழுஉருவ சிலை நிறுவப்பட்டது.
பின், சிவாஜி கணேசன், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின், கட்டபொம்மனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, நினைத்தார்; நெல்லை மாவட்டம், கயத்தாரில் கட்டபொம்மனுக்கு, சிலை நிறுவப்பட்டது.
50 பேர் உயிரிழந்தனர்:குமரி போராட்டத்தில், அரசு கணக்கின்படி, ஒன்பது பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது; ஆனால், 50 பேர் உயிரிழந்தனர். அந்த அளவிற்கு அன்று, மொழிப்பற்று இருந்தது; ஆனால் இன்று, நிலைமை மாறி விட்டது. அன்று தமிழில் கல்வி கற்றவர்கள், அறிஞர்களாக உருவாகினர்; இன்று, ஆங்கிலத்தில் கல்வி கற்கப்படுவதால், பணியாளர்கள் உருவாகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், முகிலை ராசபாண்டியன் எழுதிய, 'சிலம்பில் கணிதம்' என்ற நுாலை, அகில இந்திய வானொலி, செய்தி பிரிவு, உதவி இயக்குனர், மு.ஜெயசிங், வெளியிட்டார்.
அப்போது கூட நடிகர் திலகம் தன் செலவில் சிலை அமைத்துக் கொடுத்தார் என்பதை வெளியிட இந்த தினமலருக்கு மனம் வரவில்லை..
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
அக்டோபர் மாத துவக்கத்தில் கோவையில் நடந்த நடிகர் திலகத்தின் சிகர மன்ற மாநாடு பற்றியும் தொடர்ந்து தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது
1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .
படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது.
அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்காடா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.
http://i501.photobucket.com/albums/e...psb4bfba7b.jpg
இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார். இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.
வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை,
இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது
(தொடரும்)
அன்புடன்
SORGAM CELEBRATIONS IN CHENNAI ANNA(2012)
https://www.youtube.com/watch?v=p9p81_8EDkU
https://www.youtube.com/watch?v=8QGcROdOqDc
https://www.youtube.com/watch?v=oLyfvlRRZew