ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட எங்கள் இறைவன் புரட்சித் தலைவரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவான நாளை முதல் எல்லா மக்களும் சிரித்து வாழ வேண்டும். அருள் புரிவாய் (தமிழகத்தை) ஆண்டவரே!
http://i65.tinypic.com/28i9r4h.jpg
Printable View
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட எங்கள் இறைவன் புரட்சித் தலைவரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவான நாளை முதல் எல்லா மக்களும் சிரித்து வாழ வேண்டும். அருள் புரிவாய் (தமிழகத்தை) ஆண்டவரே!
http://i65.tinypic.com/28i9r4h.jpg
இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அனுப்பிய புகைப்படம் .
http://i63.tinypic.com/15ob7s8.jpghttp://i63.tinypic.com/15wc6zo.jpg
சாமி தருமன் என்று ஊரே புகழ்ந்துரைத்தால்
நூறு வயதுக்கு மேல் உண்டு உண்டு
மக்கள் திலகம் திரியின் 21ஆம் பாகத்தைத் தொடங்கி வைத்த அருமை நண்பர் வினோத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எம்ஜிஆரின் நினைவைப் போற்றுவதுடன், எவ்வித பலனும் எதிர்பாராமல் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க நிலையில் திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பயணித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த போதும் எம்.ஜி.ஆர் -கருணாநிதி இடையே ஆழமான நட்பு தொடர்ந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.கவின் கொள்கைப் பிரச்சார நாடகத்தில் தாம் நடித்த போது, அதற்குத் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கி தன்னை உற்சாகப்படுத்தியவர் எம்ஜிஆர் என்று ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த நேரத்தில் அவரது நினைவைப் போற்றி, எவ்வித பலனும் எதிர்பாராமலும் அனுபவிக்காமலும் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எம்ஜிஆரின் நினைவைப் போற்றுவதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொன்மனச்செம்மல் என்றும், புரட்சி நடிகர் என்றும், புரட்சித் தலைவர் என்றும், மக்கள் திலகம் என்றும், எங்கள் வீட்டு பிள்ளை என்றும், சத்துணவு தந்த சரித்திர நாயகன் என்றும், வாத்தியார் என்றும், இதயக்கனி என்றும், இதய தெய்வம் என்றும்........ இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். "எம்.ஜி.ஆர்" என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம்.
பொது நீதியிலே, புது பாதையிலே வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன். .. இங்கு ஊமைகள் ஏங்கவும், உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன் ? '' என்று கூறியவர், தன் அன்புக்குரிய, எந்த கைம்மாறும் எதிர்பார்க்காமல், தங்களின் உயிருக்கும் மேலாக - தம் மீது அன்பு வைத்திருந்த தமிழ்நாட்டு மக்களை அவரும் தன் உயிருக்கும் மேலாக மதித்துள்ளார் என்பதையும், அதனாலேயே அவருக்கு '' பொன்மனச் செம்மல்'' என்ற பெயருள்ளது என்பதையும் நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அவற்றில், இந்த செய்தி ஒரு மணிமகுடமாகும்..........
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ........17.1.2017
http://i66.tinypic.com/2ic06eu.jpg
http://i67.tinypic.com/1zxo9jn.jpghttp://i68.tinypic.com/1178r2u.jpg
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை நாம் காணும் வாய்ப்பை பெற்றது நாம் செய்த தவத்தின் பயனே .நம்மிடம் அவர் இல்லை . அவரை நேசித்த பெரியார் , அண்ணா , ராஜாஜி , காமராஜர் , இந்திராகாந்தி போன்ற மாபெரும் தலைவர்கள் இன்று இல்லை .மக்கள் திலகத்தை நேசித்து அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தும் , பின்னர் மறைந்த லட்சக்கணக்கான ரசிகர்களும் , தொண்டர்களும் , பொதுமக்களும் இன்று இல்லை .
ஆனாலும் மக்கள் திலகத்தின் வாழ்ந்த காலத்திலும் , அவர் மறைந்து 29 ஆண்டுகள் கடந்த பின்னரும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான ரசிகர்களும் உண்மை தொண்டர்களும் , பொது மக்களும் பத்திரிகை நிறுவனங்களும் , ஊடகங்களும் இன்றைய தினம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை தரிசிக்கும் பேரின்பத்தை பெற்று உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி .
1936ல் சதிலீலாவதியில் தொடக்கி 1978 மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 41 ஆண்டுகள் வரை இந்திய திரை உலகில் மாபெரும் புரட்சியை உருவாக்கி தன்னையுடைய ரசிகர்களை தான் சேர்ந்திருந்த திமுகவில் அண்ணாவின் அன்பு தம்பிகளாக இணைய வைத்து ரசிகர்களை தொண்டர்களாக மாற்றிய பெருமை மக்களை திலகத்தையே சேரும் .
சமுதாயத்தில் அடிமட்ட ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் , அவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னுடைய உழைப்பில் சம்பாதித்த செல்வங்களை எல்லாம் ஏழை மக்களுக்காவே செலவிட்டார் .
எம்ஜிஆர் - ஒரு காலத்தில் அவரின் கொடைத்தன்மைகளையும் , அவருடைய நடிப்பையும் விமர்சனம் செய்தவர்கள் பின்னாளில் தங்களுடைய கருத்தை மாற்றி கொண்டு உண்மை நிலை அறிந்து எம்ஜிஆர் விசுவாசிகளாக மாறியது வரலாறு .
1972ல் புரட்சி நடிகர் ''பாரத்'' எம்ஜிஆர் என்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றும் வானுயர புகழ் உச்சிக்கு சென்றார் . 1977 ல் கோடிக்கணக்கான உள்ளங்களில் தமிழக முதல்வர் ஆனார் . 40 ஆண்டுகளாக மறைந்தும் மறையாமல் மக்கள் உள்ளங்களில் தெய்வமாக நிலைத்து விட்டார் .
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழா கண்ட மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை காண பொன்னான வாய்ப்பை பெற்றவர்கள் நாம் . எல்லை இல்லா ஆனந்தம் நமக்கு .
உலக சரித்திரத்தில் இடம் பெற்றார் நம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் .
மனித நேய மக்கள் தலைவர் .
திரை உலக பொற்கால சிற்பி
பாரத ரத்னா
பாரத்
வாரி வாரி வழங்கிய அமுத சுரபி
இப்படி மக்கள் தந்த பட்டங்களை பெற்ற ஒப்பற்ற உலக தலைவர் எம்ஜிஆர் .
அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் .
அவர் மறைந்த பின்னரும் அவர் நினைவாகவே வாழ்கிறோம் .
நமக்கு பின்னரும் அவர் மக்களால் போற்றப்படுவர் - இது உறுதி ,
உலகமெங்கும் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி . நன்றி நன்றி .
மக்கள் திலகமே ...
இன்று நீங்கள் 100 ஆண்டுகளை நிறைவு செய்த நன்னாளில் ...
நீங்கள் என்றென்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள் ...
உங்கள் நினைவை போற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் .