தெலுங்குல்ல எனக்குப் புடிச்ச படம் சப்த பதி.. ரொம்ப நாளைக்கு(வருஷங்களுக்கு) முன்னால விமர்சனம் எழுதியிருந்தேன்..தேடி எடுத்து சாயந்திரம் போடறேன்..நெமிலிகி நெரிதகி நடதளிரே.. ந்னு பாட்டு.. தெரியுமா..
Printable View
தெலுங்குல்ல எனக்குப் புடிச்ச படம் சப்த பதி.. ரொம்ப நாளைக்கு(வருஷங்களுக்கு) முன்னால விமர்சனம் எழுதியிருந்தேன்..தேடி எடுத்து சாயந்திரம் போடறேன்..நெமிலிகி நெரிதகி நடதளிரே.. ந்னு பாட்டு.. தெரியுமா..
1970 - 76 வரை ( ஸாரி, 75 வரைதான், 76-ல்தான் ரட்சிக்க இசைக்கடவுள் வந்துவிட்டாரே) நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை (உங்களுக்கும் உங்களைப்போன்ற சிலருக்கும் மட்டும்)
மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் டி.கே.ராமமூர்த்தி உயிருடன்தான் இருந்தார். ஏன் செத்துக்கொண்டிருந்த இசையைக் காப்பாற்ற முன்வரவில்லை?. (என்று யாரும் கெட்டுவிடக்கூடாது . அதற்கு ரெடிமேட் பதில் உண்டு. 'மார்கெட்டிங் தெரியாது'. தாஜா பண்ணத்தெரியாது என்று). நானில் துவங்கி தங்க சுரங்கம் வரை வாழ்வளித்த ராமண்ணாவையே ஏன் சொர்க்கத்தில் கோட்டைவிட்டார் என்று தெரியவில்லை. சங்கர்கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர் இவர்களையே வளரவிட்டு வேடிக்கை பார்த்த விஸ்வநாதன் தன முன்னாள் நண்பருக்கு இடைஞ்சல் செய்திருப்பாரா?.
சரி இந்த காலகட்டத்தில் விஸ்வநாதனின் குப்பைகளைப் பார்ப்போம். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், காவியத்தலைவி, பிராப்தம், சுமதி என் சுந்தரி பாடல்களை மனிதன் கேட்பானா. இருதுருவம் 50 நாட்களாவது ஓடியதற்கு முக்கிய காரணம் 'தேருபாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே' என்று என்னைப்போன்ற சில கிறுக்கன்கள் சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
குலமா குணமா படத்தில் கே.வி.மகாதேவன் இசைத்த \மாத்தூரு ராமக்கா' மற்றும் 'சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்' பாடல்களுக்கு ஏன் ஆஸ்கார் தரவில்லையென்பது பில்லியன் டாலர் கேள்வி. இவற்றோடு ஒப்பிடும்போது சவாலே சமாளி, சுமதி என் சுந்தரி பாடல்கள் குப்பையில் வீசப்பட வேண்டியவையே.
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படங்களில் சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் அளவுக்கு வேறு யாரும் சிறந்த இசையைத்தரவில்லை என்று சில பைத்தியக்காரர்கள் சொல்லக்கூடும். அதை சீரியசாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. அல்லது வழக்கம்போல ரெடிமேட் பதில் "அவையெல்லாம் அவரது முன்னாள் நண்பர் 1958-லேயே போட்டுவைத்த ட்யூன்கள்".
இந்த காலகட்டத்தில் (70-75) எத்தனை குப்பைகள். 'நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' ஒரு நாராசம். 'என் உள்ளம் உந்தன் ஆராதனை' கேட்க சகிக்காது. 'மலரே குறிஞ்சி மலரே' தூ... பாட்டா அது.
'அவளுக்கென்று ஓர் மனம்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'அவர்கள்', மன்மத லீலை' சிடிக்களைஎல்லாம் இப்போதுதான் நெருப்பில் போட்டுவிட்டு வருகிறேன்.
ஆராதனா உள்பட பல ஹிந்தி ரீமேக் படங்களுக்கு இசையமைத்தும் அவற்றிலுள்ள ஒரு ட்யூனைக்கூட தொட்டதில்லை என்று சில பைத்தியங்கள் சொல்லும். அதையெல்லாம் காதில் வாங்கத் தேவையில்லை.
தேசிய ஒருமைப்பாட்டு விருது வழங்குவதென்றால் முதலில் வேதா, பின்னர் சங்கர்கணேஷ், பின்னர் கே.வி.எம். என்று வழங்க வேண்டும். ஹிந்தி ட்யூன்களை அப்படியே இறக்குமதி செய்ததற்காக. (ஆராதனா வின் 'கும்-கு-நாரஹே' யை காப்பி பண்ணி 'எங்கவீட்டு தங்கத்தேரில் எந்த நாளும் திருவிழா') . இவர்தான் அனாதை ஆனந்தன் படத்துக்காக மயிரிழையில் ஆஸ்கரை தவறவிட்டவர். (அதிலும் கூட 'கேரவன்' பாடலை காப்பி பண்ணி 'கண்ணாடி முன்னாடி தள்ளாடி வண்டாக ஆடட்டுமா') . ஏ.பி.என்னின் புராணப்படங்களையே குன்னக்குடியிடம் கோட்டைவிட்டு நின்றவர். கேட்டால் தெலுங்கில் பிஸி என்ற காரணம்.
ஆனால் கிறுக்கர் விஸ்வநாதன் செய்ததென்ன 'முத்துக்குளிக்க வாரிகளா' மெட்டை தமிழிலிருந்து ஹிந்திக்கு ஏற்றுமதி செய்தார். அது தப்பில்லையா?. .
76-ல் தமிழ் இசையைக் காக்க வந்தவர், வந்தபின்னும் 'குர்பானி', ஹம கிஸிஸே கம் நஹி' பாடல்கள் தமிழகத்தை ஆளத்தான் செய்தன என்று யாராவது சொன்னால் ஒப்புக் கொள்ளக்கூடாது.
கடவுளிடம் ஒரே ஒரு வரம் கேட்பேன்.அடுத்த பிறவியிலாவது,நல்லவர்களுடனும்,நண்பர்களுடனும் என்னை மோத வைக்காதே.
ஆனால்,இப்பிறவியில்,வேறு வழியில்லை போல் இருக்கிறது.(கே.எஸ்.ஜி படம் போல இரு நல்ல சக்திகளுக்குள் மோதல்)
1960-1965 (65 out of 80 very Good ones)-ஒப்பிடும்போது,1966-1969(25 out of 64) தேய்ந்து விட்டது. 1965-1969 ஒப்பிடும் போது 1970-1975(9 out of 90) தரைமட்டம். சராசரியாக வருடத்திற்கு 75-80 நேரடி தமிழ் படங்கள் வந்த பூமியில் 15 படங்களுக்கு சராசரியாக இசையமைத்த பழுத்த அனுபவஸ்தர்,6 வருடத்தில் 90 படங்களில் 10% ,அதாவது குறிப்பிடும் படி 9 படங்கள்.
எங்கமாமா, ராமன் எத்தனை ராமனடி,குமரி கோட்டம்,சுமதி என் சுந்தரி,அவளுக்கென்று ஓர் மனம்,பட்டிக்காடா பட்டணமா,பொன்னூஞ்சல்,அபூர்வ ராகங்கள்,அவன்தான் மனிதன். (அம்புடுதேன். சிவந்த மண் -69. இன்னொன்று என்னை சுத்தமாக கவராத ஒன்று.மற்றொன்று 75க்கு அப்புறம்).சராசரி இசையில் இன்னும் நாலைந்து தேறலாம்.(ராஜபார்ட் ரங்கதுரை போல)
இது அப்போது உச்சத்திலிருந்த ஹிந்தி இசையோடு போரிட போதுமா?
1970-1975-ஏனோதானோ பின்னணி இசை. அவசரமாக ரெகார்ட் செய்தது போல பாடல்கள்.கற்பனையற்ற இசை. கத்திக் கொண்டு ட ட டா பாடி இசையமைப்பாளர்களின் கற்பனையை சிதைத்து கொண்டிருந்த வீண் கர்வியான பாடகர் திலகம்.அந்த மாதிரி ஒரு காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பள்ளி மாணவனாக இருந்தது துரதிர்ஷ்டம்.அவமானம்.
குதர்க்க வாதம் செய்வது என்ற கொள்கையை விடாவிட்டால் எந்தப்பிறவியிலும் இப்படித்தான்.
இசையின் மறுவடிவமான டி.கே.ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் அப்போது இருக்கத்தானே செய்தார்கள்?. இசையென்றால் என்னவென்றே தெரியாத விஸ்வநாதன் பின்னால் ஓடவேண்டிய அவசியமென்ன?. இப்போது அவரை மட்டுமே குறைசொல்ல வேண்டிய தேவையென்ன?.
தனித்தியங்க முடியாதவர் தூக்கி எறிய பட்டு விட்டு பிறகு, அவருடைய தன்னம்பிக்கை அகன்றிருக்கும் .தங்க சுரங்கம் ,பெரு வெற்றி பெற்றிருந்தால் கதையே வேறு.(Like Sachin out of form)
மாமா- ஏனோ தெலுங்கிற்கு ஓடி போய் ,தூள் கிளப்பி கொண்டு அகில இந்தியாவை தெலுங்கு தேசம் திருப்பினார்.
சிக்கா...
உங்களுக்காக சட்டுனு ஒரு பாட்டை போஸ்ட் செய்தேன். அது ஏற்கனவே போட்டாச்சு என்று நண்பர் சொன்னதால் மாற்றி விட்டேன்.
அதனால் உங்களுக்குப் பிடிக்கும்னு இந்தப் பாட்டு
http://youtu.be/0hlqlHoejsg?list=UUo...Vsi7DrOTIgGu7A
கார்த்திக்,மன்னிக்கவும்.இன்னிக்கு ஹிந்தி பட பாடல்கள் போட்ட flow வில் வயிற்றெரிச்சல் வெளியாகி பீரிட்டு விட்டது. இனி இந்த சப்ஜெக்ட் தவிர்த்து விடுகிறேன்.
[QUOTE=madhu;1157990]சிக்கா.. சிக்கா..
உங்களுக்காக பாவாடை தாவணியில் தலை பின்னி பூ வைத்து பொட்டு வைத்த ஜோதிலட்சுமியுடன் ரவிச்சந்திரன் ..
ஆடி முடிந்து ஆவணி வந்தாச்சு இல்லையா.. அதனால்தான் தாவணி போட்டிருக்காங்களாம்.
பட்டம் விட்டது போலே பறக்குதம்மா உன் மேலாடை
குடை ராட்டினம் போலே சுற்றுதம்மா உன் பாவாடை
டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் கலக்குறாங்க
(QUOTE)
pottachchu sir.
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலில் அடுத்தவீட்டுப் பெண் படத்தின் பாடல் நல்ல தேர்வு. அந்தநாள் முதல் இந்தநாள் வரை தமிழ்ப்படங்களுக்கு ஒரு சென்ட்டிமென்ட் உண்டு. அது நகைச்சுவை படங்கள் என்றாலே பாடல்களும் சூப்பராக அமைந்துவிடும். அடுத்தவீட்டுப்பெண்ணும் அதில் சேர்த்தி.
வனிதாமணியே, மாலையில் மலர்ச்சோலையில், கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே என்று பி.பி.எஸ் கலக்கியிருப்பார். அதுபோல ஒன்றுதான் இந்த சைக்கிள் பாடல். நல்ல செலக்ஷன், வழக்கம்போல தங்களின் நல்ல விரிவுரை.
மகளிரின் சைக்கிள் பாடல் என்றதும் நண்பர் வினோத் தர்மம் தலைகாக்கும் படத்தின் 'அழகான வாழை மரத்தோட்டம்' பாடலுடன் வருவார் என்று நினைத்தேன். (ஐயோ நானே எடுத்துக்கொடுத்து விட்டேனோ)......
கோபால்ஜி...
மறுபடி ரவி-ஜோதி பாட்டு இதோ
http://youtu.be/Wk9Rzk5p3qU
மூன்றெழுத்தில் ஜெயலலிதா ஆட ஈஸ்வரி பாட... எங்கே.. எங்கே.. கே.. கே.. கே...
( Hope இந்தப் பாட்டாச்சும் ஏற்கனவே போட்டதாக இல்லாமல் இருக்குமா ? ??
உடனடி தேவை.. ஒரு INDEX )
http://youtu.be/eXHG7ltwMvk
போட்டாச்சா..... போடலையா.... போட்டாச்சுன்னுதான் நினைக்கிறேன்... இல்லையில்லை போடலைன்னுதான் தோணுது... போட்டமாதிரியும் இருக்கு... போடாதமாதிரியும் இருக்கு... நிஜமாகவே போடலையா... இல்லே, போட்டதை நாமதான் மறந்திட்டோமா... போட்டதுதான் போடாதமாதிரி தோணுதா... அல்லது போடாமலே போட்டமாதிரி நினைவுக்கு வருதா... போட்டதும் போடாததும் தெரியலையே....
இனி ராகவேந்தர் விருப்பம்.
இந்த பாடலின் அமைப்பு முற்றிலும் fusion என்று சொல்ல முடியாது.பெரும்பாலும் ஹிந்துஸ்தானி துவிஜாந்தி
(ஸ ரி 2,க 3ம1ப த 2ஸ --ஸ நி 2த 2ப ம 1க 3ம 1ரி 2க 2ரி 2ஸ )ஹரி காம்போதியின் ஜன்யம்.ராக மாலிகையாய்(எவ்வாறு நாணுவேன்) காபி. (சங்கருக்கு பிடித்தது துவிஜாந்தி-முகுந்தா முகுந்தா). இதில் உபயோகமான வாத்தியங்கள் சாரங்கி,வீணை,bassline ,ஹார்மோனியம்,தபேலா.
melody flow வில் ஹிந்துஸ்தானி பாணியே. ஆனாலும் subtle touches in interlude ,,bassline ,chords களின் தொடர்ந்த உபயோகம்,time signature ,pausing percussion இவை கொண்டு contemporary feel ஏற்படுத்தியுள்ளார்கள்.
சங்கர் மகாதேவனின் கார்வை குரல் ,கம்பீரம் கலந்தது.உரத்து high pitch செல்ல கூடியது.(டி.எம் .எஸ் அவர்களுக்கு அடுத்து இந்த குரலே விசேஷம்).அப்படியே இனிமையாய் மெதுவாய் ஓடும் ஆறு போல rendition .அழகாக தாள இடைவெளி,மௌனம்,நீரை நிறுத்தி நிறுத்தி பாய்ச்சுவது போன்ற (bisecting fluid flow )உன்னை காணாமல் என்பதை ஆலாபனை போல அழகு படுத்துவது என்று தன் பாட்டை தானே மெருகேற்றி உள்ளார்.
இதன் ஆரம்ப கொன்னக்கோல் (தா தை), supporting oral reciting கமல் சுத்தமாக செய்திருப்பார். எனக்கென்னவோ நம்மூர் ஜதி போலவே பட்டது.கதக் ஆ என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.(கதக் feel இல்லை)ஹார்மோனியம் .தொடர்ந்து bassline ,சாரங்கியின் ஒலியோடு தொடங்கும் பாட்டு. மெதுவான ஆலாபனை போன்ற இடங்களில் வீணை,சாரங்கி , மிதமான வேக நடையில் தொடரும் தபலா ,நிசப்தங்கள்,விட்டு விட்டு தொடரும் சங்கதிகள் என்று நிறைய நகாசு.
கமல் ,எனக்கு தெரிந்து சிவாஜிக்கு அடுத்து இவர் ஒருவரே (திருவிளையாடல்) கொன்னக்கோல் வாயசைவை இவ்வளவு அழகாக செய்தவர்.நடனத்தில் கதக் கற்று நளினம் மிளிர இவர் செய்யும் அழகு.
ராகவேந்தர் சொன்ன மாதிரி ,விவரித்தால் மட்டும் போதாது. கண்டும் ரசியுங்கள்.கேட்டும் ரசியுங்கள்.
https://www.youtube.com/watch?v=qqtiFt0F_GU
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர், "யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.
நன்றி: தி.இந்து
என்னை பொறுத்த அளவில் மதங்களே தேவையற்ற ஒன்று. மாற்றங்கள் இன்னும் அபத்தமான கேலி கூத்து.மதம் மாறி இருந்தால் அன்னையின் மரணம் நிற்குமா?எதிர்பார்த்த மன அமைதிதான் கிட்டுமா? அதுவும் சுதந்திரமான இந்திய சூழ்நிலையில் ,தனி வாழ்வில் குறுக்கிடாத மத சூழ்நிலையில், free thinker ஆக இருப்பதை விட்டு....
ஒருவேளை ரகுமான்(திலிப் முதலியார்) போல பெயரை மாற்றினால் ஆஸ்கார் கிடைக்கும் என்ற சபலமோ என்னவோ. அதற்கு பிறவியிலேயே ரகுமான் போல இசை மேதையாகவும் பிறக்க வேண்டும்.
//சீவி முடித்த கூந்தலுக்குள்ளே ஆவி துடிக்குதடி// தாங்க்ஸ் மதுண்ணா இந்தப் பாட் முன்னாடி இங்க போட்டப்ப பார்க்கலை..இப்ப தான்பார்க்கறேன் கேக்கறேன்..முதன் முறையா. தாங்க்ஸ்.. நல்லா இருக்கு..
பி ஓ ஒய் பாய் யும் எனக்குப் பிடிக்கும் நன்றி.. அந்தப்பெண்மகள் யாரோ
சொல்ல மறந்த நன்றி..தாங்க்ஸ் மதுண்ணா நெமிலிகி பாட்டுக்கு..சபிதா பொம்மிடிப்பாட்டி எனும் நடிகை ஆடினார்..நடித்ததுஒரே ஒரு படம்..அந்த ஆழ க்கண்களில் கடல்புறாவே விடலாம்.. பாட்டுஇல்லாமல் ஒரு நடனம்..மினி சூறாவளி தான்..அகிலாண்டேஸ்வரி, அயிகிரி நந்தினி, ஜாதவே ..என நல்ல பாடல்கள்..கே.விஸ்வனாத் இயக்கம்.. எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்..மரு கேலரா ஓ ராகவா..ன்னும் ஒரு பாட்டு..வாவ்..
இந்த மறக்க முடியுமா படம் தேவிகா நடித்தும் நான் பார்த்திராத ஒரு படம்..காகித ஓடம் கடலலை மீது – கேட்டிராதவர் யாரும் உண்டோ..என்னவோ அழுகை என்று யாரோ சொன்னதினால் பார்த்ததில்லை..பட்
இசைக்களஞ்சியத்தின் தயவில் கேட்டிருக்கும் இந்தப் பாட்டு உணர்வை உருக்கும்.. கேட்டும் ரொம்ப நாளாச்சு..சுசீலாம்மாவின் உருக்கும்குரல்..ஜேசுதாஸ்.. பாடல் எழுதியது யாரெனப் பார்த்தால்..உவமைக் கவிஞர் சுரதா..இசை..டி.கே.ராமமூர்த்தி..
*
வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ
ஆசை அரும்பு மலராகி, நெஞ்சில்
ஆடும் நினைவு கனியாகி
மடி மீதிலே விளையாடவே
கொடி போலவே உறவாடவே
எனையே தேடி...
வீணை இருந்தும் பயனேது, வந்து
மீட்டும் வரையில் இசையேது
ஹாஹா ஹாஹா ஹா ஹா
வீணை இருந்தும் பயனேது, வந்து
மீட்டும் வரையில் இசையேதுகுயில் கூவுமோ மழை நாளிலே
கயல் நீந்துமோ சுடும் நீரிலே
எனையே தேடி...
*
சி.க.,
போட்டாச்சுப்பா. ம.கீ-1.பக்கம்-106,பதிவு-1059.(வீடியோ இல்லை)ஒரு தடம் சிரமம் இல்லையென்றால் பாகம்-1 ஐ புரட்டி பாத்துடேன். இதை பற்றி ஏழு எட்டு இடங்களில் விவரிக்க பட்டுள்ளது.இந்த பாகம்-2 இல் டி.கே.ஆர் சிறந்த 20 இலும்.எல்லோரும் படிக்கவே மாட்டேன்னு அடம் புடிச்சா? நாங்கள் சொந்த கவிதை முதற்கொண்டு எல்லாத்தையும் படிக்கிரோமுல்ல ?
https://www.youtube.com/watch?v=hZy4UgL7mi8
இன்றைய ஸ்பெஷலாக வாசு ஜி நீங்கள் அளித்த அடுத்த வீட்டு பெண் பாடல் அபாரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .
1953’ல் தெலுங்கில் பக்கிண்டி அம்மாயி வெளியானது .. இதிலும் இசையரசி தான் பாடல்கள். அஞ்சலிக்கு ரேலங்கி ஜோடி .. அருமையாக செய்திருந்தார்கள்
அதையே அடுத்த வீட்டு பெண் என்று தமிழில் வடிவம் பெற ரேலங்கி பாத்திரத்தை டி.ஆர்.ராமச்ச்சந்திரன் செய்தார்.
டி.ஆர்.எம் அடிக்கும் லூட்டி, அஞ்சலியின் ஃப்யூட்டி, தங்கவேலு சரோஜாவின் காமெடி ஃட்யூட்டி என ஏக அமர்க்களம்..
இதில் தான் முதன் முதலாக ஒருவர் பாடுவது போல பாவனை செய்ய படத்திற்குள்ளேயே இன்னொருவர் பாடுவதாக அமைந்த காட்சி ..
ஆதி நாராயணராவ்..ஜீனியஸ் .. என்னமாய் இசையமைப்பார் இவர் .. ஒவ்வொரு டியூனும் வித்தியாசம்
மன்னவா வா துள்ளலுடன் இசையரசி பாடும் விதமே அழகு.. கொஞ்சும் கண்களுடன் அஞ்சலி அழகோ அழகு
மலர்க்கொடி நானே மகிழ்ந்திடுவேனே
பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து..
பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் மாலையில் மலர்ச்சோலையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் (கண்ணாலே பாடலையே போட்டு போட்டு தேய்ப்பார்கள்)
அதேபோல் சீர்காழியாரும் லோகனாதனுன் இசைத்த கண்களும் கவி பாடுதே இன்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
மொத்தத்தில் அடுத்த வீட்டு பெண் .. நம்ம் மனத்தில் குடி கொண்ட பெண் .. பாடல்கள் நம் நெஞ்சத்தில் குடி கொண்டன
யாராவது சிரமம் பார்க்காமல் index செய்தால் ,அப்பாவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.(Young thread started only on 8th June!!!!)
நாளன்னிக்கே சின்ன கண்ணன் ,எப்போதோ சிலோன் ரேடியோவில் 1969 இல் கேட்டது பட்டம் விட்டது போலே (Full பாட்டு வேறு எழுதி விடுவார் ):-D
இன்றைய ஸ்பெஷல் (58)
'இன்றைய ஸ்பெஷல்' பாடல் 'கண்டதை சொல்லுகிறேன்'.சில நேரங்களில் சில மனிதர்கள்.படத்திலிருந்து. பாடலை 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களே பாடியிருப்பார் அவருக்கே உரித்தான அந்த தனி ஸ்டைலில்.
http://arsonist.asia/blog/wp-content...hargal0001.jpg
http://www.sylvianism.com/wp-content...anidhargal.jpg
லஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய், நாகேஷ், ஒய்.ஜி.பி, ராஜசுலோச்சனா ஆகியோர் நடித்த இப்படத்தை இயக்கியவர் பீம்சிங்.
ஜெயகாந்தனின் அருமையான வரிகள் இந்த ஆர்ட் பிலிமிற்கு அருமையாய் அமைந்தது. எழுத்தாளர் நாகேஷ் கண்ணில் படும் அனுபவங்கள் அவருடைய எண்ணத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடலாய் இப்பாடல் வரும்.
பாரதியார் போல சில வரிகளை அமைத்திருப்பார் ஜெயகாந்தன்.
'இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ'
நடைபாதைகளில், சாலைகளில் மக்களோடு மக்களாக சர்வசாதாரணமாக நாகேஷ் ஜோல்னாப் பையுடன் நடந்து செல்ல பின்னணியில் இப்பாடல் அற்புதமாய் ஒலிக்கும்.
'என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ'
என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. சமூகத்தின் அவலங்களைப் பார்த்து அதைச் சாடி 'மனிதர்களே நீங்கள் திருந்தவே மாட்டீர்களா? என்று கேவிக்கணை தொடுத்து 'அதனால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை' என்று அர்த்தம் தொனிக்க வரும் இப்பாடல் மிகச் சிறந்த தமிழ்ப்பாடல்களில் ஒன்றாகும்.
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஜெயகாந்தனின் அருமையான நாவல் அழகான காவியப் படமானது.
http://i1098.photobucket.com/albums/...hargal0003.jpg
1975-ன் சிறந்த தேசிய நடிகையாக லஷ்மி இப்படத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.
இன்றுவரை தமிழில் ஒரு சிறந்த ஆர்ட் பிலிம் என்ற அந்தஸ்தை இப்படம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
http://i.ytimg.com/vi/dtWMrA98Gjs/0.jpg
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ
தாங்கிட நாதியுண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...ஓ..ஓ
http://www.youtube.com/watch?v=dtWMr...yer_detailpage
வாசு,
கண்டதை சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள். நன்றி. விசு நன்றாகவே பாடி, களை கட்ட .வைப்பார்.
சி.நே.சி.ம ஆர்ட் பிலிம் கிடையாது. off beat (அ ) compromise parallel cinema ரகம்.
இப்போது அந்த மாதிரி வித்தியாசத்தை யாரும் லட்சியம் செய்வது கிடையாது.
ஆர்ட் பிலிம் என்றால், ஒரு கால கட்டம் ,அது சார்ந்த பிரச்சினையை எடுத்து ,பார்வையாளர்களுக்கு,இயக்குனர் கோணத்தில் ,பார்வையில் ,கதாபாத்திரங்களின் அந்த கண மனநிலை ,உணர்வு ரீதியில் உணர்த்த பட வேண்டும். உதாரணம்... சராசரி வாழ்க்கையில் ஒரு போர் அடிக்கும் ஒருவன் மனநிலை சொல்ல ,நிறைய அடிகளில் அதை எடுத்து, அதை உணர்வு ரீதியில் தானும் அனுபவிக்க வேண்டும். மொத்த தொகுப்பில் நோக்கம், தெரிய வேண்டும் போலி தனம் இல்லாமல்.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கிட்டத்தட்ட கிட்ட வரும்.
off beat என்றால், வழக்கமான பாத்திரங்கள்,பழக்க பட்ட திரைகதை,என்று இல்லாமல் சற்றே புதுமையாய் ,ரசிகர்களுக்கு nerrative surprise கொடுப்பது.உ.ம் -அரங்கேற்றம்,அவள் ஒரு தொடர்கதை,சில நேரங்களில் சில மனிதர்கள்,அபூர்வ ராகங்கள்.
வாசு சார்
சில நேரங்களில் சில மனிதர்கள் - அருமையான பாடல் . நாகேஷின் நடிப்பு அபாரம் . மெல்லிசை மன்னரின் பாடல்
என்றென்றும் நினைவில் நிற்கும் என்பதை இந்த பாடல் மூலம் அறியலாம் .
கோபால் ஜி
அருமை... விஸ்வரூபம் பாடலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.. ஏமாற்றவில்லை..
உண்மையிலேயே தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில் இப்பாடலுக்குத் தனியிடம் என்றும் உண்டு.
வாசு சார்
ஒவ்வொரு நாளும் ஸ்பெஷலே தாங்கள் தரும் பாடலாலே அமைகிறது. தொடர்ந்து தாருங்கள்..
பொங்கும் பூம்புனல்
அன்னம் போலே அன்னை அருகில் வைத்தாள் உன்னை..
இசையரசியின் இனிமையான குரலில் மெதுவாக தென்றல் தாலாட்டும் உணர்வைத் தரும் இந்தப் பாடல்
1961ல் வெளியான அன்பு மகன் திரைப்படத்திலிருந்து... இசை டி.சலபதி ராவ்..
http://www.inbaminge.com/t/a/Anbu%20Magan%201961/
பொங்கும் பூம்புனல்
1961ம் ஆண்டு வெளிவந்த என்னைப் பார் திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல்..
காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்... சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்பாகும்.. குறிப்பாக ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் காலை 8.30 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் தவறாமல் ஒலிபரப்புவார்...
http://www.inbaminge.com/t/e/Ennai%20Paar/
இடையியைசில் கிளாரிநெட் இசைக்கருவி மேல்நாட்டு இசையின் பாணியில் வாசித்திருப்பது இப்பாடலில் உள்ள சிறப்பு..
பெண்களின் திலகமே,,,
முத்தமிழ் செல்வமே...
என்று காதலர்கள் ஒருவரையொருவர் வர்ணித்துக் கொள்ளும் அழகே தனி..
பொங்கும் பூம்புனல்
ஜே.பி.சந்திரபாபு ... தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞர்களில் ஒருவர்..இவரை எத்தனை முறை புகழ்ந்தாலும் எப்படியெல்லாம் புகழ்ந்தாலும் சலிக்காது...
அதுவும் இவருடைய பாடல்கள் இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பது இவருடைய சிறப்பு..
இவருடைய மறக்க முடியாத படம் குமார ராஜா.. ஒண்ணுமே புரியலே பாடல் காலத்தைக் கடந்து நிற்கும் கருத்தாழமிக்க பாடல்..
இதே படத்தில் இடம் பெற்ற ஆணொன்று பாட என்னாளும் என் நெஞ்சம் கவர்ந்த பாடல்..
மெலோடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த இன்னொரு பாடல்..
மாலை நேரம் ஆனந்தம்,, வாழ்க்கை நாடகம் ஆரம்பம்..
நாளையானால் ஏதாகுமோ .. இந்த கவலை ஏன் வேண்டும் என்கிறார் பாபு..
http://www.inbaminge.com/t/k/Kumara%20Raja/
பொங்கும் பூம்புனல்
ஏ.எல். ராகவன் ஜமுனா ராணி இணையாக பாடிய பல பாடல்கள் துள்ளி விளையாடும் உணர்வை ஏற்படுத்தும்.. அப்படிப் பட்ட ஒரு பாடலை இதோ கேளுங்கள்..
மல்லியம் மங்களம் திரைப்படத்திலிருந்து ...
சுந்தர கண்ணை இந்திர லோகம் காட்டுது..
ஏ.எல். ராகவன் குரலில் செய்யும் மாயா ஜாலம் பிரமிக்க வைக்கிறது..
வெவ்வேறு பாணிகளில் இப்படம் களை கட்டும் ... கேட்டுப் பாருங்கள்...
http://www.inbaminge.com/t/m/Malliyam%20Mangalam/
மைடியர் மார்த்தாண்டன் பாட்டு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை...
அப்பாவுக்கு லூசான நாட்டு... என்பதெல்லாம் இப்பாட்டில் வரும் வரிகள்..
பொங்கும் பூம்புனல்
மல்லியம் மங்களம் பாடல்களால் பிரசித்தமான படம்.. அருமையான பாடல்கள் இப்படத்தின் ஸ்பெஷாலிட்டி..
குறிப்பாக பாடகர் திலகம் பி.லீலா பாடிய இப்பாடல் அந்நாளைய குழந்தைகளைத் தாய்மார்கள் பாடி உற்சாகமூட்டிய பாடல்..
இப்பாடலை நமது நடிகர் திலகம் நடித்த படம் ஏதாவது ஒன்றில் பயன்படுத்தியிருக்கலாமே என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு.. காரணம் பாடகர் திலகத்தின் குரல் அப்படியே இருக்கும்.
சிங்கார வேலா விளையாட வா
http://www.inbaminge.com/t/m/Malliyam%20Mangalam/
பொங்கும் பூம்புனல்
சைக்கிள் பாட்டு கேட்டார்கள் இங்கு யாரோ... இந்த சைக்கிள் பாட்டுக்களிலெல்லாம் சூப்பர் டூப்பர் பாடலாக இதோ..
மாமியாரும் ஒரு வீட்டு மருகமளே.. படத்தில் இடம் பெற்று சீர்காழியை பாமர மக்களிடம் பெருமளவு கொண்டு சேர்த்த பெருமைக்குரிய பாடல்... ஜிக்கியின் சூப்பர் வாய்ஸ்....
பாய்லா பாய்லா சைக்கிள்...
http://www.inbaminge.com/t/m/Mamiyar...%20Marumagale/
பொங்கும் பூம்புனல்
இதே போல ஒரு உற்சாகமான டூயட் பாடல்..
வாவென்று சொன்னதும் வரவாயா நீ, என்ற இந்தப் பாடலும் காதலைப் பரிமாறிக் கொள்ளும் பாடல்.. எப்படி உருவாயிற்று காதல்.. இதோ பாடலிலேயே விடையிருக்குது கேளுங்கள்..
சீர்காழி கோவிந்தராஜன் ஜிக்கி டூயட் ..
http://www.inbaminge.com/t/m/Mamiyar...%20Marumagale/
பொங்கும் பூம்புனல்
உங்களைச் சிரிக்க வேண்டுமென்று கேட்கிறார்களே.. சிரித்துத் தான் வையுங்களேன்... என நான் சொல்லவில்லை.. இந்தப் பாட்டில் தான் கேட்கிறார்கள்..
யார் மணமகன் திரைப்படத்தில் கொஞ்சம் சிரிங்க..
எஸ்.சி.கிருஷ்ணன் கே.ஜமுனா ராணி குரல்களில் பிரதர் லக்ஷ்மணன் இசையில் சுந்தர கண்ணன் வரிகள்..
http://www.inbaminge.com/t/y/Yaar%20Manamagan/
பொங்கும் பூம்புனல்
நாகமலை அழகி ... இப்படி ஒரு படம் வந்ததா என பலருக்கு கேள்வி எழுவது இயல்பே.. ஆனால் இந்தப் பாட்டைச் சொன்னால் இந்தப் படத்திலா என்று கேட்பீர்கள்.. அப்படி ஒரு ஹிட்டான பாடல் தான் வண்டு வந்து மெல்ல மெல்ல... சிலோன் ரேடியோவிற்கு நம்மையெல்லாம் அடிமையாக்கிய பல பாடல்களில் இதுவும் ஒன்று..
http://www.inbaminge.com/t/n/Nagamalai%20Azhagi/
பொங்கும் பூம்புனல்
இன்ப உலகின் ரகசியம் இங்கே ஆரம்பம்... கண்கள் மயங்கும் காவியம் இங்கே ஆரம்பம்..
மனதை மயக்கும் மதுர கானங்களைப் பற்றி நான் சொல்லவில்லை..
பாடகர் திலகமும் இசையரசியும் கூறுகிறார்கள் .. சீமான் பெற்ற செல்வங்கள் திரைப்படத்தில்... திரை இசைத் திலகத்தின் இசையில்..
http://www.inbaminge.com/t/s/Seemaan...a%20Selvangal/