படம் - அன்புச் சகோதரர்கள்
பாடல் - எதிர்பார்த்தேன்
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
http://youtu.be/UgMjtSNdwEo
Printable View
படம் - அன்புச் சகோதரர்கள்
பாடல் - எதிர்பார்த்தேன்
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
http://youtu.be/UgMjtSNdwEo
மிக மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் உயிர் மேல் ஆசை படப் பாடல் இணையத்தில். ... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் பரபரப்பாக ஓடிய படம். 100 நாட்கள் வெற்றிப் படம். சஸ்பென்ஸ் த்ரில்லர். ஒரு தேங்காய்க்குள் வெடிகுண்டு இருக்கும். அது எங்கே எப்போது யார் உடைப்பார் எப்போது வெடிக்கும்... யாருக்கும் தெரியாது. அதுவும் கே.பி.எஸ். அவர்களிடம் அந்தத் தேங்காய் சென்றடையும் போது இருக்கையின் நுனிக்கு வராதவர்களே இல்லை. கே.பி.எஸ். அவர்களின் பாடல், கேளு பாப்பா ஆசையின் கதையை என்கிற சூப்பர் பாடல் பிரமாதமான மெட்டும் கருத்தும். இப்பாடலைத் தரவேற்றியவர்க்கு மிக்க நன்றி. டி.எம்.எஸ். சுசீலா வின் சிறந்த டூயட்பாடல்களில் இதுவும் ஒன்று.
http://youtu.be/vyLCrECPWfg
Can anyone post review of Jai sir's Ponvandu, Kadai Kadai am karanamam, Kadhalikalam vaanga, uyira manama etc
Many Jai movies are available but could not decide whether 2 buy or not could any one pl guide
பொன்வண்டு திரைப்படத்தில் பட்டை கிளப்பும் வெவேறு ட்யூன்களில் குமாரின் நெருங்க முடியாத காந்தர்வ இசை அமைப்பில் உருவான வாடியம்மா... பாடல்.
http://www.buycinemovies.com/images/...293-vcd-40.jpg
http://i.ytimg.com/vi/MRUniZrlHK0/0.jpg
http://www.youtube.com/watch?v=MRUniZrlHK0&feature=player_detailpage
டியர் ராகவேந்திரன் சார்,
பிரமாதம். உயிர் மேல் ஆசை படத்தின் அபூர்வ பாடல் அளித்தமைக்கு உயிரான நன்றிகள். இது போன்ற அபூர்வ பாடல்கள் என்றாலே மனம் சிறகடித்து விடும் எனக்கு. இது போன்ற அருமையான திரியில் ஏன் யாரும் சரிவர கலந்து கொள்வதில்லை?
kelu paappaa...
http://www.inbaminge.com/t/u/Uyir%20Mel%20Aasai/
மிக மிக மிக மிக நீண்ட.................நாட்களுக்குப் பின் இணையத்தில் ...
இந்த நிலவை நான் பார்த்தால் - அது
எனக்கென வந்தது போலிருக்கும் ....
http://youtu.be/MbK-y-zdYMs
படம் - பவானி
இசை - வேறெ யாரு ... இதுக்கெல்லாம் எம் எஸ் வியை விட்டா வேறே யாரு ...
பாடல் - அதே அதே ... இதுக்கெல்லாம் கண்ணதாசனை விட்டால் வேறெ யாரு ...
குரல்கள் ... டி.எம்.எஸ். பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ்
நடிப்பு - ஜெய்சங்கர், எல் விஜயலட்சுமி, வாணிஸ்ரீ, அசோகன், விஜயகுமாரி
வெகு நாட்களுக்கு பின் மக்கள் கலைஞர் அவர்களின் புகழ் பாடும் இந்த திரியில் பங்கு பெறுகின்றேன் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. நமது அன்பு நண்பர் சுப்ரமணியன் [நமது ஹப்பில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்] அவர்கள் முயற்சியால் மக்கள் கலைஞர் அவர்களின் இளைய புதல்வர் திரு சஞ்சய் சங்கர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் ராகவேந்தர் சாரும், சுப்ரமணி அவர்களும் சென்றிருந்தோம். Down to earth என்பார்களே அது போன்ற ஒரு எளிமை நட்புடன் பழகும் தன்மை அனைத்தும் அவர் தந்தையாரை நினைவுப்படுத்தியது.
நமது ஹப்பில் இருக்கக்கூடிய ஜெய் பற்றிய திரியை பற்றி அறிந்ததோடு மட்டுமல்லாமல் அதை படித்துப் பார்த்திருக்கிறார், மகிழ்ந்திருக்கிறார். இந்த திரியில் வந்த அனைத்து பதிவுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
கார்த்திக்,
உங்கள் பெயரை குறிப்பிட்டு உங்கள் நலம் விசாரித்தார்.
சாரதா,
வெகு நாட்களாக வருகை தராமல் இருக்கும் மக்கள கலைஞரின் தீவிர அபிமானியான உங்களை குறிப்பிட்டு கேட்டார். எனக்கு தெரிந்த விவரங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
அது போன்றே அரிய புகைப்படங்களை அளித்த வாசு மற்றும் சுவாமி பற்றிய தகவலகளையும் அவரிடம் சொன்னோம்.
ஜெய் கோலோச்சிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணி பகுதி ஜெய் ரசிகர்களைப் பற்றி ராகவேந்தர் சார் அவரிடம் விவரித்தார்.
ஜெய்யின் பழைய சுவாரஸ்யமான படங்களைப் பற்றி மற்றும் பல சுவையான நிகழ்வுகளைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைய மாலை எங்களுக்கு உணமையிலே ஒரு பொன் மாலைப் பொழுதாக அமைந்தது.
நன்றி சஞ்சய் சார்!
நன்றி சுப்பு!
அன்புடன்
முரளி சார் கூறியது போல் இன்றைய நாள் ஒரு இனிய நாள். நல்ல நாள். மக்கள் கலைஞரின் வாரிசு சஞ்சய் அவர்களுடன் உரையாடி அந்த காலத்தைய ஜெய்சங்கர் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மனதுக்கு இதமாக இருந்தது. நம் நண்பர்கள் வாசுதேவன் பம்மலார் ஆகியோரைப் பற்றியும் மற்றும் சாரதா கார்த்திக் ஆகியோரைப் பற்றியும் நாங்கள் கூறியதை மிகவும் ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஜெய்யின் படங்களை திரையிட முயற்சி எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.
இனிமையான இன்றைய மாலைப் பொழுதையும் அவருடன் உரையாடிய கணங்களையும் அசை போட்ட வாறே வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, நெஞ்சில் நிழலாடியது ஜெய்சங்கர் நடித்த இந்த பாடல் தான்.
நன்றி முரளி, மற்றும் சுப்பு அவர்களே, மற்றும் சஞ்சய் அவர்களே.
http://youtu.be/CrsdL4e8Fmk