-
கவிஞர் வாலி-18th July- Memories
வாலியின் மிக சிறந்த வரிகள்.
தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.
கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே.
மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக
முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ
நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்
கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ
மாளிகையே அவள் வீடு மரகிளையில் என் கூடு
மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் ,பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .
எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .
நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)
1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.
2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)
3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.
4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.
5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.
வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.
ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.
M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)
இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.
வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .
-
வாலி- நடிகர்திலகத்தின் நடிப்புக்கு மிக பெரிய ரசிகர் மட்டுமில்லாமல், அதை தன்னை அப்போது ஆதரித்து கொண்டிருந்த நடிகரிடம் (அப்போது சிவாஜி-ஜெமினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.)இதை வெளிப்படையாகவும் சொன்னாராம்.
வாலி எழுதிய நடிகர்திலகம் படங்களில் என்னை கவர்ந்தவை- அன்புக்கரங்கள்,பேசும் தெய்வம்,இருமலர்கள்,கலாட்டா கல்யாணம்,செல்வம்,இருமலர்கள் ,உயர்ந்த மனிதன்.நம்மால் மறக்க முடியாத ஒருதரம் ஒரே தரம்(சுமதி என் சுந்தரி) எழுதியவர் வாலியே.
சில மறக்க முடியாத பாடல்கள்.
https://www.youtube.com/watch?v=rbcV4_Fzm58
https://www.youtube.com/watch?v=hyLXwmeg6Vw
https://www.youtube.com/watch?v=F_6iBSY8yuw
https://www.youtube.com/watch?v=6HIOLu2t9Uc
-
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0b&oe=59F341AE
Sundar Rajan
சென்றவாரம்
சென்னை குலுக்கிய
மக்கள்தலைவரின் எங்கமாமாவை
தொடர்ந்து,
... ஜூலை 21 முதல்
சென்னை மகாலெட்சுமியில்
நடிகர்திலகத்தின் 300 முத்துக்களில் 7 முத்துக்கள் உங்களை மகிழ்விக்க வருகிறது.
வாரம் 1 ஆனால் 7 மக்கள்தலைவரின் படங்கள். பார்க்க பார்க்க தெவிட்டாத மாபெரும் வெற்றிப்படங்கள்.
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம், நமது நடிகர்திலகத்தைத் தவிர வேறு யாரால் முடியும்.
அன்பிற்குரிய, சென்னை இதயங்களே,
வழக்கம் போல் உங்கள் ஆர்ப்பாட்ட ஆரவாரம்
இந்த வாரமும் தொடரட்டும்.
-
Jahir Hussain
நேற்று போல இருக்கிறது,,, நடிகர் திலகம் மறைந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டது,,, மறக்க முடியாத மாமனிதராகவும் நினைக்க நினைக்க நினைவு கூறப்படும் உயர்ந்த நடிகராகவும்,,, பந்தபாசம் மிக்க குடும்பத் தலைவராகவும்,,, ரியல் ஹீரோவாகவும் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்,,, முதலமைச்சராக பதவியில் இருந்தபோது மறைந்த தலைவர்கள் மூவர்,,, பேரறிஞர் அண்ணா அவர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்,, அண்ணா அவர்கள் மறைவின் போது காட்சி ஊடகங்கள் இல்லை,,, ஆகவே கின்னஸில் பதிக்கப்படும் அளவுக்கு ஜனகோடிகள் சங்கமம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தது,, இன்னொரு காரணம் எதிர் பாரா மரணம்,,, எம் ஜி ஆர் அவர்கள் மரணத்தின் போது ஓரளவுக்குத்தான ஊடக வெளிச்சம் இருந்தது,, ஜனத்திரள் வந்தது,, ஜெயலலிதா மரணம் கொஞ்சம் மாறுபட்டது,,, ஆனால் நடிகர் திலகம் மரணம் கொஞ்சம் வித்தியாசமானது,, மரணிக்கும் போது எவ்வித பதவிப் பின்புலமும் இல்லை,,, காட்சி ஊடகங்கள் தெரு தெருவுக்கு வீடு வீட்டுக்கு வந்து விட்டது,, அதோடு அல்லாமல் பெரும்பாலான தொலைக் காட்சிகள் லைவ் டெலிகாஸ்ட் செய்தன,,, அதையும் தாண்டி சென்னை குலுங்கியது ,,, ஒவ்வொருவர் வீட்டிலும் தன் சகோதரனை தந்தை ஸ்தானத்தில் வைக்கப்பட்ட ஒரு மாமனிதரை இழந்த சோகம் படிந்த முகங்களோடு வலம் வந்தார்களே ஏன்?
எவ்வித பதவியும் வகிக்காமல் அரசு மரியாதையோடு துப்பாக்கி குண்டுகள் முழங்க உடலெரிக்கப்பட்டது ஏன்? காரணம் இருக்கிறது,,, உலகெங்கும் ரசிகர்கள் கட்சி மாறுபாடு இன்றி அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்கள்,,, எம் பிக்கள் எம் எல் ஏக்கள் அண்டை மாநில முக்கிய பிரமுகர்கள் சமகால நண்பர்கள் நடிப்புலகில் இருப்பவர்கள் நாடக நடிக நடிகையர்கள் மொத்த தொழில் நுட்ப கலைஞர்கள் என் பட்டியலில் விடுபட்ட முக்கிய பிரமுகர்கள்,, அத்துணை பேரும் இந்த ஒற்றை மனிதருக்கு ரசிகர்கள்,, அவரவர் வீடுகளில் கோடிக்கணக்கானோர் தொலைக் காட்சிகளில் பார்க்கிறார்கள்,, செய்தித் தாள்களில் பார்க்கிறார்கள்,, பிறகு ஏன் நேரிடையாக அஞ்சலி செலுத்த அத்தனை கோடி மனிதர்கள் வந்தனர்,, அவர்தான் சிவாஜி,, கலைஞர்களின் தலைமகன்,,, எல்லார் உள்ளங்களிலும் உள்ளவர் சிவாஜி,, அறிஞர் அண்ணா மறைவின் போது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி முதலமைச்சர் அண்ணா மரணம் என்றும் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா மரணித்த போது முதல்வர் எம் ஜி ஆர் மரணம் முதல்வர் ஜெயலிதா மரணம் என்று தலைப்புச் செய்திகள் வந்தது,, சிவாஜி மரணித்த போது "இமயம் சரிந்தது",, வீழ்ந்தது கல்தூண் என்று செய்தி வெளியிட்ட செய்தித்தாள்கள் நிறைய்ய,,, மன்னவன் சென்றானடி என்று ஒரு வார இதழ் அஞ்சலி செய்தி வெளியிட்டது,,, அவர்தான் சிவாஜி,, நடிகராக வாழும்போது சிறந்த நடிகர்,, அரசியலில இருந்த போது அப்பழுக்கற்ற தலைவர்,, அன்னை இல்லத்தில் பாசமுள்ள குடும்பத் தலைவர்,, நண்பர்களுக்கு இனிய நட்பாளர்,,, இப்படி அவர் வாழ்நாள் முழுவதும்" நல்ல" "சிறந்த" "உயர்ந்த" என்ற அடை மொழிகளோடு வலம் வந்தவர்,, ஆதனால்தான் அவர் மறைந்தபோது அவர் பெயரை குறிப்பிடாமல் அவர் அடைமொழிகளை குறிப்பிட்டு செய்தி வெளிட்டதை பார்க்க முடிகிறது,, பெருந்தலைவரின் மரணமும் உலுக்கியெடுத்த ஒன்றுதான்,,, பெருந்தலைவருக்கு பெருந் தொண்டராக என்றுதன்னை அடையாளப்படுத்தக் கொண்டாரோ அன்று முதல் அவர் கண்மூடும் வரை இவர் காலம் முடியும் வரை அவர் அடியொற்றி நடந்தார்,,, தேர்தல் வெற்றிகளில் மமதை கொள்ளாது இருந்ததும் தோல்விகளின் முகட்டில் முனை முறியாது நின்றதும் கர்மவீரருக்கு எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளையும் இவரும் பெற்றார்,,, அப்பழுக்கற்று நின்றார்,, அதனால்தால் மரணத்தை வென்று இன்று வரை மக்கள் மனதில் வாழ்கிறார்,,
ஜூலை 21 என்பது நினைவு நாள் அல்ல,, மறக்கப் பட்டவர்களுக்கே ஆண்டுக்கொரு தினம் அவர்தினம்,, என்றென்றும் நினைக்கப்படும் மனிதருக்கு ஆண்டு முழுதும் நினைப்பு தினம்,, நல்ல மனதில் குடியிருக்கும் நடிகராண்டவா,, நினைவில் நிலைத்திருந்து நாளும் வேண்டவா!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...92&oe=59FF130A
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a8&oe=59F9F315
Sundar Rajan
நாளை முதல்
மக்கள்தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு நாளை 21.07.2017 வெள்ளி முதல்
நடிகர்திலகத்தின்
சூப்பர்ஹிட் காவியம் ...
வைரநெஞ்சம்
மதுரை சென்ட்ரலில் தினசரி 4 காட்சிகள்.
தலைவர் சும்மாவே ஸ்டைலில் கலக்குவார்.
அதிலும் வைரநெஞ்சம் திரைப்படத்தில் துப்பறியும் அதிகாரி,
சொல்ல வேண்டுமா படம் முழுவதும் ஸ்டைலிஷ்
சிவாஜியை காண்
அன்பு இதயங்களே, விரைவோம் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு....
-
-
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7f&oe=59F5DE01
Sundar Rajan
களை கட்டும் மதுரை,
எங்கு காணினும் சிவாஜி விழா,
எங்கு காணினும் சிவாஜி அவர்களின் சுவரொட்டி...
... ஆம், அன்பு இதயங்களே,
ஜூலை 21 காலை 9 மணிக்கு
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி.
மாலை 5 மணி
மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற புதிய அமைப்பு துவக்கவிழா.
ஜுலை 22 மாலை
தமிழருவிமணியன் எழுதிய
'திரையுலக தவப்புதல்வன்சிவாஜி'
என்ற நுால் வெளியீட்டு விழா.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ஜூலை 23 மாலை
மக்கள்தலைவரின் நினைவுநாளையொட்டி மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வைரநெஞ்சம் ரசிகர்கள் சிறப்புக் காட்சி.
அன்பினால் நம்மை ஆண்ட மக்கள்தலைவருக்கு தவிர, அரசாண்டவர்களுக்கு கூட இப்படி தொடர் நிகழ்ச்சி நடக்காது.
-
-
தன்நிகரில்லா வசூல் சக்கரவர்த்திசிவாஜி கணேசனின்
203 வது திரை காவியம் இமயம்
வெளிவந்த நாள் இன்று ( 21 யூலை 1979)
https://i.ytimg.com/vi/f5-DuMgzuWI/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/t768HvHUCcc/maxresdefault.jpg
-
யூலை 21
16 வருடங்களுக்கு முன்
என் உயிர் பிரிந்த நாள்
என் உடலில் உந்தன் உயிர்
பிரியவில்லை மறப்பதற்கு
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ed&oe=5A031C94
-
Sekar Parasuram
நடிகர் திலகம் நினைவு தினம்
சிறப்பு நிகழ்ச்சிகள்,
நியூஸ் 7 சேனலில் காலை 9:30am to 10 am & 5:30 pm to 6pm
" சிவாஜி ஸ்பெஷல் "
... https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9d&oe=5A0A46D7
-
Sekar Parasuram
... கலைஞர் தொலைக்காட்சியில்
10 am to 10:30am & 6:30pm to 7 pm
" காலத்தால் அழியாத காவிய நாயகன் டாக்டர் சிவாஜி கணேசன் "
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...18&oe=59F56230
-
-
-
-
-
-
-
-
-
-
-
Nagarajan Velliangiri
இரட்டை வேடம் என்பது தமிழ்த்திரை உலகில் ஒன்றும் புதிய சமாச்சாரம் அல்ல. அந்தக்காலப் PU சின்னப்பாவில் இருந்து நேற்று முளைத்த சிம்பு வரை எண்ணற்ற நடிகர்களும், ஏன் நிறைய நடிகையரும் கூட இரட்டை வேடம் போட்டுப் பல படங்களில் நடித்துள்ளனர்.
இரட்டை வேடம் என்றால் குறிப்பிட்ட அந்த நடிகரோ அல்லது நடிகையோ இரண்டு வெவ்வேறு மனிதர்களாக நடிப்பதாகத்தான் நாம் புரிந்து கொள்வோம். அந்த இரண்டு தோற்றங்களையும் வேறுபடுத்திக் காட்டப் பலவித யுக்திகள் கையாளப் பட்டிருக்கும்.முகத்தோற்றம், உடல் தோற்ற...ம், பாடி லாங்குவேஜ், தலை அலங்காரம், உடையலங்காரம், மேனரிசம், இடது கை வலது கைப் பழக்கம், பேச்சு மாடுலேசன், படிப்பறிவு போன்ற விசயங்களில் இருவருக்கும் இடையில் சில வித்தியாசங்களைக் காண்பித்து இரு உருவங்களையும் வெவ்வேறு மனிதர்களாகக் காண்பிக்கும் நடைமுறைதான் சினிமா உலகில் இருக்கிறது. (குறுமிளகு போன்ற ஒரு சிறிய மச்சத்தை மட்டும் கன்னத்தில் ஒட்டி, அடையாளம் தெரியாத அளவு அவர் வேறு நபர் என்று நம்பச் சொல்லி, பார்ப்பவர் காதுகளில் பல மைல் நீளப் பூவைச் சுற்றிய இரட்டை வேடங்களைப் பற்றி இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை)
ஒரே தோற்றம், ஒரே உருவம், ஒரே மாதிரி உயரம், ஒரே உடையலங்காரம், ஒரே மாதிரி பேச்சு, கண்ணாடியில் பார்த்தால் தெரியும் பிம்பம் மாதிரி அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு பேர். எந்த விதமான சிறு வித்தியாசமும் தோற்றத்தில் இருக்காது. ஆனால் பார்த்த உடனே யார் பார்த்திபன் யார் விக்ரமன் என்று பளிச்சென்று வித்தியாசம் தெரியும். நீ பார்க்கும் கண் பார்வையிலேயே இருவரில் இவன் யார் அவன் யார் என்று வேறுபடுத்திக் காட்டியது உலகிலேயே நீ ஒருவன்தானே! மேக்கப் போட்டு அதன் மூலம் முகத்தில் வித்தியாசம் காட்டாமல், முக உணர்ச்சியாலேயே இருவரையும் வேறுபடுத்திக் காட்டியது உன்னைத் தவிர வேறு ஈரேழு பதினாலு லோகத்திலும் யாரால் முடியும்?
முகமே தெரியாமல் மறைத்து இரும்புக்கவசம் போட்டிருந்தாலும், கவசத்தால் மறைக்கப்பட்டது பார்த்திபனா விக்கிரமனா என்று தெளிவாகத் தெரிய வைத்தாயே...தெய்வமே, எப்படி அது உன்னால் மட்டும் செய்ய முடிந்தது?
அன்று நீ அசையாமல் படுத்திருந்த போது எதோ மாறு வேடத்தில் நடிப்புக்காகப் படுத்திருக்கிறாயோ என்றுதானே ஒரு விநாடி எண்ணத் தோண்றியது.இப்போதும் கூட நீ எதோ அவுட் டோர் சூட்டிங் போயிருக்கிறாய் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.முன்பெல்லாம் நீ அவுட்டோர் போனால் ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவாய். ஆனால் இம்முறை நீ அன்னை இல்லத்தை விட்டு வெளியே போய் ஆண்டுகள் பதினாறு ஆகிவிட்டது, இன்னும் நீ திரும்பவில்லை.ஏனென்று தெரியவில்லை.
நீ மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையுடன் உன் பிள்ளைகள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.அதில் நானும் ஒருவன்.
எப்போது நீ திரும்பி வருவாய் எங்கள் உத்தம்புத்திரனே ?
-
-
-
Vikatan EMagazine
ஜூலை 21: நடிகர் சிவாஜி நினைவு தினம்....
Sivaji Ganesan
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
... * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத்
தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின்
புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில்
மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து.
See more
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2a&oe=59EF85AA
-
-
-
-
-
-
-
-
-
-
Raghavan Nemili Vijayaraghavachari
நடிகர் திலகம் , நடிப்புலக சக்ரவர்த்தி , வலது கை கொடுப்பதை இடது கை கூட அறியாமல் பல நன்கொடைகள் தந்த விளம்பரமில்லா வள்ளல் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் – 21.07.2017.
அவர் பரபமதம் எய்தி 16 ஆண்டுகள் ஆகின்றன . இன்றும் அவருக்கு பல ஆயிரக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் முன்பு குறிப்பிட்டிருந்தபடி எந்தவித அரசியல்வாதிகளின் துணையோ , ஆட்சியாளர்களின் துணையோ இன்றி தன் நடிப்பாற்றலால் பல லக்ஷக்கணக்கான மக்களின் உள்ளம் கவர்ந்தவர். அவரின் பல படங்கள் மக்களுக்கு குடும்ப வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அன்பும் , பாசமும் எப்படி உறவுகளிடம் காட்ட வேண்டும் என்றும் , இறை பக்தியை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் , தேஸப் பற்றை எப்படி நிலை நாட்ட வேண்டும் என்றும் வெளிப்படுத்தியுள்ளன .
எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் தனிப்பட்ட நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக , திரைப்படங்களில் நல்லவனாகவும், யோக்கியனாகவும் நடிப்பவராக மட்டுமில்லாமல் எந்த வித கதா பாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். வில்லனாகவும் , ஒன்றிரண்டு படங்களில் தீயவனாகவும் நடித்தவர். இந்த மாதிரி திரைப்படங்களில் அவரின் நடிப்பை பாராட்டியிருக்கிறார்களே தவிர, நடிப்பினால் தன் மரியாதையையும் , நற் பெயரையும் இழந்தவரல்ல இந்த உலக மஹா நடிகன்.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது போல் , தன் ஒரு முகத்தில் ஆயிரம் முக பாவங்களைக் காட்டியவர் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே. ஒரு சில நடிகர்கள் சோகக் காட்சிகளிலோ, அழும் காட்சிகளிலோ நடிக்க வேண்டியிருந்தால், ஒன்று தங்கள் முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டும் அல்லது சுவற்றின் பக்கம் முகத்தை திருப்பி, முகத்தை வெளிப்படையாகக் காட்டாமல் இருப்பார்கள். ஆனால் இவரிடமோ அது மகிழ்ச்சி , இன்பம் , துன்பம், துயரம் , அன்பு, ஆசை , ஆர்வம் , கோபம், வீரம் ஆக நவரசங்களையும் பலவித முக பாவனைகளால் காட்டி நடித்தவர்.
தமிழ்நாட்டில் கடந்த 60, 70 ஆண்டுகளாக திறமையானவர்களையும், நேர்மையானவர்களையும் மதித்து அவர்களுக்கு உரிய கௌரவத்தை நிலைநாட்டவிடாமல் , பல மக்களை அறிவற்றவர்களாக்கி , அவர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்ட நிலையிலும், நடிப்புலக இமயத்தின் மீது பற்று கொண்டவர்கள் லக்ஷக்கணக்கில் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் திரைப்படங்களில் மட்டும் அருமையாக நடிக்கும் இவருக்கு ஒரு முறை கூட பாரத தேஸத்தின் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லை. ஆனால் இதற்கெல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை. ஆண்டவன் அருளால், எகிப்தில் நடைபெற்ற உலக திரைப்படவிழாவில் , உலகின் தலைசிறந்த நடிகராக தேர்வு பெற்று , எகிப்து அதிபர் நாஸர் அவர்களிடம் விருது பெற்றவர்.
அதுபோல் ஹாலிவுட் நடிகரான மார்லன் ப்ராண்டோ , நடிப்புக் கடல் அமெரிக்கா சென்றிருந்த பொழுது , அவரை அழைத்து, அவருடன் அவரும் மற்றும் பல ஹாலிவுட் நடிகர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நடிகர் திலகத்தை மட்டும் அமர வைத்து , மற்ற நடிகர்களெல்லாம் அவரை சுற்றி நின்று கொண்டு இருந்த புகைப்படம் அந்தக் காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அமெரிக்காவின் நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப் பெற்றார். இது பாரத நாட்டின் இரண்டு பேர்களுக்கு மட்டுமே கிட்டிய பெருமை. ஒருவர் நடிகர் திலகம். மற்றொருவர் முன்னாள் பிரதமர் நேரு.
நன் கொடைகள் வழங்குவதிலும் சிறப்பானவர். விளம்பரமில்லாமல் பல ஆயிரக்கணக்கான நன் கொடைகள் வழங்கியவர். அது போல பாரத தேஸத்தை எதிர்த்து பாகிஸ்தான் போரில் குதித்த போது, நம் இராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் போர் முனைக்கே அவரும் அவருடன் மேலும் சில நடிகர், நடிகைகளையும் அழைத்துக் கொண்டு போய் அவர்களை சோர்வினை தவிர்க்கும் வைகையில் அங்கு அவர்களுக்கு முன் ஒரு நாடகத்தையும் நடத்தி, அவர்களை மகிழ்வித்தார்.
மறைந்து 16 ஆண்டுகள் ஆன நிலையிலும், எந்த அரசியல் கட்சிகள். ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல், நடிப்பில் தன்னிகற்று இருந்த காரணத்தினால் இன்றும் பல ஆயிரக்கணக்கான அவர்காலத்தில் இளைஞர்களாக இருந்து , இன்று வயதானவர்களாக இருப்பவர்கள் மட்டுமல்லாது , தற்காலத்து பல இளைஞர்களும் அவரின் சிறப்பான படங்களை விரும்பிப்பார்க்கிறார்கள்.
என்னிடம் அவரின் முக பாவங்கள் , கம்பீரமாக நிற்கும் தோற்றங்கள் மற்றும் பல தேசிய , உலக தலைவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இருந்தாலும் இன்று முக நூலில் பதிவு செய்வதற்காக அவரின் சிறப்பு முக பாவங்களைக் காண்பிக்கும் 42 படங்களை பதிவிடுகிறேன். பல படங்கள் சிவாஜியின் தீவிர ரசிகரான வாசுதேவன், சிவா , பம்மலார் மற்றும் இன்னும் சிலரும் நடிகர் திலகத்தின் இணையதளத்தில் பதிவேற்றியிருந்ததை இங்கு மீள் பதிவு செய்கிறபடியால் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடிகர் திலகத்தின் இந்த நினைவு நாளில் , இறைவன் திருவடி நிழலில் அவர் நல்லபடிக்கு இளைப்பாற ப்ரார்த்திப்போம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...cc&oe=5A02A994
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0b&oe=5A055CED
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...5d&oe=59FB6CA7
-
-