http://i66.tinypic.com/xbb90j.jpg
http://i65.tinypic.com/x1n5go.jpg
http://i65.tinypic.com/zwe2i8.jpg
Printable View
வாரக்கதிர்
http://i67.tinypic.com/2rdffyv.jpg
http://i66.tinypic.com/2rxjjvr.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவராத படம்
பாக்யா இதழ் -16/07/19
http://i63.tinypic.com/16bkkdh.jpg
http://i65.tinypic.com/2lbgdjr.jpg
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நாடு முழுவதும் 15/7/19 அன்று அனுசரிக்கப்பட்டது . பெருந்தலைவருடன் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
http://i64.tinypic.com/352gi9j.jpg
வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் பிரம்மாண்ட வெற்றி தயாரிப்பு "அடிமைப்பெண்" 19-07-2019 முதல் செங்கோட்டை - ஆனந்த் dts தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது...
புரட்சித்தலைவர் குறித்து விவரமறியாமல் பேசிய ஆண்டிமுத்து ராசாவிற்கு கடும் கண்டனம்.
எம்ஜிஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும் அவர் மக்கள் நினைவில் இருக்கிறார் --திட்டங்களால் அல்ல என்றும் அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள் சுத்தமாக எம்ஜிஆரை மறந்து விடுவார்கள் எனவும் உதகையில் நடைபெற்ற மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களின் 96 வது பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தற்போதைய நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசா பேசியள்ளதாக காண பெற்றோம்.
கமல்ஹாசனும் சீமானும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை பொறுக்க மாட்டாது அவர்களை சாட எண்ணிய இவர் சற்றும் தேவையில்லாது புரட்சித்தலைவரை விமர்சனம் செய்துள்ளார்.
கமலின் கட்சிக்கும் சீமானின் கட்சிக்கும் மக்கள் ஆதரவு தந்தது தனக்கு வருத்தமளிப்பதாக உள்ளது மக்கள் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறார்கள் எனவும் பேசியுள்ள ஆண்டிமுத்துராசா தொடர்ந்து தமிழகமெங்கும் பள்ளிகளை திறந்து கல்விக்கண் கொடுத்தவர் காமராஜர் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ் நாடு என்று மாற்றியவர் அறிஞர் அண்ணா பெண்களுக்கு சம உரிமை கொடுத்தது கருணாநிதி என்றெல்லாம் கூறியுள்ளார்.சரி ஒப்புக்கொள்கிறோம். இத்துடன் அவர் நிறுத்தியிருந்தால் நாம் ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
-- எம்ஜிஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும் அவர் மக்களின் நினைவுகளில் இருக்கிறார் திட்டங்களால் அல்ல என்பதாக தொடர்ந்து ஆண்டிமுத்து ராசா கூறுகிறார். இதற்கு பெயர்தான் வாய் கொழுப்பு என்பது. இங்கு புரட்சித்தலைவர் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது.
ஆண்டிமுத்து ராசா போன்ற தரம்தாழ்ந்த அரசியல் நாகரீகமற்ற மிக கேவலமான அரசியல்{வியாதி}வாதிகளின் இதுபோன்ற விவரமறியா சிறுபிள்ளைத்தனமான பேச்சை என்னவென்று சொல்வது? ஐயா ஆண்டிமுத்து ராசா நீங்கள் முதலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் யார்? அவரது வரலாறு என்ன? அவர் கடந்து வந்த அரசியல் தடங்களின் நிகழ்வுகள் என்னென்ன? உலக அரசியல் அரங்கில் மற்ற தலைவர்களுக்கெல்லாம் இல்லாத அவரது சிறப்புகள் என்ன? என்பது போன்ற இன்னும் ஏராளமான அவரது வரலாற்றின் பக்க்கங்களையெல்லாம் முழுமையாக அறிந்து கொண்டு உணர்ந்து கொண்டு பேசிட முன் வர வேண்டும்.அல்லாது ஏதோ போகிற போக்கில் காழ்ப்புணர்வின் அடைப்படையில் பேசுவது என்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும்.நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கு சற்றும் உகந்ததல்ல.
முதலில் ஒருவர் இந்த பூமியிலிருந்து மறைந்து விட்டால்தானே அவரை மக்கள் மறப்பதற்கு.புரட்சித்தலைவர் எங்கே மறைந்தார்? அவரை மக்கள் மறப்பதற்கு. தனது பொன்னுடலால் மட்டுமே இத்தமிழ் மண்ணிலிருந்து இயற்கையுடன் அவர் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டு உணர்வுகளாலும் நினைவுகளாலும் என்றென்றும் உலகெங்கிலும் வாழ்ந்து வரும் கோடானுகோடி தமிழ் மக்களின் இதய சிம்மாசனத்தில் குன்றிலிட்ட விளக்காக ஓங்கி ஒளிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை நொடிப்பொழுதில் மக்களின் நினைவுகளிலிருந்து மறைந்து விடக்கூடிய தரம்கெட்ட ஆண்டிமுத்து ஆண்டிமுத்து ராசா பேசுவது வேடிக்கை வினோதமாக உள்ளது.
யாரை பற்றி யார் பேசுவது?
கங்கையை சாக்கடை தூற்றுவதா?
இமயத்தை குப்பை மேடு தூற்றுவதா?
சந்தனத்தை சகதி தூற்றுவதா?
சிங்கத்தை சிறு நரி ஏளனம் பேசுவதா?
ஊழலின் மொத்த உருவம் உத்தமரை தூற்றுவதா?
இப்படியான அரசியல்வியாதி ஆண்டிமுத்து ராசா மனிதப்புனிதர் புரட்சித்தலைவரை விமர்சனம் செய்வதா? ஆண்டிமுத்து ராசா அவர்களே -- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மக்களின் உள்ளங்களில் கடந்த 30 ஆண்டுகளாக மரணமில்லா பெரு வாழ்வு வாழ்ந்து வருகிறார். ஆனால் உங்களையெல்லாம் ஆளாக்கிய உங்கள் தலைவர் கருணாநிதி அவர்கள் மறைந்து ஓரிரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் மக்கள் அவரை மறப்பது ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் நீங்களே அவரை மறந்து விட்டீர்களே. இப்போதைய உங்கள் கட்சியின் சில சுவரொட்டிகளில் உங்களது இப்போதைய தலைவர் ஸ்டாலின் அவர்களும் அவரது புதல்வர் உதயநிதி மட்டும்தானே உள்ளனர்.இப்போதே இப்படியென்றால் எதிர்காலத்தில் அவரது நிலை.
ஆனால் புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுகவில் அவருக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லையென்றாலும் மக்கள் அவரை தாங்கி பிடித்துள்ளனரே. மக்களின் உள்ளங்களில் காலங்களை கடந்த வரலாற்று நாயகராக இன்றளவும் மிகப் பிரகாசமாக ஒளிர்கிறாரே.மறந்து விட்டீர்களா? அல்லது அதை உணர ஞானம் போதவில்லையா?
அதுதான் புரட்சித்தலைவர்.
இந்நிலை இத்தமிழ் மண் உள்ளவரை தொடரும். இவ்வுலகமே அழிந்த நிலையிலும் இத்தமிழ் மண்ணின் கடைக்கோடியில் எங்காயினும் ஒரு தமிழர் வாழ்ந்து வருவாரேயாயின் அங்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேசப்படுவார் -நினைக்கப்படுவார். இது காலதேவனின் நிச்சயம்.
எனவே ஆண்டிமுத்துராசாவே நீங்கள் கூறுவது போல் இன்னும் 25 ஆண்டுகளின் மக்களின் நினைவுகளிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்து விடுவார் எனும் கூற்று விவரமறியாமல் பேசும் சிறுபிள்ளைத்தனமானது -அபத்தமானது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நீடித்த நிலைபெற்ற புகழுக்கு சினிமாவும் ஒரு காரணமேயன்றி சினிமா மட்டுமே காரணமல்ல எனும் உண்மையினை உணராமல் பேசும் ஆண்டிமுத்து ராசா அவர்களே --இதற்கான எண்ணற்ற ஆதார நிகழ்வுகள் உண்டு இது பற்றிய உண்மை தெரிய வேண்டுமென்றால் புரட்சித்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இலையென்றால் என்னிடம் வாருங்கள்.நான் விளக்குகிறேன்.
புரட்சித்தலைவர் அவர்கள் மக்களின் உள்ளங்களில் சினிமாவால் மட்டுமே வாழ்ந்து வருகிறார் திட்டங்களால் அல்ல என்று உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்வின் அடிப்படையில் ஏதோ ஒரு சுயநல நோக்கத்துடன் பேசும் ஆண்டிமுத்து அவர்களே- ஆயிரம் திட்டங்கள் வேண்டாம் ஒரே ஒரு திட்டம் போதுமே. ஏழை குழைந்தைகளுக்கான சத்துணவு திட்டம் -ஆயிரம் திட்டங்களுக்கு சமமானதே அத்திட்டம். இன்றளவிலும் அத்திட்டம் ஒன்றால்தானே உலகெங்கிலும் உள்ள அறிஞர் பெருமக்களால் அரசியல் வல்லுநர்களால் நல்லவர்களால் வல்லவர்களால் புரட்சித்தலைவர் அவர்கள் போற்றப்பட்டு புகழப்பட்டு வருகிறார்.
எத்தகைய மகத்தான திட்டம்.லட்சக்கணக்கான ஏழை குழந்தைகள் வளர்ச்சி பெற்றதிட்டம் ஆயிரக்கணக்கான ஏழை பெண்கள் வேலை கிடைத்து பயன் பெற்ற திட்டம்.இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகுமளவுக்கு எண்ணிலங்கா சிறப்புகளை உள்ளடக்கிய திட்டம் ஒன்றினை கொண்டுவந்த புரட்சித்தலைவரை பாராட்ட , ஊனக்கண்ணை கொண்டுள்ள கோடீஸ்வரனான, ஊழலின் முழு உருவம் கொண்ட ஆண்டிமுத்து ராசாவால் எப்படி முடியும்?
ஆண்டிமுத்து ராசா அவர்களே -உங்களை இந்நிலைக்கு உயர்த்திய மறைந்த உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களின் ஆரம்பகால திரையுலக வாழ்வின் வளர்ச்சிக்கும் அரசியல் பொது வாழ்வில் முதல்வர் வரை அவர் உயர காரணமாக எவ்வாறெல்லாம் புரட்சித்தலைவர் இருந்துள்ளார் எனும் வரலாற்று உண்மைகளை உங்கள் கட்சியின் மூத்தவர்களிடம் முன்னோடிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அவர்கள் கூறுவார்கள். அப்படி இல்லையென்றால் தமிழகத்தின் கடைக்கோடி குப்பனிடமும் சுப்பனிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள். அந்த அளவிற்கு திறந்த புத்தகமாக உள்ளவைகள் அந்நிகழ்வுகள்.
உங்களுக்கெல்லாம் அந்த வரலாற்றின் தடங்கள் தெரிய நியாயமில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் மனசாட்சியில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக பேசி கொண்டு வருகிறீர்கள். உங்கள் துரைமுருகன் முரசொலி மாறன் போன்றவர்களை படிக்கவைத்து உயர்த்தியுள்ளதோடு நீங்கள் இருக்கும் திமுகவின் வளர்ச்சிக்கும் தனது உழைப்பை நல்கி பணம் பொருள் போன்றவற்றையெல்லாம் அள்ளிக்கொடுத்து எப்படியெல்லாம் திமுகவின் வளர்ச்சிக்கும் புரட்சித்தலைவர் அவர்கள் தோள் கொடுத்து வாழ்ந்தார் எனும் உண்மைகளை இனியாவது வரலாறு தெரிந்தவர்களிடம் ஆண்டிமுத்து ராசா கேட்டு தெரிந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.
காரணம் மக்கள் உங்களை ஏதோ விவரம் தெரிந்தவர் என்றெண்ணி பாராளுமன்றத்திற்கு மக்கள் தேர்தெடுத்து விட்டனர். எனவே இனியாவது எதார்த்தத்தை உணர்ந்து பேச வேண்டும் மனசாட்சியுடன் பேச வேண்டும் மக்களின் மன நிலையை நன்கு அறிந்து உணர்ந்து பேச வேண்டும். மேடையும் ஒலி பெருக்கியும் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் போகிற போக்கில் பேசக்கூடாது என்பதை ஆண்டிமுத்து ராசாவின் சிற்றறிவுக்கு உணர்த்த விரும்புகிறேன் ........... EB மோகன்... Thanks mr.Mohan... wa.,
ஆந்திர பிரதேஷ் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ்,தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சந்திப்பு
http://i64.tinypic.com/10zwb29.jpg
http://i66.tinypic.com/28i9i85.jpg
http://i65.tinypic.com/2hdcti8.jpg
பேரறிஞர் அண்ணாவுடன் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திப்பு
http://i67.tinypic.com/2mdpjk5.jpg
#சத்துணவு திட்டம் கவர்ச்சிகர திட்டம் அல்ல தமிழக குழந்தைகளின் மீது எம்ஜிஆர் வைத்திருந்த பாசத்தின் அடையாளம்.
#மதிய உணவு திட்டத்தில் போடப்படும் உணவை குழந்தைகள் சாப்பிட முடியாமல் #குப்பையில் கொட்டுகிறார்கள் என்று கல்வி அமைச்சர் #அரங்கநாயகம் எம்ஜிஆரிடம் சொல்ல #அய்யய்யோ சாப்பாட நிருத்திடாதீங்க என பதட்டத்துடன். #சாப்பாட்டை பள்ளிகளிலேயே சுடச்சுட சமைத்துபோட்டால் என்ன என்று கேட்க்கிறார்.. #நம்மகிட்ட சமையல் தெரிந்த ஆட்கள் அதிகம் இல்லை,நிதியும் நம்மிடம் இல்லை திட்டம்
சாத்தியமில்லை என்கிறார்கள்.
அதிகாரிகள்..
#எம்ஜிஆர் விடுவதாக இல்லை. ஒருதிட்டத்தை தயார் பண்ணுங்க என்று #திரு.அரங்கநாயகத்திடம் உத்தரவிட ஏற்கனவே கோவையை சேர்ந்த #பேராசிரியை ஒருவர்கொடுத்த குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய நியூட்ரிஷியன் புஃட் என்கிற பைல் இருக்கு என்கிற செய்தி சொல்லப்பட, எம்ஜிஆர் அந்த பைலை கேட்டு அதை படித்தபிறகு
#அந்த அம்மாவை கூப்பிடுங்க என உத்தவிட
#கோவையை சேர்ந்த #ராஜம்மாள் தேவதாஸ் #மனையியல் கல்லாரியில் வேலை பார்த்தவங்களை அழைத்து நீங்க இருந்து திட்டத்தை நடைமுறை படுத்துங்க என்று அவரை திட்டத்தில் இணையச்செய்தார்கள்.
#அவங்க கொடுத்த ப்ராஜக்டின் தலைப்பான ""நியூட்ரிஷியன் புஃட் " ஐ #சத்துணவாக மொழிமாற்றம் செய்தவர் எம்ஜிஆர்.
தமிழக #குழந்தைகளின் மீது எம்ஜிஆருக்கு இருந்த #பாசத்தாலும், #பசியின் கொடுமையை அனுபவித்தவர் வேகமாக நடைமுறைப்படுத்தினார்.
#சத்துணவு திட்டத்திற்கு இந்திராகாந்தியின் #மத்தியஅரசு பணம் ஒதுக்க மறுத்தது. அத்துடன்
#ஆர்.பி.ஐ தமிழ்நாட்டு அரசு வங்கிகளில் வாங்கிய #ஓ.டி யின் தொகைக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை செய்தது #பிரனாப் முகர்ஜி.
#ஏழைக்குழந்தைகளின் வயிறு நிரம்பி மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு போவதை கொச்சை படுத்தின
#தமிழகத்தின் எதிர்கட்சிகள் ..
யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை குழந்தைகளின் மகிழ்ச்சி முக்கியம் என தனது திரையுலக #நட்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் பல இடங்களில் #நட்சத்திர இரவுகளை நடத்தி #சத்துணவிற்காக நிதி திரட்டி வெற்றிகரமாக குழந்தைகளின் நலன் முக்கியம் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
#நடிகராக இருந்த காலங்களில் மற்றவர்களுக்கு #கொடுத்து பழக்கப்பட்ட அவர் தமிழக குழந்தைகளுக்காக தன்னை சந்தித்தவர்களிடமெல்லாம் சத்துணவு திட்டத்தை சிறப்பாக செய்ய உதவி செய்யுங்கள் என மகிழ்ச்சியாக
#கையேந்த தொடங்கினார் என்பதுதான் சத்துணவின் வரலாறு..
#சத்துணவு என்பது கவர்ச்சி திட்டமல்ல அது அவரது #ஆன்மா சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் இடம்.
#சத்துணவை சாப்பிட்ட குழந்தைகளின் வளர்ச்சி இந்தியாவில் மற்ற மாநில #குழந்தைகளைவிட ஒரு மடங்கு கூடுதலாக இருந்த தால் 3 வருடங்களுக்குப்பிறகு #சத்துணவு திட்டத்தை இந்திய அரசு ஒரு திட்டமாக ஒத்துக்கொண்டது.
#சத்துணவு திட்டத்தால் ஒரு லட்சம் பேர் வேலைவாய்பின் மூலம் பயன்பெற்றவர்கள்......... Thanks...
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி -எம்.ஜி.ஆர். சந்திப்பு
http://i67.tinypic.com/211ktug.jpg
முன்னாள் முதல் எம்.ஜி.ஆர். அவர்களுடன் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி
http://i67.tinypic.com/9s9iqt.jpg
http://i64.tinypic.com/zv1yj7.jpg
பொதுமக்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.சந்திப்பு
http://i63.tinypic.com/294s5kl.jpg
http://i66.tinypic.com/es3o0n.jpg
.
http://i67.tinypic.com/oumsk2.jpg
கலைத்துறை சார்பில் மக்களின் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன்,இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் மாலை அணிவிக்கும் காட்சி .
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இயக்குனர் பாரதிராஜா
http://i64.tinypic.com/20pc9pz.jpg
http://i64.tinypic.com/142dg2a.jpg
http://i63.tinypic.com/2cgzvba.jpg
சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பார்க்க
வந்திருந்த காட்சி .
http://i65.tinypic.com/3520l13.jpg