http://i1065.photobucket.com/albums/...pslmqweu9r.jpg
Printable View
தேவர் பிலிம்ஸ் திரைப்படங்களில் நடிகர் திலகம் நடித்ததில்லை என்றாலும் திரு தேவர் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
திரு சின்னப்பா தேவர் அவர்கள் அகவை 60 முடிந்தபோது, சஷ்டிஅப்தபூர்த்தி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரை உலகம் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்கள் பலரும் இதில் ஆச்சர்யத்துடன் அதே சமயத்தில் சந்தோஷத்துடன் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். ஆச்சர்யம் காரணம் அந்த சஷ்டிஅப்தபூர்த்தியை நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
அப்படி தேவர் பிலிம்ஸ் திரு சின்னப்பா தேவர் அவர்களின் சஷ்டிஅப்தபூர்த்தி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடந்தபோது எடுத்த புகைப்படம்.
அனைத்து திரி நண்பர்களுக்கும்,
கடந்த இரண்டு தினங்களாக நிகழ்ந்த தேவையற்ற வாதங்களை மனகசப்புகளை மறப்போம். உணர்ச்சிவசப்பட்டு ஒரு இளைய சகோதரர் பேசியவற்றை பெரிதுபடுத்தாமல் மறப்போம். எனக்கு அவர் மீது எந்த வருத்தமோ கோவமோ இல்லை. அவர் என்றில்லை எவர் மீதும் இல்லை. ஆகவே அனைவரும் நடிகர் திலகம் பற்றிய positive விஷயங்களை பதிவிடுவோம். குறிப்பாக கட்டபொம்மன் பற்றி.
நாளை அதன் ட்ரைலர் வெளியீட்டு விழா. ஆகவே அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளும் மற்றும் நடிகர் திலகத்தின் பல்வேறு செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். திரியை சுமுகமாக முன்னெடுத்து செல்வோம்.
சிவா சார்,
மூத்த ரசிகர் நீங்கள். நமக்கு தெரியும் நடிகர் திலகத்தின் சாதனைகள் பற்றி. ஆகவே நாம் யாரோடும் வாதம் செய்யாமல் சாதனை தகவல்களை மட்டும் பதிவிடுவோம் என்று வேண்டுகோளாக விடுக்கிறேன்.
அனைவரின் புரிதலுக்கும் நன்றி!
அன்புடன்
முரளி சார்,
அருமையான மீள் பதிவு. "ஆரோடும் மண்ணில் என்றும்" பாடலை எப்போது கேட்டாலும், மண்ணின் மணம் வீசும்.
தாங்கள் குறிப்பிட்டதுபோல சில நல்ல பதிவுகள் தேவையில்லாத குறுக்கீடுகள் மூலம் படிக்க சுவாரசியம் இல்லாததாக ஆகிவிடுகிறது.
என்னுடைய சிறு வேண்டுகோள். இதுமாதிரி தேவையற்ற சர்ச்சைப் பதிவுகள் வரும்போது, பதிலே அளிக்காமல் நீக்கிவிட்டால் நல்லது.
கலை வேந்தன் ,
உங்கள் பதிவுக்கு நன்றி. இனி நான் பதில் சொல்வது வீண்.
நான் சொல்ல வருவது, பத்திரிகையாரின் தொழில் தர்மம் ,சொந்த விருப்பு விருப்புகளால் மாசு படாமல் ,பொதுமக்கள் அனைவரின் பிரதிநிதி என்று உணர்ந்து செயல் பட வேண்டியது அவசியம். அதை மீறி நடந்தால் பாரதியாரின் வரிதான்.
"படிச்சவன் சூதும் வாதும் செஞ்சா ஐயோன்னு போவான்....ஐயோன்னு போவான் ......
மற்ற படி நடிகர் திலகம் பற்றி நான் எழுதிய எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி.(வசதியானதை மட்டும் மேற்கோள் காட்டி)
ஹிந்துவில் வந்த பதிவு எல்லை மீறிய ,சம்பந்தா சம்பந்தமில்லாத ஒருதலை பட்சமானது. இதை எழுதியவர் பாரதியார் சாபமிட்ட படி ஆவார் என்பது திண்ணம். (எனக்கு சாபமிட்டு பழக்கமில்லை).
வசந்தமாளிகை (இந்தி)பூஜையின் போது எடுத்த போட்டோ
http://i1065.photobucket.com/albums/...psskhmzzwf.jpg
எனக்கு நடிகர்திலகம் நடிப்பில் ,பெரியார் ,சத்ரபதி சிவாஜி (ராஜ ராஜ சோழனில் செலவிட்டதில்,இதை உருவாகியிருக்கலாம்)தவிர என்னை கவர்ந்த இரண்டு ராமநுஜர்கள் இவை உருவாகியிருக்கலாமோ என்று ஏக்கமே உண்டு.
ஒரு ராமானுஜர் ,அந்த கால பெரியார். வைதீக மரபிற்குள் இருந்தே அதை மீறி ,தீண்டாமைக்கு எதிராக சாதித்த மகான்.
இன்னொரு ராமானுஜம் பிறவி கணித மேதை. தன் மேதைமையை புரிந்த ஒரு ஆங்கிலேய பிரபு கிடைத்தாலும் ,தன்னுடைய ஆச்சார சிறையில் இருந்து வெளி வந்து வெளியுலகில் பறக்க இயலாமல் , சாதித்தாலும் ,வாழ்வை இழந்த மேதை.
ஆஹா ,நடிகர்திலகம்,இந்த பாத்திரங்களை ஏற்றிருந்தால் ,இன்னொரு கப்பலோட்டிய தமிழன், தில்லானா போன்ற தர படங்கள் கிட்டியிருக்குமே?
ஆனால் ,அந்த பெயரில் வாழ்வில் சந்தித்த நபர்கள் அனைவருமே ,அந்த பெயரை சுமக்கும் பொறுப்பை ஏற்காதவர்கள்.எனக்கு ஏமாற்றமே.
எனது நான்காம் வகுப்பு ஆசிரியர், ஒரு சக ஆசிரியையுடன் தகாத முறையில் நடந்து வேலையை இழந்தார். எனது தோழன் ஒருவன் ,நன்கு படித்து கொண்டிருந்து ,ஐ.ஐ.டி யில் மூன்று வருடம் படித்த பிறகு போதைக்கு அடிமையாகி, ஏக பட்ட அரியர் வைத்து ,படிப்பை துறந்து,மஞ்சள் காமாலையால் (needle jaundice என்று போதை ஊசியால்),அகால மரணம் எய்தினார். இன்னொருவரோ, சிடு சிடுவென்று ,ஜாதி வெறி பிடித்த முதியவர். (இவருக்கு சக வகுப்பினரிடையே கூட சைவர்களிடம் துவேஷம்)
என்னுடைய விருப்ப பெரியவர்களின் பெயரில் என்றாவது அந்த பெயருக்கு தகுதியுள்ள ஒருவரை காண விழைகின்றேன்.
Dear RKS Sir,
Hats off for your write up on re releases
நடிகர்திலகம் செவாலியே விருதுபெற்றமைக்கு ஸ்கீரீன் பத்திரிக்கை வெளியிட்டசிறப்புமலர்
http://i1065.photobucket.com/albums/...psqhzswpas.jpg
Dear Yukesh
Good Morning !
I read your post. If the post referred to me then...all i have to reply is the following
There is absolutely no use in explaining anything to you !
Either you have not understood what I have mentioned (or) you pretend as if you have not understood always anything that is written (or) my explanation could not make you understand.
Please remember that either way, you cannot POOSI MOZHIGIFY the truth happening in all cities interms of screening NT Films by your Film Possessing and Screening Distributors who by and large control screening of their Films in those respective theaters.
You do not know anything interms of field reality and am sorry to say this !
You may know distributors i do not refuse the possibility but my point is even if you know distributors they belong to your group and who screen maximum of your films only !!
Ane, I have not mentioned any creativity But they all are my personal field experience in all these cities and also the experience of fellow hubber Mr. VCS
Next Time, am sure, I will post something - a solid proof which will expose such biased operations of such people.
Am equally sure that you will speak / write again as if it is not truth and in line with " ENNA KAIYYA PUDICHCHU IZHUTHTHIA !"
If you know those people and interact with them as per your posting ....Please first ask them to allow a level playing field rather than they tie rope to others legs and hands and then asking to compete a race while they run with free hands and legs.
am parking my conversation here on this.
Regards
RKS
எஸ்.வீ,
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் கே.பாலசந்தர் ,அது பொய் வெளியீடு விழாவாயிற்றே!!!??? குமுதம் பேட்டியில் அவர் நிஜமாக சொன்னது "தெய்வத் தாய் படத்தின் போது வெகுவாக அவமான படுத்த பட்டேன்". (கவலை படாதீர்கள் .ஆதாரம் உள்ளது )
வீரபாண்டிய கட்டபொம்மன்.... வரலாற்று காவியத்தின் சில சாதனை துளிகள்!
முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக 16 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டதுதான் வீரபாண்டய கட்டபொம்மன். அதன் பிறகுதான் படமாக தயாரிக்கப்பட்டது. நாடகம் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார்.
லண்டனில் 16-05-1959 ஆம் ஆண்டு தென்னக மெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959 ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு பார்த்து மகிழ்ந்தனர். விழாவிற்கு தலைமை ஏற்றவர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சகோதரியும் நம் நாட்டின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் என்ற சிறப்பு பெற்ற திருமதி. விஜயலட்சுமி பண்டிட்.
http://tamil.filmibeat.com/img/2015/...omman3-600.jpg
கெய்ரோவில் 1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.
http://tamil.filmibeat.com/img/2015/...omman2-600.jpg
முதல் படம் இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்ப் படமாகவும், முதல் இந்தியப் படமாகவும், முதல ஆசியத் திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது.
http://tamil.filmibeat.com/img/2015/...omman4-600.jpg
கெய்ரோவில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர் திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும்.
http://tamil.filmibeat.com/img/2015/...bomman-600.jpg
நினைவுச் சின்னம் தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
http://tamil.filmibeat.com/img/2015/...omman6-600.jpg
புதுபொலிவுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் இத்தனை சிறப்புக்களுக்கும் உரிய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. Show Thumbnail
http://tamil.filmibeat.com/img/2015/...omman5-600.jpg
ட்ரைலர் இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு நாளை சத்யம் திரையரங்கு வளாகத்தில் நடைப்பெறவுள்ளது. நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, நடிகர் ராம்குமார், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றார். மேலும் பல திரை பிரபலங்களும் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நன்றி : http://tamil.filmibeat.com/specials/...ic-033649.html
Trailer Launch of Sivaji Ganesan's "Veera Pandiya Katta Bomman" - Watch Zee Tamil's TOP10 today @ 10.30pm - Movie release in April
ஆர்கேஎஸ்,
விட்டு விடுங்கள். ஒப்புக் கொள்வதும், ஒப்புக் கொள்ள மறுப்பதும் அவரவர் விருப்பம். நாம் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வாதத்தை நிறுத்தி விட்டீர்கள் என தெரியும். இருப்பினும் இனியும் provacation வந்தாலும் தொடர வேண்டாம்.
கோபால்,
வேண்டாமே! இணையத்தில் இருப்பதை அவர் பதிவேற்றம் செய்கிறார். அதற்கு எதிர் வினையாற்ற வேண்டாமே! ஏன் தேவையற்ற கமன்ட்? நான் சொன்னது போல் கட்டபொம்மன் பற்றி பேசலாமே!
அன்புடன்
Karnan thamizh thiraiyulagin Perumai VPKB Perumidham
Karnan thamizh thiraiyulagin Garvam VPKB Gowravam
Karnan Dhuruva Nakshaththiram VPKB Vidivelli.....
Karnan Kamadhenu VPKB akshaya paaththiram
Karnan Kankanda theivam VPKB kaikoduththa theivam....
We are getting ready for the digital thrill of VPKB!!
கோவை சண்முகாவில்
இன்றுமுதல்தினசரி 4 காட்சிகள்
http://i1065.photobucket.com/albums/...ps9u3qt25z.jpg
வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா
அழகான காலைப் பொழுது! அருமையாக நடந்த விழா! அற்புதமாக பேசிய சிறப்பு விருந்தினர்கள்! அரங்கம் வழிய வழிய திரண்ட ரசிகர்கள், போது மக்கள்! இவற்றுக்கு நடுவில் அரங்கம் அதிர அதிர பாஞ்சாலங்குறிச்சி சிங்கம் நடிப்புச் சக்ரவர்த்தியின் உருவில் டிஜிட்டல் வ்டிவில் வெள்ளையருக்கு எதிராக வீர முழக்கமிட்டப் போது பார்வையாளன் அடைந்த பரவசம் பற்றி சொல்லவும் வேண்டுமோ!
பெரிய திரையில் ட்ரைலர் ஓட ஆரம்பிக்க அத்துடன் விழா தொடங்கியது. 3 நிமிட முன்னோட்டம் அத்துடன் மனம் கனிந்தருள் வேல் முருகா, இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே, கறந்த பாலும் [கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் ராமநாதபுரம் செல்லும்போது வரும் பாடல்] ஆகியவை முழுமையாக திரையிடப்பட்டன. கறந்த பாலும் பாடல் பார்க்கும்போதுதான் எவ்வளவு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் இது என்பது மனதில் உறைக்கிறது.
தொகுத்து வழங்கிய திருமதி மதுவந்தி அருண் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தார். ராஜ் டிவி உரிமையாளர்களான நான்கு சகோதரர்களும் முதலில் மேடைக்கு வந்தார்கள். அதன் பிறகு தளபதி ராம்குமார் மேடையேறினார். அடுத்து இளையதிலகம் பிரபு [என் favourite என்ற மதுவந்தியின் கமன்ட்] விக்ரம் பிரபு ஆகியோர் வந்தனர். கலைப்புலி தாணு, விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, சித்ரா லட்சுமணன், Dr. கமலா செல்வராஜ் ஆகியோர் அடுத்து வந்தனர். பிறகு அழைக்கப்பட்டவர் கலையுலக மார்கேண்டேயர் சிவகுமார். மேடைக்கு அழைக்கப்படும்போதே சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் படத்தை வெளியிடும் சாய் கணேஷ் பிலிம்ஸ் உரிமையாளர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வரவேற்புரையாற்ற வந்தார் ராம்குமார். நடிகர் திலகத்தை நினைவுப்படுத்தும் குரலில் அவர் அனைவருக்கு காலை வணக்கம் கூறி வந்தவர்களை வரவேற்றார். இந்தப் படத்தை பாதுகாத்து வைத்திருந்து இப்போது வெளியிட அனைத்து உதவிகளையும் செய்த ராஜ் டிவி சகோதரர்களுக்கு நன்றி சொன்ன அவர் அதற்கு பெரும் உதவியாக இருந்த சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். படத்தை வெளியிடும் சாய் கணேஷ் பிலிம்ஸ் பங்குதாரர்கள் ஸ்ரீனிவாசலு மற்றும் முரளி ஆகியோருக்கு வாழ்த்து சொல்லி இந்தப் படத்தை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் இந்தப் படத்தையும் வாழ வைப்பார் என்று பலத்த கைத்தட்டலுக்கு இடையே கூறி முடித்தார்.
அடுத்து கலைப்புலி தாணு. தன்னை சிவாஜி பக்தன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தான் சினிமாத்துறைக்கு வந்ததற்கே காரணம் கட்டபொம்மன் என்றார். பள்ளி நாடகத்தில் கட்டபொம்மன் வசனத்தை பேசி நடித்த தனக்கு பரிசு கிடைத்ததையும் பரிசு வழங்கிய வார்ட் கவுன்சிலர் நீ சினிமாவிற்கு போனால் பிரகாசிப்பாய் என்று சொன்னதை வைத்து சினிமா ஆசையை வளர்த்துக் கொண்டதை சொன்னார். கட்டபொம்மன் வசனம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது என்று சொன்ன அவர் ஜாக்சன் துறையுடன் பேசும் வசனத்தின் சில அவ்ரிகளை பேசிக் காண்பித்தார்.
அடுத்துப் பேசிய விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதியும் ராஜ் டிவி இயக்குனர்களில் மூத்தவருமான ராஜேந்திரனும் சுருக்கமாக பேசி தங்கள் உரையை முடித்துக் கொண்டார்கள். ராஜேந்திரன் சிறு வயதில் ஸ்கூல் கட் அடித்துவிட்டு சித்ரா தியேட்டரில் படம் பார்த்ததை நினைவு கூர்ந்தார். அவர் தந்தையார் அதை கண்டுபிடித்ததையும் சொன்னார். அவர் பேசி முடித்தவுடன் மதுவந்தியின் கமன்ட். அய்யா நீங்க உங்க அப்பாவுக்கு தெரியாமல் ஸ்கூல் கட் அடிச்சு படம் பார்த்திருக்கீங்க. ஆனா எங்க அப்பாவோ என்னை ஸ்கூல் கட் அடிக்க வைச்சு VHS காசட்டில் படம் பார்க்க வைத்தார் என்றார். தொடர்ந்து இப்பொது நான் நடத்தும் காலிபர் ஸ்கூல் பள்ளி மாணவர்களை நானே இந்தப் படத்திற்கு அழைத்து வருவேன் என்று சொல்ல கைதட்டல்கள்.
விக்ரம் பிரபு வந்தார். இத்துணை பெரியவர்கள் இருக்கும் இடத்தில பேச நேரும் தருணத்தில் ஒரு இளைஞன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தார். ஆனால் பேச்சில் சமாளித்து விட்டார். உங்களைப் போலவே ஒரு ரசிகனாக என் தாத்தாவை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இதுவரை பெரிய திரையில் நான் இந்தப் படத்தை பார்த்ததில்லை. ஆகவே படம் பார்க்க வேண்டும் கை தட்ட வேண்டும் விசிலடிக்க வேண்டும், முடிந்தால் திரையை நோக்கி காசு எறிய வேண்டும். ஆகவே ரிலீசின்போது சந்திப்போம் என்று முடித்தார். உடனே மதுவந்தி விக்ரம் நீங்க காசு எறிஞ்சா நான் சூடம் கொளுத்துவேன் என்று கமண்ட் அடிக்க அரங்கமே அமர்களமானது.
அடுத்து பேசிய Dr. கமலா செல்வராஜ் சிவாஜி குடும்பத்தில் நானும் ஒருத்தி, அவரின் பெண்ணைப் போன்றவர் என்று சொல்லி எனது அப்பாவும் இதில் நடித்திருப்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்றார். சின்ன வயதில் பெரிய திரையில் பார்த்தது. இப்போது மீண்டும் பார்க்க ஆவலாக இருப்பதாக சொன்ன அவர் தன்னை அழைத்ததற்கு நன்றி சொல்லி இந்தப் படமும் கர்ணன் போல் வெற்றி பெற வாழ்த்தி விடை பெற்றார். . .
அடுத்து வந்தார் சித்ரா லட்சுமணன்
(தொடரும்)
அன்புடன்
வீர பாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீடு மனதிற்கு இதமளிக்கிறது . தேவையற்ற விஷயங்களில் கருத்தை சிதறடிக்காமல் நடிகர்திலகத்தின் புகழ் பாடுவது மட்டுமே கவனம் கொண்டு படத்தின் மீள் வெளியீட்டு வெற்றியை விழைவோம்
Immortal Super Star to Rock Again!
IndiaGlitz [Friday, March 20, 2015] 0 Comments
http://img.indiaglitz.com/tamil/news...tapomman_M.jpg
The Greatest Actor to have ever graced the Tamil screens Nadigar Thilagam Sivaji Ganesan is all set to rock the box office again this summer. His immortal ‘Veera Pandiya Kattaboman’ is going to be released in digitized format soon and the trailer launch took place today at Sathyam Cinemas and the full house gave a thunderous applause when Sivaji appeared in the trailer with his unique sway.
‘Veera Pandiya Kattabomman’ is one of the legends' most celebrated films based on the rebellious warrior king who was one of the first freedom fighters of India. The film directed by B.R.Panthulu costars Gemini Ganesan, Padmini and a host of other major actors of the time.
The trailer launch was attended by Vairamuthu, Kalipuli Dhanu, Ramkumar, Prabhu, Vikram Prabhu, Sivakumar and the producers honored veteran actor Parthiban who played Jackson Durai in the film.
வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு புகைப்படங்கள்.
http://icdn.indiaglitz.com/tamil/gal...L_20315_15.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...L_20315_11.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...L_20315_12.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...L_20315_14.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...L_20315_20.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு புகைப்படங்கள்.
http://icdn.indiaglitz.com/tamil/gal...L_20315_16.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...L_20315_17.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...TL_20315_2.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...L_20315_21.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு புகைப்படங்கள்.
http://icdn.indiaglitz.com/tamil/gal...TL_20315_5.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...TL_20315_6.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...TL_20315_3.jpg
http://icdn.indiaglitz.com/tamil/gal...TL_20315_7.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.