http://s24.postimg.org/rbrqv31o5/FB_...ed_Picture.jpg
Printable View
எந்த அறிவிலி கூறியது ? மக்கள் திலகத்தின் "என் தங்கை " காவியம் ஓட வில்லை என்று .! தற்போது "சன் லைப்" தொலைக்காட்சியி ல் ஒளிபரப்பாகி வரும் நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" பொற்காவீயத்தின் இடையில் ' வால் போஸ்டர் ' என்று தகவல் தெரிவிக்கும் slideல் " என் தங்கை " இலங்கையில் வெள்ளி விழாவை கடந்து 360 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதாரம் எங்கே ஆதாரம் எங்கே என்று பிதற்றுபவர்கள் இனியாவது அடங்கி ஒடுங்குவர் என்று நம்புகிறோம்.
யாராவது புரட்சித் தலைவரை தாக்கினால், எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதரி என்னால் இருக்க முடியாது. அப்படி பேசாமல் இருந்தால்தான் தரம் என்றால் எனக்கு அது வேண்டாம். - WELL SAID SIR. I STRONGLY AGREE WITH YOUR NICE STATEMENT.
http://s21.postimg.org/pmfur62xz/IMG...117_WA0226.jpg
Royal theatre - Coimbatore
Photo fwd by Mr.Samuvel - Sathy.
நீங்காத நினைவலைகளில் இருந்து
திரு k பாலாஜி அவர்கள்
எனக்கு மறக்க முடியாத நாள் என்றால்...
ஒரு நாள் சேலத்தில் இருந்து காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தோம் என்னுடைய உதவியாளர்களுடன் கார் திடீரென நின்று விட்டது நல்ல மாலை நேரம் சுமார் 6 மணி இருக்கும் தண்ணீர் இல்லாமல் ரேடியட்டர் சூடாகி நின்று போனது நடு ரோட்டில் நிக்கிறோம் அருகில் வீடுகள் இல்லை
கொஞ்ச தூரத்தில் ஒரு குடிசை தென்பட்டது அங்கு சென்று தண்ணீர் கேப்போம் என்று போனேன் அங்கு 70 வயது மதிக்க தக்க ஒரு பாட்டி மட்டும் இருந்தார் அவரிடம் தண்ணீர் கேட்டவுடன் டம்ளரில் கொடுத்தார் இல்லை காருக்கு என்று சொல்லி ஒரு குடம் தண்ணீர் வாங்கி ஊத்தி விட்டு குடம் திருப்பி கொடுக்கும் போது 50 ரூபாய் கொடுத்தேன் மூதாட்டீ மறுத்தார் வம்பாக கொடுத்தேன்
அப்போ நீங்கள் யார் என்று வினாவினார் நான் பாலாஜி என்றேன் பாட்டிக்கு கண்ணும் சரியாக தெரியவில்லை மீண்டும் புரியாதது போல் விழித்தார் உடனே நான் சினிமாவில் நடிக்கும் நடிகன் என்றேன்
உடனே அந்த. பாட்டி நீதான் எம்ஜிஆராப்பா என்று எழுந்து என் கைகளை பற்றிக் கொண்டு ஒன்ன பெத்தவ நல்ல புண்ணியவதிப்பா நீ நல்லா இருக்கனும் என்று வாழ்த்தினார்
எனக்கு வாயே வராமல் கண்களில் நீர் மல்க விடை பெற்றேன்
இதை அண்ணனிடம் சந்திக்கும் போது எடுத்து சொன்னேன் உடனே அந்த 50 ரூபாயை எடுத்து கொடுத்து விட்டார் மறுத்தேன் விட வில்லை நீ பாட்டிக்கு கொடுத்தது என் பணம் தான் என்று கூறி வம்பாக கொடுத்தார்.
அவர்தான் தர்மத்தின் தலைவன் எம்ஜிஆர்
http://i1170.photobucket.com/albums/...pscrlbyy08.jpg
வாழும் போது மன்னன்
கோவில் கொண்ட பின் இறைவன்
எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர்
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
சரி.. எம்.ஜி.ஆர். செய்த அந்தக் குற்றம்தான் என்ன..?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!
[ இன்று எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாள்..! ]
courtesy net
பண்பின் சிகரமே
பாசத்தின் உறைவிடமே
உழபை்பாளர்களின்
நேசக் கரமே
நேர்மையின் இருப்பிடமே
கருணயைின் பிறப்பிடமே
காக்கும் கரமே
துணிவின் துணையே
உண்மையின்
உழைப்பே
சிந்தனைச் சிற்பியே
வயிற்றுக்கு சாேறிட்ட வள்ளலே
ஏழைகளின் ஔிவிளக்கே
இராமாவரத் தாேட்டத்தின் ராேஜாவே
எங்கள் இதயத்தில்
வாழ்ந்து காெண்டிருக்கும் வள்ளலே
உம்மை வணங்குகின்றாேம்
- குமார் ராஜேந்திரன்
கலியுக கடவுள் அவதரித்த நாள்,,,,,
ஒருவர்
மதத்தின் பெயரால் தலைவராகலாம்
ஜாதியின் பெயரால் தலைவராகலாம்
மொழியின் பெயரால் தலைவராகலாம்
வாரிசு பெயரால் தலைவராகலாம்
ஏன் பணத்தைக் கொண்டும் சிலபேர் தலைவரான வரலாறு உண்டு ஆனால்
நீயோ மக்களை கொண்டு தலைவரான தன்னிகரற்ற ஒரே தலைவன்...
நீ ஆயிரத்தில் ஒருவன், இல்லை இல்லை,
நீ லட்சத்திலும் ஒருவன், இல்லை இல்லை,
நீ கோடியில் ஒருவன்..
எங்கோ பிறந்து எங்கேங்கோ பிறந்த எங்களை அதிமுக என்ற கட்சியின் பெயரால் ஒன்றாக்கி உங்கள் பிறந்த நாளை ஒரு சாதராண தொண்டனாக கொண்டாட என்ன தவம் செய்தமோ...
இன்றைக்கு எனது சிறு வயது கனவு நாயகன், என் முதல் குரு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது 99 வது பிறந்த நாள்.
அவரது 99ம் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது முதல் குருவான எம்.ஜி.ஆரை தூரத்தில் இருந்து பார்க்கத்தான் பல முறை முடிந்தது. அவரை முதல்வராக்கிய அருப்புக்கோட்டை தொகுதிதான் எனது ஊர். அவரது கருத்துக்கள், பாடல்கள், படங்கள் என்னை எனது சிறு வயது வாழ்க்கையை செதுக்கியது.
எனது 14 ம் வயதில் 1980ல் SLV3 ராக்கெட்டை வடிவமைத்து, வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் எனது இரண்டாம் கனவு நாயகன், என்னை அறிவியலில் வளர்த்தெடுத்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.
நான் 10ம் வகுப்பு படிக்கும் போது, டாக்டர் அப்துல் கலாம் போல் நாமும் விஞ்ஞானியாக வேண்டும் என்று நினைத்தேன். அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறைவன், 15 வருடங்கள் கழித்து எனது கனவை நனவாக்கி அவரிடம் 20 ஆண்டுகள் பணியாற்ற அருள் புரிந்தான்.
இன்றைக்கு எம்.ஜி.ஆரின் 99ம் பிறந்த நாளில், எம்.ஜி.ஆரின் 95ம் பிறந்த நாள் விழா எனக்கு நினைவு வருகிறது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இதயக்கனி விஜயன் மற்றும் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி நிர்வாகியும், எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட திருமதி லதா ராஜேந்திரன் அவர்களது அழைப்பிற்கு, எனது வேண்டுகோளுக்கு இணைங்க எனது முதல் கனவு நாயகனான எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்திற்கு, "டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் மேல் நிலைப் பள்ளியின் 23வது ஆண்டு விழா" மற்றும் "எம்.ஜி.ஆர் 95-வது பிறந்த நாள் விழா"வில் கலந்து கொண்டு 11 ஆகஸ்டு 2012ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர்., ராமாவரம் தோட்டத்தில், எனது குரு, எனது இரண்டாவது கனவு நாயகன் இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை, எனது வரவேற்பு உரையுடன்.
https://www.youtube.com/watch?v=C3hvm6JUlJE
-----------------------------
11 ஆகஸ்டு 2012 அன்று நடந்த "டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் மேல் நிலைப் பள்ளியின் 23வது ஆண்டு விழா" மற்றும் "எம்.ஜி.ஆர் 95-வது பிறந்த நாள் விழா"வில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆற்றிய உரை,
அன்பு நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தமிழக மக்களின் உள்ளங்களில் குடியிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்தில், அவரது விருப்பப் படி பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளிக்கு வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியின் 23வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர் 95 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். 23 ம் ஆண்டு கண்ட பள்ளி விழா என்றால் என்ன. இந்த பள்ளி பூமியில் உள்ளது. பூமி சுரியனை சுற்ற ஒரு வருடம் ஆகும். எனவே இந்த பள்ளி 23 முறை சுரியனை சுற்றி விட்டது என்று அர்த்தம். கடந்த 23 வருடங்களில், இது வரை 3000 பேச்சு மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு கல்வி கொடுத்து, நம்பிக்கை கொடுத்து, அவர்களுக்கு மேல் படிப்பு கொடுத்து அவர்களது வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்திருக்கிறது. எனவே 23 வது ஆண்டு விழா கொண்டாடும் இப்பள்ளிக்கு எனது வாழ்த்துக்கள். இன்றைக்கு உங்கள் மத்தியில் நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன்.
கொடு, கொடு, கொடுத்துக்கொண்டே இரு
நண்பர்களே, எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஏழையாய் வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, கலை உலகில் இருந்து கொண்டு, தன் சுய உழைப்பால் கிடைத்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் நடித்த படத்தின் பாடல்களின் மூலம், கதைகளின் மூலம், வசனங்களின் மூலம், நல்ல விஷயங்களையே பேசி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இருந்தாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நேர்மையின் சித்தாந்தத்தை எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம், நடித்து, அப்படியே வாழ்ந்து, பார் வியக்கும் வண்ணம் பத்தாண்டுகாலம் மக்களாட்சி கொடுத்தார். அவர் கொடுத்து, கொடுத்து வாழ்ந்த விதம் நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.. அப்படி கொடுத்தவரது பள்ளியில் வந்து உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கு திரளாக கூடியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், எம்.ஜி.ஆரது நண்பர்களுக்கும், இந்த பள்ளியை சிறப்பாக நிர்வகிக்கும் அவர்தம் குடும்பத்தார்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் மற்றும் எம்.ஜி.ஆரின் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
---------------------------------
ஒவ்வொரு வருடமும் சென்னையில் இருந்தால், எம்.ஜி.ஆர் வீட்டுக்கு செல்வேன். இந்த வருடம் இன்றைக்கு காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வெ. பொன்ராஜ்
17 ஜனவரி 2016.
குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம்.
ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது.
அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்!!
மக்கள் திலகம் என்று அவர் அழைக்கப்பட்டது வெறும் திரையுலகச் சாதனைகளுக்காக அல்ல. அவர் திரைக்கு அப்பால் முக்கியமானவராகக் கருதப்பட்டார்.
எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும்.
எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர், எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள்!
கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா. நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள்!
“ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்!
அவரது ஒரு தரிசனத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கிக்கிடந்தவர்கள் நம் சமூகத்தில் உண்டு.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது வழிநெடுகவும் நாள் கணக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய கதைகள் இன்றும் கூடக் கேட்கக் கிடைப்பவை.
எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.
'எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார்!', 'எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது!', 'எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது!'.
எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள்!
எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்!
இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது! அதுதான் எம்.ஜி.ஆர்!
காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது!
இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது.
சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் காட்சி என்பது எல்லைக்கு உட்பட்டது.
சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.
இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம்.
‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும்.
அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா, இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும்.
இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
“என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது.
எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு....” என்று பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள்.
சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும்.
“குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம்.
திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் இறக்கும் வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார்.
சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.
தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை.
தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் எம்ஜிஆர் நினைவுகூறப்படுகிறார்.
எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது.
எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர்.
- அரவிந்தன், தேவிபாரதி, the hindu, Yukesh babu.
ஏழை எளிய மக்களின் இதயதுடிப்பே ,தமிழக மக்கள் கண்ட புரட்சி தலைவா ., என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.,,
அமரத்துவம்பெற்ற எங்கள்அன்புதெய்வமே! நீ
வாழ்ந்ததும் வரலாறு, மறைந்ததும்
வரலாறு, என்றுமே எங்கள் இதயதெய்வம் நீதான் தலைவா!!
வாத்தியாரே..!!
உங்களை வணங்குவதேயன்றி
எங்களுக்கு
பெருமைகள் வேறில்லை.....
வாழ்க எம்ஜிஆர்...!!!
http://i1170.photobucket.com/albums/...psedrto9ss.jpg
சாதனையாளர்கள் எந்த காலத்திலும் மறைவதில்லை!
புரட்சித் தலைவர் மண்ணை விட்டு மறைந்துவிட்டார் என்று எவரேனும் சொன்னால் உடனே என் நினைவுக்கு வருவது "காற்றுக்கு ஏது கடைசி மூச்சு" என்ற வாசகம்தான்..
ஒரு நடிகன் இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமே நிலைத்து நிற்க வேண்டி எத்தனையோ கஷ்டங்களை சோதனைகளை கடந்தும் நிலைத்து நிற்க முடியாமல் அடுத்து வரும் நடிகன் அவன் சேர்த்து கொண்ட கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் கவர்ந்து தன்வசம் சேர்த்து கொள்கிறான், ஆனால் எம்.ஜி.ஆர் தனது உண்ணத நடிப்பால் கோடிக் கணக்கான ரசிகர்களுக்கு தலைவராக திகழ்ந்தவர், தன்னை நம்பியவரை தலை நிமிர்ந்து வாழ வைத்தவர், அரசியலில் சிறந்த தலைவரென பெயர் பெற்றவர் தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாமல் தமிழக ஏழை எளிய மக்களின் துயரத்தை போக்கி கடவுளாக இம்மண்ணில் வாழ்ந்து மறைந்தவர்..
பலரும் வாழ்வதற்காகதான் பிறப்பெடுக்கின்றனர் ஒரு சிலர்தான் பிறந்ததின் பலனை சரிவர செய்து மகான்கள் மண்ணில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதை உலகறிய செய்து சென்றிருக்கிறார்கள்.. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஸ்டைல் துடிப்பு நடிப்பு என அனைத்து சென்டர்களிலும் புகுந்து விளையாடிய முதல் ஹீரோ நமது வாத்தியார் தான், இனி எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆர் போல ஒரு நடிகர் வர முடியாது, இனி எத்தனை அரசியல்வாதிகள் நாடாண்டாளும் புரட்சித் தலைவரின் அரசியல் சாதனைகளை முறியடிக்க முடியாது!!
சாதனைகளின் சரித்திர நாயகருக்கு இன்று 99வது பிறந்த நாள், இவர் இப்பூவுலகை விட்டுதான் மறைந்துவிட்டார் எங்கள் மனதை விட்டு அல்ல...
மறக்கமுடியா காவியத்தலைவனுக்கு பிறந்த நாள்..
#மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.
1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.
1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : திமுக பொருளாளராக மாறினார்.
1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.
பலகோடி மக்களின் இதயத்துடிப்பு...
பாரதத் தாயின் தவப்புதல்வன்...
இருப்பதெல்லாம் கொடுப்பதற்கே...
என வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் ...
எங்கள் இதயத்தில் கனிந்த ...
தங்கநிறத் தலைவன் ...
வங்கக் கடலோரம் துயில் கொண்டு வழி காட்டும் ஒளிவிளக்கு ... ஏழை மக்களின் இதயக் கோயிலில் ...
என்றென்றும் சுடர்விட்டெரியும்...
அணையாவிளக்கு ...
மனிதராய்ப் பிறந்து புனிதராய் உயர்ந்த புரட்சித் தலைவரின் 99 வது பிறந்தநாள் இன்று...! அவர் நினைவையே மூச்சுக் காற்றாய்
சுவாசிக்கும் கோடிக்கணக்கான இதயங்களுக்கு சிறந்தநாள் இன்று... அவரின் வாழ்த்துக்களைப் பெற்று வணங்கி மகிழ்கிறோம்...
வாழ்க எம் தலைவனின் புகழ்...
இவ்வையகம் உள்ளவரை...!
மறக்கமுடியாத காவியத்தலைவனுக்கு பிறந்தநாள்,
எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, தனி கட்சி துவங்கிய நேரம். அந்த சூழ்நிலையில், அரசியலை யும் பார்த்துக் கொண்டு, தன் சினிமா தயாரிப்பான, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை உருவாக்க, மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது.
கடந்த, 1972ல், தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை நீக்கினார் கருணாநிதி. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., மன்றத்தினர், எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆரிடம், தனி கட்சி துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதில், மதுரை எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர்கள், தங்கம் மற்றும் பால்ராஜ் முக்கியப் பங்கு வகித்தனர். கே.எஸ். ராஜேந்திரன் என்பவர், எம்.ஜி.ஆர்., கட்சிக் கொடி என்று, தாமரைக் கொடியை, பல ஊர்களில் ஏற்றி வைத்து, பரபரப்பாக்கினார்.
ஆனால், இதையெல்லாம் கண்டும், காணாமலும் அமைதி காத்தார் எம்.ஜி.ஆர்., இந்த பிரச்னை, கட்சியினர், மன்றத்தினர் ஆகியோரை தவிர, மாணவர்கள் மத்தியிலும், விஸ்வரூபம் எடுத்தது. பள்ளி மாணவர்களும், எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்து, 'ஸ்டிரைக்' செய்ய ஆரம்பித்தனர். அப்போதைய அரசால், அதை சமாளிக்க முடியாமல், நவ.,15, 1972 முதல் ஜன., 8, 1973 வரை, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இது, ஒரு வரலாற்று சம்பவமாக ஆகிவிட்டது.
தமிழக, தென் மாவட்டங்களில், எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ஆதரவு மகத்தானது. எனினும், அதை முறியடிக்க, மதுரை மாவட்ட தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பு வகித்த, அப்போதைய மேயர், மதுரை முத்து, (நாடோடி மன்னன் பட வெற்றி விழாவின் போது, எம்.ஜி.ஆரை அலங்கார சாரட் வண்டியில் அமர வைத்து, மிக பெரிய ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் பரிசு அளித்தவர்) தி.மு.க., தலைமையின் தூண்டுதலால், எம்.ஜி.ஆரை, முழு மூச்சாக எதிர்த்து செயல்பட்டார்.
'எம்.ஜி.ஆர்., எடுக்கும், உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிவராது; வரவும் விடமாட்டேன். அப்படி, படம் ரிலீசானால், நான் சேலை கட்டிக் கொள்கிறேன்...' என்று, பொதுக் கூட்டங்களில் பேசி, பதட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார். அவரை சமாளிக்க, மதுரை அ.தி.மு.க.,வில் காளிமுத்து, பட்டுராஜன், பொ.அன்பழகன் ஆகியோர் களமிறங்கினர்.
எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தியால், படத்தின், பிராசசிங் வேலை, வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, பிரின்ட் போடப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றது. அதே சமயம், சவால் விட்ட மதுரை முத்துவுக்கு, மதுரை மட்டுமல்லாமல், தமிழகமெங்கும், சேலை கடை வைக்குமளவிற்கு, சேலைகள் குவிந்தன. அது, முத்துவின் மனதை மாற்றியது. அதே நேரம், கருணாநிதி, மேயர் முத்துவுக்கு எதிராக செயல்பட்டார். மேயர் போடும் எந்த உத்தரவும் செயல்படாதவாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய ஆணையிட்டார். இதனால், மனம் உடைந்த முத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியை, மேடைகளில், கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற முடிவுக்கு வந்த முத்துவிற்கு, எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து பேச வழி தெரியவில்லை.
அ.தி.மு.க., பிரமுகர் பட்டுராஜனிடம், எம்.ஜி.ஆரை சந்திக்க ஆலோசனை கேட்டார். ஆனால், அவரை அழைத்து செல்ல பட்டுராஜனுக்கு இஷ்டமில்லை. காளிமுத்து மற்றும் பொ.அன்பழகன் ஆகியோர், வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எல்லாம் மீறி, மும்பையில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை, சில பிரமுகர்களுடன், முத்து சந்தித்து, தன் ஆதரவை அளித்து, கட்சியில் சேருவதாக கூறினார். 'மதுரையில் முறைப்படி வந்து சந்தியுங்கள்...' என, கூறி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.,.
சில நாட்களுக்கு பின், மதுரை பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை, பத்திரிகை யாளர்கள் முன்னிலையில், ஆள் உயர மாலை அணிவித்து, பெரிய பூச்செண்டு கொடுத்து, முறைப்படி அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார் முத்து. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், கருணாநிதியை கடுமையாக தாக்கிப் பேசினார். அந்த கூட்ட முடிவில் எம்.ஜி.ஆர்., பேசும் போது, 'வருங்கால மேயர், அண்ணன் முத்து அவர்களே...' என்று சொல்லி, ஆரம்பித்தார். பொதுக்கூட்டத்தில், சொல்லியபடி, மேயர் பதவியை வழங்கி, கவுரவித்தார் எம்.ஜி.ஆர்., தன் கட்சியினரின் எதிர்ப்புகளையும் பொருட் படுத்தாது, பகைவனுக்கும் பதவி கொடுத்த, அந்த உயர்ந்த உள்ளம், எம்.ஜி.ஆரைத், தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்
நடிகனாகட்டும்,
தலைவனாகட்டும், இனியொருவரும்
உனைப்போல் பிறப்பதரிது.
தமிழ் பல்கலை கழகம் அமைக்கஂதமிழ் அறிஞர்களை அழைத்தஂமுதல்வர் எம் ஜி ஆர் எவ்வளவு இடம் வேண்டும் என்று கேட்க அறிஞர்கள் நூறு ஏக்கர் நிலம் எனகூறியபோது எம் ஜி ஆர் இன்னும் அதிக அளவில் கேளுங்க எனகூறஂஇருநூறு எனகூற எம் ஜி ஆர் சிரித்து கொண்டு ஆயிரத்து இருநூறு ஏக்கரில் உலகில் பெரியஂதமிழ் பல்கலைக்கழகம் அமைப்போம் எனஂகூறி சிறந்தஂதமிழ் பல்கலைகழகம் எம் ஜி ஆர் அமைத்தார்
எப் எம் 106.4.ல் எம் ஜி ஆர் நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சியில் புலவர் புலமை பித்தன் இன்று காலை கூறியது
நூற்றாண்டு விழா உலகம் வியக்க வேண்டும்
17.01.2016..மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்தநாள்.....1
“தா”வென்று ஒருவன் வந்து கேட்கும் முன்
"இந்தா” என்று எடுத்துக் கொடுத்த வள்ளலே!
நான் ஏழு வள்ளல்களையும் கண்டதில்லை!
ஆனால் எட்டாம் வள்ளலே உன்னில்
அந்த எழுவரையும் காண்கிறேன்!!!
ஓர் அரசியல்வாதிக்குப் புகழ் எப்படி
இருக்க வேண்டும்? "
" அவரிடம் பிரதிபலன் அடையாதவர்கள்கூட
அவர் நினைவாக வாழ வேண்டும். ஜனவரி 17-ம்
தேதி சென்னையின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து ஒரு ரோஜாப்பூ, இரண்டு வாழைப் பழம், மூன்று பத்திக்குச்சியைக் கொளுத்தி வைத்திருந்த காட்சி, உங்களது கேள்வியைப் படிக்கும்போது நினைவுக்கு வருகிறது! "
- கழுகார் பதில்கள் .
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஆனால் தம்பி எம்ஜியார் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்ஜியார் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்."
( சென்னை அவ்வை இல்லத்திற்கு 30 - 1- 1961 அன்று மக்கள் திலகம் எம்ஜியார் ரூபாய் 30,000 நிதி வழங்கிய விழாவில் அண்ணா .)
# mgr 100
மக்கள் குரல் -17/01/2016
http://i67.tinypic.com/5aqtu0.jpg
மாலை முரசு -17/01/2016
http://i66.tinypic.com/k9t4lt.jpg
மாலை மலர் -17/01/2016
http://i66.tinypic.com/2ep4nlc.jpg