http://i59.tinypic.com/sv5guv.jpg
Printable View
நான் பதிவிட்ட படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.. வாழ்க தலைவர்.. ..நம் தலைவருக்கு நடிக்க தெரியாது.. இந்த ஸ்டில்லை பாருங்கள் .நடிக்கவில்லை உண்மை..நான் சொல்வது உண்மை தானே...எந்த நடிகனும் இவரிடம் பிச்சை வாங்கணும்..
http://i57.tinypic.com/23le89j.jpg
http://i59.tinypic.com/2yz0oat.jpg
http://i60.tinypic.com/295v63b.jpg
http://i57.tinypic.com/2dan5es.jpg
குமரிக்கோட்டம் - மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் மிக அருமையாக பதிவிட்ட இனிய நண்பர் திரு முத்தையன்
அவர்களுக்கு பாராட்டுக்கள் .மதுரையில் மக்கள் திலகத்தின் நம்நாடு படம் 1.5.2015 அன்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது .
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா .......
அருமையான சாருகேசி ராகத்தில் அமைந்த மெலடி !
கவியரசரின் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர்கள் ..
இடம் பெற்ற படம் , பணத்தோட்டம் ...
பாடலின் ஆரம்பமே அமர்க்களம் .ஏகாந்தமான அந்த காட்டில் ....கதையின் நாயகி சரோ , .அன்னம் போல அழகு நடை நடந்து ... தாமரை இலையில் நீரை எடுத்து .வந்து ..தன் கரிய , பெரிய விழிகளை சுற்றுமுற்றும் சுழல விட்டவாறே செய்வதறியாது நிற்க...
அப்போது சற்றும் எதிரபாராத விதமாக காரின் மேல் தளத்திலிருந்து மக்கள் திலகம் ,
' பேசுவது கிளியா ' என்று பாடியவாறே சரோவின் தலையில் செல்லமாக தாளமிட ....
அப்போது சரோ ' பயமும் , மருட்சியும் ' கலந்த ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்கள் ......
அடடா ....பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதை ....
பின் அழகான பெரிய விழிகளை ஒயிலாக அசைத்து ...பொங்கும் அழகு புன்னகையுடன் அவரை பார்த்து
' பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா '
என்று பாடும் போது திரையில் அவரே பாடுவது போன்றதொரு தத்ரூபம் !......சுசீலாம்மாவின் தித்திக்கும் தேன் குரல் சரோவுக்கு அத்தனை கச்சிதமாக பொருத்தம் ....
அவருக்கு சற்றும் சளைக்காத மக்கள் திலகத்தின் நடிப்பு ....டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல் !
கவியரசரின் எளிய பாடல் வரிகள் .+..மெல்லிசை மன்னர்களின் இனிமையான இசை + சரோ , மக்கள் திலகத்தின் நடிப்பு + சுசீலாம்மா , டி எம் எஸ் இருவரின் குரலினிமை ...மற்றும் காட்சியமைப்பு
இப்படி எல்லாமுமாக சேர்ந்து ....ஐம்பது வருடங்கள் ஆனாலும் ...இந்த பாடலை காலத்தால் அழிக்க முடியாத பாடலாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி விட்டது !
https://youtu.be/Zf-CmIKvRIE
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
எஸ்.வி. சார் 1.5.2015 அன்று அலெக்சாண்டர் படம் வருகிறது. அடுத்த மக்கள் திலகத்தின் படம் அனேகமாக மே கடைசியில் வரலாம்.
நேற்று இன்று நாளை, நம்நாடு அல்லது உரிமைக்குரல்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Actor T.Rajendar talks about Makkal Thilagam
https://www.youtube.com/watch?v=SvuX2ujex4E
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)
ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)
தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)
இசை :கே.வி.மகாதேவன்
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்
வரிகள்:கண்ணதாஸன்.
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...af408614e2ddd7
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...57c86e6ce450fe
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
அனைத்து மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கும் நடிகர்திலகம் திரி நண்பர்களின் மே தின வாழ்த்துக்கள்.
உழைக்கும் கைகளே,
உருவாக்கும் கைகளே,
உலகைப் புது முறையில்,
உண்டாக்கும் கைகளே;
உழைக்கும் கைகளே,
உருவாக்கும் கைகளே,
உலகைப் புது முறையில்,
உண்டாக்கும் கைகளே...ஏ...ஏ;
உண்டாக்கும் கைகளே;
ஆற்று நீரைத் தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே, ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே;
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே,
செக்க வானம் போல என்றும் சிவந்து நிற்கும்
கைகள் எங்கள் கைகளே;
உழைக்கும் கைகளே,
உருவாக்கும் கைகளே,
உலகைப் புது முறையில்,
உண்டாக்கும் கைகளே...ஏ;
உண்டாக்கும் கைகளே;
பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்து விட்ட கைகளே,
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே;
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே, பச்சை ரத்தம் வேர்வையாக படிந்து நிற்கும் கைகள்
எங்கள் கைகளே;
உழைக்கும் கைகளே,
உருவாக்கும் கைகளே,
உலகைப் புது முறையில்,
உண்டாக்கும் கைகளே...ஏ;
உண்டாக்கும் கைகளே;
உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்
மக்கள் ஒன்றாய்க் கூடுவோம்,
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்;
சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்,
தர்ம நீதி மக்கள் ஆட்சி வாழ்கவென்றே ஆடுவோம்;
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்.
http://youtu.be/ARNKNmGMXuA
திரைப்படம் : தனிப்பிறவி ,
பாடல் : கண்ணதாசன் அவர்கள் ,
இசை : கே .வி .மஹாதேவன் அவர்கள் ,
பாடியவர் : டி .எம் .சௌந்தர்ராஜன் அவர்கள் ,
இயக்கம் : எம் .ஏ.திருமுகம் அவர்கள் ,
வெளியான ஆண்டு : 1966.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...22a4b7a4f20b2f
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
உன்னை நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே...
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே...
உன்னை நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே ( இசை )
உள்ளத்தில் விளக்கெடுத்து
உறவெனும் நெய்யெடுத்து
அன்பென்னும் கோவிலிலே
அழகாய் ஏற்றி வைத்து
அழகாய் ஏற்றி வைத்து
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
கனியை மரமறியும் காதலை மனமறியும்
கனியை மரமறியும் காதலை மனமறியும்
கனிவிருந்தால் அல்லவோ
கன்னியர் நிலை தெரியும்
ஆண்டவனுக்குக்கொரு மனது
ஆண்களுக்கு இரு மனது
தோன்றிய நாள் முதலாய்
துடிப்பது தான் பெண் மனது ( இசை )
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
பாதி வரை கை கொடுப்பான்
பாதையில் சிறகொடிப்பான்
பாதி வரை கை கொடுப்பான்
பாதையில் சிறகொடிப்பான்
தேனாக இனிப்பவனே தீயாக உருவெடுப்பான்
கண்ணீரில் ஆட வைத்த காதலை வேண்டுகிறேன்
இன்னும் ஒரு பெண் மனதை
எண்ண வைத்து ஏய்க்காதே ( இசை )
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
திரைப்படம் பணக்கார குடும்பம்
கதாநாயகன் எம்.ஜி.ஆர் கதாநாயகி சரோஜா தேவி
P.சுசீலா
இசையமைப்பாளர் விஸ்வநாதன் * ராமமூர்த்தி பாடலாசிரியர்கள் கண்ணதாசன்
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா
வெளியானஆண்டு 1964 தயாரிப்பு ஆர்.ஆர்.பிக்சர்ஸ்
https://youtu.be/u84XO7cwrnU?t=46
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...c9&oe=55D1ED26
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
புரட்சி தலைவரின் புகழ் அழியா வரம் பெற்றது.
வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும் என்பார்களே, அது போல் தலைவரின் புகழ் மக்கள் மத்தியில் தானாகவே பன் மடங்காகும் வல்லமை பெற்றது.
புரட்சி தலைவர் தனது வாழ்நாளில் எடுத்துக் கொண்ட முயற்சி அனைத்தும், எளிய மக்களின் நல் வாழ்வு மலர வேண்டும் என்ற கனவை நனவாக்கும் முயற்சியினை அடிப்படையாக கொண்டது என்ற உண்மையை நாம் அறிவோம்.
தற்போது இருக்கும் நிலையில், மக்களின் நல் வாழ்விற்கு வழிகளைக் காண ஒன்றிரண்டு ஆண்டுகளல்ல, பல நூறு ஆண்டுகள் ஆகும்.
மேலும் இத்தகைய முயற்சிகள், வெறும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல, சிறு துளி பெரு வெள்ளம் போன்று பலரது முயற்சியால்தான் வெற்றி காண வழி பிறக்கும்.
நம்மை போன்ற புரட்சி தலைவரின் அன்பர்கள், அவரிடமிருந்து பெற்ற படிப்பினையின் உதவியோடு, எளிய மக்களின் நல் வாழ்வு மலர, நமது சிந்தனை, திறன், உழைப்பு, பொருளாதாரம் இவைகளோடு முயன்றால், அதுவே தலைவரது கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்கு இணையாகும் என்பது எனது தாழ்மையான கருத்து.
இத்தகைய முயற்சியின் வழியாக தலைவரது கனவை நனவாக்க வழி காண்பதுதான் எனது வாழ்க்கை பயணத்தின் குறிக்கோளாகும்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy net
" அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய
எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற என் தம்பி எம்.ஜி. ஆர் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் எம்.ஜி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .
நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.
ஆனால் என் தம்பி எம்.ஜி.ஆர் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்.ஜி.ஆர் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.
ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன்."
- அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)
courtesy chandran veerasamy
முத்தையன் சார் குமரி கோட்டம் படத்தில் வரும் ஜஸ்டின் சண்டை காட்சிகள் பதிவு செய்தால் மிகவும் நல்லா இருக்கும் அதுவும் சண்டை காட்சியின் இறுதியில் தலைவர் ஜஸ்டின் அவர்களை தன் கரங்களால் தூக்கி போடும் அழகே தனி
திரு முத்தையன் - குமரிக்கோட்டம் .மக்கள் திலகம் நவரச நடிப்பில் தோன்றிய அத்தனை நிழற் படங்களும் அபாரம் . நன்றி .
திரு சுந்தராஜன் அவர்கள் அளித்த மதுரை -மக்கள் திலகத்தின் பட தகவலுக்கு நன்றி . உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறிய உங்களுக்கு
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .