Venki! Okkandhu ezhudhuradhukku time illa! But I will surely do that
Printable View
Venki! Okkandhu ezhudhuradhukku time illa! But I will surely do that
இன்று மாலை மீண்டும் ஆரம்பம்!
Quote:
Originally Posted by VENKIRAJA
:bluejump:
venkat...
waiting... :yes:
356
365 நாட்கள் ஒரு வருடத்திற்கு,இல்லையா?இங்கே வந்து சரியாக 356 நாட்கள் உருண்டோடிவிட்டன. 8-) நீங்கள் தந்த ஆதரவு இன்றென்னை ஒரு தனி வலைப்பூ தொடங்குமளவு நம்பிக்கை தந்திருக்கிறது. :D என் வாழ்வின் மிக முக்கிய நாட்கள் இவை. :P என் அனுபவங்களினூடே என்னையே அடையாளம் காட்டும் எழுத்துலகின் விசித்திரப் பிரயோகங்களினை கூர்ந்த்து அவதானித்த பருவம் இது.
"குட்டையில்
சிறுநீர் கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்"
-வீ.இராஜசேகரன்,சேலம்(கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா தேர்ந்தெடுத்த ஹைக்கூ)
சில நேரங்களில் நினைவுகள் அப்படித்தான் வளையலாக பல நினைவுகளை தட்டி நெம்பி விடும்.என் பள்ளிவாழ்வின் கடையாண்டில் பிரிவின் துயரம் புலப்பட்டது.விரியப்போகும் வானைப் பற்ற புதிய பீலிகள் இதோ முளைத்துக்கொண்டே இருக்கின்றன.என் அடிப்படை பேச்சுத்திறனும்,விவாதம் செய்யும் மனப்பான்மையும்,நல்ல நண்பர்கள் வட்டத்தையும் இங்கே அளித்தமைக்கு நன்றி.இலக்கியப் பூர்வமாகவும்,உளவியல் பூர்வமாகவும் என்னுள் பிரளயங்கள் வெடித்த தருணங்கள் இவை.குறிப்பாக அரை நிஜாரும்,ஹூக் மாட்டிய கைக்குட்டையுமாய் நான் பழகிய மனிதர்களை நீங்கும் அவரோகணம்.சென்ற ஆண்டின் தொடக்கம் முதலே(எங்களுக்கு மார்ச் மாதமே பாடங்கள் தொடங்கிவிட்டன)படிப்பில் கவனம் செலுத்தும் முனைப்பில் இருந்தேன்.resolutionகளை உடைப்பது நமக்கென்ன புதிதா?அப்படி கோட்பாடுகளை காற்றில் விட்டேன்,இன்பமாக பொழுதுகள் கழிந்தன.தேர்வுகள் வரும் வேளை விழித்த தீர்மானங்கள் நல்லவேளை கைகொடுத்தன.தேர்வுகள் இனிதே முடிந்தன.இடையில் தானே விவகாரம்!
என் பள்ளி நாட்களை சத்தியமாக மறக்க முடியாது.சென்ற ஆண்டின் ஆரம்பமே பாதசாரிப்புதான்.பள்ளியில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச்சென்றார்கள்.அரவிந்தர் ஆசிரமத்தின் கவ்விய அமைதியை ருசித்தோம்.கடற்கரையில் கண்களால் கால்நனைத்தோம்.ஹயக்ரீவர் கோயில் சென்று வந்தோம்.ஜோக்கடித்தோம்,ஆட்டம் போட்டோம்.சவுக்குத்தோப்பிலும்,பம்பு செட்டிலும் படம் பிடித்தோம்.வரும் வழியெல்லாம் கூச்சல் போட்டோம்.நொறுக்குத்தீனி அரைத்தோம்.ஒருவன் மேல் ஒருவன் தூங்கி வழிந்தோம்.எங்கள் ஆசிரியைகள் ஜன்னல் வெளியே தலைநீட்டி குறட்டை விட்டதை படம் பிடித்தோம்.சகா ஒருவனின் பிறந்தநாளைக் கொண்டாடினோம்.இரவெல்லாம் கனவில் தொடர்ந்து பயணித்தோம்.
தேர்வுகளில் நக்கலாய் எழுதுவது பழக்கமாகிவிட்ட்டது.
$ Q: If you were the U.S president would you drop the bomb on hiroshima?give reasons.
A:No,i wouldn't have.The reasons are highly confidential,military secrecy. $
நான் கணிதத்தில் புளி,கரைந்தே விடுவேன்.இயற்பியலும் சொல்லிக்கொள்ளுவதைப்போல் இல்லை.ஆனால் வேதியியலிலும்,உயிரியலிலும் கெட்டி.ஏதோ தொண்ணூறு சதவிகிதம் வந்தால் புண்ணியம்.இந்நிலையில் நான் வருடம் முழுதும் என்ன செய்திருப்பேன் என்பது உங்களுக்கு புலப்பட்டிருக்கலாம்.அரட்டையும்,கேலியும் தான்.
(தொடரும்)
வென்கி...
குட்டை நீரில் வானத்தை அசைக்கும் சிறுவனுக்கு
ராமன் எஃபெக்ட் பற்றித் தெரியாவிட்டால்தான் என்ன ?
பாதசாரிப்பு தொடரட்டும்... வலைப்பூவைப் பார்வையிட
வருகிறோம்..
:)
நான் எழுதுவதாக சொல்லியிருந்த மாலைக்கு காமலை பிடித்து கெட்டது.இன்று அனுப்புகிறேன் தூது வருகிறதா பார்க்கலாம்.
பாதசாரி புதிய அத்தியாயம்.
இதுவரை சிறுவனாக இருந்தவன் இன்று இளைஞனாயிருக்கிறேன்.
"பைக் ஓட்டிய போது
செய்த தவறுகள்
புரியத்துவங்கின
கார் ஒட்டிய போது"
(கில்லி.காம்:மின்மினி:XAVIER)
இந்நிலையில் இந்தப் பருவத்தின் கவர்ச்சிகளில் ஈர்ர்ப்புத்தன்மை இருந்தாலும்,இசை இப்போதெல்லாம் ரொம்ப அற்புதமாக கேட்பதை சொல்லியே ஆகவேண்டும்.
இந்த ஆண்டு நிரலான என் பிறந்தநாளுக்கு நண்பன் மனோஜ் ஒரு ரேடியோ பரிசளித்தான்.வெறும் ஆள்காட்டி விரலளவு மட்டுமே இருந்த அந்த இயந்திரத்தை விடுமுறையில் இப்போது நுழைவுத்தேர்வுக்கு வகுப்புகள் செல்லும் நான் அதன் தாத்பரியத்தினை அறிகிறேன்.ரயிலில் தான் பாதி பயணம்.அந்த கணங்களில் காகிதமும்,தூரிகையும் ஈனைவதைப் போல் ரயிலின் ராகமும்,வானொலியின் பாவமும் புணர்ந்து சாஸ்வதமான் உருகவைக்கும் இசையை சமைத்தன.இணையாமல் நீண்டுகொண்டே செல்லும் ரயிலின் தண்டவாளங்கள் கானல் நீரின் திட வடிவமோ என்று எண்ணவைத்தது.பக்கத்தில் சிதறுண்ட கருங்கற்கள் வெயிலின் உக்கிரத்தைனை ரயில் வந்து சாமரம் வீசும் போது குளிர்ச்சியில் உறைந்தே போகிறது.புரோட்டா மாஸ்டரின் பதத்தில் வண்டியின் சக்கரங்களை உராய்வதை 180 டிகிரியில் பார்ப்பது குழந்தையின் சிரிப்பை நினைவூட்டுகிறது.ஓரத்தில் பயணிக்கையில் தாழ்தளத்து வீடுகள்,வட்டமிடும் கழுகுகள்,சிக்னல்கள் எல்லாம் ஒரப்பார்வையில்.இருக்கிற அரையடி கூந்தலும் காற்றில் பரத்முத்திரைகள் குவித்தபடி.துணைக்கு காலடி பெல் பாட்டம் படபட மத்தளம்.விதவித முகங்களும்,விதவித சம்பாஷணைகளும்,விதவித அலைபேசிகளும் சற்று நேரம் நங்கநல்லுர் ஆஞ்சனேயராய் என்னை மாற்றியது - அவருக்கு சஞ்சீவி மலை,எனக்கு தாமஸ் மலை.கல்வி என்ற நோக்கில் செல்லும் என் பாதை பூத்துக் குலுங்குகிறது பயணத்தின் பவழக்கிழமைகளாய்.
காற்றில் எந்தன் கீதம் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்க,கிண்டி வந்துவிட்டது.இறங்கி நடக்கையில் பனிவிழும் மலர்வனத்தில் பேருந்திற்காக காத்திருக்கிறேன்.வளையோசை கலகலகலகலவென ஒலிக்க அழகான பெண்களை கொஞ்சம் விழிகளால் கவிதை எழுதி கவிழ்க்கப் பார்க்கிறேன்.ஒன்று போனால் ஒன் மோர் உள்ளதடா என நகர்கையில் ஷேர் ஆட்டோ வருகிறது.இசையின் முதல் துளி தோட்டாவாய்த் துளைத்து காதில் தெறிக்கையில்,முதல் சொட்டுத் தேனின் சுவை.இசை அதன் ருசியை உடலெங்கும் பரவசமாக இலவசமாக பரவவிட நினைத்து நினைத்து பார்த்தேன் நான் பார்த்ததிலேயே அழகான பெண்ணை.கண்கள் தானாக மூட என்னதான் பாகவதன் இல்லையென்றாலும்,சங்கதிகளை ரசிக்கத்தெரிந்த செவித்தசைகள் உருவை உள்ளே செலுத்தியது.அலைகளை கட்டியிழுத்து என் காதில் கிடத்த செம்பூவின் வாசம்,பின் வசந்தகாலம்.மண்ணில் பெண்ணுக்கு நிகரான இன்பன் இசையெ.காற்றின் சுவாசம் கானம்.வயலினும்,சித்தாரும்,பியானோவும்,நாதஸ்வரமும்,ப ேம்பினோவும் அந்த ஒற்றைக்கருவியின் மோகனம் பரப்புகிறது.கருப்பு வெள்லைப் பூகளும்,சர்க்கரை நிலவும்,சஹாரா சாரலும்,ஒரு மாலை இளவெயிலும் ஒன்றன்பின் ஒன்றாக மோத,முன் வந்த கடன்காரனின் அலட்சியத்தால் ஆட்டோ ஓட்டுனர் போட்ட ப்ரேக் நிறுத்த ரேடியோ கழன்று விழ,அலைகள் அத்தனையும் காற்றில் கசிய,கொஞ்ச நேரத்தில் தென்றல் வரும் வழியெல்லாம் நனைந்துவிட்டன.நின்ற அலைகள் பெருகப்பெருக இசை தீபிடிக்க தீப்பிடிக்க புதுக்கவி வாசித்தது.காற்றெல்லாம் அதிர,பட்டினப்பிரவேசத்தில் கட்டிக்காப்பத்திய இசை காதிலிருந்தும்,வாயிலிருந்தும் மௌனத்தை விவாகரத்து செய்து கோப மொழியாய் தூவின.மீண்டும் அலைகளையெல்லாம் அணைகட்டி இழுத்துவருவதற்குள் வீடுவந்துவிட்டது.நடுவில் கொலை செய்த தொகுப்பாளினிகளை துறந்தபடி அடுத்த ரேடியோ ஊரைப் பார்க்க மந்திரக்கம்பளம் விரிப்பது உத்தமம்.இசை காதருகே திருக வனப்பாய் பயணத்தை இசையோடு களித்தேன்.வழிதடங்களிலெல்லாம் பாதச்சுவடுக்கு பதில் இசைக்குறிகள்.
nice .......... :)
btw un b.day eppo?
the last day of the first month of the last decade of the past century of the second millenium,
simply guessable......