Originally Posted by
makkal thilagam mgr
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க செயற்குழு உறுப்பினரும், எங்களின் பாசத்துக்குரிய சகோதரருமாகிய திரு. சந்திரசேகரன் அவர்களின் தாயார் இன்று காலை சுமார் 11 மணி அளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய, ஆலயம் கண்ட ஆண்டவன், பாரத ரத்னா, டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன். அன்னாரை இழந்து வாடும் திரு. சந்திரசேகரர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். .
தனது தாயாரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தும், கடந்த ஞாயிறு (08-02-15) அன்று ,மாலை புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் நடந்த, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க மாதாந்திர கூட்டத்தில், திரு. சந்திரசேகர் அவர்கள், ஆர்வத்துடன் கலந்து கொண்டது, மக்கள் திலகத்தின் மேல் அவர் கொண்டிருக்கும் மாறாத அன்பையும், பக்தியையும் புலப்பப்டுத்துகிறது.