வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://www.youtube.com/watch?v=YpNr3...ature=youtu.be
Printable View
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://www.youtube.com/watch?v=YpNr3...ature=youtu.be
12-01-1967 ... மாலை , மக்கள் திலகம் துப்பாக்கியால் சுடப் படுகிறார் . 13-01-1967 அறுவை சிகிச்சைகள் முடிந்த நிலையில் உள்ளே நுழைகிறார் சாண்டோ சின்னப்பா தேவர் .... கையில் இருந்த பொட்டலத்திலிருந்து விபூதியை எடுத்து மக்கள் திலகத்தின் நெற்றியில் பூசுகிறார் , இன்னொரு பெரிய பொட்டலத்தை மக்கள் திலகத்தின் கையில் கொடுக்கிறார் ..
" முருகா , இந்தாங்க அட்வான்ஸ் , நம்மளோட அடுத்த படத்துக்கு டைட்டில் ரெடி - விவசாயி "
என்கிறார் ...
குண்டடி பட்டு பேச்சு வருமா வராதா , இனி நடிக்க முடியுமா முடியாதா என்றெல்லாம் சந்தேகங்கள் இருந்த நிலையில் மக்கள் திலகத்திற்கு தெம்பூட்டும் வகையில் சின்னப்பா தேவர் தன் நம்பிக்கையை அவர் மீது வைத்தார்
Mgr
no film backgroud support
no money power
no big/rich producer support
no political support
no family support
no media support
no big stars supports
unfaithful people's in cinema industry and politics who got developed by mgr and trying to hide his fame by not telling his name but telling other peoples who never done any thing to them.
We don't care about you people because we are mgr fan's we know only to help but not to get the fame for helping.
Mgr's party is aiadmk but know a days people in the party trying hide is fame.
Please remember his songs :
Aayiram kaigal maraithu nindralum adhavan maraivathilay.
Moondr ezuthil en muchu irukum athu mudintha pinalum pechu irukum.
Vazthavaru kodi maraithavar kodi makkalin manthil nipavaru yaru .
Irunthalum marainthalum peru solla vendum ivarpola yar endru uru solla vendum.
Maberum sabaigalil ni nadanthal unakumalaigal vilavendum
mgr is a selfmade actor director producer poltician
remember : Mgr the legend irunthalum aayiram ponnu eranthalum aayiram ponnu
avaral valanthavargal kodi .
Avarai nambi kettavargal yarum illai , nambamal kettavargal than irupargal.
Thalaivaa un pugal endrum azayathu
ovur ovur mgr rasigan irukum varai un pugalai nangal azaika vidamattum
mgr pugala ninga azaika nenacha avar pugal erikite irukum
only rathathin ratham mgr fan's support
courtesy - fans voice in net
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகும்
ஆந்திராவில் என்.டி.ஆருக்கு பிறகும்
அமெரிக்காவில் ரீகனுக்கு பிறகும்
எந்த நடிகரும்
அரசியலில் போணியாகவில்லை..
போணியாகவும் முடியாது !!!
காரணம் ..
நடிக்க தெரிந்தல் மட்டும் போதாது.
.மக்கள் மனங்களை படிக்கவும் தெரியனும் !!!
புலியைப் பார்த்து
பல பூனைகள் சூடு போட்டதுதான் மிச்சம் !!!
Now in MURASU channel telecast neethiku pin pasam
Public comments
எம்.ஜி.ஆர் : ///மனிதனாக, இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கிறோம் இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து ரசிப்பது என்பது, எல்லாருக்கும் இயலாத காரியம். உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த, இந்த வாய்ப்பை, இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன். அதை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக நினைக்கிறேன். தமிழகத்தில், ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ரசிகனும் ஜப்பான், ஹாங்காங், டோக்கியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உணர்வை, இந்த படத்தின் மூலம் பெறுவான் என்றால், அதுவே,..."'உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் வெற்றி என்று சொல்வேன் /// சான்சே இல்லே....... என்ன மனுஷன்யா இவர்...... இருந்தா இப்படிப்பட்ட "பொன்மனம்" இருக்க வேண்டும்...... பணம் கார் சொத்து புகழ் அதிகாரம் என்று அலையும் இந்த உலகில் குறிப்பா பகட்டான சினிமா உலகில்...... வெளிநாடுகள் சென்று சுற்றி பார்க்க இயலாத உள்ளவர்கள் தன் தமிழ் சொந்தங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் அந்த வெளிநாடுகளை நேரில் சென்று பார்த்த ஓர் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த ஒரு கதையை உருவாக்கி அதற்க்கு திரைக்கதை அமைத்து இனிய இசையை உருவாக்கி தன் சொந்த காசை போட்டு அதுக்கு கடுமையாக உழைத்து எல்லோரும் கண்டு களிக்கும் வகையில் ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறாரே...... Mgr ..... Is a gem of a person
திரு அசோக்குமார் அவர்களே...... அமரர் எம்.ஜி.ஆர். சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நல்லவர் நல்லவர் மட்டுமல்ல வல்லவரும் கூட திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது. தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர் 25 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு……… எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை........
எம்.ஜி.ஆர். தமிழகத்தில் நல்லவர் என்று நடித்ததை தவிர என்ன செய்தார் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? /// (2) சென்ற இதழில் அசோக்குமார் என்ற வாசகர் அப்பாவித்தனமாக மேற்ச்சொல்லப்பட்ட கேள்வியை கேட்டு இருக்கிறார் இன்று ஆயிரம் ருபாய் அரசுக்கு வருமானம் கிடைக்குது ஆனா 100 பேர் தான் பயன் அடைகிறாங்க ஆனால் அன்று 100 ருபாய் தான் கிடைச்சுது ஆனால் ஆயிரம் பேர் பயன் அடைந்தாங்க...... அடைய வச்சவர் எம்.ஜி.ஆர். உதாரணத்துக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "சத்துணவு திட்டம்". ஐநா சபையிலே அன்று வியந்து பாராட்டினாங்க எப்படி இந்தியா மாதிரி ஒரு ஏழை நாட்டிலே அதுவும் ஒரு மாநிலத்திலே தினசரி 65 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமா சத்துணவு அளிக்க முடிகிறது..... இது எப்படி சாத்தியம்? வியப்புக்குரியவர் எம்.ஜி.ஆர். என்று இதோ மக்கள் திலகத்தின் மற்ற சாதனைகள் : 1) முல்லை பெரியாறு நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல் 2) காவேரி நதி நீர் பங்கீடு 3) சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் 4) ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 5) இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு 6) மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை 7) மாணவ மாணவியர்களுக்கு இலவச காலனி மிதிவண்டி 8) 108 ஆம்புலன்ஸ் 9) அரிசி விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு 10) கல்வி கொள்கையில் மாற்றங்கள் 11) உலக தமிழ் மாநாடு 12) தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம் 13) உலக தமிழ் சங்கம் 14) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 15) பெரியார் நூற்றாண்டு விழா 16) பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம் 17) தொழில் வளர்ச்சி துறையில் புதிய கொள்கைகள் 18) கோயில் பூசாரி உதவி தொகை 19) ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை 20) சட்டம் ஒழுங்கு நேரிடை பார்வையில் முழுமையான பாதுகாப்பு 21) நிலையான ஆட்சி நிம்மதியான ஆட்சி 22) அண்டை மாநில உறவுகள் 23) மத்திய அரசு உறவு 24) அண்டை நாட்டுடன் உறவு (தமிழ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்த போதும், இலங்கை அரசுடன் பகமை காட்டாமல் பழகிய விதம்)...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தில் நல்லவர் என்று நடித்ததை தவிர என்ன செய்தார் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? /// (1) சென்ற இதழில் அசோக்குமார் என்ற வாசகர் அப்பாவித்தனமாக மேற்ச்சொல்லப்பட்ட கேள்வியை கேட்டு இருக்கிறார் 10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை...... மனசாட்சி உள்ள எவரும் ஏற்றுகொள்வார்கள் அவருடைய பொற்கால ஆட்சியை அதனால்தான் தமிழன்னை தொடர்ந்து மும்முறை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தாள் தமிழக வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தது அமரர் எம்.ஜி.ஆர். மட்டுமே மேல பட்டியலிட்ட ஒவ்வொன்றையும் விவரிக்க வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி புத்தகமே போட வேண்டி வரும்..... மிக முக்கியமான ஒன்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த கால கட்டம் (1977-1987) இந்திய நாடு மிக மிக ஏழை நாடு வறுமை பிடியில் சிக்கி தவித்த காலம். 1991 க்கு பிறகு தான் தாராளமயமாக்குதல் எனும் "உலகமயமாக்குதல்" (globalization) கொள்கை மூலமா இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு அந்நிய முதலீடுகள் மூலமாக பல பில்லியன் டாலர் வரவு அரசு கஜானாவுக்கு வந்தது....... ஆனால் அன்று?
தமிழ்த் திரையுலகில் ஒரே ஆங்கிலப் படத்தை டிவிடியில் பார்த்துப் பலர் ஒரே கதையைப் படமெடுத்துச் சொதப்புவது இந்தக் காலம். ஆனால் அந்தக் காலத்தில் எக்காலத்திலும் புகழ்பெற்று விளங்கும் வரலாற்றுக் கதைகளைத் துணிச்சலாகத் திரும்பத் திரும்பத் தயாரித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று மூன்று முறை படமாக்கப்பட்ட பட்டினத்தாரின் வாழ்க்கை வரலாறு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல்வணிகத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கிய நகரத்தார்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ்ந்த கடற்கரை நகரம் காவிரிப்பூம்பட்டினம் (பூம்பூகார்). திருவெண்காடர் என்ற இயற்பெயரோடு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த செல்வந்தர்தான் பட்டினத்தார்.
உலகின் நிலையாமையை, உயிருக்கு உயிரான வளர்ப்பு மகன் வழங்கிய ஒரு வாசகத்தின் மூலம் (காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே) அறிந்து, உணர்ந்து, அதிர்ந்து, நவரத்தினங்கள் வைத்துத் தைக்கப்பட்ட பட்டாடையை கழற்றி வீசியெறிந்துவிட்டு ஒருமுழம் கச்சையை இடுப்பில் சுற்றிக்கொண்டு,( இது கோவணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்) வீட்டைவிட்டு வெளியேறித் துறவறம் பூண்டவர்.
சி.எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக நடித்து வெளியான முதல் படம் 1935-ல் வெளியானது. ஆனால் தோல்வியடைந்தது. அது அடுத்த ஆண்டே, (1936) எம்.எம். தண்டபாணி தேசிகர் பட்டினத்தாராக நடித்த படம் வெளியாகி வெள்ளிவிழா கண்டது. தேசிகரே இசையமைத்து, பாடிய இந்தப் படத்தில் மொத்தம் 52 பாடல்கள்.
சென்னை பிராட்வே திரையரங்கில் 25 வாரங்கள் ஓடிய முதல் படம் இதுதானாம். பிராட்வே தியேட்டரில் பழைய பட்டினத்தார் பட கட்- அவுட் ஒன்றையும், 25 வாரங்கள் இதே திரையரங்கில் ஓடிய தெலுங்குப் படமான ‘கிருஷ்ண லீலா’வின் கட் அவுட் ஒன்றையும் இன்று போனாலும் திரையின் அருகில் காணலாம். பாகவதரின் ஹரிதாஸ் மூன்று தீபாவளிகளைக் கண்டதும் இந்தத் திரையரங்கில்தான்.
சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்திருந்த காலகட்டம் என்றாலும் தேசிகர் நடித்த பட்டினத்தார் படத்தின் பாதிப்பில் பல சம்சாரிகள், துறவிகள் ஆனது கறுப்பு வெள்ளை நாட்களின் அதிசயங்களில் ஒன்று.
இதன் பிறகு 29 ஆண்டுகளுக்குப் பிறகு 1962-ல் வெளியானது டி.எம்.சௌந்தரராஜன் பட்டினத்தாராக நடித்து வெளியான படம். இயக்குநர் கே.சோமு திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப் படத்துக்கு வசனம் தஞ்சை ராமய்யாதாசும் நாவலாசிரியர் அகிலனும். எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருந்த நேரம் அது.
எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய பல வெற்றிப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. டி.எம்.எஸ்ஸின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பட்டினத்தார் வேடத்தின் ஒப்பனைக்காகத் தனது மேக்-அப் மேன் பீதாம்பரத்தை அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆர்.
இந்தப் படத்தில் பட்டினத்தாரின் மனைவி சிவகலையாக (கதாநாயகி) நடித்தவர் ஜெமினி கே. சந்திரா. இவர் எம்.ஆர். ராதாவின் மேக்-அப் மேன் கஜபதியின் மனைவி. மனைவி கதாநாயகியாக நடித்த அந்தப் படத்தில் அவருக்கு ஒப்பனையாளராகப் பணிபுரிந்தார் கஜபதி.
வீட்டை வீட்டுவெளியேறிய கணவர் துறவியாகவேனும் வீட்டுக்கு வர மாட்டாரா என்று ஏங்கி, பிறகு திருவிடை மருதூர் வரும் கணவரைக் காணச் சென்று அவரை அங்கே காணாமல் சிவகலை இறப்பதுபோலக் காட்சி பட்டினத்தார் படத்தில் அமைந்தது. எதிர்பாராத விதமாகப் பட்டினத்தார் படம் வெளியாகிய சில ஆண்டுகளில் இறந்துபோனார் ஜெமினி கே.சந்திரா.
திராவிட இயக்கம் செல்வாக்குச் செலுத்திய காலம் என்பதால் ஆத்திகத்தைத் தூக்கிப் பிடித்த இதே படத்தில் எம்.ஆர்.ராதாவின் சமூக விமர்சனமும் நாத்திகமும் சரிக்குச் சமமாக இருந்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றாலும் இம்முறை யாரும் துறவறம் மேற்கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லை.
Courtesy the hindu tamil
குமுதம் சமீபத்தில் நடத்திய , யார் அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது . மேலும் , விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் வாசகர்கள் தேர்வு செய்ததாக அறிவித்தும் உள்ளது . அதற்காக ஒரு விழாவும் எடுக்கப் போவதாக தெரிகிறது ....
குமுதத்திற்கு ஒரு சிறிய நினைவூட்டல் .... இப்படித் தான் ஜூன் 10, 1957 இல் வெளியான குமுதம் பத்திரிக்கையில் ... " நான் விரும்பும் நட்சத்திரம் " என்கிற தலைப்பில் ஒரு போட்டி அறிவிக்கப் பட்டது .
அதாவது மக்கள் திலகத்தையும் , நடிகர் திலகத்தையும் ஒப்பீடு செய்து , நடிப்புத் திறனை சீர் தூக்கிப் பார்த்து யார் சிறந்தவர் என்று வாசகர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் அந்த போட்டியின் சாராம்சம் .
அப்பொழுது அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார் மக்கள் திலகம் . அவர் நடத்தி வந்த " நடிகர் குரல்" என்கிற பத்திரிக்கையில் அந்தக் கண்டனம் பிரசுரிக்கப் பட்டது . அவரது கண்டனம் பின் வருமாறு :
" இதுவொரு அருவருக்கத் தக்க முயற்சி என்பதுடன் , விரும்பத் தகாத சூழ்நிலையை உருவாக்கும் காரியமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் . தங்களுடைய பத்திரிக்கை வியாபாரத்திற்கு பத்திரிக்கை தர்மத்தை பலியிட வேண்டாம் என்பதை நானும் ஒரு பத்திரிக்கை தொடர்புடையவன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் .
தங்களுடைய இச்செயல் எந்த முறையில் பார்த்தாலும் கலைத்துறையில் ஈடுபட்டுள்ள எங்கட்கோ , கலைத்துறை ரசிகர்கட்கோ , பொதுவாக கலையுலகிற்கோ எவ்விதப் பயனையும் அளிக்காது என்பதுடன் வீண் விவாதங்கட்கும் தேவையற்ற கருத்து மோதல்கட்கும் இடம் ஏற்படுத்தி , நடிகர்கட்கும் ரசிகர்கட்கும் உள்ள நல்லுறவை நாசப் படுத்தி வீணான விரோத உணர்சிகளை மேலோங்கச் செய்யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ,
நடிகர் சிவாஜி கணேசன் அவர்களும் இதே கருத்தைத் தான் கொண்டுள்ளார் என்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் . தாங்கள் உடனடியாக இப்போட்டி முயற்சியை கை விடுவது தான் சிறந்த முறை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் . .."
இதைப் போலவே நடிகர் திலகமும் குமுதத்திற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார் . அவரது கண்டனம் பின் வருமாறு :
" எங்கள் இருவருக்கும் மனவருத்தம் ஏற்படாத வகையில் அபிப்ராயம் எழுத வேண்டுமென்ற கவனத்துடன் வாசகர்களுக்கு நீங்கள் என்ன தான் அறிவுரை வழங்கியிருந்த போதிலும் , அது எழுத்தளவில் நிற்கக் கூடியது என்றும் , அனுபவத்திற்கு ஒவ்வாவதது என்றும் , மேலும் எங்கள் இருவருக்கும் இடையே வருந்தத்தக்க விளைவுகளையே வாசகர்களிடமிருந்து வரும் கட்டுரைகள் உண்டு பண்ணக் கூடும் என்றும் நான் நினைக்கிறேன் .
தென்னாட்டிலே தலை சிறந்த நடிகர்களுள் ஒருவரான எம். ஜி . ஆர் அவர்கட்கும் எனக்கும் இடையே "போட்டித் திட்டம் " ஏற்படுத்தி , வாசகர்களிடம் கருத்துகொரும் இம்முயற்சியை நான் அடியோடு வெறுக்கிறேன் "
இப்படி இருவரும் கண்டனத்தை தெரிவிக்க , போட்டி கை விடப் பட்டது ..... இப்பொழுதாவது புரிந்துக் கொள்ளுங்கள் , அந்த மாபெரும் நடிகர்களுக்கு இருந்த முதிர்ச்சி இன்றைய நடிகர்களிடம் கிடையாது , அடுத்த சூப்பர் ஸ்டார் , அடுத்த புரட்சி நடிகர் என்றெல்லாம் போட்டிகள் அபத்தம் . இப்படி ஒரு போட்டியை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் முதுகெலும்பு கூட இல்லாதவர்களா நாளைய சூப்பர் ஸ்டார்கள் ஆகப் போகிறார்கள் ?
குமுதம் யோசிக்குமா ?
courtesy net
VETRI VENTHANIN VETRI PUNNAGAI FOR AAYIRATHIL ORUVAN COMPLETED 125 DAYS OF RERELEASED
http://i1170.photobucket.com/albums/...psb6faa046.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் திரைப்படம்
பற்றி முதல் ஓசை என்கிற தினசரியில் வெளிவந்த செய்தி, நமது திரி
நண்பர்களின் பார்வைக்கு.
http://i62.tinypic.com/1zwgqcj.jpg
நன்றி: முதல் ஓசை தினசரி.(20/07/2014)
சோளிங்கரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை -தின இதழ்
நாளிதழ் வெளியிட்ட செய்தி புகைப்படத்துடன் நமது நண்பர்களின்
கவனத்திற்கு.-(19/07/2014)
http://i57.tinypic.com/903ic9.jpg
இதயக்கனி மாத இதழ் நடத்தும் எம்.ஜி.ஆர். -97 வது பிறந்த நாள் விழா
சென்னை வள்ளுவர் கோட்டம் மண்டபத்தில் ஜூலை 18, 19 20 நாட்களில்
பல் பாதகாப்பு முகாம், இலவச கண் பரிசோதனை முகாம், ஆயுர்வேத
மருதுவகல்லூரியின் மருத்துவ முகாம், இயங்கும் கை விலையின்றி வழங்கும் சிறப்பு முகாம், ஆகியன சுமார் 600 பேர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றன .
மாலை மலர் நாளிதழில் வெளிவந்த விளம்பரம் காண்க.
http://i62.tinypic.com/2mwgu50.jpg
இதயக்கனி மாத இதழ் நடத்திய எம்.ஜி.ஆர். பிறந்த நாள் வரவேற்பு பேனர்கள்.நமது திரி நண்பர்களின் பார்வைக்கு. விழாவில் எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்.
http://i62.tinypic.com/i71swm.jpg