-
-
கலைநிலவுக்கு முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி
[25.7.2011 - 25.7.2012]
http://i1110.photobucket.com/albums/...ar/Ravi1-2.jpg
கலைக்குரிசில் பற்றி கலை நிலவு
(1968-ல், திருநெல்வேலி சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் வெளியிட்ட, ரசிகர் கலை மலர் என்கின்ற சிறப்பு மலரிலிருந்து...)
"தமிழகத்தின், ஏன்? உலகத்திலேயே முதன்மையான நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மன்றம் அமைத்து, விழா நடத்துகின்ற ரசிகர்கள் மலருக்கு கட்டுரை கேட்டார்கள்.
சிவாஜி கணேசனைப் பற்றி நான் எழுதுவதா? எதை.....எப்படி? எனக்கு ஒரே திகைப்பு.
உயரத்தில்..........எவரெஸ்ட்
புனிதத்தில்.........கங்கை
கலையழகில்..........தாஜ்மஹால்
கனியினிமை........தமிழ் மொழி
பெரு நடிகர்..........அண்ணன் கணேசன் அவர்கள்
அவர் வாழ்க என்றென்றும்.
மன்றத்தின் சேவை பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன், மன மொழி மெய்யினால்."
கலைக்குரிசிலைக் குறித்து கலை நிலவு கூறிய கருத்துக்கள் கலைக் கண்ணோட்டத்துடன் களை கட்டுகிறது !!!
"மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)"யிலிருந்து 'காத்திருந்த கண்களே...'
http://www.youtube.com/watch?v=81zRXzxZMPM
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
நமது நடிகர் திலகத்தின் திருப்பேரனும், இளையதிலகத்தின் அருந்தவப்புதல்வனுமான நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் அறிமுகக் காவியம் "கும்கி"யின் இசை வெளியீடும், வெள்ளித்திரை வெளியீடும் இமாலய வெற்றி காண இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்..!
http://i1110.photobucket.com/albums/...aar/Kumki1.jpg
ஆனைப்பாகனாக அறிமுகம் பெறும் கணேசரின் பேரனுக்கு, ஆனைமுகத்தானின் அருளும், கலைப்பிள்ளையாரின் கிருபையும் என்றென்றும் துணைநிற்கும்..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
டியர் பம்மலார் சார்,
கர்ணன் பேசும்பட பக்கங்கள் .....அதுவும் நீங்கள் அமெரிக்க மக்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளது... மிகவும் பொருத்தமான ஒன்று...பாராட்டுக்கள்..
அன்புடன்
-
கர்ணன் விழா 04.08.2012 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை அண்ணாசாலை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. அகில இந்திய சிவாஜி மன்றம் நடத்தும் இவ்விழாவில் 4.30 மணி முதல் 6.00 மணி வரை யூ.கே. முரளி குழுவினர் இசை நிகழ்ச்சி. 6.00 மணியளவில் விழா துவங்கும். திரு ஒய்.ஜி.மகேந்திரா, திரு மருது மோகன், திரு பி.வாசு, திருமதி ராதிகா சரத்குமார், ஆகியோர் சிறப்புரையாற்ற, கர்ணன் திரைப்படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி உரையாற்றுகிறார் இளைய திலகம் பிரபு கணேசன் அவர்கள். நிகழ்ச்சியினை திருமதி மதுவந்தி அருண் அவர்கள் தொகுத்தளிக்கிறார்.
-
1 Attachment(s)
சிங்கையில் கர்ணன்
Attachment 1615
-
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்களும், அருமை நண்பர் ராமஜெயம் அவர்களும் கர்ணன் 140- ஆவது நாள் வெற்றி பவனிக்காக இணைந்து தயாரித்துள்ள சுவரொட்டியின் நிழற்படம் அதி அருமை. சுவரொட்டியின் வலது, இடது பார்டர்களில் படத்தின் கதையையே படங்களின் வடிவில் தந்து அசத்தி விட்டீர்களே! வாழ்த்துக்கள்.
கர்ணன் அமெரிக்காவில் திரையிடப் படும் அரங்குகள் பற்றிய மேலதிக விவரங்கள் மிக்க பயனுள்ளவை.
-
அன்பு பம்மலார் சார்,
தங்கள் மடை திறந்த வெள்ளம் போன்ற காவல்தெய்வம் பதிவிற்கான பாராட்டுப் பதிவு என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது. அந்த கட்டுரை பதிவு உருவாக காரணகர்த்தாவே நீங்கள் தான். அதற்காக என் ஆழ்ந்த நன்றிகள். கட்டுரையை தங்களுக்கு மிகவும் பிடிக்குமளவிற்கு எழுத முடிந்தது என்பதில் பேருவகை அடைகிறேன்.
நடிக தெய்வம் தங்களை மட்டும் நினைத்து சிலாகிக்காமல் இருக்க முடியுமா! "உலகெங்கும் ஆவணங்கள் மூலம் என் புகழ் பரப்பும் சுவாமிநாதா! உன்னதப் பிறவியப்பா நீ' என்று உச்சி மோந்து மகிழ மாட்டாரா!
சாரதா மேடம், அன்பு கார்த்திக் சார், முத்தான முரளி சார், பம்மலாராகிய தாங்கள் என்று பல அற்புதமான ஆய்வுச் செம்மல்கள் முன் இச்சிறியவனின் பணி மிகச் சாதாரணமானதே! தாங்கள் என் மீது கொண்ட எல்லையில்லா அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றி நவில இயலாமல் திகைத்துப் போய் நிற்கிறேன்.
தங்கள் பாராட்டு மழையில்
ஆனந்தக் கண்ணீரோடு நனையும்
தங்கள் அன்பன் வாசுதேவன்.
-
அன்பு பம்மலார் சார்,
கர்ணனின் பேசும்படக் காவியக் காட்சிகள் அருமையிலும் அருமை. அத்தனையும் எங்களுக்குப் பெருமையிலும் பெருமை. இந்த மகா மெகா அரிய பதிவை அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கை வாழ் அன்புத் தமிழ் மக்களுக்கு தாங்கள் Dedicate செய்தது சாலப் பொருத்தம். ஒவ்வொரு காட்சியும்
கண்களை விட்டு நகர மறுக்கின்றன. எட்டு நிழற்படங்களும் அஷ்டதிக்கஜங்களாய் மின்னி ஜொலிக்கின்றன. ஒவ்வொரு நிழற்படத்திற்கும் தனித்தனியே என் நன்றிகள்.
அழகான நிழற்படத்தோடு 'கலைநிலவு' அவர்களுக்கு தங்களுடைய முதலாமாண்டு நினைவஞ்சலி மிகப் பொருத்தம். தங்களின் மற்றொரு பதிவான கலைநிலவு அவர்கள் நடித்த 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' காவியப்பாடலான 'காத்திருந்த கண்களே' ரவியின் நினவஞ்சலிக்கு செம சாய்ஸ்.
கலைக்குரிசில் பற்றி கலை நிலவு அளித்திருந்த கருத்துக்கள் அனைத்தும் தென்பாண்டி முத்துக்கள்.
கும்கி' பதிவு சும்மா 'கும்'.
நச்சென்ற பதிவுகள் + நல்ல உணர்வுகள் = எங்கள் பம்மலார்.
-
'கனடா' நாட்டிலிருந்து மாதமிருமுறை வெளியாகும் மூத்த தமிழ் இதழான 'விளம்பரம்' (july 15, 2012) இதழில் மறக்காமல் நடிகர் திலகத்தின் நினைவு நாள் 'ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே' என்ற தலைப்பில் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த பத்திரிகைக்கும், கனடாவாழ் தமிழர்களுக்கும் நம் சார்பில் உளம் கனிந்த நன்றி! அந்த அபூர்வமான பத்திரிகையின் அரிய, சிறிய பதிவு இதோ...நம் அனைவருக்காகவும் தரவிறக்கம் செய்து.
http://i1087.photobucket.com/albums/.../current-1.jpg
http://i1087.photobucket.com/albums/...355/kanada.jpg
அன்புடன்,
வாசுதேவன்.