மாலை மலர் -28/01/2017
http://i67.tinypic.com/2v15b94.jpg
Printable View
மாலை மலர் -28/01/2017
http://i67.tinypic.com/2v15b94.jpg
சீர்காழியில் இன்பக்கனவு நாடகம்
1953 – ஆம் ஆண்டு அரங்கேறிய “இடிந்த கோயில்” நாடகம் “இன்பக்கனவாக” பெயர் மாறி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சக்கை போடு போட்டு அனைத்து ஊர்களிலும் அரங்கம் நிரம்பி வழிகிறது. நாடகத்திற்கான வரவேற்பு சற்றும் குறைந்தபாடில்லை. சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.
1958 – ஆம் ஆண்டு சீர்காழியில் “இன்பக்கனவு” நாடகம் அரங்கேற தடபுடலாக ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கிடையில் எம்.ஜி.ஆர். ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மனங்கவர்ந்த நடிகராக ரசிகர்களின் இதயத்தில் இடம் பெற்றிருந்தார்.
முன்னணி அந்தஸ்த்தை எட்டியிருந்தபோதிலும் படபிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவுடன் புறப்பட்டு அவ்வப்போது மேடைகளில் தன் நடிப்பு முத்திரையை பதித்து வந்தார். மாபெரும் வெற்றிப்படமான ‘நாடோடி மன்னன்‘ வெளிவந்து வசூலைக் குவித்துக் கொண்டிருந்த நேரமது.
சீர்காழியில் பிடாரி வடக்கு வீதி பின்புறம் அமைந்திருந்த “சாமி மேடை”யில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆகியிருந்தது. இந்த மேடையில்தான் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட அந்த நிகழ்வினை நினைவு கூறுகிறார் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வர் சீர்காழி சிவ சிதம்பரம் :
“அந்தக் காலத்தில் சீர்காழியில் ஐந்து திரையரங்குகள் இருந்தன. இப்போதுபோல சேர், பெஞ்ச் எல்லாம் கிடையாது. மூங்கிலால் செய்யப்பட்ட ஈஸி சேர்கள் கொண்ட திரையரங்குகள் அவை. திரையரங்குகள் இருந்தபோதும் நாடகங்களும் கச்சேரிகளும் வளர்ந்துதான் வந்தன. எம்.ஜி.ஆர். நடித்த ‘இன்பக் கனவு” நாடகம் இங்குதான் அரங்கேறியது.”
என்று பழைய நினைவுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். “இன்பக்கனவு” நாடகம் அமர்க்களமாகத் தொடங்குகிறது. இந்த நாடகத்தில் ரத்னமாலாவுக்கு பதிலாக கதாநாயகியாக அபிநயித்தவர் ஜி.சகுந்தலா.
பிச்சைக்காரி கதாபாத்திரத்தில் வரும் ஜி.சகுந்தலாவை குண்டுமணியும், புத்தூர் நடராஜனும் – சினிமா பாணியில் – பலாத்காரம் செய்வதுபோல் ஒரு காட்சி, அழுக்கான ஆடை அணிந்து மண்டபத்தின் ஒதுக்குப்புரத்தில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு ஜி.சகுந்தலாவின் அபயக்குரல் கேட்கிறது. அட்டகாசமாக பாய்ந்து வரும் எம்.ஜி.ஆர், குண்டர்களை அடித்து வீழ்த்தி சண்டையிட வேண்டும். இது தான் காட்சியமைப்பு.
கதைப்படி எம்.ஜி.ஆரின் முதல் “என்ட்ரி”யும் இப்போதுதான். எம்.ஜி.ஆர். அதிரடியாக காட்சியினுள் நுழைந்ததுமே வழக்கம்போல் கரகோஷம் விண்ணை முட்டுகிறது. ரசிகர்களின் ஆரவாரமும், கைத்தட்டல்களும் சுமார் ஐந்து நிமிடங்கள்வரை நீடிக்கிறது. எம்.ஜி.ஆர். முதலாவதாக புத்தூர் நடராஜனை குனிந்து தனது இரு தோள்களிலும் அப்படியே தூக்கி கீழே விழச் செய்கிறார்.
G1
அடுத்து குண்டுமணி எம்.ஜி.ஆரை அடிப்பதற்கு பாய்ந்து வருவார். தனது வலதுபுற தோளில் அவரை அலக்காகத் தூக்கி விழச் செய்யுமாறு ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகையின்போது சரியாக விழுந்தார் குண்டுமணி. ஆனால் சம்பவத்தன்று அவர் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தார்.
பெயருக்கு ஏற்றார்போல் மிகப் பருமனான நபர் இந்த குண்டுமணி. 250 பவுண்டு எடையுடன் கூடிய ஆஜானுபாகுவான தோற்றம். எம்.ஜி.ஆரின் எடையோ வெறும் 70 கிலோதான். உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு அது ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. எத்தனையோ முறை சர்வசாதரணமாக தூக்கி அரங்கில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.
அன்று அவருடைய போதாத நேரம். எம்.ஜி.ஆரின் கால் இடறி, நிலைதடுமாறி அவரது கைகளிலிருந்து வழுக்கி விழுந்த குண்டுமணி நேராக அவருடைய கால் மீதே விழுந்து விடுகிறார். எம்.ஜி.ஆரால் எழக்கூட முடியவில்லை. “களுக்” என்ற சப்தத்துடன் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் துடிதுடித்துப் போகிறார்.
அடுத்து சண்டைக்காட்சியில் வரவிருந்த எம். ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன், தர்மலிங்கம், முத்து உட்பட அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். பதறிப்போன குண்டுமணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார். குண்டுமணி இன்னும் சுதாரிப்புக்கு வரவில்லை.
நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே எம்.ஜி.ஆர். சீன் முத்துவிடம் சைகை காண்பித்து திரைச்சீலையை கீழே இறக்கும்படி உத்தரவிடுகிறார். பார்வையாளர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. “என்னாச்சு? ஏதாச்சு?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்கின்றனர். எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது என்ற செய்தி தீப்பொறியாய் பரவியவுடன் ரசிகர்களுடைய ஓலமும் ஒப்பாரிச் சத்தமும் நாலாபுரமும் ஒலிக்கிறது. அரங்கமே களேபரம் ஆகி பீதி நிலவுகிறது.
திரைக்குப்பின்னால், உணர்ச்சிவசப்பட்டு குண்டுமணியும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழத் தொடங்கி விடுகிறார். “என்னால்தானே உங்களுக்கு இப்படி ஏற்பட்டது” என்று புலம்புகிறார். எம்.ஜி.ஆரோ அலட்சியமாக குண்டுமணியின் தோளில் தட்டிக் கொடுத்து “என்ன இது, சின்ன குழந்தைபோல் அழுகிறாய்?. எனக்கு ஒன்றுமேஆகவில்லை” என்று சமாதானம் கூறுகிறார்.
அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் குண்டுமணியை வசைபாடி தீர்க்கின்றனர். நாடகம் பார்க்க வந்த கூட்டத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தி கிடைக்க எம்.ஜி.ஆருக்கு முதலுதவி சிகிச்சை புரிய அவசர அவசரமாக அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார். தற்காலிகமாக அவரது காலில் கட்டு போடப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக உடனே சென்னைக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. .
“எதிர்பாராதவிதமாக எம்.ஜி.ஆரின் காலில் சிறிய காயம் ஏற்பட்டு விட்டது. யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தயவு செய்து கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடப்பட்டது. எனினும் ரசிகர்களின் கூக்குரல்கள் அடங்கியபாடில்லை,. அவர்கள் கலைந்துச் செல்வதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.
இப்பொழுதுதான் யாருமே எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்கிறார் எம்.ஜி.ஆர். திரைச்சீலையை உயர்த்துமாறு சீன்முத்துவுக்கு கட்டளை இடுகிறார். நாலைந்து பேர்கள் அவரை சாய்வாகப் பிடித்துக் கொள்கிறார்கள். கால் எலும்பு முறிந்து வலியால் துடித்க்கின்ற போதும் உட்கார்ந்தவாறே மைக்கைப் பிடித்துக் கொண்டு உரையாற்ற ஆரம்பித்து விடுகிறார்.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, “எனக்கு ஒன்றும் ஆகவில்லை, காலில் சிறிய காயம் அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம், மீண்டும் இதே சீர்காழி மண்ணில் திரும்ப வந்து நாடகம் நடத்துவேன்” என்று உறுதி கூறிவிட்டு மக்களைத் தேற்றுகிறார். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பேசிய பிறகுதான் ரசிகர்கள் ஓரளவு சமாதானம் அடைகின்றனர்.
இதுபோன்ற இக்கட்டான நேரத்திலும் எம்.ஜி.ஆர் காட்டிய பெருந்தன்மையைக் கண்டு கூடியிருந்த ரசிகர்கள் மெய்ச்சிலிர்ந்து போகின்றனர். வேன் அரங்கத்திலிருந்து வெளியாகிறது. இருமருங்கிலும் மக்கள் கூடி நின்று தங்கள் மனங்கவர் நாயகனை கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கின்றனர்.
எம்.ஜி.ஆரை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்படுவதற்கு முன்னரே அவரது குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சென்னை வந்துச் சேர்ந்ததும் எலும்புமுறிவு துறையில் நிபுணத்துவம் பெற்ற பிரபல டாக்டர் நடராஜனும் அங்கு தயாராகக் காத்திருக்கிறார்.
தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு இல்லாத அந்தக் காலத்திலும் கூட எம்.ஜி.ஆர். சென்னைக்கு தன் வீடு சென்று சேருவதற்கு முன்பாகவே விபத்துச் செய்தி தீப்பொறியாகப் பரவ, அவரது இல்லத்தின் முன்பு பெரும் கூட்டம் கூடிவிடுகிறது.
சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர்., தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்துப் போகிறார். “எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் செல்கிறார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள “ராமாராவ் நர்சிங் ஹோமில்” எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு உடனடியாக ஊடுகதிர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி எல்லோருக்கு சற்று மனஆறுதல் தருகிறது. தகுந்த சிகிச்சை மற்றும் “பிஸியோதெரபி” சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.
சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்ற மருத்தவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். அனுமதிக்கப்படுகிறார். எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணி காலில் கட்டு போடப்பட்டிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து கதறிக்கதறி அழுகிறார். அவரை எம்.ஜி.ஆரே சமாதானப்படுத்துகிறார். “எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி அழுகிறீர்களே!” என்று அவரை தேற்றுகிறார்.
இந்த அளவிற்கு பலமான எலும்பு முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் இந்நேரம் கதறித் துடித்து இருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் தனது வேதனை மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாதென்று மிகச் சாதாரணமாக நடந்து கொண்டார்.
சுமார் 1 மாத காலம் எம்.ஜி.ஆர் மருத்தவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பிறகு லாயிட்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் சுமார் 5 மாதம் ஓய்வெடுக்கிறார்.
சம்பவம் நடந்த மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் அதுதான் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது. “வெறும் வாய்க்கு மெள்ள அவல் கிடத்ததைப்போல” எம்.ஜி.ராமச்சந்திரனின் கலைவாழ்வு சகாப்தம் இத்தோடு முடிந்து விட்டது என்ற ரீதியில் பத்திரிக்கைகள் முகாரி ராகம் பாடுகின்றன.
“நாடோடிமன்னன்” திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கண் திருஷ்டியை[ப்போல இந்த சம்பவம் அமைந்து விட்டது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் கால் எலும்பு முறிந்து விட்டதால், குணம் அடைந்தாலும் சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவுகிறது.
இதனை அறிந்த எம்.ஜி.ஆர்., அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்:
“எனது உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னைவிடவும் அதிக வலிமையோடு காட்சி தந்தார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. வேகமும் சற்று கூடியிருந்தது!
அது மட்டுமின்றி கால்கள் மேலும் வலுபெற தனது ராமாவரம் தோட்டத்தில் நீச்சல் குளம் ஒன்றை அமைத்து கால்களுக்கு பலம் சேர்த்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட இந்த பலத்த கால் முறிவு வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் இவ்வளவு விரைவில் குணமடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு தனது உடல் நலத்தில் அக்கறை காட்டினார்
தன்னைக் காண வரும் ஒரு சிலர் அவரது காயத்திற்கு அனுதாபம் ஏற்படும் வகையில் பேசினாலும், “இப்படியெல்லாம் பேசி என்னை நோயாளியாக்கி விடாதீர்கள் எனக்கு ஒன்றுமே இல்லை” என்று அன்பு வேண்டுகோள் விடுப்பார்.
இதற்கு காரணம் எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் மிகுந்த மனோதைரியத்துடன் எம்.ஜி.ஆர் இருந்ததே ஆகும். நோய்களின் விரைவான நலத்திற்கு மருத்துவ சிகிச்சை ஒருபுறம் இருப்பினும், அதைவிட முக்கியம் நமது மன உறுதியே என்பதை முழுமையாக நம்பினார் எம்.ஜி.ஆர்.
courtesy - net
THE HINDU -26/01/2017
http://i65.tinypic.com/1zf0bxj.jpg
இன்று (29/01/2017) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவின் "இதயக்கனி " திரைப்படம்
ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2s77zvd.jpg
இன்று இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு தலை வணங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/1r984k.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
எஸ்.வி. அய்யா,
புரட்சித் தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 1973-வது ஆண்டில் வெளியானபோது, அதுவரை வெளியான திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. புரட்சித் தலைவர் திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.அரசுக்கு ஆறு மாதங்களில் அரசுக்கு வரியாக 60 லட்சம் வரியாக செலுத்தியிருக்கிறது. அப்படி என்றால் வசூல் ஒன்றேகால் கோடி இருக்கும். அதற்கும் மேல் ஷிப்ட்டிங்கை சேர்க்கவில்லை. சென்னையில் மெக்கனாஸ் கோல்ட் படத்தின் வசூலையும் முறியடித்து ஒரே தியேட்டரில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் பெற்ற படம் (அதுவரை) என்றுதான் சொல்கிறோம்.
20 தியேட்டருக்கு மேல் (பெங்களூரையும் சேர்த்து) 100 நாள் ஓடியிருக்கிறது. சென்னையில் 2 தியேட்டர் எங்கள் மதுரையில் மீனாட்சி தியேட்டர், திருச்சியில் பேலஸ் தியேட்டர் மற்றும் இலங்கையில் ஒரு தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடி இருக்கிறது. இதில் பொய் எதுவும் இல்லை. இன்னொன்று, 1973-ல் தியேட்டர் டிக்கெட் கட்டணம் இருந்ததை விட 1979-ல் டிக்கெட் கட்டணம் உயர்வாக இருந்தது.
உலகம் சுற்றும் வாலிபன் 3 கோடி வசூலித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுபற்றி மாற்றுத் திரியில் கேட்கிறார்கள். நீங்கள் மூத்த ரசிகர். விசயம் தெரியாமல் சொல்ல மாட்டீர்கள். உங்களுக்கு அதுபற்றி விபரம், ஆதாரம் இருந்தால் பதிவிடவும். நன்றி.
பேசும் படம் பத்திரிகை பொதுவான சினிமா பத்திரிகை. 1971-வது வருட பேசும் படம் கேள்வி – பதில்
கேள்வி: இன்று தென்னகத்தின் ‘வசூல் சக்கரவர்த்தி’ யார்?
பதில் : எம்.ஜி.ஆர்.!
http://i63.tinypic.com/wiv5zq.jpg
பொம்மை பத்திரிகை பொதுவான சினிமா பத்திரிகை. 1973-வது வருட பொம்மை கேள்வி பதில் பகுதி.
http://i67.tinypic.com/2zsnvgk.jpg
எஸ்.வி. அய்யா,
மறுபடி சொல்கிறேன். தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி, அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று புரட்சித் தலைவர் எத்தனையோ சாதனைகள் செய்துவிட்டார். அதற்கான பேசும்படம், பொம்மை பத்திரிகை கேள்வி-பதில் பகுதி ஆதாரங்களை முந்திய பக்கம் பதிவு போட்டுள்ளேன். பொய் சொல்லி நாம்ப அவருக்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. நாம்ப அதை செய்ய மாட்டோம். அப்பிடி ஒரு நிலைமை புரட்சித் தலைவருக்கும் இல்லை. உண்மையை சொல்கிறோம்.
எங்களுக்கு வழிகாட்டியாக மூத்த ரசிகரான நீங்கள் விசயம் தெரியாமல் சொல்லிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உலகம் சுற்றும் வாலிபன் படம் 3 கோடி வசூல் செய்ததாக நீங்கள் எழுதியிருப்பது பற்றி விபரம் இருந்தால் எந்த அடிப்படையில் எழுதினீர்கள் என்று பதிவு போடவும். எல்லாருக்கும் தெளிவுபடுத்தவும். நன்றி.
http://i66.tinypic.com/155nu2t.jpg
இனிய நண்பர் திரு சுந்தரபாண்டியன்
மக்கள் திலகத்தின் திரை உலக உச்சபுகழ் சாதனைகள் பற்றி நாடே நன்கு அறியும் .
மற்றவர்கள் அறிந்தோ அறியாமலோ கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய அவசியமில்லை .
கடந்த காலத்தில் நான் பதிவிட்ட சில ஆவண பதிவுகளை நீங்கள் மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள் . உலகம் சுற்றும் வாலிபன் சரியான ஆதாரத்துடன் வந்த ஒரே பத்திரிகை விளம்பரம் அலை ஓசை.
1.11.1973 விளம்பரத்தில் மாநில அரசிற்கு 60 லட்சம் வரி செலுத்தப்பட்டது என்று அறிவித்தார்கள் .
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் முதல் வெளியீட்டிற்கு பிறகு 1973-1977 வரை இடைப்பட்ட காலத்தில் பல முறை பல திரை அரங்குகளில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஓடியது .
அந்த கால கட்டத்தில் நம்முடைய மன்றங்களின் நிர்வாகிகள் திரட்டிய வசூல் பட்டியல் மூலம் 5 ஆண்டுகளில் 3 கோடி வசூல் பெற்றுள்ளது என்ற தகவல் கிடைத்ததின் பேரில் அந்த பதிவை நான் மையத்தில் பதிவிட்டேன் . எனவே மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகும் வரை அதிக வசூல் பெற்ற படம் உலகம் சுற்றும் வாலிபன் .இதில் மாற்று கருத்திற்கு இடமே இல்லை .
எந்த காலத்திலும் நம்மை யாரும் தவறான வழியில் நடத்தவில்லை . மக்கள் திலகத்தின் நடிப்பு , திரை உலக சாதனைகள் யாவுமே மக்களால் ஏற்று கொள்ளப்பட்டது .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நேரத்தில் எல்லோரும் அவரின் உச்ச கட்ட புகழை மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள் . அது ஒன்று போதுமே .மனக் குமுறல்கள் சிலருக்கு தொடர்கதை .விட்டு விடுவோம் .
நன்றி எஸ்.வி. அய்யா.
ஈப்போ இந்தியர் சமூகநல கலை கலாச்சார அமைப்பின் ஏர்பாட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.
ஈப்போ – எழைகளின் தோழனாகவும் மக்களின் இதய நாயகனாகவும் தலைமுறை கடந்து வாழ்ந்து வரும் புரட்சி தலைவர் எனும் அடைமொழிக்கு சொந்தக்காரரான பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை ஈப்போ இந்தியர் சமூகநல கலாச்சார அமைப்பு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து வருவதாக அதன் தலைவர் பாலையா தெரிவித்தார்.
அரசியல் சார்ந்தும் தனது பொது வாழ்வியல் சார்ந்தும் தனித்துவமான சேவையாலும் திறன்மிக்க நடிப்பாலும் மக்கள் மத்தியில் அவர்களின் இதய நாயகனாய் தலைமுறை கடந்தும் கடல் கடந்தும் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை ஈப்போவில் ஏற்பாடு செய்வது பெருமிதமானதாய் அமைந்திருப்பதாக எம்ஜிஆர் பாணியில் தனது அரசியலையும் பொது வாழ்வியலையும் கடைபிடித்து வரும் பாலையா பெருமிதமாய் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாய் எம்ஜிஆரின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த வேளையில் இவ்வாண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை தனது அமைப்பு ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்.இந்நிகழ்வு வரும் 17.01.2017ஆம் தேதி மாலை 6.00 மணி தொடங்கி ஈப்போ நகராண்மை கழக மண்டபத்தில் இலவசமாக நடைபெற்றவிருப்பதாக கூறினார்.
எம்ஜிஆரின் பாடல்களுடன் ஆடல் பாடல் நிகழ்வோடு நடைபெறவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 10 கலைஞர்களுக்கு “நாடோடி மன்னன்” விருதும் சமூக சேவையாற்றிய 10 சேவையாளர்களுக்கு “எம்ஜிஆர்” விருதும் வழங்கப்படும் என்றும் இந்நிகழ்வு தொடர்பில் ஈப்போ மற்றும் அதன் சுற்றுவட்டார பொது இயகங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது செய்தியாளர்களிடம் பாலையா தெரிவித்தார்.
காலத்து வென்று தலைமுறை கடந்து இன்றைய இளைய தலைமுறையிடமும் ஆளுமை கொண்டிருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவிற்கு உள்ளூர் கலைஞர்களும் பொது மக்களும் திரளாக கலந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட பாலையா இந்நிகழ்வு தொடர்பில் மேல் விவரம் அறிய 019 5534777 எனும் எண்ணில் தொடர்புக் கொளுமாறும் பாலையா கேட்டுக் கொண்டார்.
http://i63.tinypic.com/28b4t45.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆண்டில்
இனிய நண்பர் திருலோகநாதன் அவர்கள்
http://i63.tinypic.com/35na5p2.jpg
இன்று பணி [பேங்க் ஆப் பரோடா- சென்னை] ஒய்வு பெறுகிறார் .
http://i64.tinypic.com/169p844.jpg
மக்கள் திலகத்தின் ஆசியோடு அவர் உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்க என்று மய்யம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் .
http://i63.tinypic.com/35na5p2.jpg
இன்று பணி ஓய்வு பெறும் நண்பர் லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஓய்வு நேரம் கிடைக்க உள்ளதால் புரட்சித் தலைவர் புகழ் பரப்பும் உங்கள் பணி மேலும் சிறப்படையவும் வாழ்த்துக்கள்.
வளத்தோடும் ஆரோக்கியத்தோடும் மனம் நிம்மதியுடனும் வாழ ஆண்டவர் புரட்சித் தலைவரின் அருளாசி எப்போதும் உங்களுக்கு கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
http://i63.tinypic.com/2d9bql4.jpg
http://i63.tinypic.com/21npm6e.jpg
http://tamil.thehindu.com/opinion/bl...ef=relatedNews
சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம்
Published: January 27, 2017 10:02 IST Updated: January 27, 2017 10:02 IST
என்னருமை தோழி..! 20: எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை!
டி.ஏ.நரசிம்மன்
இயக்குநர் சங்கரை இடைமறித்த நீங்கள், ‘‘இந்த பாட்டு, ஒரு ‘கல்ட் சாங்’ மாதிரி புகழ் பெறப் போகிறது. இதுவரை, பாங்க்ரா பாணி பாடல்கள் தமிழ் படங்களில் வந்ததே இல்லை. இந்த பாடல் நிச்சயம் உங்களுக்கு நல்ல பெயரைத் தரும். மேலும், பாங்க்ரா பாணி ஆடைகள் உங்களுக்கு பொருத்தமாக நன்றாக இருக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் உங்களால் சிறப்பாக ஆடமுடியும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் நீங்கள் வலியுறுத்தினீர்கள்.
அந்த யோசனையை அவரும் புன்முறுவ லுடன் ஏற்றுக் கொண்டார். ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.. சுகம்.. சுகம்..’ என்கிற பாடலுக்காக எம்.ஜி.ஆர் பாங்க்ரா நடனப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அவ்வப் போது நீங்களும் வந்து, அவரது நடனத்தை பார்த்து தங்கள் கருத்தை கூறினீர்கள்.
ஒரு மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு எல்.விஜயலட்சுமியுடன் எம்.ஜி.ஆர். ஒத்திகை யும் பார்த்தார். தன்னுடன் போட்டி போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆடுவதைக் கண்டதும் விஜயலட்சுமிக்கு ஒரே வியப்பு. படத்தில் அந்தப் பாடல் வந்தபோது ரசிகர்களிடையே ஒரே ஆரவாரம். ‘‘நம்ம வாத்தியார் பாங்க்ரா நட னத்தில் பட்டையை கிளப்பிட்டார்’’ என்று பூரித் தனர். பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட் டுக்கு உணவருந்த வந்திருந்த நடிகை எல்.விஜய லட்சுமியும், எம்.ஜி.ஆர். அந்தப் பாடலுக்காக எடுத்துக் கொண்ட பயிற்சிகள் பற்றி சிலாகித்து பேசினார். அதன் பிறகு எத்தனையோ தமிழ் படங்களில் பாங்க்ரா நடனம் இடம்பெற்றாலும் ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆரும் விஜயலட்சுமியும் ஆடிய நடனம் போல அமையவில்லை!
படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. ஆனால், 1968 வருடம் தமிழகத்தில் பெரும் போட்டி ஒன்று உருவானது. அதனால், சர்ச்சைகளும் எழுந்தன. ‘குடியிருந்த கோயில்’ பெரும் வெற்றியை பெற்று நூறு நாட்களை கடந்து ஓடியது. எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பும், உங்களின் துடிப்பான பங்களிப்பும் இனிமையான பாடல்களும் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கின.
இந்நிலையில், சிவாஜி கணேசன்-பத்மினி நடித்த, ஏ.பி. நாகராஜன் தயாரித்து, இயக்கி வெளியிட்ட, ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் தமிழகத்தை கடந்து இந்திய அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அந்த படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசனும், தில்லானா மோகனாம்பாளாக பத்மினியும், தவில் வித்வான் முத்துராக்கு பாத் திரத்தில் பாலையாவும், ஜில் ஜில் ரமாமணியாக மனோரமாவும் வெளுத்துக் கட்டினார்கள்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படம் தமிழகத் தின் பொக்கிஷ கலைகளை, மிக அழகாக வெளியுலகிற்கு சித்தரித்துக் காட்டியது. ‘நலந்தானா?’ என்று பத்மினி பாடியபடியே கண்களால் வினவ... முகத்தின் தசைகள் துடிக்க, நாதஸ்வரம் வாசித்தபடியே கேள்விக்கு பதில் தந்த சிவாஜி கணேசனின் நடிப்பை கண்டு நெகிழ்ந்து போயினர் ரசிகர்கள். சவடால் வைத்தி பாத்திரத்தோடு நாகேஷ் ஒன்றியிருந்தார். தவில் வித்வானாக நடிக்க வேண்டும் என்பதற்காக பாலையா தவிலே கற்றுக் கொண்டார்!
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்குத்தான் 1968-ம் ஆண் டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வருடத்திய தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது அறிவிப்பும் வெளியானது. சிறந்த நடிகையாக, ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியும், சிறந்த துணை நடிகையாக ‘ஜில் ஜில் ரமாமணி’ மனோரமாவும், சிறந்த துணை நடிகராக தவில் வித்வான் ‘முத்துராக்கு’ பாலையாவும் அறிவிக்கப் பட்டனர்.
சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டவர்... ‘குடியிருந்த கோவில்’ படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்த எம்.ஜி.ஆர்! இந்த அறிவிப்பு பரபரப்பினை ஏற்படுத்தியது. சிவாஜி கணேசன் காங்கிரஸுசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த தால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு கிளம்பியது. தனக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைக்கும் என்று எம்.ஜி.ஆரே எதிர் பார்க்கவில்லை. சிறந்த நடிகர் பட்டம் கிடைத் ததை எண்ணி பேரானந்தத்தில் எம்.ஜி.ஆர். திளைத்திருந்தார். ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டுக்கு அவர் ஆடிய அமர்களமான நடனம் தான் விருதுக்கு முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. உடனே, அந்தப் பாட்டுக்கு ஆடுமாறு ஆலோசனை சொன்ன உங்களை அழைத்து நன்றி தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.!
இங்கே, பின்னாளில் நடந்த ஒரு சுவையான சம்பவம். தமிழகத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆருக்குதான் விருது கிடைத்தது.
இது நடந்து 9 ஆண்டுகளுக்கு பின் மாறிவிட்ட காலச்சூழலில் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக ஆகிவிட்டார். அவர் முதல்வராக இருந்த நேரத்தில் ஒருமுறை ரஷ்யாவில் இருந்து கலாசாரக் குழுவினர் தமிழகம் வந்தனர். அவர்களுக்கு தமிழ் திரைப்படத்தைக் காட்ட முடிவு செய்யப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் நினைத்தார்களோ என்னவோ?...
எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்,’ ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘குடியிருந்த கோயில்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்களை ரஷ்யக் குழுவினருக்கு காட்டலாம் என்று அவரிடமே யோசனை தெரிவித்தனர். அதை சிரித்தபடியே மறுத்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் கலை மரபை விளக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு பெருந்தன்மையுடன் கூறினார். அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்தனர்!
மறுபடியும் 1968-க்கு திரும்புவோம். எம்.ஜி.ஆர். மற்றும் நீங்கள் இணைந்து நடித்தாலே படம் வெற்றிதான் என்கிற பேச்சையும் ஏற்படுத்தியது ‘குடியிருந்த கோயில்’! ஆனால், நீங்களும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ‘காதல் வாகனம்’ மற்றும் ‘தேர்திருவிழா’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவாஜி கணேச னுடன் நீங்கள் நடித்த ‘எங்க ஊர் ராஜா’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
அந்தச் சமயத்தில்தான்… குடியிருந்த கோயில் படத்தின் பெரும் வெற்றி தந்த மகிழ்ச்சியில் இருந்த எம்.ஜி.ஆர், தங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் விதத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை அறிவித்தார்….!
- தொடர்வேன்...
http://i65.tinypic.com/14ag9zd.jpg
http://tamil.thehindu.com/opinion/bl...ef=relatedNews
என்னருமை தோழி...!- 21: ‘வாத்தியாரை பார்த்துக்கோம்மா!’
டி.ஏ.நரசிம்மன்
எம்.ஜி.ஆர். பிரம்மாண்டமான ஒரு படத்தில் உங்களை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்ததற்கு முன்பாக தேசிய அளவிலும் தமிழக அளவிலும் கவனிக்க வேண்டிய ஒரு புதிய சூழல் உருவாகி இருந்தது.
1969... இந்த வருடம்தான் இந்திய துணைக் கண்டத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழகத்தின் பெரும் தலைவரான பேரறிஞர் அண்ணா, இரண்டு வருடங்களாக முதல்வராக திகழ்ந்து, திடீரென்று இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள் காலமானார்.
இதே 1969-ம் வருடம்தான், பழம்பெரும் பேரியக்கமான காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலைமை யிலும் மூத்த தலைவர்களான காமராஜர், நிஜலிங் கப்பா மற்றும் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட தலைவர் கள் தலைமையிலும் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக் கான திட்டங்களை இந்திரா செயல்படுத்தினார்.
இந்த ஆண்டில்தான், எம்.ஜி.ஆரும் அது வரை தான் பயணித்திருந்த கலையுலக பாதையை சற்றே மாற்றி, புதிய உணர்வுகளு டனும், எண்ணங்களுடனும், தனது திரைப்படங் களை உருவாக்க நினைத்தார். படங்களின் மூலம் அதிக வீரியத்துடன் தனது கொள்கை களையும் பிரச்சாரங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல அவர் முடிவெடுத்ததும் 1969-ம் வருடத்தில்தான்.
அந்த வருடம், எம்.ஜி.ஆர். நடித்து வெளி யான முக்கியமான இரண்டு படங்களிலும் நீங்களே கதாநாயகி. பெற்றால்தான் பிள்ளையா, படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, எம்.ஆர். ராதாவினால் எம்.ஜி.ஆர், சுடப்பட, அதன் பிறகு ‘அரச கட்டளை’ படத்தில் மீண்டும் அவர் நடிக்கத் துவங்கினார். அப்போது, படப்பிடிப்பு இடைவேளையின்போது நிகழ்ந்த சில சுவையான சம்பவங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து, கூட்டம் கூட்டமாக வண்டிகளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைக் காண மக்கள் கூட்டம் வருவது வழக்கம். அம்மாதிரி மக்கள் வந்த போது, ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆரை அணைத்து, அவர் முகத்தை கையால் வழித்து திருஷ்டி சுற்றி கண்ணீர் விட்டுக் கதறினார். ‘‘ராசா! உன்னை போய் சுட்டாங்களே..!’’ என்று அந்த மூதாட்டி பாசத்துடன் அரற்றியதை வியப்புடன் நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தீர்கள்!
எம்.ஜி.ஆரைக் காண வந்த கூட்டம், உங்களுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ‘‘வாத்தியாரை பத்திரமாக பார்த்துக்கோம்மா...’’ என்று சொல்லிவிட்டுப் போனதையும் வியப் புடன் கவனித்து வைத்துக் கொண்டீர்கள். அம்மாதிரி தருணங்களில் உணர்ச்சிவசப்பட்ட எம்.ஜி.ஆரின் கண்களும் கலங்கியிருந்தன.
ஒருநாள் இதுபற்றி எல்லாம் பேச்சு வந்தபோது, எம்.ஜி.ஆரும் மிக நெகிழ்ந்திருந்த தருணத்தில், ‘‘பெருந்தலைவர் காமராஜர், ஒரு மாணவர் தலைவரிடம் விருதுநகர் தொகுதி யில், 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.. ’’ என்று நீங்கள் பேச்சு வாக்கில் சொன்னீர்கள். 1967-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைவர் காமராஜர், தி.மு.க. மாணவர் தலைவர் பி.சீனிவாசனிடம் தோற்றது பெரும் பரபரப் பினை ஏற்படுத்தியிருந்தது.
நீங்கள் இவ்வாறு கூறியதும், எம்.ஜி.ஆரின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘இந்தி எதிர்ப்பு பிரச் சாரத்தினாலோ, காங்கிரஸ் கட்சி அரிசி பஞ் சத்தை சரியாகக் கையாளவில்லை என்ப தாலோ, தி.மு.க.வுக்கு மக்கள் வாக்குகளை அள்ளித் தந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் சுடப்பட்டதால் எழுந்த அனுதாபம்தான் வெற்றிக்கு முக்கிய காரணம்’’ என்று நீங்கள் கூறியபோது எம்.ஜி.ஆர். அதனை ஒப்புக்கொள்ளவில்லை!
‘‘நீங்கள் வேண்டுமானால், உங்களைக் காண வரும் மக்களிடம் பேசிப் பாருங்கள். அவர்களது உணர்வுகளை சோதித்துப் பாருங்கள்...’’ என்று நீங்கள் விடாப்பிடியாகச் சொல்ல, எம்.ஜி.ஆரும் மக்கள் கருத்தோட்டத்தை அறிய முடிவு செய்தார். பாம்படம் போட்டு வெள்ளை நார்மடி சேலையில் வந்து இறங்கிய மூதாட்டிகளிடம், ‘‘எதற்காக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தீர்கள்?..’’ என்று எம்.ஜி.ஆர் கேட்க, ‘‘மகாராசா! என்னய்யா இப்படி கேட்டுப்புட்டீங்க! உங்களைப் போயி சுட்டாங்களே...’’ என்று மூதாட்டிகள் எம்.ஜி.ஆரை சுற்றி நின்று கலங்கினார்கள்.
குறிப்பாக விருதுநகரிலிருந்து சிலர் வந்தபோதும், இதே கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்! ‘‘அவ்வளவு பெரிய தலைவரை தோற்கடிச்சுட்டீங்களே?’’ என்று அவர் வினவ, ‘‘பின்னே... உங்களைச் சுட்டுப்புட்டாங்களே.. அது தப்புனு காட்டத்தான் சூரியனுக்கு ஒட்டு போட்டோம்.! ’’ என்று பதில்கள் வந்தன.
1969-ல் பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் மு.கருணாநிதி முதல்வராகியிருந்த நேரம்... ‘அடிமைப் பெண்’ மற்றும் ‘நம் நாடு’ திரைப் படங்கள் அந்த வருடத்தில் வெளியிடப்பட்டன. குறிப்பாக ‘நம் நாடு’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கேற்ப வசனங் கள், பாடல்கள், பஞ்சாயத்து தேர்தலில் அவர் வெற்றி பெறுவது என்று அரசியல் நெடி அதிகமாக இருந்தது!
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நாவலர் நெடுஞ்செழியன்தான் சீனியாரிட்டி முறையில் முதல்வராக பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க.வின் தேர்தல் நிதிக்கு எம்.ஜி.ஆர் நன்கொடை அளிக்க முன்வந்த போது, அண்ணா அவரிடம் நிதியைப் பெற்றுக் கொள்ள மறுத்து, ‘‘தம்பி! உன் நிதி எங்கும் போய்விடாது. தேர்தல் பிரசாரத்தில் உனது முகத்தை வந்து காட்டினாலே போதும்.. தொகுதிக்கு 30,000 வாக்குகள் கிடைக்கும்’’ என்று கூறியிருந்தார். அந்த அள வுக்கு அண்ணாவின் நம்பிக்கையையும் மக்க ளின் அன்பையும் பெற்றிருந்த எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்றவரே முதல்வர் ஆக முடியும் என்கிற நிலை இருந்தது!
இதை உணர்ந்து, கருணாநிதியும் எம்.ஜி.ஆரின் ஆதரவினை நாட, அவரும் முழு மனதோடு தனது ஆதரவை கருணாநிதிக்கு அளித்தார். ஒரு சில முணுமுணுப்புக்கள் இருந்தாலும் அதையெல்லாம் சுலபமாகக் கடந்து கருணாநிதி முதல்வரானார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் குணமாகி வந்த பிறகு, ஏற்கனவே பாதியில் நின்றிருந்த ‘அடிமைப் பெண்’ பட வேலைகளை எம்.ஜி.ஆர். மீண்டும் துவக்கினார். அதுவரை எடுக்கப்பட்டிருந்த காட்சிகளில், ஜீவா பாத்திரத் தில் சரோஜாதேவி நடித்திருந்தார். நீங்களோ பவளவல்லி என்கிற அரசி பாத்திரத்தில் நடித் திருக்க, முத்தழகி என்கிற இளவரசி பாத்திரத் தில் கே.ஆர். விஜயா இடம் பெற்றிருந்தார்.
மீண்டும் புதிதாக அந்த படத்தை எம்.ஜி.ஆர். முழு மூச்சோடு தயாரிக்கத் துவங்கினார். துப்பாக்கிச்சூடு காரணமாக எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ‘இனிமேல் படங்களில் அவரால் நடிக்க முடியாது’ என்ற செய்தி பரவியது. அந்த சமயத்தில், ‘‘எம்.ஜி.ஆருடன் இனி சரோஜா தேவி நடிக்க மாட்டார்’’ என்று சரோஜா தேவியின் தாயார் அறிவித்த நிலையில், ‘அடிமைப் பெண்’ படத்தில் இருந்து சரோஜா தேவி நீக்கப்பட்டார். படத்தில் ஜீவா பாத்திரத்தை உங்களுக்கு அளித்து, தனக்கு நிகரான முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். உங்களுக்கு ஏற்படுத்தினார்! கே.ஆர். விஜயாவையும் நீக்கிவிட்டு, ராஜயை அந்த வேடத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.
மந்திரவாதியாக சோ, மங்கம்மாவாக பண்டரிபாய் இவர்களோடு... ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், புஷ்பமாலா என்று நடிக, நடிகைகளை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார்.
அப்போதுதான், நீங்கள் ஒரு வேண்டுகோளை எம்.ஜி.ஆரிடம் முன்வைத்தீர்கள்...!
- தொடர்வேன்...
http://i66.tinypic.com/112dhlz.jpg
http://tamil.thehindu.com/opinion/bl...ef=relatedNews
என்னருமை தோழி...!- 22: உங்களால் கிடைத்த வாய்ப்பு!
டி.ஏ.நரசிம்மன்
உங்களுடனான எனது சந்திப்புகளின் போது பெரும்பாலும், உங்களது திரைப்பட வாழ்க்கை, இலக்கியப் பணிகள் மற்றும் அரசியல் வாழ்க்கைஎன்று பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். இடையிடையே தங்களது சிறு வயது நிகழ்வுகளையும், தங்களது ஆன்மீக நம்பிக்கைகளையும் பகிர்ந்துள்ளீர்கள். திரைப்பட உலகில் நீங்கள் நட்சத்திரமாக ஜொலித்த காலங்களே, குதூகலமும், மகிழ்ச்சியும் நிறைந்த நாட்கள் என்று பலமுறை நீங்கள் கூறியது உண்டு.
திரைப்பட உலகில் தங்களின் அனுபவங்கள் பற்றிய அரிய தகவல்களையும் தெரிவித்தீர்கள். அவை சுவையானவை மட்டுமல்ல, வெளியுலகுக்கு தெரிந்திராதவை. எனவேதான், முதலில் உங்களது திரை வாழ்க்கைக்கு இந்த தொடரில் முக்கியத்துவம் அளித்து
வருகிறேன். தங்களது அரசியல் வாழ்வை பற்றி எப்போது எழுதப்படும் என்று மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைபேசி மூலமும் ஏராளமான வாசகர்கள் கேட்கின்றனர்.
ராமாயணத்தில் சுந்தர காண்டம் விவரிக்கப்பட்ட பிறகுதானே யுத்த காண்டத்திற்கு போகமுடியும்? தங்களது அரசியல் யுத்த காண்டம் துவங்குவதற்குமுன், தங்களை வீழ்த்தி வனவாசம் அனுப்ப முயன்ற ஆரண்ய காண்டத்தை பற்றிக்கூட தாங்கள் விவரித்தீர்கள் அல்லவா?
இதோ தங்களது அரசியல் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தக் காரணமான ‘அடிமைப் பெண்’ திரைப்படம் பற்றி தாங்கள் கூறிய
விவரங்களுடன், தங்களது வாழ்வில் பிரச்சினைகளை உண்டாக்கிய ஆரண்ய காண்டமும் துவங்குகின்றது.
1966-ம் வருடத்தில் ‘அடிமைப் பெண்’ துவக்கியிருந்த எம்.ஜி.ஆர். பின்னர் அந்த படப்பிடிப்பினை நிறுத்திவிட்டார். கதாநாயகியாக சில காட்சிகளில் நடித்திருந்த சரோஜாதேவி திருமணம் செய்துகொண்டு சென்றது ஒரு காரணம். அதில் நடித்திருந்த நடிகை ரத்னா
படப்பிடிப்பின்போது, குதிரை ஒன்றிலிருந்து விழுந்து அடிபட்டு கொண்டதும் ஒரு காரணம். 1968-ல் மீண்டும் அந்த படப்பிடிப்பினை துவக்கிய எம்.ஜி.ஆர். முன்பு எடுத்திருந்த பகுதிகளை நீக்கி விட்டு, புதிதாக சில மாற்றங்களுடன் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். கதா
நாயகி சரோஜாதேவிக்கு பதிலாக தங்களையே ஜீவா பாத்திரத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். ஏற்கனவே, ஒப்பந்தமானபடி பவளவல்லி என்கிற அரசி பாத்திரத்தையும் தாங்களே செய்தீர்கள். ஆக, உங்களுக்கு படத்தில் இரட்டை வேடம்.
ரத்னா நடித்த பாத்திரத்தில் ஜோதி லட்சுமியை எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார். முத்தழகி பாத்திரத்தில் நடித்த கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக நடிகை ராஜயை தேர்ந்தெடுத்தார். மந்திரவாதி பாத்திரத்தில் சோவை வழக்கம் போல் நடிக்க வைத்தார். அப்போதுதான், வைத்தியர் பாத்திரம் ஒன்றிற்கு யாரை போடுவது என்கிற பேச்சு எழுந்தது.
அப்போது நீங்கள், எம்.ஜி.ஆரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தீர்கள், ‘‘நடிகர் சந்திரபாபுவையே வைத்தியர் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாமே?’’ என்று நீங்கள் சொன்னதும் எம்.ஜி.ஆர். உங்களை உற்று நோக்கினார்.
நடிகர் சந்திரபாபுவிற்கும், எம்.ஜி.ஆருக்கும் அப்போது சுமூக உறவு இல்லாத சமயம். அவர்கள் இருவரிடையே ‘மாடி வீட்டு ஏழை’ படம் தொடர்பாக பிரச்சினை மூண்டிருந்தது. அந்த படத்தை நண்பர்களுடன் தயாரித்து, தானே அதை இயக்கிக்கொண்டிருந்தார் சந்திரபாபு.
எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்த சந்திரபாபு தனது படத்துக்கு எம்.ஜி.ஆரையே கதாநாயகனாக போட்டார்! நாயகி, சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர் நடிகை சாவித்ரி. முதல் நாள் பட பூஜைக்கு சாவித்ரிதான் 25 ஆயிரம் ரூபாயை அளித்திருந் தார். முதல் நாள் பூஜைக்கு வந்த எம்.ஜி.ஆர். பின்னர், சில நாட்கள் சில காட்சிகளில் நடித்தார். பல படங்களில் நடித்ததால் ‘பிஸி’யாக இருந்த அவர், படப்பிடிப்பு தேதிகள் தொடர்பாக தனது ‘கால்ஷீட்’ குறித்து தன் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியிடம் பேசுமாறு சந்திரபாபுவிடம் கூறியிருந்தார்.
அந்த சமயம், சென்னை கிரீன்வேஸ் சாலை, கேசவப்பெருமாள்புரத்தில் சந்திரபாபு சொகுசு பங்களா ஒன்றை கட்டி வந்தார். 48 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட அந்த பங்களாவில் மாடியில் இருந்த தன் படுக்கையறைக்கு சாலையில் இருந்து நேராக செல்லும்படி ஒரு பாதை வேறு அமைத்திருந்தார். ‘மாடி வீட்டு ஏழை’ படத்துக்காக விநியோகஸ்தர்களிடம் வாங்கியிருந்த பணத்தையும் போட்டு பங்களா கட்டிவந்தார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்’ விஷயமாக சக்ரபாணியிடம் பேச, தனது வெளிர் பச்சை நிற பியட் காரில் சந்திரபாபு சென்றார். அங்கே சக்ரபாணியுடன் தகராறு ஏற்பட்டு அவரை நாற்காலியினால் தாக்கப் போக, நிலைமை ரசாபாசம் ஆகிவிட்டது. ‘‘அருகிலிருந்த நண்பர்கள் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். அல்லது...’’ என்று சந்திரபாபு இந்த சம்பவத்தைப் பற்றி பின்னாளில் குறிப்பிட்டார்.
நட்பு பாதிக்கப்பட்ட நிலையில், சந்திரபாபுவும் எம்.ஜி.ஆரை அணுகவில்லை. எம்.ஜி.ஆரும் அவருடன் இதுபற்றி பேசவில்லை. ‘மாடி வீட்டு ஏழை’ படம் நின்று போனது. ஆனாலும், பிறகு சந்திரபாபுவின் நிலை அறிந்து ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’ ஆகிய தனது படங்களில் சந்திரபாபுவுக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். என்றாலும், சந்திரபாபுவுக்கே உரித்தான அவரது கிண்டல், கேலிகள், இருவருக்குமிடையே இடைவெளியை உண்டாக்கின.
இம்மாதிரி சூழ்நிலையில்தான், நீங்கள் எம்.ஜி.ஆரிடம், வைத்தியர் வேடத்திற்கு சந்திரபாபுவை போடலாம் என்று கூறினீர்கள்.
எம்.ஜி.ஆர். தங்களை விசித்திரமாக பார்த்தார்.
‘‘அம்மு! பாபு என் அண்ணனை அவமதித்திருக்கிறார். அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை. தொடர்ந்து என்னை அவமதிக்கும் வகையில் கருத்து கூறி வருகிறார். அப்படி யிருக்கும்போது, வைத்தியர் வேடத்தில் அவரை போடும்படி கூறுகிறாயே?....’’ என்று சற்றே வெறுப்பும் உஷ்ணமுமாகக் கூறினார்.
‘‘உணர்வுகளின் உந்துதலில் பலர் தவறுகள் செய்கிறார்கள். உங்களை துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர். ராதா மீதே உங்களுக்கு அவ்வளவு கோபம் இல்லையே. சந்திரபாபு சற்றே ஆர்வக் கோளாறினால் சில சமயம் எல்லை மீறிவிடுகிறார்...’’ என்று சொல்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொஞ்சியதை நீங்கள் எடுத்துக் கூறியதும்... எம்.ஜி.ஆர். சிரித்து விட்டார்.
பிறகு, ‘‘சரி.. உனக்காக, பாபுவுக்கு
மறுபடியும் ஒரு வாய்ப்பு தருகிறேன்...’’
என்று கூறி, இயக்குனர் கே.சங்கரிடம், வைத்தியர் வேடத்திற்கு சந்திர
பாபுவை ஒப்பந்தம் செய்யச் சொன்னார். அதைக் கேட்டதும், சந்திரபாபுவுக்கே ஆச்சரியம். படப்பிடிப்பில் உங்களால்தான் அந்த வாய்ப்பு தனக்கு கிட்டியது என்பதை அறிந்து உங்களுக்கு நன்றி சொல்ல வந்தபோது, நீங்கள் அவருக்கு எச்சரிக்கை செய்தீர்கள்.
‘‘பாபு! நாம் நல்லதை நினைத்துக்
கொண்டு பேசும் பேச்சு, செய்யும் செயல் ஆகியவை சில நேரம், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிடும். பிறகு அதற்கு விளக்கம் கொடுக்கக் கூட நமக்கு வாய்ப்பு கிட்டாது. உங்கள் வெள்ளை உள்ளம் சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது. வார்த்தைகளில் கவனம் தேவை. டேக் கேர்...’’ என்று ஆங்கிலத்தில் கூற, சந்திரபாபுவும் ‘‘டோன்ட் ஒர்ரி, அம்மு. கவனமாக இருக்கிறேன்!’’ என்று ஏற்றுக் கொண்டார்.
‘அடிமைப் பெண்’ படத்தில் தனக்கு நிகராக, உங்களுக்கு முக்கியத்துவம் தந்தார் எம்.ஜி.ஆர்.!
ஒரு நாள் உங்களை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்தார். நீங்களும், தாய் சந்தியாவும் அங்கு போனபோது. ‘‘நான் புதிதாக வளர்க்கும் ஒரு பிராணியை காட்டுகிறேன்..வா..’’ என்று உங்களை அழைத்துப் போனார். அங்கு சென்று பார்த்த நீங்கள் அலறாத குறையாக அரண்டுபோய் நின்றீர்கள்...!
தொடர்வேன்...
http://i67.tinypic.com/6fwahc.jpg
வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெறும் மக்கள் திலகம் பக்தர் திரு.லோகநாதன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
http://i63.tinypic.com/x5tuep.jpg
புத்தகம் வாங்கிவிட்டேன். உயர்த தரமான வளவளப்பான தாளில் புத்தகம் அட்டகாசமாக இருக்கிறது. அட்டையில் புரட்சித் தலைவரின் அழகு கண்ணைப் பறிக்கின்றது. புரட்சித் தலைவரின் பெருமைகளை பாடுவதோடு அவரைப் பற்றிய தவறான வதந்திகள், பொய் பிரசாரங்கள் ஆகியவற்றுக்கும் இந்தப் புத்தகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. புரட்சித் தலைவரின் பக்தர்களுக்கு சரீயான விருந்து படைத்திருக்கிறது. இந்து பத்திரிகை நிறுவனத்துக்கும் ஸ்ரீதர் சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி. நன்றி. நன்றி.
http://i63.tinypic.com/x5tuep.jpg
http://i65.tinypic.com/11slfgz.jpg
மக்கள் திலகம் நூற்றாண்டு விழா முன்னிட்டு இந்து நாளிதழ் வெளியிட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் -100 புத்தகம் விற்பனைக்கு வந்த 5000 பிரதிகளும் வெளிவந்த நான்கு நாட்களில் விற்று தீர்ந்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .
மக்கள் திலகம் வாழ்ந்த காலத்திலும் சரித்திர சாதனைகள் நிகழ்த்தினார் .
மக்கள் திலகம் நூற்றாண்டு விழா நேரத்திலும் சாதனைகளை தொடர்கிறார் .
பணி நிறைவுபெற்ற அன்பு நண்பர்
திரு லோகநாதன் அவர்களுக்கு
எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
http://s24.postimg.org/rswhivbmt/IMG_3381.jpg
Courtesy - Mr.S.Kumar - Madurai
http://s23.postimg.org/reowrum1n/IMG_3382.jpg
Courtesy - Mr. Sathiya.
நாளை முதல்
கோவை
ராயல் திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
காவியம்
புதுமைப்பித்தன்
http://i65.tinypic.com/2072ijb.jpg
சிலையிலும் கூட புரட்சித் தலைவர் எவ்வளவு அழகு. உயிரோட்டம் உள்ள சிரிப்பு
http://i68.tinypic.com/2qitmrn.jpg
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் இன்று முதல் தர்மம் காத்த தலைவரின் தர்மம் தலை காக்கும்.