https://scontent-sin1-1.xx.fbcdn.net...91&oe=56B5559D
என் தமிழ் என் மக்கள்
Printable View
https://scontent-sin1-1.xx.fbcdn.net...91&oe=56B5559D
என் தமிழ் என் மக்கள்
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...46800be6a42bb3
என் தமிழ் என் மக்கள்
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது.
-------------
"உன் மலர், உன் இதயம் எல்லாமே எனக்குத்தான்.
இதயத்தை நான் எடுத்துக்கிட்டு
மலரை உன்கிட்டயே
குடுத்துடறேன்."
-காதலில் ஆழ்ந்து லயித்து
விட்ட மனம், பண்டமாற்று
முறை பேசுகிறது.
அன்புக்குரியவள் தரும்
பரிசுக்காகத், தன்னை மிகவும்
பயப்படுத்தும் உயரம் நோக்கிச்
செல்லும் தைரியம் சுந்தருக்கு
எப்படி வந்தது?
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது,
எங்கள் தமிழாசிரியர் ஒரு
போட்டி வைத்தார். காலாண்டுத்
தேர்வு கூட முடிந்திராத காலமது. எங்கள் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த,
பாடப் பகுதிகள் தவிர்த்த
செய்யுள் பகுதி முழுவதையும், (ஆண்டின் இறுதித் தேர்வு வரை உள்ள பகுதிகள் அனைத்தையும்)
மனப்பாடம் செய்து தங்கு
தடையின்றி ஒப்பிக்க வேண்டும். நல்ல முறையில்
ஒப்பிப்போருக்கு பரிசாக ஒரு
ஸ்கேல், ஒரு பென்சில், ஒரு
ரப்பர் மூன்றும் தரப்படும்
என்ற அறிவிப்பே அது.
ஏழெட்டுப் பேர் போட்டியில்
கலந்து கொண்டதில், மூன்று
பேருக்குப் பரிசு கிடைத்து,
அந்த மூவரில் நானும் ஒருவனாகி, பரிசு வென்ற
மகிழ்வில் அவ்வப்போது
ஸ்கேல் வைத்து பென்சிலால்
நிறையக் கோடுகள் போட்டு,
அதை ரப்பரால் அழித்துக்
கொண்டு.. அது ஒரு காலம்.
சொல்ல வரும் விஷயம்-
விருப்பத்துக்குரியது பரிசாகக்
கிடைத்தால், அந்தப் பரிசுக்காக
எதை வேண்டுமானாலும்
செய்யும் துணிச்சல் வந்து
விடுகிறது.
அப்படி ஒரு துணிச்சல்தான்
சுந்தருக்கும் வந்து விட்டது.
"அவசியம் போய்த்தான்
ஆகணுமா" என ஆரம்பத்தில்
தயங்கினாலும், அவள் தரப்
போகிற பரிசின் மீதான ஆர்வம்,
சுந்தரை ஆபத்தான பாறையை
நோக்கிச் செலுத்துகிறது.
நடை வேகம் பிடித்து, வேகம்
சூடு பிடிக்கும் வழக்கமான
நடையல்ல அது. காதலியின்
பரிசைப் பெற வேண்டும்
என்கிற அவசரமும், தனக்கு
ஒவ்வாத உயரம் நோக்கிச்
செல்கிற நடுக்கம் தரும்
தள்ளாட்டமும் கலந்த நடை.
தொலைவில் நின்றாலும் உமா,
சுந்தர் தள்ளாடி நடப்பதைக்
கண்டுபிடித்து விடுகிறாள்.
"அய்யோ.. அவர் தள்ளாடுறாரே!?" என்று அவள்
பதற, "அவன் தைரியமானவன்தான். ஆனா,
உயரம்னா ரொம்பப் பயப்படுவான். ஒரு ஏணியில
கூட ஏற மாட்டான். வேர்த்துக்கொட்டும்." என்று
தாமதமாக விவரிக்கும் சக
மாணவனைக் கடிந்து கொள்ளும் உமா, தூரத்தே
தடுமாறிச் செல்லும் சுந்தரை
நோக்கி பதற்றத்தோடு கூவுகிறாள்..
"வேண்டாம்..போகாதீங்க!
இதோ இந்த மலரைக் கூட
தர்றேன். போகாதீங்க..!"
இந்தக் காட்சியில் உமாவாக
பத்மினி கூவ, தள்ளாடிச்
சென்றாலும் நடை நிறுத்தாமல்,
முற்றிலும் முகம் திருப்பாது
மிக இலேசாய் உமாவின்
பக்கம் முகம் திருப்பி, "இரு..
கவலைப்படாதே. நான் போய்த்
திரும்புவேன்" என்பதாய்ச்
சைகை காட்டி சுந்தராகத்
தொடர்ந்து நடக்கும் நம்
நடிகர் திலகத்தைப் பார்த்து
மனம் சொல்கிறது...
அய்யா..! உங்கள் பொது
வாழ்க்கைப் பாதையும் கூட ஆபத்தை நோக்கி நீங்கள்
போகும் இந்த மலைப்பாதை
போலத்தானே? உமாவின்
கூவலைக் கேட்டு பாதிப்
பயணத்தோடு திரும்பி வந்து பரிசை வாங்கிக் கொள்ளாமல்
தொடர்ந்து தன் வழியில்
முயற்சித்து நடக்கும் சுந்தர்
போல, எந்த சலுகை மொழிக்கும் மயங்காது நீங்கள்
தன்மானப் பயணம் தொடர்ந்ததால்தானே சுந்தர்
போல் நீங்களும் மறக்க முடியாதவரானீர்கள்..?
--------------
மேலும், மேலும் தடுமாற்றம்
அதிகரித்து, தலை கிறுகிறுத்து,
ஆபத்தான பாறையின் விளிம்பில் தத்தளிக்கும்
சுந்தரைக் காணப் பொறுக்காத
உமா விரைந்து ஓடுகிறாள்.
உலகமே தலை கீழாய்ச் சுழல,
மிகப் பெரிய பள்ளத்தில் தவறி விழவிருந்தவனை உமா
தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுகிறாள்.
காப்பாற்றுவதற்காக ஒடி வந்த
பதற்றத்தை விட, தன்னால்
ஒரு நல்ல உயிர் போகவிருந்ததே எனும் குற்ற
உணர்வு அவளுக்கு.
உமா,வருந்தி அவனிடம்
மன்னிப்புக் கோருகிறாள்.
சுந்தர் மனம் திறக்கிறான்.
உயரமென்றால் பயப்படுவது
ஏனென்று விளக்குகிறான்.
நிறைமாத கர்ப்பிணியாக
இருந்த தன் அன்னையிடம்,
பரண் மேலிருந்த லட்டு வேண்டுமென்று அடம் பிடிக்க,
மகனுக்காக, சிரமம் பாராத
அன்னை ஏணியில் ஏறி பரண்
மேலிருக்கும் இனிப்பை எடுக்க
முனைய, ஏணி வழுக்கி விட்டு
"சுந்தர்" எனும் அலறலோடு
அவள் கீழே விழுந்து உயிர்
விட்ட கண்ணீர்ச் சரித்திரத்தை
சுருக்கமாகப் பேசுகிறான்.
இந்தக் காட்சி, எனக்கு மிகப்
பெரும் வியப்பு.
நடிகர் திலகம்,பத்மினியிடம்
சொல்வது மட்டுமே. அந்த
சுந்தருக்கு ஒரு அம்மா இருந்தது, அதற்கு முன்
காட்டப்படவில்லை.
"நான் சின்னப் புள்ளையா
இருந்தப்ப..." என்று நடிகர்
திலகம் துவங்கியவுடன்..
தடிமனான வெள்ளை நிற
வட்டங்களாய் திரை முழுக்க
வியாபித்து "ஃப்ளாஷ் பேக்"
எதுவும் காட்டப்படவில்லை.
அவர் உணர்வுப் பொங்கப்
பேசும் பாங்கிலேயே, ஒரு
நிறைமாத கர்ப்பிணி ஏணியில்
இருந்து தவறி விழுந்து இறந்து
விடுவது காட்சிப்படுத்தப்படுகிறது.
அதிலும், அவர் "அப்ப அவங்க
நிறைமாத கர்ப்பிணி" என்று
சொல்லும் போது அவர் குரலில்
கொண்டு வரும் உருக்கம்...
"ஏணி வழுக்கி விட்டுடுச்சு"
எனும் போது குரலில் காட்டும்
அழுகை கலந்த தழுதழுப்பு...
"சுந்தர்ங்கிற சத்தத்தோட கீழே
விழுந்தாங்க" எனும் போது
தன் நினைவுகளில் ஆழப்
பதிந்து விட்ட அந்த அலறல்
சத்தத்தை இன்னும் மறக்கவில்லை என்பதான
அறிவிப்பு...
-"இருமல் தாத்தா" என்று
எழுதப்பட்ட சார்த்திய அறைக்
கதவுகளைக் காட்டி, பலத்த
இருமல் சத்தத்தை ஒலிக்கச்
செய்ததன் மூலமாக, ஒரு
முடியாத கிழவர் அந்த அறைக்குள் இருப்பதாய்
இயக்குநர் சிகரம் 'எதிர் நீச்சலில்' நம்ப வைத்ததை
வியந்து, வியந்து பேசினோமே?
காட்டப்படாத ஒரு அம்மாவை
நாலே வார்த்தைகள் பேசி
நமக்குக் காட்சிப்படுத்திய
நடிகர் திலகத்தை எப்படி
வியக்கப் போகிறோம்?
எப்படி கொண்டாடப் போகிறோம்?
(...தொடரும்...)
'பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்)
http://i812.photobucket.com/albums/z...ps36911d5b.jpg
'பரதேசி' (தெலுங்கு)
வெளி வந்த நாள்: 14.01.1953
'பூங்கோதை'(தமிழ்)
http://www.iqlikmovies.com/modules/a...7_07_35_49.jpg
வெளி வந்த நாள்: 31.01.1953
உரையாடல் - சக்தி கிருஷ்ணசாமி
இசை: ஆதிநாராயண ராவ்
ஒளிப்பதிவு: கமால் கோஷ்
தயாரிப்பு: அஞ்சலி பிக்சர்ஸ் கம்பைன்ஸ் (நடிகை அஞ்சலி தேவி மாறும் அவர் கணவர் ஆதிநாராயண ராவ்)
இயக்கம்: எல்.வி. பிரசாத்
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், 'அக்கினேனி' நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி, எஸ்.வி.ரங்காராவ், பண்டரி பாய், வசந்தா, ரேலங்கி...
கதை:
http://www.thehindu.com/multimedia/d...v_1654969g.jpg
சந்த்ரம் (நாகேஸ்வரராவ்) ஓர் இளைஞன். ஏழையும் கூட. தன் தந்தையை விபத்தில் பறி கொடுக்கிறான். வறுமையில் வாடுகிறான். அவனுடைய நண்பன் ரகு (ஜனார்த்தன்) திடீரென மாரடைப்பால் மரணம் எய்துகிறான். இறந்த ரகுவிற்கு சுசீலா (பண்டரிபாய்) என்ற மனைவியும் மோகன் என்ற சிறு வயது மகனும் உண்டு. நண்பன் ரகு இறந்ததால் அவன் மனைவி, மகன் இருவரையும் தன் பொறுப்பில் வைத்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் சந்தத்ம். அதனால் கடுமையாக பணிபுரிந்து அதிக மணி நேரங்கள் உழைத்து நண்பனின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். இதனால் அவன் உடல் நிலை சீர்கெடுகிறது. அவன் உடல்நிலையைப் பரிசோதிக்கும் மருத்துவர் சந்தரமை ஒரு நல்ல மலைப் பிரதேசத்திற்கு சென்று சில காலம் அவனை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்துகிறார்.
சந்திரமும் மருத்துவர் அறிவுரையின்படி சீதகிரி என்னும் அழகிய மலைப் பிரதேசத்திற்கு ஓய்வெடுக்க செல்கிறான். அங்கு பூக்கள் விற்கும் லக்ஷ்மி (அஞ்சலிதேவி) என்ற பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அங்கிருக்கும் ஒரு கோவிலில் வைத்து அவளை திருமணமும் செய்து கொள்கிறான். சந்தரமுக்கு சொந்த ஊரிலிருந்து வேலை நிமித்தம் ஒரு அவசர அழைப்பு வருவதால் அவன் லஷ்மியிடம் சொல்லாமல் ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சந்த்ரம் தங்கியிருந்த ஓட்டலில் லஷ்மி வந்து அவனைப் பற்றி விசாரிக்கையில் சந்த்ரம் அங்கில்லை என்பது தெரிகிறது. லஷ்மி இதனால் அதிர்ச்சியடைகிறாள். சந்த்ரம் தன்னை ஏமாற்றி விட்டானோ என்று பரிதவிக்கிறாள்.
லஷ்மி இதனிடையே கர்ப்பமாகிறாள். இனியும் விஷயத்தை மறைக்க முடியாது என்று லஷ்மி தன் தந்தை ரங்கடுவிடம் தான் சந்த்ரமை திருமணம் செய்த விஷயத்தையும், அதனால் தான் கர்ப்பமுற்றிருக்கும் நிலைமையையும் சொல்லி சந்திரனை தேடிக் கண்டு பிடித்து வரும்படி மன்றாடுகிறாள். சந்த்ரமைத் தேடி அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் மலைக் கிராமத்திற்கு திரும்பும் ரங்கடு தன மகள் லஷ்மியின் நிலைமையால் ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகி அவமானம் தாங்காமல் தற்கொலை புரிந்து கொள்கிறான்.
இதற்கிடையில் லஷ்மியை தன்னுடன் அழைத்து செல்ல மறுபடி சீதகிரிக்கு வரும் சந்த்ரம் லஷ்மியின் வீடு தீப்பற்றி எரிந்து போய் விட்டதாகவும், அதில் சிக்கி லஷ்மி உயிரை விட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டுத் துடித்துப் போகிறான், சோகத்துடன் மறுபடி சொந்த ஊருக்கே திரும்புகிறான்.
ஆனால் தந்தையை இழந்த லஷ்மி தீ விபத்திலிருந்து தப்பி சந்த்ரம் மூலம் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு தாரா( வசந்தா) எனப் பெயரிட்டு அவளை மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்க்கிறாள்.
வருடங்கள் உருண்டோட சந்த்ரம் வளர்க்கும் நண்பனின் மகன் ஆனந்த் (சிவாஜி கணேசன்) இளைஞனாகிறான். ஒரு வேலையாக சீதகிரிக்கு வரும் சந்தரன் அங்கு லஷ்மியின் மகள் தாராவைப் பார்த்து காதல் கொள்கிறான். தன் வாழ்க்கை சந்த்ரமால் வீணாகப் போனதாக நினைத்து வருந்தும் லஷ்மி தன் மகள் வாழ்க்கையும் தன்னைப் போல ஆகிவிடக் கூடாதே என்று கவலை கொள்கிறாள். தாரா ஆனந்ததைக் காதலிப்பதைத் தடுத்து எதிர்க்கிறாள். அவனிடமிருந்தும் தாராவைப் பிரிக்க நினைக்கிறாள். இதற்கிடையில் சந்த்ரமும் சீதகிரிக்கு திரும்ப வருகிறான்.
சந்த்ரம் தன் மனைவி லஷ்மியை சந்தித்தானா?
ஆனந்த், தாராவின் காதல் வெற்றி பெற்றதா?
சந்தர்மும் லஷ்மியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?
போன்ற கேள்விகளுக்கு சில திருப்பங்களுடன் கூடிய கிளைமாஸ் பதில் சொல்லுகிறது.
'பரதேசி' மற்றும் 'பூங்கோதை' படங்கள் பற்றிய சில சுவையான விசேஷ தகவல்கள்
1. நடிகர் திலகத்தின் முதல் நேரடித் தெலுங்குப் படம் இது.
2. தெலுங்குப் படவுலகின் முடிசூடா நாயகர் 'அக்கினேனி' நாகேஸ்வரராவ் (ANR )அவர்களுடன் நடிகர் திலகம் இணைந்த முதல் படம் இது.
3. பிரபல இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் அவர்கள், அஞ்சலி தேவி இவர்களுடன் சிவாஜி இணைந்த முதல் படம்.
4.' பராசக்தி' படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் புதுமையான நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து புளோரிலிருந்த நடிகை அஞ்சலி தேவி தான் நடிப்பதை நிறுத்திவிட்டு சிவாஜி நடிப்பதைப் பார்க்க 'பராசக்தி' ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறார்.
5. அப்போதே தெலுங்கு, மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் மிகப் பிரபலமாகி விட்ட நடிகை அஞ்சலிதேவி. (சிவாஜிக்கு மிக சீனியர்) பிரபல மியூசிக் டைரக்டர் ஆதிநாராயண ராவ் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு 'அஞ்சலி பிக்சர்ஸ்' என்ற சொந்த சினிமாத் தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து 'பரதேசி' படத்தை தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்க முடிவு செய்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் என்று முடிவாயிற்று. 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு தமிழில் 'பூங்கோதை' என்று பெயர் வைக்கப்பட்டது. நாகேஸ்வரராவ் வளர்ப்பு மகனாக வரும் ஆனந்த் கதாபாத்திரத்திற்கு சிவாஜி என்ற அந்த புதுப் பையன் நன்கு பொருந்துவார் என்று அஞ்சலிதேவி சிவாஜியின் 'பராசக்தி' படத்தின் நடிப்பைப் பார்த்து முடிவெடுத்தார். சிவாஜியை தனியே அழைத்து 'பூங்கோதை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். முதல் தொகையாக ஒரு நல்ல தொகையைக் கொடுத்து சிவாஜியை மகிழ்வித்தார் அஞ்சலி தேவி.
http://i872.photobucket.com/albums/a...psaa331c5f.jpg
(நடிகர் திலகம்.காம், மற்றும் திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)
6. சிவாஜியும் அற்புதமாக 'பூங்கோதை' படத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்கிடையில் 'பரதேசி' தெலுங்குப் படத்திற்காக அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு தெலுங்கு நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரின் நடிப்பு எல்.வி.பிரசாத்திற்கும், அஞ்சலி தேவிக்கும் பிடிக்காமல் போனதால் தெலுங்கிலும் சிவாஜியே செய்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலி தேவி சிவாஜியைக் கேட்க சிவாஜி சற்று தயங்கினார். "நான் நடிக்கப் போகும் பாத்திரத்திற்கு நீங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கும் அந்த தெலுங்கு நடிகரை எனக்காக நீக்கினால் அவர் வருத்தப் படுவாரே" என்று சிவாஜி அஞ்சலி தேவியிடம் சொல்ல, சிவாஜியின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்ட அஞ்சலிதேவி அந்த தெலுங்கு நடிகரின் மனம் புண்படாத வகையில் அவரிடம் பேசி, அவரை சமாதானப் படுத்தி, அவருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து, அவரை நீக்கி, பின் சிவாஜியை 'பரதேசி'யில் 'புக்' செய்தார்.
7. அதனால்' பரதேசி' தெலுங்கு, அதன் தமிழாக்கம் 'பூங்கோதை' இரண்டு மொழிப் படங்களிலும் சிவாஜியே திறம்பட நடித்தார். சிவாஜி தெலுங்கில் வசனங்களை அருமையாக மனனம் செய்து பிரமாதமாக தெலுங்கை உச்சரித்து 'ஆனந்த்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
8. பின்னாட்களில் சிவாஜி அவர்கள் தமிழ்த் திரையலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் (அதாவது தமிழ்த் திரைப்படத் தொழிலின் மொத்த வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரம் இந்தக் காலக் கட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜியை வைத்தே நடந்தது) அஞ்சலி தேவிக்கு வயதாகி விட்டது. 1973 ஆம் ஆண்டு அஞ்சலி தேவி நாகேஸ்வரராவ் அவர்களை வைத்து' பக்த துக்காராம்' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதில் மிக முக்கியமாக மகாரஷ்டிர 'வீர சத்ரபதி சிவாஜி' வேடம் ஒன்று முக்கியமான பாத்திரமாக, படத்தை முடித்து வைக்கும் பாத்திரமாக வரும். அந்த 'வீர சத்ரபதி சிவாஜி' பாத்திரத்திற்கு நம் சிவாஜிதான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்த அஞ்சலிதேவி அந்தப் பாத்திரத்தில் நடிக்க சிவாஜியை அணுகினார். சிவாஜி அவர்களும் தனக்கு ஆரம்ப காலங்களில் அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை படங்களில் சான்ஸ் கொடுத்து உதவி செய்ததை மறக்காமல் மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் 'சத்ரபதி சிவாஜி' வேடத்தில் நடித்துத் தர மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். 'பக்த துக்காராம்' படத்தில் ஒரு கால் மணி நேரமே வரும் அந்த வீர சிவாஜி பாத்திரத்தில் 'சத்ரபதி சிவாஜி'யாகவே நடிகர் திலகம் வாழ்ந்து காட்டி இன்றளவும் அந்த பாத்திரத்தைப் பற்றிப் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிவாஜி அவர்கள் அஞ்சலிதேவியிடம் நன்றி உணர்ச்சியின் காரணமாக ஒரு பைசா கூட வாங்க வில்லை என்பது இன்னோர் செய்தி. 'பக்த துக்காராம்' ஆந்திராவில் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது.
நடிகர் திலகம் அதன் பிறகு முதல் டெலிவிஷன் தொடராக பம்பாய் தூர்தர்ஷனுக்கு 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகத்தை நடித்துக் கொடுத்தார். அப்போது அஞ்சலிதேவி தான் தயாரித்த' பக்த துக்காராம்' படத்தில் வீர சிவாஜியாக நடிகர் திலகம் அணிந்த உடைகளே டெலிவிஷன் நாடகத்திற்கும் பயன்படுத்தப்பட்டன. அஞ்சலிதேவி சிவாஜி அவர்கள் மேல் கொண்ட பேரன்பினால் வீர சிவாஜி உடைகளை டெலிவிஷன் நாடகத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிக்கு தந்து உதவினார்.
8.1951 -இல் இந்தியில் வெளி வந்த 'ராஜா ராணி' படத்தின் உரிமையை வாங்கி அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை திரைப்படங்களைத் தயாரித்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் இந்திப் படத்தின் முழுக் கதையையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி சினிமாக்களுக்குத் தக்கபடி கதையை மாற்றி பின் இயக்கம் செய்தார்.
9. நடிகர் திலகத்திற்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் அப்போது ஓரளவிற்கு பிரபலமாய் இருந்த நடிகை வசந்தா 'தாரா' பாத்திரத்தில் நடித்தார்.
10. நடிகர் திலகம் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கத்தில் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அந்தமான் காதலி' திரைப்படம் பரதேசி மற்றும் பூங்கோதை திரைப் படங்களைத் தழுவி எடுக்கப் பட்டதாகும். தெலுங்கில் நாகேஸ்வரராவ் ஏற்ற பாத்திரத்தை அந்தமான் காதலியில் நடிகர் திலகமும், அஞ்சலிதேவி பாத்திரத்தை நடிகை சுஜாதாவும், நடிகர் திலகத்தின் ஆனந்த் பாத்திரத்தை தெலுங்கு குணச்சித்திர நடிகர் சந்திரமோகனும், தாரா பாத்திரத்தை நடிகை கவிதாவும், ரங்குடு பாத்திரத்தை நடிகர் செந்தாமரையும் சிறு சிறு பாத்திர மாறுதல்களுடன் ஏற்று நடித்திருந்தனர்.
11. பரதேசி, பூங்கோதை இரு படங்களும் சிவாஜி அவர்களின் படங்களில் மிக மிக அபூர்வமான படங்கள். இப்படங்களை பெரும்பாலோனோர் பார்த்திருப்பதே அரிது. இப்படங்களின் வீடியோ சிடிக்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன். நானும் இப்படத்தைப் பார்த்ததில்லை. பல்வேறு பத்திரிக்கை செய்திகள், ஊடகங்கள், வீடியோ பேட்டிகள் உதவியில்தான் இக்கட்டுரையை வடித்துள்ளேன். அதனால்தான் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அப்படி இந்தப் படம் பார்க்கும் அதிர்ஷ்டம் நேர்ந்தால் (நிச்சயம் நிகழும்) இப்படத்தில் நடிகர் திலகம் அவர்களின் பங்களிப்பைப் பற்றி அவசியம் எழுதுகிறேன்.
12. தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக ஸ்லோ மோஷன் காட்சி அறிமுகமானது இந்தப் படத்தில்தான். சாகுந்தலை நாட்டிய நாடகக் காட்சியில் ஸ்லோ மோஷன் காட்சி காண்பிக்கப் பட்டதாம். பிரபல இயக்குனர் சாந்தாராம், அவருடைய ராஜ்கமல் கலாமந்திர் சார்பாக ஸ்லோ மோஷன் காட்சிகளுக்காகவே வெளிநாட்டிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்ட சிறப்புக் காமிரா தான் இந்த இரு படங்களுக்காக வாடகைக்கு வாங்கப்பட்டு உபயோகிக்கப் படுத்தப்பட்டதாம். (நன்றி: தி இந்து)
13. இயற்கை சூழல்கள் அதிகம் தேவைப்பட்ட இந்த படங்களுக்கு மொத்தம் நான்கு ஆர்ட் டைரக்டர்கள் பணி புரிந்தனராம். (T.V.S.ஷர்மா, வாலி, தோட்டா வெங்கடேஸ்வரா, ஏ.கே சேகர் என்ற 4 ஆர்ட் டைரக்டர்கள்). இயற்கை எழில் சார்ந்த மலைப் பிரதேசங்களிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
13. பிரபல ஒளிப்பதிவாளர் கமால் கோஷ் அவர்களின் உதவியாளராக இருந்தவர்தான் பிரபல ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் அவர்கள். இவரிடம் தான் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள் நடிகர் திலகத்தின் கண்களைப் பார்த்து இவர் மிகச் சிறந்த நடிகராக வருவார் என தீர்க்கதரிசனமாக கணித்தாராம்
14. தன்னை முதன் முதல் ஆதரித்து வாய்ப்பு கொடுத்ததால் அஞ்சலி தேவி அவர்களை சிவாஜி அவர்கள் 'பாஸ்... பாஸ்' என்று தான் அழைப்பார். அவ்வளவு நன்றிப் பற்று நடிகர் திலகத்திடம் இருந்தது.
15. இந்தப் படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதுதான் சிவாஜி அவர்களின் திருமணமும் நடந்தது. ஒரு ஆறு மாத காலம் படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டு அஞ்சலிதேவி சிவாஜி அவர்களை திருமணத்திற்கு அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து வரும் போது சிவாஜி நன்றாக சதை போட்டிருந்தார். அதற்கு நாகேஸ்வரராவ் "என்ன சிவாஜி! மாமனார் வீட்டு சாப்பாடு பலமா! நல்லா சதை போட்டுட்டு வந்துட்டியே" என்று ஜோக் அடித்து சிரித்தாராம். அது முதற்கொண்டு சிவாஜி அவர்களின் குடும்பத்தாரோடு நெருக்கமாக இருந்து இருந்திருக்கிறார் அஞ்சலிதேவி.
16. நாகேஸ்வரராவ் இடைவேளை வரை இளவயது சந்த்ரமாகவும், இடைவேளைக்குப் பிறகு நடிகர் திலகத்துத் தந்தையாக வயதான தோற்றத்திலும் முதன் முதலாக நடித்தார். அப்போது அவரும் இளைஞர்தான். நாகேஸ்வரராவ் தந்தையாகவும், நடிகர் திலகம் மகனாகவும் நடிக்க நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா! இன்னொரு கொசுறு செய்தி என்னவென்றால் இதே நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனனுடன் நடிகர் திலகம் 'அக்னி புத்ருடு' என்ற தெலுங்குப் படத்தில் கை கோர்த்தார். அதனால் அப்பா, பிள்ளை இருவருடனும் நடித்த பெருமைக்குரியவராகிறார் நடிகர் திலகம்.
17. வயதான கெட்-அப்பில் நாகேஸ்வரராவ் அவர்களை போட்டோ செக்ஷனுக்காக புகைப்படம் எடுக்கும் போது குளோஸ்-அப் ஷாட்ஸ் சரிவரவில்லை. இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. மிகவும் இரக்கப்பட்டு பார்க்க வேண்டிய வயதான வேடம் ஆகையால் பல தடவை நாகேஸ்வரராவை மேக்-அப் மாற்றி மாற்றி திருப்தி வரும் வரை புகைப்படம் எடுத்தார் இயக்குனர் எல்வி.பிரசாத். நாகேஸ்வரராவும் மிக்க பொறுமையுடன் ஒத்துழைத்தார்.
http://www.iqlikmovies.com/modules/a...6A8-09DF90.jpg
18. 'நடிகர் திலகம்' அவர்கள் நாடகங்களில் நடித்து விட்டு பின் திரைப்படங்களுக்கு வந்தவர் ஆதலால் வந்த புதிதில் நாடகங்களில் உரக்க பேசுவது, எமோஷன் காட்சிகளில் நடிப்பது போன்றே இப்படங்களில் அவர் நடிக்க, இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்கள் "தம்பி...நாடகங்களில் காட்ட வேண்டிய அதிகப்படியான முக பாவங்கள், சத்தமான உச்சரிப்புக்கள் சினிமாவுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. நீ சினிமாவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்தால் போதும்" என்று நாடகங்களுக்கும், சினிமாவுக்கும் நடிப்பில் உள்ள வித்தியாசங்களை புரியவைத்து, ஒரு குரு போல நடிகர் திலகத்திற்கு சினிமா பற்றிய நடிப்பிலக்கணங்களை பற்றி சொல்லிக் கொடுத்தாராம். நடிகர் திலகமும் கற்பூரம் போல 'டக்'கென அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு, சினிமாவுக்கேற்றமாதிரி பிரமாதமாக நடித்து இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்களிடமே அதிகப் பட்சமான பாராட்டுக்களைப் பெற்றாராம். தொழிலை சரியாகக் கற்றுக் கொடுத்ததனால் 'நடிகர் திலகம்' திரு. எல்.வி.பிரசாத் அவர்களை கடைசி வரை மறக்காமல் "சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்து என்னை சினிமா நடிகனாக்கிய செதுக்கிய குரு" என்று குருபக்தியோடு குறிப்பிடுவதுண்டு.
இந்த இரு படங்களைப் பற்றி என்னால் இயன்றவரை திரட்டிய தகவல்களை அளித்துள்ளேன். இப்படங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
'பூங்கோதை' திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் டி.பி.ராமச்சந்தின் பாடிய அற்புதமான பாடல் ஒன்று மிகவும் புகழ் பெற்றதாகும்.
'நான் ஏன் வரவேண்டும் ஏதுக்காகவோ
யாரைக் காண்பதற்கோ
வான் நட்சத்திரம் முன் குயிலழைத்தாலும்
வையகம் தனிலே வருமோ
வலை கண்டும் மான் வீழ்ந்திடுமோ'
https://youtu.be/5dMdoM1PhRs
வாசு சார்
தங்கள் நெய்வேலியில் நிலைமை சகஜமாகி வருகிறதா.. மின்சாரம் நிலைமை சீராகி விட்டதா.
தங்கள் பகுதி மக்கள் அனைவரும் மழையின் பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
பரதேசி மற்றும் பூங்கோதை படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் என்பதே பலருக்கு தெரியாத விஷயம். அப்படி இருக்கும் போது இந்தப் படங்களைப் பற்றி இவ்வளவு விவரமாக தாங்கள் தந்துள்ளதை விட மேலும் யாராலும் தந்து விட முடியாது என்பதே என் கருத்து. இதற்கு மேல் என்ன விவரம் அளித்தாலும் அது "அதிக"மாகத்தான் இருக்கும்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி ராகவேந்திரன் சார்.
மழை, புயலில் அதிகம் பாதிக்கப்பட்டு நெய்வேலியில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. 5 நாட்களாக மின்சாரம், இணைய இணைப்பு, கேபிள் எதுவும் இல்லை. நேற்று ஓரளவு நிலைமை சீராகி இன்று மறுபடியும் மழை பிய்த்து உதற ஆரம்பித்து விட்டது. இணைய இணைப்பு கிடைத்த நேரத்தில் 'பூங்கோதை' பதிவை இட்டுவிட்டேன். இணைய இணைப்பு விட்டு விட்டு வருவதால் பதிவுகளை சரிவர இட முடியவில்லை.
நடிகர் திலகம் திரியில் அனைத்து நண்பர்களும் பங்களித்து சிறப்பித்து வருவதைப் பார்த்தால் துயரங்கள் மறைந்து விடுகின்றன. இணைப்பு சரியில்லாததால் அற்புதமான பதிவுகளுக்காக அனைவருக்கும் சேர்த்து என்னுடைய பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசு சார்
இயற்கை இடர்ப்பாடுகள் குறைந்து, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
தங்களுடைய பூங்கோதை படத்தைப் பற்றிய பதிவினைப் படித்து விட்டு அருமை நண்பர் பெரியவர் தூத்துக்குடி நடராஜன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை மிகவும் பாராட்டியுள்ளார். பூங்கோதை படத்தை அவர் பார்த்திருக்கிறாராம். அஞ்சலி தேவியின் தந்தையாக முக்கமாலா நடித்திருப்பார். தந்தை மரணமடையும் காட்சியில் அஞ்சலி தேவியின் மிகச் சிறந்த நடிப்பு, இன்று வரை வேறு எந்த நடிகையாலும் செய்ய முடியாத அளவிற்கு உள்ளது எனக் கூறினார். அந்தக் காட்சியில் கீழே விழுந்து அப்படியே அமர்ந்தவாறே பின்னால் சென்றவாறு தந்தை இறந்த துக்கத்தில் கதறி யழும் காட்சியில் ஈடிணையற்ற நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார் எனக் கூறினார். தலைவரைப் பொறுத்த மட்டில் மிகவும் இளமையாக வசீகரமான தோற்றத்தில் நடித்திருப்பார் எனக் கூறினார்.
தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு உளமார்ந்த நன்றி.
இன்று 'குழந்தைகள் தினம்' முன்னிட்டு நான் முன்னம் அளித்திருந்த, தலைவர் விஞ்ஞானி வேடத்தில் அசத்தியிருந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' பட ஆய்வின் மீள்பதிவு.
http://www.koodal.com/contents_kooda...y-jpg-1193.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி
நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.
கதை: தாதாமிராசி
வசனம்: விந்தன்
பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்
இசை: டி .ஜி.லிங்கப்பா.
ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.
ஒளிப்பதிவு: M .கர்ணன்.
ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)
http://i1087.photobucket.com/albums/...ps7e39311e.jpg
இந்த 'குழந்தைகள் தின'த்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.
B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், ('குழந்தைகள் கண்ட குடியரசு') கன்னடம், ('மக்கள ராஜ்யா' 1960) தெலுங்கு, ('பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்' 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.
மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும், தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபகசக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.
சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் 'நடிகர் திலகம்' சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.
http://i1087.photobucket.com/albums/...ps08985ac6.jpg
தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடுவகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.
http://i1087.photobucket.com/albums/...ps652fe1e0.jpg
வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).
இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல... நம்மையும் மிரள வைக்கிறதே... எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.
http://i1087.photobucket.com/albums/...ps08985ac6.jpg
"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.
வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் 'நடிகர் திலகம்' என்கிறீர்களா!)
மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.
அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்
"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)
http://i1087.photobucket.com/albums/...ps38ae55d5.jpg
பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.
கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.
என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.
இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)
அன்புடன்,
வாசுதேவன்.
Mr Neyveliar
Meel pathivu endralum marakka mudiyatha pathivu. Even there are lot of thalaivar movies which deserves
suitable attention like Oorum Uravum,Raja Mariyadhai where the performance of NT's simply outstanding.
Do write the above movies in your unique style for the benefit of millions of NT's fans.
வாசு சார்,
தங்களது "பரதேசி-பூங்கோதை" திரைப்படப் பதிவு அருமை. தெரியாத பல தகவல்கள். நன்றி.
வாசு சார்
பரதேசி-பூங்கோதை அபூர்வ தகவல்கள்
நடிகர்திலகத்திற்கு தந்தை நாகேஸ்வரராவ் என்பதும்,முதல்ஸ்லோமோஷன் படப்பிடிப்பு போன்ற தகவல்களும்
(பல பத்திரிக்கைககள் ,ரசிகர்கள் உட்பட வசந்தமாளிகை தான் முதல் ஸ்லோமோஷன் படப்பிடிப்பு என்று கூற அறிந்திருக்கிறேன்) அருமையானவை.
இது வியக்கத்தகக்க தகவல்தான்.
குழந்தைகள் கண்ட குடியரசு மீள்பதிவு பிரமாதம்.படத்தின் திரைக்கதையில் கூட இவ்வளவு விவரங்கள் எழுதப்பட்டிருக்காது.
உங்கள் பாஷையிலேயே சொல்வதென்றால் "செம தூள்".
Dear Aathavan Ravi excellent writing.Carry on
தரிசனம்-1. இரு மலர்கள்.
--------------------------
தொடர்கிறது.
-------------
சில விஷயங்களை முதன்முறையாகப் பார்க்கிற
போது ஆச்சரியமாக இருக்கும்.
சுந்தரின் உயரப் பயத்திற்கான
சோகமான காரணத்தைத்
தெரிந்து கொள்ளும் போது
உமாவின் குறும்பு ததும்பும்
கண்களில் நிரம்பும் கண்ணீர்
அம்மாதிரி ஆச்சரியத்துக்கு
ஒரு எடுத்துக்காட்டு.
கோபதாபங்கள், குறும்பு மிகுந்த
விளையாட்டுகள் இவற்றை
எல்லாம் போட்டு மூடி, சுந்தரும்,உமாவும் போர்த்தி வைத்திருந்த காதலை, அந்த
மலையுச்சியில் வீசிய சம்பவக்
காற்று போர்வையைக் கலைத்து அம்பலப்படுத்துகிறது.
மரணப் பாறையில் அழகாய்
ஒரு காதல் பிறக்கிறது.
தன்னுயிரைக் காப்பாற்றிய
உமாவிற்கு நன்றி சொல்லும்
சுந்தர், காதல் பரிசை இழந்து
விட விரும்பாத தன் மன நிலையை வெளிப்படுத்தி
"இப்பவாவது இந்த மலரை
எனக்குக் குடுப்பியா?" என்று
கெஞ்சலாய்க் கேட்கவும்
தவறவில்லை.
"மலருக்குப் பதிலா என்னையே உங்களுக்குத் தர்றேன்"-எனும் உமாவின் பதில்.. மானசீகமாய் சுந்தர்
பருகும் அமிர்தத்தின் முதல்
துளி.
--------------
பருகிச் சுவை கண்ட சுந்தருக்கு
அடுத்த துளி அமுதம் வழங்க
கொடைக்கானலில் மற்றுமொரு இரவு மலர்கிறது.
நடுக்கும் குளிரில் நனைந்தபடி
உலாத்தும் சுந்தரை, தூக்கம்
பிடிக்காமல் இரவுடையில்
நடந்து வரும் உமா பார்க்கிறாள்.
குளிரின் உடல் நடுக்கம்.காதல் தந்த மன நடுக்கம். சுந்தர் கை
பிசைந்து தவிக்கிறான். தயங்கி
ஓரக் கண்ணால் உமாவைப்
பார்க்கிறான். தயக்கம் உடைத்து மெல்ல சுந்தரின்
அருகில் வந்து நிற்கிறாள்
உமா.
அங்கே நிலவும் அசாதாரண
மௌனத்தை சுந்தரே கலைக்கிறான்..
"குளிருதுல்ல..?"
"ஆமா."
"நீ தூங்கல?"
"இல்ல."
"ஏன்?"
"தெரியல."
-தூங்காததற்கான காரணம்
தெரியவில்லை எனச் சொல்லும் உமா, அதே கேள்வியை சுந்தரை நோக்கித்
திருப்புகிறாள்.
"நீங்க தூங்கல?"
"இல்ல."
"ஏன்?"
"தெரியலேன்னு நீ சொன்னே.
நான் அப்படி சொல்லப் போறதில்ல. கண்ணைத்
திறந்தாலும், மூடினாலும்
நீதான் வந்து நிக்கிறே. உன்
நினைப்பு என்னை வாட்டுது.
இதயத்துக்குள்ள ஏற்பட்டிருக்கிற ரணத்தை
மயிலிறகாலே தடவிக் குடுக்கிற மாதிரி... ஒரு இன்பமான வேதனை..!"
என்னய்யா இது?
குரலுமா நடிக்கும்..?
இரவின் மௌனத்தோடு
ஈஷிக் கொள்கிறதாய்..
"சத்தியமாச் சொல்றேன்,
துணிஞ்சு சொல்றேன்" போன்ற
மனிதனின் மன உறுதியை
ஆணித்தரமாய் வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கூட...
சாந்தமாய்..
இரைச்சலின்றி..
அதிர்வின்றி..
அட.. குரலுமா நடிக்கும்?
------------
எல்லோரும் உறங்கிப் போன
அந்த இரவில்தான் அவர்களது
அன்பின் நெருக்கம் விழித்துக்
கொண்டது.
அந்த இரவுதான், உமாவின்
வாயாடி, கோபக்காரி உள்ளிட்ட
வேறு வேறு பொய்த் தோற்றங்கள் எல்லாம் பொய்.
அன்பே அறியாத அப்பாவியாய்
தான் வளர்ந்து விட்டதை இந்த
உலகத்திற்கு மறைப்பதற்காக
அவளே போட்டுக் கொண்ட
வேஷங்கள் அவை என்பதையும் உமா மூலமாகவே சுந்தருக்குப்
புரிய வைக்கிறது.
மெல்ல விலகி நடந்து கையசைத்து தன் அறைக்குச்
செல்லும் உமாவிற்கு கண்கள்
சிரிக்க விடை தரும் சுந்தரின்
உள்ளம் வெற்றிக் கூச்சல்
போடுகிறது...
"வெற்றி..! வெற்றி!
காதலே நீ வாழ்க.
நீடுழி வாழ்க."
-------------
பொருத்தமான நேரத்தில்
இடம் பெறும் ஒரு திரைப்படப்
பாடல் நமக்குத் தரும் மகிழ்வு
சொல்லிலடங்காதது.
"மன்னிக்க வேண்டுகிறேன்"
பொருத்தமான நேரத்தில்
மகிழ வைத்த பாட்டு. இன்னும்
மகிழ வைக்கிற பாட்டு. என்றும்
மகிழ வைக்கும் பாட்டு.
http://i1028.photobucket.com/albums/...ps0zvdsefv.jpg
அகன்று விரிந்த "அம்மாம் பெரிய" வானமும் தமக்குத்தான் என்பது போல்
சிறகடித்துப் பறக்கும் இரு
சந்தோஷப் பறவைகளாய்
நடிகர் திலகமும், நாட்டியப்
பேரொளியும் நம் ரசிப்பு
வானத்தையும் பெருமை
செய்கிறார்கள்.
" இந்த இருவரைப் போல இணைந்தால்தானா? ஏன்
நாங்கள் இணைந்தால் சந்தோஷம் இல்லையா உங்களுக்கு? " என்று சண்டைக்கு வருகிறார்கள்..
இதயம் வாழும் இன்னும்
இரண்டு பேர்கள்.
நம்மிடம் சண்டை போட
அவர்கள் உபயோகிக்கும்
ஆயுதங்கள்..?
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான காதலை
அழகாய் எடுத்துச் சொல்லும்
அருமையான பாட்டுக்குத்
தாளமமைத்த வாத்தியக் குச்சி
ஒருத்தரிடம்.
http://i1028.photobucket.com/albums/...psvjyiosmb.jpg
"மலர்கள் ஒன்று சேரும்.
மாலையாக மாறும்.
நெஞ்சினிக்க.. நினைவினிக்க
கண்கள் நூறு கதை கூறும்."
-மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும் புரிகிறாற்போல் காதல் பாட்டு
எழுதிய இன்னொருத்தர் கையில்...
மூடி திறந்த பேனா.
http://i1028.photobucket.com/albums/...ps6qltdt72.jpg
(...தொடரும்...)
வாசு சார் பூங்கோதை பதிவு அருமை.படம் பார்த்த உணாவு இருந்தது
http://www.mediafire.com/listen/3c0r...HANTPRAYER.MP3
ரங்கோன் ராதா திரைப்படத்தில் தலைவர் மந்திரம் உச்சரித்து பூஜை செய்யும் காட்சி ... ஆடியோவாக
http://g.ahan.in/tamil/Vasantha%20Ma...gai%20(15).jpg
இது இறந்து போன ராணிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடு இருக்கும் என் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதியல்ல சன்னிதி.
இந்த வரிகள் காதல் வேதமாய் அந்த காலத்தில் ஒவ்வொரு இளைஞன் மனதிலும் ஒலித்தது இன்றும் பசுமையாய் நினைவில் உள்ளது. வானொலியில் இந்த வரிகள் விவித்பாரதியில் இரவு 8.30 மணிக்கு தினமும் ஒலிக்கும் போது இதற்காகவே மற்ற வேலைகளை விட்டு விட்டு ரேடியோ அருகில் காத்திருந்ததெல்லாம் நினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகள்.
எண்ணற்ற இளைஞர்கள் மனதில் இன்றும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய காதல் வசனம் வசந்த மாளிகை படத்தில் இந்தக் காட்சியில் இடம் பெற்ற வசனமாகும். என்றும் சிரஞ்சீவியாக காதலர்கள் மனதில் நிலைத்திருக்கும் இந்த வசனம், அவர்களைத் தாண்டி அனைத்து மக்களிடமும் நெஞ்சில் நிலைத்து விட்டதே இதனுடைய பெருமைக்கு சான்று.
பாலமுருகனின் பேனாவில் காதல் மையை நிரப்பி எழுதினாரோ என ஒரு பத்திரிகை அந்தக் காலத்தில் எழுதியது. அது உண்மைதானோ என இன்றும் தோன்றுகிறது.
இதோ நாம் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ ..
ஒலி வடிவில்...
http://www.mediafire.com/download/t3...JIDIALOGUE.MP3
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
----------------
காதல் பாடி ஓய்ந்த அமைதியில், அகன்ற மலைப்
பிரதேச வெளியில், பொட்டிட்டு,
மலர் சார்த்தி கடவுளாக
வணங்கப்படும் ஒரு கல்லின்
முன் கண்மூடி, மனமுருகி
ஏதோ வேண்டி நிற்கிறாள்...
உமா.
அவள் பின்னாலேயே ஒடி வந்த
சுந்தர், அவள் நிற்கும் நிலை
கண்டு வியக்கிறான். கண்மூடி
நிற்கும் அவளின் காதின் அருகில் விரல்களால் சொடுக்கிட்டுச் சத்தமெழுப்பி
அவளது வேண்டுதல் கலைத்துக் கேட்கிறான்..
"கல்லுக்கு முன்னாடி நின்னு
என்ன பண்ணிக்கிட்டிருக்கே?"
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. கண்ணைத் திறந்து பாத்து இதைக் கல்லுன்னு சொன்னா கல்லுதான். கண்ணை மூடிக்கிட்டு இதைக் கடவுள்னு
நினைச்சா கடவுள்தான்."
-என்கிறாள் உமா.
அவள் பேசுவதை வியக்கும்
சுந்தர் "பெரிய பக்தை ஆயிட்டே
போலிருக்கே?" என்று கேலி
செய்கிறான்.
"வெட்டவெளியாயிருந்த உள்ளத்தை நீங்கதான் கோவிலாக்கினீங்க. அந்தக்
கோவில்ல உங்களை கடவுளா நினைச்சு எப்ப பூஜை செய்ய ஆரம்பிச்சேனோ..
அன்னிக்கே நான் உங்க பக்தையாயிட்டேன்."
-என்று உமா சொல்கிறாள்.
தொடர்ந்து வரும் வசனங்களும், காட்சிமைப்பும்,
இயக்கமும், இசையமைப்பும்,
நாட்டியப் பேரொளி துவக்கி
வைக்க நடிகர் திலகம் முடித்து
வைக்கும் அந்தக் காட்சிக்கான
நடிப்பின் பூரணத்துவமும்
நம் நெஞ்சோடு வாழ்பவை.
இன்னொன்று...
காதல் தரும் பேரின்பத்தைக்
கூட தாங்கிக் கொள்ள முடியாமல் பரிதவிக்கிற
ஒரு பெண்ணின் மனோநிலை
"இரு மலர்கள்" படத்திற்குப்
பிறகு வேறெந்தப் படத்திலும்
சொல்லப்படவில்லை என்றே
நினைக்கிறேன்.
"வேறெந்த நினைப்புமில்லாம
உங்க மனசில நான் மட்டுமே நிறைஞ்சிருக்கிற இந்த ஒரு
கணம் போதும்." -என்று அன்பு
தாங்காமல் கதறித் துடிக்கிற
உமாவிற்கு, உமாவாகவே
மாறி வசனம் எழுதியுள்ள
அய்யா திரு.ஆரூர்தாஸ்
போற்றுதலுக்குரியவர்.
"தில்லானா"வில் "மறைந்திருந்து" பாடலினூடே
தனித்தனியே புருவங்களை
ஏற்றி, இறக்கி, வளைத்து
வித்தை காட்டிய போது,
பப்பியம்மாவுக்காக ஆனந்தமாய்த் தட்டி ஒலி
எழுப்பிய கரங்கள்..
"இதோ.. இன்பத்தாலே துடிக்குதே..இந்த நரம்பெல்லாம்
அப்படியே அறுந்துடக் கூடாதா?"-என்று பரந்த
வெளியெங்கும் ஒடி,ஒடி
நடிக்கும் போது கும்பிடவே
செய்கின்றன.
காட்சியமைப்பின்படி, இதில்
பத்மினியம்மா ஏற்ற உமா
பாத்திரம்தான் மக்கள் மனதில்
பதியும் வாய்ப்பு அதிகம்.
அதிலும், தனக்கொரு பெரும்
பங்கை தட்டிச் செல்லும்
நம் நடிகர் திலகத்தின்
சாமர்த்தியம் வேறு எவருக்கும்
வராது.
பத்மினியம்மாவை கிண்டல்
செய்வதில் துவங்கும் அவரது
திறமை சாம்ராஜ்யம், பத்மினியம்மா உணர்ச்சிவசப்
பட்டு பேசப் பேச மாறும்
முகபாவங்களில் விரிந்து,
எதைக் கல்லென்றாரோ..
அதைக் கடவுளென்றுணர்ந்து,
அதன் மீதிருந்த குங்குமம்
எடுத்து பத்மினியம்மாவுக்கு
இட்டு, நம்மை யாரும்
பிரிப்பதற்கில்லை என்று
நெஞ்சு நிமிர்த்தும் போது
மேலும் பரவி நிலைக்கிறது.
--------------
சுந்தர் உறங்குகிறான்.
(அதாவது-
நடிகர் திலகம், சுந்தராக
உறங்குவது போல் நடிக்கிறார்.
அல்லது-
நடிப்பு அங்கே உறங்குகிறது.)
மெல்ல எழுந்து, உள்ளங்கை
இரண்டும் விரித்து முகத்துக்கு
நேரே வைத்துக் கொண்டு
"உமா" என்று செல்லமாய்
அழைக்கிறான்..சுந்தர்.
கற்பனையென்றாலும், அழைத்தது அன்பான காதலன்
என்பதால் அவன் உள்ளங்கையில் உடனே
தோன்றுகிறாள்..உமா.
அவளும்,அவனுமாய்க் கைகோர்த்து உல்லாசமாக
நடந்ததாக அவன் கண்ட
கனவை அவனது உள்ளங்கை
உமாவிடம் சொல்லிக்
கொண்டிருக்கையில்..
வீறிட்டு அலறுகிறது.. அலாரம்
வைத்த கடிகாரம். அலறும்
கடிகாரம் காலை ஏழு மணி
என அறிவிக்கிறது.
தொடர்ந்து வீறிடும் கடிகாரத்தை கட்டிலில் இருந்தபடியே சுந்தர் எட்டி
எடுக்க முனையும் போது, அது
தவறி கீழே விழ..
"சாந்தி" என்று கூவுகிறான்.
இரண்டாம் முறையாக "சாந்தி"
என்று கத்தும் போது, சார்த்தப்
பட்ட அறைக்கதவு திறந்து
உள்ளே நுழையும் பெண்
உருவத்தின் பெயர், புன்னகை
அரசி கே.ஆர்.விஜயா.
அந்த "சாந்தி" கதாபாத்திரத்தில்
புன்னகை அரசியைப் பார்க்கிற
போது, ஏதோ காபித்தூள்
இரவல் வாங்க கூச்சத்தோடு
நம் வீட்டுக்கு வரும் பக்கத்து
வீட்டுப் பெண் போல அத்தனை
யதார்த்தம்.
அத்தனை சீக்கிரம் தன்னை
எழுப்பக் காரணம் என்னவென்று விசாரிக்க,
அன்று சுந்தரின் அன்னையின்
தவசமென்று சொல்லப்படுகிறது.
வேகமாய் எழுந்து, குளிப்பதற்காக துண்டு, சோப்பு
இவற்றை எடுக்கப் போக..
ஏற்கனவே குளியலறையில்
அவையனைத்தையும் எடுத்து
வைத்திருப்பதாய் சொல்லும்
கே.ஆர்.விஜயாவை திரும்பிப்
பார்க்கும் நம் நடிகர் திலகத்தின்
ஒரே ஒரு பார்வை போதும்..
பல நூறு வார்த்தைகள் கொண்டு எழுதப்பட வேண்டிய
வசனத்தை ஓசையின்றிப்
பேசி விட.
(...தொடரும்...)
https://upload.wikimedia.org/wikiped...a_Krishnan.JPG
இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி. மறைவு.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட திரு கே.எஸ்.ஜி. எ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று இரவு 7.30 மணிக்கு இயற்கை எய்தி விட்டார்.
தினமலர் நாளிதழின் இணையப்பக்கத்திலிருந்து..http://cinema.dinamalar.com/tamil-ne...asses-away.htm
சம்பிரதாயத்திற்காக அல்லாமல், உண்மையிலேயே தமிழ்த்திரையுலகிற்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என பல்துறை வித்தகராயிருந்து கே.எஸ்.ஜி. அவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் இடையே இருந்த புரிந்துணர்வு, பீீம்சிங்-நடிகர் திலகம் நட்பிற்கும் புரிந்துணர்விற்கும் சற்றும் குறையாயததல்ல.
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்கள் பலவற்றைத் தந்துள்ளார் கே.எஸ்.ஜி.
அவரது மறைவிற்கு நமது உளமார்ந்த அஞ்சலியை செலுத்திக்கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது மறைவினால் ஏற்பட்டதுயரத்தைத் தாங்கும் வலிவை அவரது குடும்பத்தாருக்கு அளிக்க வேண்டியும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.
திரு கே.எஸ்.ஜி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய இயக்கத்தில் / எழுத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து சில பாடல்கள்.
உத்தம புத்திரன் படத்தில் கே.எஸ்.ஜி. எழுதிய உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே பாடல்..
https://www.youtube.com/watch?v=-luAPt44VL0
கே.எஸ்.ஜி.யின் பேனாவுக்கு உயிர் கொடுத்தவை நடிகர் திலகத்தின் நடிப்பில் வந்த படங்கள். அதிலும் குறிப்பாக படிக்காத மேதை தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தைப்பிடித்ததற்கு நடிகர் திலகத்தின், அந்த வசன உச்சரிப்பு. வெறும் அடுக்கு மொழி வசனங்களே டாமினேட் செய்த காலத்தில் தன் இயல்பான பிரயோகத்தினால் பேச்சு வழக்கு வசனங்களிலும் தன் நடிப்பின் மூலம் ஜீவன் அளித்தவர் நடிகர் திலகம். அந்த வகையில் முடியாது என்ற ஒரு வார்த்தைக்கு எத்தனை விதமான பரிமாணங்களைத் தர முடியும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் காட்டி இப்படத்திற்கு இமாலய அந்தஸ்தைத் தேடித் தந்தவர் நடிகர் திலகம். கே.எஸ்.ஜி. அவர்களும் நடிகர் திலகமும் இணைந்த படங்கள் ரசிகர்களுக்கு தெவிட்டாத விருந்தாய் அமைந்தன.
படிக்காத மேதை படத்தில் ரங்கனை வீட்டை விட்டுப்போ என முதலாளி அனுப்பும் அந்த புகழ் பெற்ற காட்சி இதோ நம் பார்வைக்கு.
https://www.youtube.com/watch?v=gC-Tm6xu0nI
http://i1028.photobucket.com/albums/...psrgz1gudl.jpg
எழுதினாலும், இயக்கினாலும்..
எளிமை என்கிற எல்லோருக்கும் பிரியமான
விஷயத்தை எப்போதும்
தன்னுடனே வைத்திருந்தவர்
அமரர் அய்யா கே.எஸ்.ஜி
அவர்கள்.
"கை கொடுத்த தெய்வத்தை"யும், "பேசும்
தெய்வத்தையும்" தேடித் தேடித்
தரிசித்துக் கொண்டிருந்த
எங்கள் தலைமுறையினருக்கு
"படிக்காத பண்ணையாரைப்"
பரிசளித்த பெருமகனார்.
ராகவேந்திரா சார் குறிப்பிட்டதைப் போல
நம் நடிகர் திலகத்திற்கும்,
அய்யா கே.எஸ்.ஜி அவர்களுக்குமான கனிந்த
நட்பை, அவர்களிருவரும் இணைந்த படங்கள் நமக்குத்
தந்த பரவசங்களே சொல்லும்.
அய்யா கே.எஸ்.ஜி அவர்களை
இழந்து துன்புறும் அத்தனை
உள்ளங்களிலும் இந்த துன்பம்
தாங்குகிற சக்தி படரட்டும்.
தூயவர்களாம் நம் நடிகர் திலகம்- அய்யா கே.எஸ்.ஜி
நட்பு, சொர்க்கத்திலும் தொடரட்டும்.
சவாலே சமாளி முழுப்பதிவு
சவாலே சமாளி முழுப்பதிவு:
ராஜவேலு:
எங்க தலை குனிய வச்சுட்டு நீ எப்பவும் நெஞ்சை நிமித்திட்டு நடப்பியே இப்ப ஏன் குனிஞ்ச தலை நிமிரவே இல்லையே ஏன்?
மாணிக்கம்:
உம் முகத்தை பாக்கவே கண் கூசுது.
ராஜவேலு:கூசத்தாண்டா செய்யும்?எம் முகத்தை மட்டுமல்லஇந்த ஊர் முகத்த பார்க்கவே உனக்கு கண் கூசத்தான் செய்யும். நல்லவனா இருந்தா இந்நேரம் அவமானம் தாங்காம நாக்க புடிங்கிக்கிட்டு செத்துருக்கனும்..
மாணிக்கம்:இதுல என்னடா அவமானம்?இதோ இடுப்புல இருக்கிற கதிர் அரிவாளைஎடுக்கக் கூட சக்தி இல்லாம ஒரு கையாலவயித்தைப் புடிச்சுக்கிட்டு இன்னொரு கையால மானத்தையும் மறைச்சுகிட்டு நின்னுகிட்டுஇருக்கே உன் முன்னாலே பட்டினிக்கூட்டம்,அவங்க வயித்துக்கு சேர வேண்டிய கஞ்சியை உன் சட்டையில் போட்டுகிட்டு விரைச்சுகிட்டு நிக்கிறியே இதுக்கு*
நீ தாண்டா அவமானப்படனும்.உன்னை எல்லாம் இன்னும் விட்டு வச்சுருக்கம்பாரு அதுக்கு நான் மட்டும் இந்த நாடே வெட்கப்படணும்.
ராஜவேலு:இதுக்கு அப்புறமும் உன் திமிறு அடங்கலே பாரு
மாணிக்கம்:இது அடங்கற திமிரு இல்லே அடக்கற திமிறு.
அய்யாக்கண்ணு:ஏண்டா செஞ்சே? எதுக்கு செஞ்சே?
மாணிக்கம்:நான் ஏன் செஞ்சேன்? எதுக்கு செஞ்சேன்னு அவங்கவங்க
மனசுக்குத் தெரியும்.
ராஜவேலு:எங்க மனசுக்கு தெரிஞ்சா பத்தாதுடா?இங்க கூடி இருக்கிற கூட்டத்துக்குநல்லா கேட்கிற மாதிரி சத்தம் போட்டு சொல்லு.
மாணிக்கம்:சொல்றண்டா. சொல்றேன்.
வயலை எரிச்ச பந்தத்தை அணைச்சு வச்சுறுக்கேன்.அத மறுபடியும் கொளுத்தி எடுத்துட்டு வந்துஎன்னை உயிரோடு கொளுத்திடுவேன்னு சொன்ன அத்தனை பயலுகளையும் எரிச்சு சாம்பலாக்கிட்டு அந்த சாம்பல் மேட்டுல நின்னுகிட்டு சத்தம் போட்டு சொல்றண்டா. சத்தம் போட்டு சொல்றேன்.
மாணிக்கம்:சின்ன வயசுல இருந்து என் பையனை நான் தொட்டதே இல்லேன்னுபெருமையா பேசிக்குவீங்களே!உங்க ஆத்திரம் தீரும் வரை அடிங்க. அடிங்க.ஏன்னா என்னை பழி வாங்கணும்ங்கிற வெறி அவங்கள விட உங்களுக்குத்தானே அதிகம்.வாங்க உங்க எஐமான விசுவாசத்த காட்ட நல்ல. சந்தர்ப்பம்.அடிங்க. நல்லா அடிங்க
மாணிக்கத்தின் வார்த்தைகளால் தாக்கப்பட்டு அய்யாக்கண்ணு தடுமாற ,
அதற்குப்பினநடக்கும் சில நிகழ்வுகள் உண்மையைச்சொல்லி சுபமாக்குகிறது.

மேலே சொன்ன காட்சிதான் க்ளைமாக்ஸ் என்றிருந்தாலும்
படத்திலே வரும் பல காட்சிகள் அதைவிட பிரமாதமாக அமைந்திருக்கும்.
நடிகர்திலகம் வரும் முதல்காட்சி வசனங்களேஏகஅமர்க்கள
மாயிருக்கும்.வேட்டி*
சட்டை யில்ரெண்டு மாட்டையும் பிடித்துக்கொண்டு அவர் அறிமுகமாகும் காட்சி அருமையிலும் அருமை.இந்த ஒரு போட்டோ சொல்லுமே அதன் அழகை.

அடக்கமா கேட்டா மரியாதையா பதில் வரும்.இகழ்ச்சியா கேட்டா
அதுக்கேத்தமாதிரி பதில். மேல கைய வைச்சா பதிலுக்கு பதில்.எல்லாருக்கும் வேலைக்கேத்த கூலி கிடைக்கணும்.ஏழையோ,
பணக்காரனோ மனுஷனுக்குண்டான மதிப்பு குடுக்கணும். இதுதான் மாணிக்கம் கேரக்டர்.
அதிரடி அறிமுகம்:
வயலில் வேற்று ஆட்களை வைத்து*
வேலை வாங்க நம்பியார் முன்னே வர
"வயலில் காலை வைத்தால் காலை ஒடைச்சுருவேன்"னு சத்தம் மட்டும் வரும்.யார்ராராதுன்னு எல்லோரும் பார்க்க, நெற்கதிர்களின் பின்னே இருந்து வந்து நடிகர்திலகம் காட்சி தரும் காட்சி கண் கொள்ளா காட்சி.
முதலில் தொழிலாளர்களுக்கு பரிஞ்சு*
பணிவாய் விவாதம் செய்ய அதற்கு நம்பியார் "உங்கப்பன் கொடுப்பான்"
மரியாதை குறைவாய் பேச ஆரம்பிக்க,சட்டென்று பணிவு மறைந்து பதில் மரியாதைக்கு தாவி,
பதிலுக்கு பதில் வசனங்களலால்*
அந்த அறிமுக காட்சி முழுவதும் கலகலப்பாக செல்லும்.கதிர் அறுப்பது.,கதிர் அடிப்பது என்று அவர் டக் டக்குன்னு இயல்பாக வயலில் இறங்கி வேலை செய்யும் நடிப்பு அசல் கிராமத்து விவசாயியை விட அழகு+எதார்த்தம்.
நடிகர்திலகம் வரும் அடுத்த காட்சி:
காந்திமதி, நடிகர்திலகம் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி.எவ்வளவு இயல்பாக இருக்கும்.
விஜயகுமாரி எங்கே என்று விசாரிக்க ,
முத்துராமனை பார்க்க சென்றிருப்பதாக காந்திமதி சொல்ல நொடியில் சடாரென்று கோபப்படுவதும்,விஜயகுமாரி வந்தபின்பு விசாரிக்கையில் ஆத்திரப் படுவதும் பின்*
ஆதங்கப்படுவதுமாய் மாறி மாறி உணர்ச்சி வசப்படுவதுமாயும்,தடங்கலின்றி பெய்யும் மழையாய் வசனங்கள்
பொழிந்து மழை நின்றது போல் சற்று ஆசுவாசப்பட மீண்டும் வி எஸ் ராகவன் வர அதே மழை தொடர, என்று காட்சிகள் ஜிவ்வென்று சுறுசுறுப்பாய் செல்லும்.பெரிய ஆக்ஷன் படங்களில் கூட சில சமயங்களில் நடிகர்திலகத்தின் குடும்பபடங்களில் வரும் இது போன்ற விறுவிறுப்பு சுவாராஸ்யங்களை
காண முடியாது.
தந்தைக்கும் மகனுக்கும்*
அபிப்பிராய பேதம் ஏற்பட்டு இருவரும் நான் சாப்பிடமாட்டேன் என்று வீட்டின் வெளி யில் திண்ணையில் வந்து எதிரும் புதிருமாக அமர்ந்து கொள்கின்றனர்.காந்திமதியும் ,விஜயகுமாரியும் சமாதானப்படுத்த அவர்களுக்காக இருவரும்*
"சரி வந்து தொலைக்கிறேன் "
என்று இருவரும் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
இந்தக்காட்சியை பார்த்தோமானால்*
நடிகர்திலகத்திடம் இருந்து எந்தவித கதாநாயகத்தன்மை(ஹீரோயிசம்)
வெளிப்படாமல் ஒரு கிராமத்து இளைஞனின் தன்மானத்தையும்
குடும்பபாசமும் ,தந்தையின் அறியாமையை எதிர்த்தாலும் அதே சமயம் அவருடைய ஸ்தானத்திற்கு மதிப்பு அளிக்கும் கண்ணியம் கொண்டவராகவும்சின்ன சின்ன ஊசிமுனை உணர்ச்சிகளைக்கூட படு இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
சரி வந்து தொலைக்கிறேன் என்று இருவரும் வீராப்பாக குடிசைக்குள் நுழையும் சமயம்*
வேகமாக வேட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லப்போகும்*
நடிகர்திலகம் ராகவனும் அதே போல் வர,அவர் முன்னே செல்லட்டும் என்பதற்காக தந்தைக்கு தரும் மரியாதையாக சற்று பின்வாங்கி உடலை சாய்த்து ஒரு வித உடல் பம்மலில் தன் நடிப்பை இயல்பாக எப்படி அழகாக வெளிப்படுத்துகிறார்.
(ராகவன்:துரை கொஞ்சம் எந்திரிங்க
நடிகர்திலகம்:ஏண்டா எந்த அளவுக்கு குடிச்சிருக்கேன்னு பார்க்கிறதுக்கா?
(ராகவன் மாலையை எடுத்து சிவாஜியின் கழுத்தில் போட்டுவிட்டு)
ராகவன்:இன்னைக்கு உங்களுக்கு பொறந்தநாள்.
நடிகர்திலகம்:ராமையா நான் பொறந்திருக்கிறது ஏன்னு யாருக்கும் தெரியாது?.ஏன் எனக்கே தெரியாது?ஆனா நீ பொறந்திருக்கிறது மட்டும் எனக்காகத்தான்.
சவாலே சமாளியைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் மனத்திரையில் இந்தக்காட்சி வந்து இடிக்கிறது.என்ன செய்ய?*
பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும் என்பது போல் திறமைமிக்க கலைஞர்களாக இருந்தாலும் சிறந்த கலைஞனோடு
சேரும்போதுதானே அவர்களின்
பங்களிப்பு பளீரிடுகிறது.இங்கேதான் நிற்கிறார் வி.எஸ். ராகவன்.பூவோடு சேர்ந்த நார்.
இரண்டு படத்திலுமே அதே வேலைக்கார வேடம்.காஸ்டியூம்ஸ் கூட
அதே போலத்தான்.ஆனால் இரண்டிலும் என்ன ஒரு மாறுபாடான நடிப்பு.ஒன்றில் நடிகர்திலகம் எது செய்தாலும் விட்டுக்கொடுக்கும் கேரக்டர்.ஒன்றில் எது சொன்னாலும் எதிர்ப்பை காட்டும் கேரக்டர்.
உணர்ச்சி மிக்க காட்சிகள்.
ரசனையை உயர்த்தும் நடிப்புகள்.
எல்லாம் நடிகர்திலகத்தால் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த நற்பலன்கள்.புகழ்.சிறப்பு.
இந்த வரிகள் ராகவனை மட்டும் வைத்தல்ல., பெரும்பான்மையான கலைஞர்களின் அனுபவங்களையும் வைத்துதான்.)
ஒன்று
தங்களுடைய பெரிய வீட்டின் அருகிலேயே இருக்கும் மாணிக்கத்தின் குடிசை தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதுவது.
இரண்டு
மாணிக்கத்தின் பேச்சு செயல்
இரண்டும் தங்களை அவமதிப்பதாக கருதுவது.
இந்த இரண்டுக்கும் தீர்வு காண சின்னப்பண்ணை சிங்காரத்திடம் யோசனை கேட்க,அய்யாக்கண்ணு பட்ட கடனுக்காக மாணிக்கத்தை பண்ணையில் வேலை செய்ய வைத்து*
முரட்டுக்காளைக்கு மூக்கணாங்கயிறு*
கட்டலாம் என்று சின்னப்பண்ணை யோசனை கூற அதன்படியே அய்யாக்கண்ணுவை வலியுறுத்த.,அய்யாக்கண்ணுவும் வேறு வழி தெரியாமல் மாணிக்கத்தை பண்ணைவேலைக்கு வருமாறு கூறுகிறார்.
வேலைக்கு செல்லும் காட்சி:
முதலாளி என்ற திமிரில் நம்பியார்
'என்னடா மாணிக்கம்'
என்று ஒருமையில் கேட்பார்.பதிலுக்கு நடிகர்திலகம் 'என்னடா ராஜவேலு' என கேட்க,
பதிலடியால் திகைக்கும் நம்பியார்
கிண்டலும் மரியாதையும் கலந்து
"மகாராஜ ராஜ ராஜ ஸ்ரீமாணிக்காம் அவர்கள் தங்களுடைய வேலையை கவனிக்க செல்லுங்கள்"
என்று கூற
"ஆகட்டுங்க"
என்று உடனே அதே சுதியில் பதில்சொல்வது செம ரகளை.
பண்ணையில் மரத்தை வெட்டி சாய்ப்பார் .நம்பியார் வந்து 'ஒரு மரம் வெட்ட இவ்வளவு நேரமா?'என்று கேட்க அதற்கு நடிகர்திலகம் கொடுக்கும் ரீயாக்ஷன் அபாரம்.ஒன்றும் பேச மாட்டார்.அப்படியே நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்து பார்வையால் ஒரு வீசு வீசுவார்.என்ன ஒரு ஸ்டைலப்பா !*
மரம் வெட்டும்போது
நடிகர்திலகமும் ராகவனும் தேக்கி வைத்த அன்பை மாறி மாறி பாசமழையாய் பொழிவது நல்ல நெகிழ்ச்சியான காட்சி.
சீன் பை சீன் உயிரோட்டமாய் செல்லும்.
ஊரிலிருந்து வரும் ஜெயலலிதாவை வண்டியில் கூட்டி வரும் காட்சி.
ஜெயலலிதா வண்டியில் முன்பக்கம் தள்ளி உட்காரச்சொல்லிவிட்டு
வண்டி முன்பாரம் ஜாஸ்தி என்றும்
பின்பக்கம் தள்ளி உட்காரச் சொல்லிவிட்டு பின்பாரம் ஜாஸ்தி என கூறுவதும் வேடிக்கையான சீன்.
பெட்டி சேற்றில் விழ அதற்காக நடிகர்திலகத்தை கேவலப்படுத்தும் சொற்களலால் வசைபாட பெண்னென்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் கோபம் தலைதூக்க கோபத்தை அந்த சாட்டைவாரை ஒடித்து வீசுவதிலே காட்டுவார்.தன்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த நடிப்பு.
அடுத்த காட்சியில்...
தந்தை ராகவனுடன் கிணற்றருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் தன்னுடைய துணிகளை துவைத்து போடுமாறு ஜெயா துணிகளை நடிகர்திலத்தின் முகத்தில் விட்டெறிய...
சில நிமிடங்களுக்கு முன்புதான்
' நீ நல்லவங்ககிட்டத்தான் நேருக்கு மாறா நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட கூட மரியாதையா நடக்கத்தெரியாதா ' ராகவன் நடிகர்திலகத்தை பார்த்து கேட்பார்.
அதற்கு நடிகர்திலகம் 'மரியாதை ரெண்டு பக்கமும் இருக்க வேண்டாமா'
என்று முடிப்பதற்குள்ளாகவே ஜெயா வந்து மூஞ்சியில் துணிகளை வீசுவார்.
நடிகர்திலகம் அமைதியா திரும்பி ராகவனைப் பார்க்க ,
என்னடா இது நம்ம பையன தப்புன்னு கண்டிக்கப்போனா இது அதுக்கு மேல*
தப்பா இருக்கேங்கிற மனநிலையில் முகத்தை திருப்பிக்குவார் ராகவன்.
ஒரு பொம்பள இப்படி சொல்லிட்டாளேங்கற ஆத்திரம் ஒரு பக்கம்.,பணக்கார திமிரை ஏத்துக்காத தன்மான குணமும் உசுப்பஅப்பா இருக்கிறத ஒரு நிமிஷம் யோசிக்கிற மனசு பின் அடக்கமாட்டாம கேப்பாரைய்யா ஒரு கேள்வி.
' நீ என் பொண்டாட்டியாஉன் சேலை துவைச்சு போட'ன்னு சொல்வது
சரியான ஆத்திர வெடி.அதைக் கேட்டு ஜெயா அவமானத்தில் ஓவென்று கதறி சிணுங்கஅதையே பாவனையில் ஜெயா போல் நடிகர்திலகமும் செய்து காட்டுவது வேடிக்கை.
உழவர் கூட்டம் அனுபவிப்பதில்லை அறுவடையின் பலனை.ஆனாலும் விவசாய பூமி அவர்களுக்கு தெய்வம் போலே.அதனால்தான் செருப்பணிந்து நடப்பதில்லை வயலில்.பலனை அனுபவிக்கும் பணக்கார வர்க்கமோ அந்த பழக்கத்திற்கு நேர்எதிர். ஏற்கெனவே படித்த திமிறும் பணக்கார திமிறும் சகுந்தலாவுக்கும் அதிகம்.
மாணிக்கமும் நடவுப் பெண்களும் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வரப்பில்செருப்பணிந்து நடந்து வரும் சகுந்தலா மாணிக்கத்திடம் ஒதுங்கி நிற்குமாறு கூற மாணிக்கம் மறுக்க வீம்பு கொண்ட சகுந்தலா வயல் சேற்றில் நடந்து காலெல்லாம் சேறாக சென்று சேர்வதோ மாணிக்கத்தின் வீட்டிற்கு.
சகுந்தலாவைப் பார்த்த மாணிக்கத்தின் தங்கையும் அம்மாவும்
குடிக்க மோர் தர, அருவெறுப்புடன் குடிகேகத் தயங்கி அவர்கள் பாரா வண்ணம் மோரை வீட்டிற்கு வெளியில் வீசி விடுகிறாள்.அப்போது அது யாருக்கும் தெரியாது.
மாணிக்கத்தைத் தவிர.மாணிக்கத்திற்கு மட்டும் எப்படி தெரியும்?வீசி எறியப்பட்ட மோர் வந்தடைந்த இடம்
"மாணிக்கத்தின் முகம்".
வெளியில் வரும் சகுந்தலாவிற்கு சிறிது அதிர்ச்சி.இவங்களுக்கெல்லாம் தண்ணீரே தரக்கூடாது என்று கதையின் நாயகனாகிய மாணிக்கம் சொல்ல அதற்கு மாணிக்கத்தின் தாய் 'அப்படியெல்லாம் சொல்லாதப்பா
நான் கொடுத்த மோரை முகம் சுளிக்காம குடிச்சதப்பா'
என்று சொல்ல,
திரும்பி நிற்கும் மாணிக்கமாக நடித்த நடிகர்திலகம் திரும்பி நிற்க ஆச்சர்யத்துடன' என்னடா இது' அம்மாவாக நடித்த காந்திமதி கேட்க "பால் வடியற முகம்,பால் வடியற முகம்னு சொல்லுவியேஇது மோர் வடியற முகம் "ன்னு நடிகர்திலகம் சொல்வது பொருத்தமான டைமிங் காமெடி .
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
முத்தாய்ப்பாக காமெடிசென்ஸ்,சென்டிமென்ட்,
பலமான வசனங்கள் என ஏதாவது ஒன்றைக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருப்பதுஇந்தப்படத்தின் சிறப்பு. இந்த மாதிரி திரைக்கதைஅமைந்திருப்பதால் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் மேலும் ரசிக்க வைக்கும். காலம் தாண்டியும் நிற்கும்
இங்கே ஒரு பாடல்:
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
சேனை பரிவாரத்துடன் சீமான் போல்
வாழ்ந்தவனும் எவனுமில்லை
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
(கோட் சூட் அணிந்து இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்ப சக்கரம் சுற்றுதடா*
அதில் நான் சக்கரவர்த்தியடா
என்று பாடி போஸ் தந்தாலும்,
வேட்டி, சாதாரண சட்டை அணிந்து,
சேனை பரிவாரங்களுடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனுமில்லே
என்று பாடி போஸ் தந்தாலும்.
அந்தப் போஸ்கள்தான் காலா காலத்துக்கும்.)
தெரிஞ்சுக்கோ (ஆனை)
பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆணையிட்டுச் சொல்லுறேன் நான் அதுலே
உங்க பணத் திமிரை அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும் வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய கூசுகின்ற
கோழைங்கதான் குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து
இந்த வரிகளின் போது தான் கீழ்க்கண்ட படங்கள்
எடுத்திருக்க வேண்டும்

Shooting spot still
ஒசந்திடும் கோபுரமா கோபுரமா கோபுரமா அந்த
கோபுரத்து சாமியெல்லாம் குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
மாணிக்கமும் அவருடைய கூட்டமும் சேர்ந்து பாடும் பாடலால் சகுந்தலா*
கோபமடைந்து செல்கிறாள்.பின்னே நாயை பிடித்துக்கொண்டு வரும் மாணிக்கம் நாயை அழைப்பது போல் சகுந்தலாவை கேலி செய்கிறான்.இது தவறென்றாலும் அது ஒரு சிறிய பழி தீர்த்தல் கணக்கு. முன்பொருமுறை அதே செயல் சகுந்தலாவால் நடத்தப்பட்டு மாணிக்கம் இழிவு படுத்தப்பட்டிருப்பார்.எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் ஆத்திரம் தான் அது.திமிர் பிடித்த அதுவும் ஒரு பெண் எனும் போது அந்தக் கோபம் சந்தர்ப்பம் தேடி அலையும்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமைந்த நிகழ்ச்சிதான் இப்போது நடைபெறுவது.தன்னை நாய் என்னும் அர்த்தத்தில் கிண்டல் செய்தது அவளுக்கு கோபத்தை உண்டாக்கி*
விடுகிறது.அதனால் மாணிக்கத்தை கேவலமாக திட்ட ,அதற்கு மாணிக்கமும் பதிலடி கொடுக்கும்படி ஆகிறது.சகுந்தலாவின் அண்ணன் ராஜவேலுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.பண்ணையாரின்
வீட்டுக்கு செல்லும்மாணிக்கம் ராஜவேலுவால் தாக்கப்படுகிறார்.ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கும் கோபம் எரிமலையாய் வெடிக்க ராஜவேலுவை பொளந்து கட்டுகிறார் மாணிக்கம்.பண்ணையாரும்,
அய்யாக்கண்ணுவும் வந்து சண்டையை விலக்கி விடுகின்றனர்.சண்டையில் மாணிக்கம் வெறித்தாண்டவம் ஆடி விடுகிறார்.
மாணிக்கத்தின் வீடு:
மாணிக்கத்தின் தாய் அந்த சண்டையை நினைத்து வருத்தப்பட சகோதரி காவேரி அண்ணனுக்கு ஆதரவாய் பேசுகிறாள்.
(பாசமலர் படத்தில் ஜெமினிகணேசன் வந்து வேலையை விட்டு நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடிகர்திலகத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,ஜெமினிசொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு துளி கோபமாய் நடிகர்திலகத்தின்*
மனதுக்குள் சென்று அந்தக் கோபம்
கையில் கத்தி வைத்து பென்சிலை சீவி சீவி அந்தக் கோபத்தை ஒவ்வொரு சீவலிலும் வெளிப்படுத்திநடிப்பின் ராஜ முத்திரையை காட்டியது நடிகர்திலகம் உலகறிந்தது.அதே போல் இங்கு
அந்த வாழைத்தார் தண்டைசீவிக்கொண்டே வந்து கடைசியில் வெட்டி போட்டு தன் ஆத்திரத்தைக் காண்பிப்பார் நடிகர்திலகம்.)
ராஜவேலுவும் சகுந்தலாவும் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.
சின்னப்பண்ணைசிங்காரம் நிர்ப்பந்தத்தின் காரணமாக பெரிய பண்ணையார் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரு மனதாக சம்மதிக்கிறார். அவருக்கு போட்டியிட முழு விருப்பம் இல்லை.காரணம் தான் ஜெயிக்கமாட்டோம் என்ற எண்ணமும், ஊர் மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம்.சின்னப்பண்ணை ஊர் மக்களைக் கூட்டி ஆதரவு தருமாறு கேட்கிறார்.பெரும்பான்மையாக ஊர் மக்களும் ஆதரவு தருவதாக இசைகின்றனர்.அதே சமயம் ஊர் மக்கள் எவரும் தனக்கெதிராக எதிர்த்து நிற்கக்கூடாது எனக் கூற மாணிக்கம் தான் எதிர்த்து நிற்பேன் என்க,பெரிய பண்ணை சஞ்சலமடைய சின்னப்பண்ணை மறுபடியும் ஊர்மக்களின் ஆதரவைக்காட்டி பண்ணையாரை போட்டியிட சம்மதிக்கவைக்கிறார்.அப்போது பெரியபண்ணையார் தான்ஜெயித்தால் இந்த ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று மாணிக்கத்திற்கு சவால் விடுகிறார்.மாணிக்கமும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இப்பொழுது ஒரு கேள்வி? மாணிக்கம் ஜெயிச்சா?*
அதை மாணிக்கமே கேட்டு விடுகிறார்.நான் ஜெயிச்சா பதிலுக்கு பண்ணையார் என்ன செய்வார்?பணம் கொடுப்பதாகச் சொல்லப்பட,இது சரியான சவால் போல் இல்லையே என்று மாணிக்கம் சொல்ல,அதற்கு சின்னப்பண்ணை வேறு ஏதோ ஏதோ சொல்லி கடைசியில்'அவர் மகளையா கட்டி வைக்க முடியும்?"என்று குத்தலாக கேட்க,அதையே மாணிக்கமும் சரியான பிடிப்பாக எடுத்துக் கொண்டு.,"இதுதான்யா
சரியான சவாலு"எனச் சொல்ல,
இந்த சவாலை பெரியபண்ணையார் ஏற்க மறுக்க.,சின்னப்பண்ணை ஒரு வழியாய் பெரிய பண்ணையாரை சம்மதிக்க வைத்து விடுகிறார்.இருவருக்குமான சவால் ஒப்பந்தமாக எழுதப்படுகிறது.
மாணிக்கத்தின் முன் நிற்கும் பெரிய சவால் இது.மாணிக்கம் என்ன செய்யப்போகிறார்?
எத்தனையோ தேர்தல் காட்சிகள் தமிழ் சினிமாவில்காட்டப்பட்டிருக்கின்றன.ஆனால் இப்படத்தில் வருவது போல்,தேர்தலுக்கு முன்னும், ,தேர்தலுக்கு பின்னும் வரும் காட்சிகள் போன்று விறுவிறுப்பைத்தரும் காட்சிகள் வேறு எதிலும் இல்லை.கையில் தாலியுடன் ,அதை சுழற்றிக்கொண்டே*
வாக்கு சாவடியை சுற்றி சுற்றிநடிகர்திலகம் அங்குமிங்கும் நடை போடுவது ரகளையான சீன்.
மாணிக்கம் வெற்றி பெற்றதாக வேலையாள் ஓடிவந்து சின்னப்பண்ணையிடம் கூற,அது அவருக்கு அதிர்ச்சியடையாமல் ஆனந்தக்கூத்தாடுகிறார்.மாணிக்கம் ஜெயிக்க வைத்ததே நான்தான் என்று பேச திரைக்குப்பின்னால் சகுனி ஆட்டம் அவர் ஆடியிருப்பது புலனாகிறது.
(சின்னப்பண்ணை சிங்காரமாக நாகேஷ்:
தருமி,வைத்தி,வரிசையில் சின்னப்பண்ணையையும் சேர்க்கலாம்.
டயலாக் டெலிவரியை டைமிங்காக வெளிப்படுத்துவதில் நாகேஷ் கில்லாடி.அது எந்த சீனாக இருந்தாலும்.நாகேஷின் சிறந்த படங்களில் நடிகர்திலகத்துடன் இணைந்த படங்களே அதிகமிருக்கும்.
பத்திரத்தை வைத்து நான்என்ன செய்யப்போகிறேன் என்று டி.கே.பகவதி கேட்க,நாகேஷ் கையை ஓங்கியவாறு"பெரிய பண்ணையாச்சேன்னு பார்க்கிறேன்,இல்லேன்னா பொளேர்னு அறைஞ்சிடுவேன்"ன்னு சொல்லும் சீனிலும்சரி, பகவதியை தேர்தலில் நிற்க வைக்க அவர் முயற்சி செய்யும் காட்சியிலும் சரி நாகேஷின்*
பங்கு பாராட்டுதலுக்குரியது.)
அந்த தேர்தல் வெற்றி ஊர்வலகாட்சி அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும்.
நடிகர்திலகத்தை தோளில் உட்கார வைத்து தூக்கிக்கொண்டு வரும் வரவேற்புக்காட்சி ஏக அமர்க்களம்.,
ஆட்டம் பாட்டம்,தாரை தப்பட்டை,கரகாட்டம்,புலிவேஷம்
என்று கிராமியகலைகள் எல்லாம் சேர்ந்து கூத்து கட்டும்.பகவதியை கொம்பைக்காட்டி மிரட்டும் ஷாட் பிரமாதம்.
படையப்பா படத்தில் கடைசி காட்சியில் வரிசையாக நிற்கும் மக்கள் கூட்டத்தை காட்டுவார்கள். காமிரா
வளைந்துநெளிந்து சுற்றிக்காட்டும் ஷாட்டாக இடம் பெற்றிருக்கும்.இந்த மாதிரியான காட்சி சவாலே சமாளிபடத்தில் இந்த இடத்தில் இடம்பெற்றிருக்கும். அது போன்ற ஷாட்தான் பில்டப்புடன் படையப்பாவில் காட்டப்படுகிறது..சவாலே சமாளியில் உண்மையாக இருப்பது போல் இருக்கும் .நடிகர்திலகம் மட்டுமல்ல அவரின் திரைப்பட காட்சிகளும் கூட*
மற்ற திரைப்படங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது என்பதையல்லவா இது காட்டுகிறது.


காரில் சகுந்தலாவை வெளியூருக்கே திருப்பி அனுப்பபெரிய பண்ணை முயற்சிக்கிறார்.வெற்றி பவனி வந்து கொண்டிருக்கும் மாணக்கத்தின் தோழர்கள் அதைப் பார்த்துகாரை தடுத்து நிறுத்தி பெரியபண்ணையின்
வீட்டுக்கேதள்ளிக்கொண்டு வந்து விடுகின்றனர்.
அங்கேயே பஞ்சாயத்து நடக்கிறது.
எல்லா பணக்காரக்குடும்பங்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நியாயம்தான் பண்ணையாரின் வீட்டிலும் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஊர் விடுமா?
ராஜவேலுவும் வந்து பண்ணையாரை விமர்சிக்க, துக்கம் தாளாமல்பண்ணைக்கு நெஞ்சை அடைக்கபதறும் மனைவி தாலியைக்காட்டி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
"
(இந்தக் காட்சியில்ஊரார் முன்னிலையில் நம்பியார் நடிகர்திலகத்தைஅடிக்க கை ஓங்க,
"உனக்கு ரெண்டு கைதான். எனக்கு பின்னால் பார் எத்தனை கையென்று"
என்று சொல்லும் வசனம் கூட படையப்பாவில் 'இந்த தனி மனுஷனுக்கு பின்னால் பாருங்க.எத்தனை பேர்னு தெரியும் என்று வரும்)
மாணிக்கம் சகுந்தலா திருமணம் கிராம மக்களலால் எளிமையாக நடத்தி வைக்கப்பட்டது.
படிப்பும் பணக்காரத்திமிறும் கொண்ட சகுந்தலா,ஏழ்மை வர்க்கத்தைச் சேர்ந்த மாணிக்கத்தை ஏற்றுக்கொள்வாளா?
மாணிக்கம் சகுந்தலாவின்
திருமணம் முடிந்த அன்றைய நாள் இரவு.
மாணிக்கம் பேசுவது:
முன்பின் தெரியாம நாம ஒருத்தரையொருத்தர் சந்திச்சப்போ,அந்த ஒரு நிமிஷத்திலேயேஎன் மனச உங்கிட்ட பறி கொடுத்திட்டேன்.ஆனா அடுத்த நிமிஷமே உன் பணத்திமிராலே என்னை அவமானப்படுத்திட்டே.உன் திமிரை அடக்கனும்கறதுக்காக ஏழைக்கே உரிய ஆத்திரத்தில்,நானும் சரிக்கு சமமா பதிலுக்கு அவமானப்படுத்திட்டேன்.நாம ரெண்டு பேரும் புருஷன் மனைவி ஆவோமான்னு நினைச்சு பார்த்திருப்போமா?உன் மனசுக்கு புடிச்ச வாழ்க்கை உனக்கு கிடைக்காம இருக்கலாம்.ஆனா கிடைச்ச வாழ்க்கைக்கு தகுந்தாப்போலே உன் மனச மாத்திக்கிறதுதான் உனக்கு நல்லது.இந்தப்புது இடம்,புது உறவு, புது வாழ்க்கை உனக்கு புடிக்காம இருக்கலாம். ஏன் அறுவெறுப்பாக்கூட இருக்கலாம்.என்ன உனக்கு புடிக்கல்லனாக் கூட உன்ன எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.குறிப்பா உன் பிடிவாதகுணம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு.ஏன் தெரியுமா?
(அவ கிட்ட எனக்கு புடிச்சதே அந்த அகம்பாவம்தான்—
"இது வசந்தமாளிகை"
இதுக்கு விழாத கைதட்டா,விசிலா)
நானும் ஒரு பிடிவாதக்காரன்தான்.நம்ம கல்யாணம் இருக்கே அதுதான்
"டிபிகல் சோசியலிசம்".நம்ம ரெண்டு பேரும் ரெண்டு வர்க்கம்.இந்த ரெண்டு வர்க்கமும் பக்குவப்பட்டு ஒண்ணா சேர்ந்தா அதுதான் உண்மையான சோசியலிசம்.அதுக்குத்தான் தலைவர்கள் எல்லாம் பாடுபடறாங்க.நான் உன்ன வெறுக்கல.உன் ஆணவம்,பகட்டு,பணக்காரதிமிறு இதத்தான் வெறுக்கிறேன்.என்கிட்ட ஏழ்மை,வறுமைசூழ்நிலை இதெல்லாம் இருக்கலாம்.அது நாயம்.ஆனா அதுக்காக என்னை ஏன் வெறுக்கற.?புரியல இல்ல. உனக்கு, என்ன , உங்க வர்க்கத்துக்கே புரியாது. ஏன் எங்கள வெறுக்கறோம்கறதே தெரியாம பாரம்பர்யமா அது உங்க ரத்தத்துலயேவிஷமா ஊறிப்போச்சு.
நான் ஒரு முட்டாள் உன்னை நிக்க வச்சே பேசிட்டு இருக்கறம்பாரு.
நீயும் பேசுவ .ஆனா பேசக்கூடாதுன்னு இருக்கற.இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பெண்கள் ரொம்ப வெட்கப்படுவாங்கன்னு சொல்வாங்க.நீயும் வெட்கப்படுறே. எப்படின்னா,அய்யோ எனக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டுப்போச்சேன்னு.
பரவாயில்ல.நீ படிச்ச பொண்ணு. நானும் உன் அளவுக்கு படிச்சவன்தான். எப்படின்னு கேட்கறியா?"ஆயிரம் புஸ்தகத்தை படிச்சவன விடஆயிரம் வயலை உழுதவன் அறிவாளி" ன்னு பெரியவங்க சொல்வாங்க.
(அடடா.என்ன ஒரு வார்த்தை மழை. அவர் பேசறத கேட்க கேட்கத்தான் எத்தனை ஆனந்தம்.)
பேசிக்கொண்டே போய் மனைவி என்ற உரிமையில் சகுந்தலாவை தொடப்போக,

"தொடாதீங்ங்ஙக"
சகுந்தலாவின் ஆவேசக் கத்தத்தலில் மாணிக்கம் அதிர்ச்சியில் நிற்க,
"நீங்க ரோசமுள்ள ஆம்பளயாயிருந்தா என் உரிமையில்லாம என்னைத் தொடக்கூடாது "-
இது சகுந்தலா.
"நான் உன்ன தொட்டு தாலிகட்டின புருஷன்.உன்ன இப்ப நான் என்ன வேணாலும்செய்யலாம்.அதுக்கு எனக்கு உரிமையிருக்கு.என்னைக்கு நீ உண்மையா என்னை கணவனா ஏத்துக்கிறியோ அன்னைக்குத்தான் உன்னை நான் தொடுவேன்.இது என் அம்மா மேல ஆணை"-
இது மாணிக்கம்.
நாகரீகம் மனிதனை உயர வைத்தது.அதே நாகரிகம் மனிதர்களை தாழ்த்தவும் வைக்கிறது.நடந்து போனது சாஸ்திர சடங்கல்ல.அது நிர்ப்பந்தத்தால் நடந்த சம்பிரதாயம்.
...ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.
பசி பொறுக்க மாட்டாமல் இரவில் யாருக்கும் தெரியாமல்பழைய சாதம் உண்ணும்படியான நிலைமை,அதை மாணிக்கம் பார்த்து கிண்டல் செய்வது,துணிகளை துவைத்து போடுமாறு மாணிக்கம் சொல்வது.,இது போன்ற நடத்தல்கள் சகுந்தலாவை அவள் வீட்டிற்கு ஓட வைக்கிறது. அவளின் அம்மா சொல்லும் சொற்கள் சகுந்தலாவை மாணிக்கத்திடமே திருப்பி அனுப்புகிறது.
இஷ்டப்படாத திருமணம் ஒரு பக்கம் நடந்திருந்தாலும்,மாணிக்கம் தன் குடும்பத்திற்கேற்றவாறு சகுந்தலாவை மாற்ற செயல்படுத்தும் சில கட்டுப்பாடுகள் சகுந்தலாவை நோக வைக்கின்றன.அது அவளை வேதனைப்படுத்தி ,இறந்துவிடலாம் என்று கிணற்றில் குதிக்க முயற்சிக்கும் போது,மாணிக்கம் வந்து தடுத்து விடுகிறார்.
என்னை ஏன் சித்ரவதை செய்கிறீர்கள் நான் இறந்து விடுகிறேன் என்று சகுந்தலா கூற,நீ இறந்து விட்டால் பழி என் மீதல்லவா வரும் எனவே கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு நீ நிம்மதியாக இரு என்று கிணற்றின் மேல் நின்று கொள்கிறார்.
பின்பக்கம் இருந்து தள்ள கைகளை கொண்டு வரும் சகுந்தலா தள்ளிவிட எத்தனிக்கையில்,
மனமா?
அது*
மாறுமா?
யோசிக்கிறது மனம்.
சிந்தை தடுமாற பின் வாங்குகிறது கரங்கள்.
சகுந்தலாவின் மனம் தோற்றது.
தமிழ்ப்பண்பாடு வென்றது.
இந்த இடத்தில் மாணிக்கம் கூறும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும்.சகுந்தலா என்ன இருந்தாலும் பெண்தானே.சற்றே கரைவது போல் தெரிகிறது.
மாணிக்கத்தின் சொற்கள் சகுந்தலாவிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது அவள் விழிகள் காட்டுகின்றன.
இவ்விடத்தில் சகுந்தலாவை தேடி வரும் காவேரியை ராஜவேலு மானபங்கப்படுத்தி விடுகிறான்.ஆவேசமடைந்த காவேரி*
ராஜவேலுவின் வயலுக்கு "தீ"வைத்து விடுகிறாள்.அதை மாணிக்கம் பார்த்துவிடுகிறார்.காவேரியிடம் காரணம் கேட்க நடந்ததை கூறுகிறாள்.தீ பரவுவதை பார்த்து ஊர் மக்களுடன் அய்யாக்கண்ணுவும் சேர்ந்து வருவதைப்பார்த்ததும் மாணிக்கம் காவேரியின் கைகளில் இருந்து தீப்பந்தத்தை வாங்கி காவேரியை தப்பிக்க வைக்கிறார். தீப்பந்தத்துடன் மாணிக்கம் வருவதைப் பார்த்து ஊர்மக்கள் மாணிக்கம்தான் தீ வைத்தது என்று முடிவு செய்து பண்ணையாரின் வீட்டிற்கு பிடித்துச் செல்கின்றனர்.
அங்கே விசாரணை ஆரம்பிக்கிறது.
(சவாலே சமாளி முதல்பதிவு)ஆரம்பத்தில் குறிப்பிட்ட காட்சி இங்கேதான் அரங்கேற்றமாகிறது.
சாட்டையடியால் ரணமாகி,வலிகளுடன் கட்டிலில் படுத்திருக்கும் மாணிக்கத்தை பார்த்து கண்ணீர் விடுவதோடு,அவருடைய காலிலும் விழுந்து அழுகிறாள்.மாணிக்கத்தை தொட்டு தாய் மேல் இட்ட ஆணையை வாபஸ் வாங்க சொல்லுகிறாள்.
அப்புறம்,"
கேட்டுக்கோடி உறுமிமேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்.
வ ண க் க ம்.
நடிகர்திலகத்தின் நடிப்பை விவரிக்க வேண்டுமென்றால் பிரேம் பை பிரேம் எழுத வேண்டி வரும்.அதற்கு பொருத்தமான வார்த்தைகள் தேடினால் பொழுதும் போதாது.
ஆரம்பகாட்சியில் பணிவுக்கு பணிவு,பதிலுக்கு பதில் அளிக்கும் அந்தபாந்தமான நடிப்பைச் சொல்வதா?
விஜயகுமாரியை கண்டிக்கும் போது கூட, காட்டும் கண்ணியத்தை சொல்வதா?
மரம் வெட்டும் போது ராகவனிடத்தில்*
மறைத்து வைத்த பாசத்தை இயல்பாக வெளிப்படுத்துவதைச் சொல்வதா?
நாகேஷ் ஆடும் சகுனியாட்டத்தில்
பகவதியிடம் சவால் போடும் வித்தையைச் சொல்வதா?
அம்மாவாக வரும் காந்திமதியிடம் அவர் காட்டும் அந்நியோன்யமான அன்பைச் சொல்வதா?
தேர்தல்களத்தில் மஞ்சள் தாலியை கையில் வைத்து மதர்ப்பானநடை காட்டும் அந்த நடிப்பைச் சொல்வதா?
நம்பியாரை பொளந்து கட்டும் சண்டையில் அந்த ஆவேச நடிப்பைச் சொல்வதா?
தொடாதீர்கள் என்று சொல்லும் ஜெயாவிடம் காட்டும் அந்த ஆண்மையின் கம்பீரத்தைச் சொல்வதா?
தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவிடம் பேசும் அந்த சொற்பொழிவைச் சொல்வதா?
எதைச் சொல்வது?
எதை விடுவது?