மக்கள் திலகம் என்றாலே சுறுசுறுப்பு, விறுவிறுப்பு மற்றும் வேகம் தானே
Printable View
எஸ்வி சார்,
அது மட்டும் போதாது எனக்கு...!
மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் நம்பியாருடன் மேடு பள்ளம் ஆகியவற்றில் இருவரும் சண்டையிடும் காட்சி...லதாவிடம் நம்பியார் வம்பு செய்ய முயற்சிக்கும்போது வருமே அந்த காட்சியும் நீங்கள் எனக்கு இங்கே போடவேண்டும்..
அந்த சண்டைகாட்சி...
மற்ற எல்லா மக்கள் திலகம் வாள்பயிற்சி காட்சிகளை விட மிக சிறப்பானதாகும்..!
05-05-2013 மற்றும் 06-050-2013 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் மக்கள்திலகத்தின் 100 வது காவியம் ஒளிவிளக்கு தொரப்படி கணேஷ் திரையரங்கில் வெற்றிகரமாக போய்கொண்டிருகிறது
இரண்டு நாள் மட்டும் என்பது மாறிபோய் அதையும் தாண்டி போய்கொண்டிருகிறது
http://i42.tinypic.com/2z7qvk3.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i40.tinypic.com/2l88d4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i41.tinypic.com/a3us0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i44.tinypic.com/4gm34y.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
http://i39.tinypic.com/6fz607.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நம் தலைவனின் ஆசிர்வாதத்துடன் தலை வணங்கி ஏற்றுகொள்கிறேன்
அதற்கு முன்பு ஒரு உண்மையை நான் சொல்லியாகவேண்டும் இன்று எனக்கு பிறந்தநாள் என்பது சத்தியமாக தெரியாது
நினையுபடுத்திய திரு சைலேஷ் சார் அவர்களுக்கு நம் மக்கள்திலகத்தின்
திரியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
மற்றும் திரு ragavendiren sir .மாசனம் சார்.வினோத் சார்,வாசுதேவன் சார் திருப்பூர் இரவிச்சந்திரன் அதேபோல் போன் மூலமாக வாழ்த்து தெரிவித்த திரு ரூப் சார் ,செல்வகுமார் சார் பம்மல் சாமிநாதன் சார் அனைவருக்கும் எனது நன்றிகள்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
எத்தனை முறை வந்தாலும் வசூல் குவிக்கும்
மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு திரைப்படம் குறித்த படங்கள் அசத்தல்.
பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே.
இனிய நண்பர் வாசுதேவன் சார்
திரு ஷ்யாம் சுந்தர் அவர்களின் பேட்டி மிகவும் அருமை . நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் திலகம் அவர்களின் திறன்களை பற்றிய கட்டுரையை படிக்க வாய்ப்பு தந்த திரு வாசு அவர்களுக்கு நன்றி .
இனிய நண்பர் திரு srs
விரைவில் உங்கள் ஆவலை பூர்த்தி செய்கிறேன் .
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகளை நீங்கள் விரும்பி பார்க்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .
மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் நம்பியாருடன் மேடு பள்ளம் ஆகியவற்றில் இருவரும் சண்டையிடும் காட்சி...லதாவிடம் நம்பியார் வம்பு செய்ய முயற்சிக்கும்போது வருமே அந்த காட்சியும் நீங்கள் எனக்கு இங்கே போடவேண்டும்..
http://youtu.be/HUI3Yv-2mns
அந்த சண்டைகாட்சி...
மற்ற எல்லா மக்கள் திலகம் வாள்பயிற்சி காட்சிகளை விட மிக சிறப்பானதாகும்..![/QUOTE]
நேற்றும் முன் தினமும் அலுவல் காரணமாக சபாநாயகருடன் திருசெந்தூர் சென்றிருந்ததால் தங்களுக்கு உரிய நேரத்தில் வாழ்த்துக்கூற முடியவில்லை..மன்னிக்கவும்..உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் உயரிய கொள்கை உடைய நம் உலகத்தமிழரின் தெய்வத்தின் காலடியொற்றி கடும்பணியாற்றி வரும் வேலூர் திரு ராமமூர்த்தி அவர்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து தலைவரின் புகழ் பாட எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆரை பிரார்த்திக்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் அவர்களின் ''நினைத்ததை முடிப்பவன் '' திரைப்படம் இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
1971ல் படம் துவங்கி அதே வருடம் காஷ்மீரில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு பின்னர் சற்று இடைவெளிக்குப்பின் 1974ல் முழு மூச்சில் படமாக்கப்பட்டு 9.5.1975 அன்று வெளிவந்தது .
மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுபட்ட இரண்டு வேடங்களில் பிரமாதமாக நடித்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .
இனிய பாடல்கள்
புதுமையான சண்டைக்காட்சிகள்
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம்
வித்தியாசமான நடிப்பு
கண்ணை நம்பாதே ... பாடல் எல்லோருக்கும் எப்போதும் வாழ்க்கையில் பொருந்தும் எச்சரிக்கை பாடல் .
பூ மழை தூவி - அண்ணன் - தங்கை பாசம் குறித்த மக்கள் திலகத்தின் பாசமிகு பாடல் .
மக்கள் திலகம் - புரட்சி நடிகர் மோதும் சண்டைகாட்சி சூப்பர் .
மெல்லிசை மன்னரின் அருமையான இன்னிசை
மிக சிறந்த பொழுதுபோக்கு படம் என்று எல்லோரும் பாராட்டிய படம் .
மக்கள் திலகத்தின் படங்களுக்கு என்றென்றுமே ஆதரவு கரம் நீட்டும் மதுரை மாநகரம் - மீனாக்ஷி அரங்கில் நூறு காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து நூறு நாட்கள் மேல் ஓடி பெருமை சேர்த்த படம் .
1975ல் வந்த மக்கள் திலகத்தின் வெற்றி பட வரிசையில்
1. இதயக்கனி
2. பல்லாண்டு வாழ்க
3. நினைத்ததை முடிப்பவன்
4. நாளைநமதே .
ரசிகர்களுக்கும்- மன நிறைவும் அரங்கு உரிமையாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும் ,அரசாங்கத்துக்கும்- வருமானத்தை வாரிவாரி குவித்த படங்கள் என்றால் அது நம் மன்னவரின் 1975வெளியான நான்கு படங்களும் அன்றோ ?
தங்களின் பரிசு தலைவரின் அறையை அலங்கரிக்கும் தோற்றம் கொண்டு தாளாத மகழ்ச்சிகொண்டேன்..தாங்கள் தெய்வத்தை நேரில் தரிசித்த வாய்ப்பையும் அந்த தெய்வம் உங்களக்கு அளித்த வரத்தையும் எண்ணி எண்ணி வியப்படைகிறேன்..நீங்கள் எல்லாம் பாக்கியசாலிகள்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நினைத்ததை முடிப்பவன்
http://ttsnapshot.com/out.php/i28780...h43m05s212.pnghttp://ttsnapshot.com/out.php/i28781...9h44m32s63.png
http://ttsnapshot.com/out.php/i28782...9h46m37s23.pnghttp://ttsnapshot.com/out.php/i28784...9h51m24s68.png
http://ttsnapshot.com/out.php/i28789...9h52m42s88.pnghttp://ttsnapshot.com/out.php/i28790...9h56m57s80.png
வாசுதேவன் சார்
நினைத்ததை முடிப்பவன் படங்கள் அருமை .
புள்ளி போட்டேன் . நீங்கள் அருமையான கோலம் போட்டு அழகு பார்க்கிறீர்கள் . கண்ணுக்கு விருந்து தந்த உங்களுக்கு நன்றி .
''SHARADHA''.- FIRST TIME WITH MAKKAL THILAGAM .
MY FAVOURITE ACTRESS SHARADHA WITH M.G.R. IN THIS MOVIE
http://youtu.be/KREIe5CyZSw
சாரதாவின் அப்பாவித்தனமான நடிப்பு இந்த படத்தில் பிரமாதம்
http://youtu.be/q-IYv5Y4Prs
நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன் மற்றும் இதயக்கனி நான்குமே மக்கள் திலகத்தின் முத்தான படங்கள்.
http://3.bp.blogspot.com/_NSxK-BA3kH...ithayakani.jpg
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள்.
இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.
நினைத்ததை முடிப்பவன் பாடல்கள், விகடன் விமர்சனம் என்று..
வரிசையாக அள்ளி வழங்கிய மக்கள் திலகத்தின் அபிமானி வினோத் அவர்களுக்கு நன்றி...
எஸ்வி சார்,
இருந்தாலும் நீங்கள் ரொம்ப குசும்பு பிடித்தவர் சார்...
உங்களுக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை போடவில்லையே...
நாங்கள் கேட்கட்டும் என்று தன்னே சும்மா இருந்தீர்கள்....
அப்புறம் , இட்லியும் வடையும் அந்த சிவப்பு கலர் Cascade உள்ளே உள்ளதா எஸ்வி சார்?.
http://www.youtube.com/watch?v=euBA0MYUwKI
:mrgreen:
'' நி னைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்
மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .
நாடோடி மன்னன் ;-1958
காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
.[ 1977 உண்மையானது]
எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........
1977 - பாடல் வரிகள் நிஜமானது .
தெய்வத்தாய் -1964
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......
பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்
அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .
பணக்கார குடும்பம் -1964.
பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
2013 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .
அடிமைப்பெண் -1969.
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....
நிதர்சனமான உண்மை .
உலகம் சுற்றும்வாலிபன் -1973
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .
மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல
மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்
ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .
இது ஒன்று போதுமே .-எம்
மன்னவனின் புகழ்
அகிலமெங்குமே
முரசு கொட்டுமே
Favourite Vathiyar Fights :
http://www.youtube.com/watch?v=LAjSMlBp6Ew
http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg
Any one match with Vathiyar ? Vathiyar is always Vathiyar.
10.48 to 12.00
http://www.youtube.com/watch?v=noDjfQkj0F4
தர்மம் தலை காக்கும் - படம் அல்ல பாடம் .....
http://i40.tinypic.com/2yx13rc.jpg
தர்மத்தின் தலைமகன் தமிழகத்தை ஆண்ட மக்கள் திலகத்தின் கொள்கையை பறைசாற்றும் படம்..
http://i42.tinypic.com/30hub12.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தர்மம் தலை காக்கும் - தொடர்ச்சி
இடது கை கொடுப்பதை வலது கைக்கு தெரியாமல் கொடுத்து கொடுத்து கைகள் சிவந்த பொன்மனச்செம்மல் தான் செய்த தர்மங்களாலே கலியுக கர்ணனாக, எட்டாவது வள்ளலாக மக்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருகிறார்..அவரது திரைப்படங்களில் ஒரு முத்தாக வெளிவந்த இந்த படத்தில் தலைவரின் எழிலுருவத்தை காணுங்கள்..இந்த போஸ்டர்களில் தர்மம் தலைகாக்கும் - ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளை என்று அச்சடிதிருக்கிறார்கள்..இது எவ்வளவு யதார்த்தமான உண்மை..பெற்றவர்கள் செய்த புண்ணியம் பிள்ளைகளை காக்கும் என்பார்கள்..ஆனால் நம் தலைவர் செய்த தர்மங்கள் அவரது பக்தர்களான நம்மை காக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..
http://i41.tinypic.com/3329pc0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்