ரஜினி கூடாரத்திலிருந்து ரவிக்குமார் விலகக் கூடும். இதுதான் கோடம்பாக்கத்தின் மன உளைச்சல் நம்பர் ஒன்ணு.
ராணா படத்தை துவங்கிய முதல் நாளே ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதுrajini_ravikumar. அதற்கப்புறம் ராணாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படமே வருமா, வராதா என்கிற கேள்விகளை எழுப்பியது ரஜினி ரசிகர்களிடத்தில். ராணா அப்புறம் வரும். இப்போதைக்கு கோச்சடையான் என்றெல்லாம் சமாதானம் கூறப்பட்டு, கோச்சடையானில் ரவிக்குமார்தான் கூடுதல் டைரக்டர் என்ற அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது.
ஆனால் இப்போது கோச்சடையான் படத்திலிருந்தே ரவிக்குமார் விலகிவிட்டதாக தகவல். ராணாவை இப்போது தொடர முடியாது என்பதும் அவருக்கு நன்றாக தெரிந்த விஷயம்தான்.
எனவே கமல் நடிக்கும் ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.
இப்படி அவர் முடிவெடுக்க காரணம்? சில வாரங்களுக்கு முன் ஏ.வி.எம் சரவணனிடம் பேசிக் கொண்டிருந்த ரஜினி, உங்க பேனர்ல கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கலாமே. நான் கால்ஷீட் தர்றேன் என்றாராம். ஆனால் ஏ.வி.எம் மனசில் இருந்தது ஆனந்த் அல்ல, கே.எஸ்.ரவிக்குமார்தான். இதை வெளிப்படையாக சொன்ன சரவணன், ரவிக்குமார் இயக்கட்டுமே என்றாராம். இதற்கு ரஜினி ஒப்புக் கொள்ளவில்லையாம்.
இதையடுத்துதான் அவசரம் அவசரமாக கமல் படத்தில் கமிட் ஆனாராம் கே.எஸ்.ரவிக்குமார்.
எச்சச்ச எச்சச்ச எச்சச்சா... கச்சச்ச கச்சச்ச கச்சச்சா...
http://www.tamilcinema.com/CINENEWS/...une/010612.asp
HOPE IT DOESN't HAPPEN