Quote:
பிசினஸ் ப்ளஸ்
ஜெயா `பிசினஸ் ப்ளஸ்' என்ற பெயரில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு வர்த்தகச் செய்திகள் ஒளிபரப்பாகின்றன.
உலக பொருளாதாரம் முதல் உள்ளூர் வர்த்தகங்கள் வரை, அன்றாட அனைத்து வகையான வணிகப் பரிமாற்றங்கள் குறித்து முழுமையான செய்திகள் இதில் இடம்பெறுகின்றன.
உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக ஒப்பந்தங்கள், நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள், வங்கிகளின் செயல்பாடுகள், பங்குச்சந்தையின் ஏற்ற-இறக்கங்கள், தங்கம், வெள்ளி விலை நிலவரம் பல்வேறு நாடுகளின் பண மதிப்பீடுகள், மிïச்சுவல் பண்ட் நிலவரம் போன்ற பல்வேறு அம்சங்களுடன், சந்தைக்கு வரும் புதிய பொருட்கள் பற்றிய அறிமுகமும் இதில் இடம்பெறுகிறது.
பங்குச்சந்தை குறித்து பல்வேறு ஆய்வுகளுடன், இத்துறை சார்ந்த முன்னணி பகுத்தாய்வாளர்கள் வழங்கும் முன்வர்த்தகத்திற்கான பரிந்துரைகளும் நாள்தோறும் இச்செய்தியில் இடம் பெறுகின்றன.
இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இச்செய்திகள், தொடர்ந்து 10.30 மணிக்கும், நள்ளிரவு 1 மணிக்கும் ஜெயா ப்ளஸில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.