-
பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.
அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!
திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.
எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர். "எங்கள் தங்கம்" திரைப்படத்தில் ஒரு பாடலில் முழு பகுத்தறிவு பிரச்சாரமே செய்து நடித்தார்.
அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்...........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யம்*(இணைய*தளம் ) -1,00,000 சாதனை*பதிவுகள்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்,பக்தர்கள், விசுவாசிகள்,அபிமானிகள்*அனைவருக்கும் மகிழ்ச்சியான , இனிப்பான, வியப்பான செய்தி என்னவென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யத்தில்* (இணைய தளத்தில் ) 1,00,000* பதிவுகள் என்கிற இமாலய சாதனையை* (26 பாகங்கள் மூலம் - ஒரு பாகம் என்பது 400 பக்கங்கள் கொண்டது )*நமது எம்.ஜி.ஆர். பக்தர்கள் சிலரின் சீரிய முயற்சியால் செய்யப்பட்டு சாதனை என்கிற எவரெஸ்ட்* சிகரத்தை அடைந்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் பதிவாளர் என்கிற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன் .
கீழ்கண்ட எம்.ஜிஆர். பக்தர்கள்* செய்த பதிவுகளின் எண்ணிக்கை பின்வருமாறு :
------------------------------------------------------------------------------------------------------------------------------
1.* திரு. ஆர். லோகநாதன்* ,சென்னை* * * ----------------- 27,365
2 திரு..எஸ்.வினோத், பெங்களூரு* * * * * -------------------15,120
3.மறைந்த திரு.முத்தையன் ,சேலம்* * --------------------11,302
4.திரு.சைலேஷ் பாசு, அபுதாபி* * * * * * *---------------------- 7,154
5.திரு.ரவிச்சந்திரன், திருப்பூர்* * * * * * -----------------------* 6,291
6.திரு.யுகேஷ் பாபு , சென்னை* * * * * -----------------------* 5,135
7.திரு.சுஹாராம், மன்னார்குடி* * * * * ----------------------* 4,925
8.திரு.ராமமூர்த்தி , வேலூர்* * * * * * *------------------------ 4,383
9.திரு.கலியபெருமாள், பாண்டிச்சேரி ------------------- 3,153
10.திரு.ரூப் குமார், சென்னை* * * *-------------------------* 2,962
11.திரு.செல்வகுமார், சென்னை* * -----------------------* 2,555
12. திரு.* ஜெய்சங்கர், சேலம்* * * * *------------------------* 1,821
13.திரு.சி.எஸ்.குமார், பெங்களூரு* * -------------------* *1,385
14.திரு.வி.பி.சத்யா* ,சென்னை* * * * *----------------------1,209
15.திரு.ஸ்ரீதர் (தமிழ் இந்து நாளிதழ் ),சென்னை --- 1,113
16.திரு. பாஸ்கரன், இலங்கை* * * * * * *----------------* * * *921
மேற்கண்டவர்களை தவிர, திருவாளர்கள் சுந்தர பாண்டியன், ராமலிங்கம் மூப்பனார், மஸ்தான் சாஹிப் போன்ற சிலரும் நூற்று கணக்கில் பதிவுகள் செய்துள்ளார்கள் .மேற்படி இமாலய சாதனை படைக்க காரணமாக இருந்த அனைத்து பதிவாளர்கள், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு*சார்பில் கோடான கோடி நன்றிகள் .
குறிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யம் (இணைய தளம் ) 20/10/2005 அன்று*திரு.பயிரா (bayera* )என்பவரால் துவக்கப்பட்டது .மேற்கண்ட தகவல்களை*பகிர்ந்த திரு.எஸ்.வினோத், பெங்களூரு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .
ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை .
* * * ***
-
தன்னை கடினமாக வருத்திக்கொண்டு தன் ரசிகர்களை மகிழ்விக்கவேண்டும் என்பதற்காக, குறுகிய காலத்தில் அதிக படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தவர் எம். ஜி. ஆர்.
இன்றைக்கு கிராபிக்சில் செய்வதை
50 ஆண்டுகளுக்கு முன்பே 'மிட்சல்' கேமரா மூலம் படமாக்கத்திலும்,
எம். ஜி. ஆரது அயராத உழைப்பிலும் இரட்டை வேட படங்கள் மூலம் சாதனை படைத்திருக்கிறார்கள்.
'நாடோடி மன்னன்' படத்தில் நாடோடியும் மன்னனும் கை குலுக்கி கொள்வதும், 'ராஜா தேசிங்கு' படத்தில் இருவரும் கட்டிப்பிடித்து அழுவதும், 'குடியிருந்த கோயில்' படத்தில் ஆனந்தும் பாபுவும் கடைசியில் (காண்க படம்) கட்டித் தழுவுவதும், 'மாட்டுக்கார வேலன்'
படத்தில் வேலனைச்சுற்றி ரகு வருவதும் என்று அனைத்தும் 'ஹெட் மாஸ்க்'
(head mask) மூலம்
(மாற்று நடிகரின் உருவத்தில்
அசல் நடிகரின் தலையைப் பொருத்துவது) படமாக்கப்பட்டுள்ளது.
இதில் சிறு பிசிறு கூட இல்லாமல் படமாக்கப்பட்ட சாதனை எம். ஜி. ஆரால்
மட்டுமே நிகழ்த்தப்பட்டதாகும். அதற்கு அவரது உழைப்பு அசாத்தியமானது.
இது பற்றி 2019 செப்டம்பர் மாத
'இதயக்கனி' யில், 'எல்லாம் அறிந்த
எம். ஜி. ஆர்.' தொடரில்
விரிவாக எழுதியுள்ளேன்.
மீள்பதிவு
...
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..........
.
-
#வாத்தியாரை ம*தித்த வாத்தியார்#
அது 1976 பாராளுமன்ற தேர்த*ல் நேர*ம். நான் 9ஆம் வ*குப்பு திருச்சி பேட்டைவாய்த்தலை த*னியார் ப*ள்ளியில் ப*டித்து வ*ந்தேன். ப*ள்ளி முடிந்து வீட்டிற்கு ந*ட*ந்து செல்கிறேன். எனக்கு பின்னால் ஒரு 100 அடி இடைவெளியில் எங்க*ள் ப*ள்ளியின் த*மிழ் வாத்தியாரும் வ*ருகிறார். (ந*ம்நாடு ப*ட* வாத்தியார் நாகைய்யா போல் தோற்ற*ம் உள்ளவ*ர்).
ச*ற்று தூர*ம் ந*ட*ந்த*தும் எதிர்திசையில் வேக*மாக இர*ண்டு கார்க*ளும் அத*ற்கு பின்னால் திற*ந்த* ஜீப் ஒன்றும் வ*ந்த*ன. அந்த* ஜீப்பில் வெள்ளை வெளேறென ஒளிபிம்ப*ம் போல் தெரிந்த*து. யாரென பார்த்தால் ந*ம்ம வாத்தியார் புன்னகை முக*த்துட*ன் இருக*ர*ம் கூப்பியும் கை அசைத்த*வாரும் அதில் வ*ந்து கொண்டிருந்தார். நான் "த*லைவ*ரே" என்று க*த்த என்னைப்பார்த்தும் கைகாட்டி விட்டு சென்றார். பிற*கு என் பின்னால் ச*ற்று தொலைவில் வ*ந்த* த*மிழாசிரிய*ர் அருகே வ*ண்டி சென்ற*தும் திடீரென நின்ற*து. ந*ம் த*லைவ*ர் அவ*ருக்கு ஜீப்பில் நின்ற*வாரே வ*ணக்கம் செலுத்திவிட்டு உத*வியாளரிட*ம் ஏதோ கூற சில ஆப்பிள் ப*ழ*ங்க*ள் அவ*ர் கைக்கு வ*ந்த*ன. அதை ஒரு பையில் போட*ச்சொல்லி பின் அதை அப்ப*டியே த*லைவ*ர் அந்த ஆசிரிய*ருக்கு வ*ழ*ங்கி மீண்டும் வ*ணக்கம் சொல்லி உட*ன் புற*ப்ப*ட்டு சென்றார். இவையெல்லாம் ஒரு 20 நொடிக*ளில் நிக*ழ்ந்த*ன. அந்த த*மிழாசிரிய*ரோ பிர*ம்மை பிடித்த*வ*ர்போல் வாய*டைத்து நின்றார். மறுநாள் முத*ல் சாமான்ய*ரான த*ன்னையும் ம*தித்து வ*ணக்கம் சொல்லி த*லைவ*ர் ப*ழ*ங்க*ளை அளித்த*தை அனைவ*ரிட*மும் கூறி அக*மகிழ்ந்தார்.
" ஆசிரிய* பெரும*க்க*ளுக்கு இந்த* வாத்தியார் நேச*னின் அன்பு வாழ்த்துக்க*ள்............
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மறைந்த போது கவிஞர் வாலி எழுதிய இரங்கட் பா.....இனி நான் யாரை பாடுவேன்...
பொன்மனச்செம்மலே !என் பொழுது
புலரக் கூவிய சேவலே !
உனக்கென்று நான் எழுதிய முதல்
வரியில்தான் உலகுக்கு என் முகவரி
தெரிய வந்தது !
என் கவிதா விலாசம் உன்னால்தான்
விலாசமுள்ள கவிதையாயிற்று!
இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே
என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ !
என்னை வறுமைக் கடல் மீட்டு
வாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே !
கருக்கட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகு
தான் நாடு பாடியது
ஏழை எளியவயர்களின் வீடு பாடியது !
இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன்
இன்று இல்லையென்று போனான்
இனி நான் யாரை பாடுவேன்...?
புரட்சித் தலைவனே !நீ இருந்த போது உன் அடக்கத்தைப் பார்த்து நாடு
தொழுதது....
இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து நாடு அழுதது !
வைகை ஆறும் பொன்னி ஆறும் வற்றிப்போகலாம் !
நீ வற்றாத வரலாறல்லவா !
கலைத்தாயின் தலை மகனே !
கோட்டையில் கொழுவிருந்ததால்
மட்டும் நீ 'சி எம்'அல்ல கோடம்பாக்கத்திலும் கர்ஜித்துக்
கொண்டிருந்த சீயம் தான் !
இன்று படத்தை நிரப்பப் பலர் இருக்கிறார்கள் !
உன் இடத்தை நிரப்பத்தான் எவரும் இல்லை !
நான் மனிதர்களில் நடிகர்களைப்
பாரத்திருக்கின்றேன் ஆனால் நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன்
நீதான் !
அதனால்தான்...நீ நோயுற்ற போது ..தங்களது வாழ்நாட்களின்
மிச்சத்தை உன் கணக்கில் வரவு வைத்து விட்டு எத்துணையோ பேர் தங்கள்
கணக்கை முடித்துக்கொண்டு தீக்குளித்தார்கள் !
என் இதய தெய்வமே! உன் இறப்பில் நான் இரண்டாவது முறையாக என் தாயை இழந்தேன் !
இனி நான் யாரை பாடுவேன்...?..........
-
சென்னை நகர சாதனைகளில்
மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்கள்.
முன்பும்..... நேற்றும்....
அரங்கு : பாரகன்
*******************
1950 : மந்திரி குமாரி
112 நாட்கள்...
1958 : நாடோடி மன்னன்
133 நாட்கள்.....
50 நாட்கள்...
ஜெனோவா
தாய் மகளுக்கு க.தாலி
56 நாட்கள்...
மன்னாதி மன்னன்
70 நாட்கள்
பாசம் 84 நாட்கள்
ஆனந்த ஜோதி
56 நாட்கள்
ஆசைமுகம்
56 நாட்கள்
தாழம்பூ
56 நாட்கள்
பறக்கும் பாவை
63 நாட்கள்
தேடி வந்த மாப்பிள்ளை
61 நாட்கள்
அரசகட்டளை
35 நாட்கள்
* அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து 133 நாளை கடந்து ஒடி அதிக வசூலை பெற்ற காவியம்.. நா.மன்னன்!
133 நாள் ஒடி முடிய
வசூல் : 2,56,758.07.
தேடி வ.மாப்பிள்ளை
61 நாள் 1, 98,365.00
நன்றி : திருவல்லிகேணி
எம்.ஜி.ஆர். மன்றத்தின் ரி.காரன் மலர் .............
-
வண்ணப்பட வரலாற்றில் கலைப்பேரரசின் சாதனைகள் காணீர்...
*************************
* அலிபாபா
மதுரை 141 நாள்
சேலம் 154 நாள்
திருச்சி 147 நாள்
* நாடோடி மன்னன்
சென்னை கிருஷ்ணா
147 நாள்....
திருச்சி
161 நாள்...
சேலம்
147 நாள்....
கோவை
140 நாள்....
* அன்பே வா
சென்னை காஸினோ
154 நாள்...
சென்னை கிருஷ்ணா
147 நாள்....
மதுரை 147 நாள்
* ஒளி விளக்கு
இலங்கை ஜெயின்ஸ்தான்
162 நாள்....
ராஜா 161 நாள்
மதுரை 147 நாள்
* மாட்டுக்கார வேலன்
சேலம் 156 நாள்
திருச்சி 150 நாள்
கோவை 144 நாள்
ஈரோடு 142 நாள்
நெல்லை 140 நாள்
இலங்கை 141 நாள்
* ரிக்க்ஷாக்காரன்
மதுரை 161 நாள்
சென்னை
தேவிபாரடைஸ்
142 நாள்...
ஸ்ரீகிருஷ்ணா
142 நாள்....
திருச்சி 142 நாள்,,..
ஈரோடு 140 நாள்....
உரிமைக்குரல்
ஈரோடு 155 நாள்
கோவை 150 நாள்
இதயக்கனி
மதுரை 146 நாள்
இலங்கை 141 நாள்...
இப்படி 2,3,4,5,6....
திரைகளில்...
20 வாரங்களை கடந்த காவியங்கள் இதுப்போல் ஒடியுள்ளதா....
மற்றும்
எ.வீ.பிள்ளை
நெல்லை 149 நாள்.
உ.சு.வாலிபன்
கோவை 152 நாள்
நாளைநமதே
இலங்கை 140 நாள்
ஆ.ஒருவன்
சென்னை சத்யம்
161 நாள் (2014)
இப்படி சாதனையில் தலைவரின் வண்ணப்படங்கள்...
தொடரும்.........
-
சேலம் மாநகரில் புரட்சி!
********************************
வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் காவியங்கள்*
1961 முதல் 1977 வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களை வெற்றி கொண்டு சாதனையை பெற்று வந்துள்ளது.*
1961 தாய் சொல்லைத் தட்டாதே 1962 தாயைக் காத்த தனயன்
1963 நீதிக்குப் பின் பாசம்*
1963 பரிசு
1964 வேட்டைக்காரன்*
1964 பணக்கார குடும்பம்
1965 எங்க வீட்டுப் பிள்ளை*
1965 ஆயிரத்தில் ஒருவன்
1966 அன்பே வா*
1967 காவல்காரன்
1968 ரகசிய போலீஸ் 115
1969 அடிமைப்பெண்*
1969 நம்நாடு
1970 மாட்டுக்கார வேலன்*
1970 என் அண்ணன்
1070 எங்கள் தங்கம்*
1971 குமரிக்கோட்டம்*
1971 ரிக்க்ஷாக்காரன்*
1972 நல்ல நேரம்
1973 உலகம் சுற்றும் வாலிபன்*
1974 உரிமைக்குரல்
1975 இதயக்கனி
1975 பல்லாண்டு வாழ்க*
1976 நீதிக்குத் தலைவணங்கு*
1977 மீனவ நண்பன்*
இப்படி தொடர்ந்து ஒவ்வொரு*
ஆண்டும் 100 நாட்களை கடந்து மகத்தான வெற்றியை படைத்தவர் மக்கள் திலகம் ஒருவரே.............
-
1969 ம் ஆண்டு அடிமைப்பெண் திரைப்பட வெற்றிக்குப் பின் வெளியான நம் நாடு திரைக்காவியத்தை பற்றி சில முக்கிய தகவல்கள்.
எளிய முறையில் தயாரிக்கப்பட்டு மகத்தான சாதனையை உருவாக்கி சிறந்த* கருத்துக்களை திரைப்படத்தில் புகுத்தி... இன்றுவரை வெள்ளித்திரையில் வெற்றி பெற்று வரும் காவியம் மக்கள்திலகத்தின் நம் நாடு ஆகும்.
1969 -* தீபாவளி தினத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பணம் கொட்டி வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு.... தமிழகத்தில் திரையிடப்பட்டு வசூலில் தோல்வியைத் தழுவிய படங்களுக்கு மத்தியில் நம் நாடு காவியம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ...தென்னகத்தில் அனைத்து ஏரியாக்களிலும்* சாதனையாக நிமிர்ந்து* நின்றது.
சென்னையில் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு பின்* 4 திரையர ங்குகளில் வெளியிடப்பட்டு மூன்று திரையரங்கில் 100 நாட்களை கடந்து மொத்தம் 392 நாட்கள் ஓடிய காவியம் நம் நாடு ஆகும்.
சென்னை சித்ரா, மதுரை மீனாட்சி, சேலம் பேலஸ், திருச்சி வெலிங்டன் திரையரங்குகளில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனையை ஏற்படுத்திய இரண்டாவது காவியம் நம் நாடு ஆகும்.
அடிமைப்பெண் திரைக் காவியத்திற்கு பின் ஐந்து மாத காலத்தில் ரூபாய் 70 லட்சத்திற்கு மேல் முதல் வெளியீட்டில் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த மாபெரும் காவியம் நம் நாடு ஆகும்.
முதல் வெளியீட்டில் 39 திரையரங்கில் 50 நாட்களும், அடுத்து வெளியீட்டில் 11 திரையரங்கில் 50 நாட்களும், பெங்களூரில் 3 திரையரங்கில் 50 நாட்களும், மைசூர் சித்தூர் திருவனந்தபுரத்தில் 50 நாட்களுக்கும் கடந்து....... மொத்தம் 56 திரையரங்கில் வெற்றி வாகை சூடியது நம்நாடு காவியம்.
இலங்கை கொழும்பிலுள்ள ஒரே ஏரியாவில்....கேப்பிட்டல் 98, பிளாசா 60* திரையரங்குகளில் நம்நாடு தொடர்ந்து 158 நாட்கள் ஓடியது. யாழ்நகரில்... வெலிங்டன் திரையரங்கில் 100 நாட்களை கடந்தது..........
-
தமிழகத்தில் 19 திரையரங்கில்*
75 நாட்களை கடந்து மகத்தான சாதனை புரிந்த அடிமைப் பெண்ணுக்கு பிறகு 2 வது நம் நாடு ஆகும்.
புதுச்சேரி, பொள்ளாச்சி, தேனி, கம்பம், சிவகங்கை என சில ஊர்களில் அடிமைப் பெண்ணை விட அதிக வசூலை நம்நாடு திரைக்காவியம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சித்ரா, கிருஷ்ணா, சரவணா, மதுரை மீனாட்சி, திருச்சி வெலிங்டன், சேலம் பேலஸ், கோவை ராஜா, குடந்தை விஜயலட்சுமி, இலங்கை வெலிங்டன் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிய காவியம் நம் நாடு.
இலங்கை கெப்பிட்டல் 98 நாள், பட்டுக்கோட்டை 96 நாள், மயிலாடுதுறை 96 நாள், தஞ்சை 85 நாள்,* ஈரோடு 85 நாள், கரூர் 85 நாள், வேலூர் 83 நாள், புதுச்சேரி 80 நாள் ஆகிய ஊர்களில் நூறு நாளை நெருங்கிய காவியம்.
நம்நாடு திரைப்படம் நெல்லை 76 நாள், நாகர்கோவில் 76 நாள், திண்டுக்கல் 76 நாள், சென்னை சீனிவாசா 77 நாள் ஒடி சாதனை.
சென்னை சரவணா திரையரங்கு திறந்து 100 நாள் ஓடிய முதல் காவியமாக நம் நாடு காவியம் திகழ்ந்தது.
கும்பகோணம் நகரில் 1969 ல் 100 நாள் ஓடிய ஒரே திரைக்காவியம் ஆக நம் நாடு திரைக்காவியம் வெற்றி பவனி வந்தது.
மதுரையில் மகத்தான தொடர் சாதனை புரிந்த நம்நாடு காவியம் மதுரை மீனாட்சியில் 133 நாட்களும், வெள்ளைக்கண்ணு 21 நாட்களும் , ஸ்ரீ கணேசா திரையரங்கில் 21 நாட்களும் ஓடி மொத்தம் 175 நாளில் 4 லட்சத்தை* கடந்து* காவியம் நம் நாடு ஆகும்..........
-
சேலம் பேலஸில் 119 நாட்களும், ஜங்ஷன் ராம் திரையரங்கில் 40 நாட்களும், பிரபாத் திரையரங்கில் 35 நாட்களும் ஆகமொத்தம் தொடர் வெளியீட்டில் 196 நாட்கள் நடைபெற்றது.
1969 ல் அடிமைப்பெண், நம் நாடு திரைக்காவியங்கள் இரண்டும் சேர்ந்து தென்னக சினிமா வரலாற்றில் ரூபாய் 2 கோடிக்கு மேல் வசூலை வாரிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அடிமைப்பெண் 16 திரையரங்கில் 100 நாட்களும், நம் நாடு இலங்கை உட்பட 9 திரையரங்கில் 100 நாட்களும் மொத்தம் ஒரே ஆண்டில் 25 திரையரங்கில் 100 நாளை கடந்தது சாதனை.
மதுரையில் தொடர்ந்து அடிமைப்பெண் 176 நாட்களும் நம்நாடு திரைக்காவியம் தொடர்ந்து மூன்று திரையரங்கில் திரையிடப்பட்டு 175 நாட்கள் ஒடி மதுரையில் 69 ல் சாதனையாகும்.
தொடர்ந்து வெளியான அடிமைப்பெண் திரைக்காவியம் நம்நாடு திரைக்காவியம் சென்னை மதுரை திருச்சி சேலம் கோவை இலங்கை என 6 ஏரியாக்களில் 100 நாட்களை கடந்து முதன்மை சாதனையாகும்.
சென்னையில் அடிமைப்பெண் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 438 நாட்கள் ஓடியது. அதனைத் தொடர்ந்து நம்நாடு திரைக் காவியம் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 392 நாட்கள் ஓடியது. ஆக மொத்தம் இரண்டு காவியங்களும் சென்னை நகரில் 830 நாட்கள் ஓடி அசுர சாதனை புரிந்தது..........
-
சென்னையில் அடிமைப்பெண்*
13 லட்சத்திற்கு மேலும்,நம்நாடு திரைக்காவியம் 10 லட்சத்திற்குமேலும்* கடந்து..... இரண்டாம் வெளியீட்டில் 2 திரைக்காவியங்களும்
*7 லட்சத்திற்கு மேல் வசூலை பொழிந்து மொத்தம் 32 லட்சத்தை கடந்து...... வசூலை கொடுத்த காவியமாக பவனி வந்தது.*
தமிழகத்திலும், இலங்கையிலும்
1969 ல் வெளியான இரண்டு காவியங்களும் 100 நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்தது.
தமிழகத் திரை உலகில் மட்டுமல்ல தென்னிந்திய வரலாற்றில் தொடர்ந்து வெளியான இரண்டு வண்ண காவியங்கள் அடிமைப்பெண்... நம்நாடு மிகப்பெரிய வரலாற்று சாதனை புரிந்துள்ளது.*
125 க்கும் மேற்பட்ட ஊர்களில் இரண்டு காவியங்களும் 50 நாட்களை கடந்து சாதனை....
வேறு எந்த நடிகரின் திரைப்படங்களும் 1969 ல் இப்படிப்பட்ட தொடர் சாதனையை செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது-...
மேலும் அடிமைப்பெண், நம் நாடு திரைக்காவியங்களை தொடர்ந்து வெளியான மாட்டுக்காரவேலன் மிகப்பெரிய வெற்றியை மூன்றாவதாக பார்ப்போம்*
நன்றி , வணக்கம்..........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*அவர்கள் 17/8/20அன்று சொன்ன*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------
திருச்சியை சார்ந்த திரு.மஜீத் அவர்கள் சகாப்தம் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி அளிக்கும் தகவல்கள் கேட்டு தினம் தினம் பூரிப்பு அடைந்து வருவதாக சொல்கிறார் .* நாங்கள் எல்லாம் இன்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு எம்.ஜி.ஆர். என்கிற லட்சிய தலைவர்தான் காரணம் . என்று மும்பை தாராவி புலவர் ராமச்சந்திரன் போன்றவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் . எப்படி இப்படி ஒரு மனிதனால் இவ்வளவு பெரிய சக்தியை பெற முடிந்தது என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போமானால் நமக்கான வெளிச்ச பாதைகள் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது .**
பொது வாழ்க்கையில் பிரச்னைகளை தட்டி கேட்க ஆளில்லை. அநியாயங்களை சுட்டி காட்ட ஆளில்லை . என்கிறபோது அந்த அநீதிகளை தட்டி கேட்கவோ, அநியாயங்களை சுட்டி காட்டவோ , யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருக்காமல் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஊருக்குள் தயார் செய்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .அநீதிகளை தட்டி கேட்கவும், அநியாயங்களை சுட்டி காட்டவும் அரசியல் பண்பாட்டையே வளர்த்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ஒவ்வொரு பாடல் வரிகளிலும்* சக மனிதர்களின் மீதுள்ள அக்கறையை தெரிவிக்கும் வகையில் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே, இது மாறுவதெப்போ , தீருவதெப்போ நம்ம கவலை . என்று சொன்னவர் . பட்ட துயர் இனி மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்* என்று சொன்னவர், தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்று சொன்னவர் .ஆக இதையெல்லாம் மாற்றி காட்ட வேண்டிய பெரிய சக்தி என்பது இன்றைய இளைஞர்களிடம் தான் உள்ளது அந்த இளைஞர்களுக்கு ,சென்னை மாநகரத்திலே ரூ.15/-க்கு மாத வாடகைக்கு குடி இருந்தவர் தமிழகத்திலே முதல்வராக பத்தாண்டு காலத்திற்கு மேல் ஆண்டார்* என்பது வெறும் செய்தி அல்ல .அது நமக்கு ஒரு படிப்பினை, பாடம் .அவர் சொல்லிவிட்டு சென்ற பல விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒரு பாடமாக , படிப்பினையாக தொடர்ந்து பார்த்து வருகிறோம் .
தமிழ் திரைப்பட உலகில் ஆரம்ப காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் , பி . யு . சின்னப்பா போன்றவர்கள் தமிழகத்தையே கட்டி போட்ட சூப்பர் ஸ்டார்களாக இருந்தார்கள் .* அந்த சூப்பர் ஸ்டார்களெல்லாம் பிடிக்க முடியாத இடத்தை எம்.ஜி.ஆரால் பிடிக்க முடிந்தது என்றால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதால் மட்டுமல்ல ஏனென்றால் அவர்களுக்கு அப்பால் ஒரு விஷயம் மக்களை நேசிப்பது ,மக்களுடன் நெருங்கி பழகுவது ,மக்களின் தேவைகளை அறிந்து உதவுவது போன்ற ஒரு பாலம் இருந்தது*.**
அந்த கால நடிகர்களான எம்.கே.தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும்*மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும்,புகழின் உச்சியில் இருந்தாலும் கூட*, தங்களுக்குரிய மக்களுடைய ஆதரவை, அன்பை, செல்வாக்கை தக்கவைத்து கொள்வதற்காக பல்வேறு உதவிகளை செய்து வந்தவர்களாக* இருக்கவில்லை .அவர்கள் வெறுமனே நடிகர்களாக மட்டுமே இருந்தார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். நடிப்பு என்பது ஒரு தொழில். அந்த தொழிலின் மூலமாக பலருக்கு நாம் அறிமுகம் ஆகிறோம் .அந்த அறிமுகத்தால் பலர் நம்மை அணுகுகிறார்கள் .அப்படி அணுகும்போது மக்கள் நம்முடன் பாசமாக இருக்கிறார்கள் . அந்த பாசத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் . அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் .அப்படி சம்பாதித்ததில் ஒரு பங்கைவாரி வாரி, வள்ளல் தன்மையோடு* மக்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்து தான் கற்றதாக ,எம்.ஜி.ஆர். அவர்களே பலமுறை மேடைகளில் பேசியுள்ளார் .*.மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1..ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -குடும்ப தலைவன்*
2.யாரது யாரது தங்கமா* - என் கடமை*
3.எம்.ஜி.ஆர்.-எம்.ஆர். ராதா உரையாடல் - நல்லவன் வாழ்வான்*
4.புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க*
5.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக்காரன்*
6.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன் போட்டி பாடல்-சக்கரவர்த்தி திருமகள்*
7.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*
-
தென்னிந்தியாவின் கிங் மேக்கர் !
எம்ஜிஆர்- என் டி ஆர் இடையிலான நெருக்கம் என்பது குருவுக்கும் சீடனுக்கும் இடையிலான பந்தம் கொண்டதாகும். சினிமா துறையிலும் சரி ...அரசியல் தளத்திலும் சரி, எம்ஜிஆர் தான் அவருக்கு பிரண்டு, கைடு, பிலாஸபர் என்ற நிலையில் இருந்தார்.
என்.டி. ஆர்., கட்சியைத் தொடங்கிய போது தெலுங்கு என்ற பெயரோடு கூடிய கட்சிப் பெயரை வைக்குமாறு ஆலோசனை சொன்னவரும் எம்ஜிஆர் தான்.
எம்ஜிஆர் இரட்டை இலை பெற்றார் என்றால், என்.டி.ஆர் இரட்டை சக்கரம் கொண்ட சைக்கிளைச் சின்னமாகப் பெற்றார். தேர்தலின்போது சென்னையிலுள்ள டி.ஐ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சைக்கிள்களை ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தவரும் எம்ஜிஆர் தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆந்திராவில் முதலமைச்சர் பொறுப்பில் என்.டி. ராமராவ் இருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று தமிழக விழா ஒன்றில் கலந்து கொள்ள என்டிஆர் வந்திருந்தார்.
விழா மேடையில் எம்ஜிஆர் வீற்றிருக்க...
என்டிஆர் பேச்சை தொடங்கியபோது, "கிங் மேக்கர் ஆப் சவுத் இந்தியா" என்று ஆங்கிலத்தில் எம்ஜிஆரைத் குறிப்பிட்டவாறு உரையாற்றினார்.
அவரின் ஆங்கில உரையைத் தமிழாக்கும் பணி அவ்வை நடராசனுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அப்போது அவ்வை நடராசன் மொழிபெயர்த்த அந்த வாசகத்தால் எம்ஜிஆரின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்கள் பளிச்சென ஒளிர்ந்தன. அந்த ஒரு வாசகமே அவ்வை நடராசனை ஏந்திச் சென்று எம்ஜிஆர் இதயத்தில் அமரவைத்து விட்டது. அது நீண்ட காலம் வரை நீடித்தது. அவ்வை சண்முகம், தஞ்சை தமிழ் பல்கலை கழக
துணை வேந்தரானது அப்படித்தான்.
அந்த மொழிபெயர்ப்பு வாசகம் இதோ...
" தென்னகத்தின் மன்னாதி மன்னனே"
-ஆர்.நூருல்லா- மூத்த ஊடகன்.
திருத்தப்பட்ட பதிவு
Ithayakkani S Vijayan.........
-
பூனை விஜய் #சின்னவாத்தியாரே என்று பேனர் போட்டுக்கொண்டால்? எம்ஜிஆர் என்ற புலியாகிவிடுமா?..........."#குறுக்கு_வழியில்_வாழ்வ ு_தேடிடும்_திருட்டு_உலகமடா"-எம்ஜிஆர்!
2021_தேர்தலில் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுபவர்கள் எவரும், தான் உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை எம்ஜிஆர் போல ஏழைகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களா என்ன?
பூனை தன்னுடம்பில் கோடுகளை போட்டுக் கொண்டால் புலியாகி விடுமா?
#திருடர்கள்_ஜாக்கிரதை_போர்டு_வைத்து_விட்டார்கள ்..!
இனிய ஞாயிறு காலை வணக்கங்கள்!...........
-
ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க
ஆவணி 18 வியாழக்கிழமை
எம்ஜிஆர் ரசிகர்களே எம்ஜிஆர் பக்தர்களே
நீங்கள் பார்க்கும் இந்த வீடியோ காட்சி
ஆந்திரவில் தயாரித்ததெலுங்கு படத்தில் இடம்பெற்றது
புகழ்பெற்ற கதாநாயகன் மகேஷ்பாபு நடித்த படம்
இது ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் ஆந்திராவில் தயாரிக்கின்ற படங்களில்
என்டி ராமராவ் படங்களையோ போட்டோக்களையோ காண்பிப்பது கிடையாது
ஆனால் தமிழ்நாட்டில் தயாரிக்கின்ற
பெரும்பாலான தமிழ் படங்களில்
எம்ஜிஆரின் அழகிய திருமுகத்தை யோ
எம்ஜிஆர் சினிமா பட பாடல்களையோ படம் பார்க்கும்
மக்கள் முன்பாக காட்டுவார்கள்
எம்ஜிஆர் தனி மனிதனாகஆரம்பித்த கட்சி அண்ணா திமுக
எம்ஜிஆர் தனிமனிதனாக அரசியல் போர்க்களத்தில் நின்று மூன்று முறை வெற்றி பெற்று முதலமைச்சராக வந்தார்
எம்ஜிஆர் மறைந்த பிறகு. எம்ஜிஆர் பெயரை சொல்லி ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார்
எம்ஜிஆர் காக ஜெயலலிதாவை எம்ஜிஆர் ரசிகர்கள்ஏற்றுக் கொண்டார்கள்
அவர் முதலமைச்சராக அமர்ந்த நாளில் இருந்து அவர் மரணமடையும் வரை
எம்ஜிஆர் பெயரை சொல்ல விடாமல் செய்தார்
ஆட்சி இயந்திரத்தைப் பயன்படுத்தி
எவ்வளவு தூரம் எம்ஜிஆர் பெயரை மறக்கடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நன்றி இல்லாமல் எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்தார் ஜெயலலிதா.
ஆனால் ஆந்திரா சினிமா உலகின் புகழ்பெற்ற கதாநாயகன் நடித்த இந்த திரைப்படத்தில்
எம்ஜிஆர் அவர்கள் t'v.யில் பேசுகின்ற காட்சியை எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பதிவு செய்துள்ளார்கள்
ஜெயலலிதாவை போன்றவர்கள் எம்ஜிஆர் பெயரையோ எம்ஜிஆர் படத்தையோ இருட்டடிப்பு செய்தாலும்
எம்ஜிஆரின்நீதி நேர்மை சத்தியம் ஏதாவது ஒரு வழியில் எம்ஜிஆரின் படங்களை எம்ஜிஆரின் பாடல்களை. எம்ஜிஆரின் திருவுருவத்தையும்
தற்போது தயாரிக்கின்ற சினிமா படங்கள் மூலம்
ஏதாவது ஒரு காட்சியில் வெளிப்படுத்தி விடுகிறது.........
-
"பணக்கார குடும்பம்" r.r. பிக்சர்ஸ் எம்ஜிஆரை வைத்து எடுத்த 5 வது திரைப்படம். R.r. பிக்சர்ஸ் எம்ஜிஆரை வைத்து மொத்தம் 7 படம் எடுத்தார்கள். முதல் படம் "குலேபகாவலி" 2வது படம் "புதுமைப்பித்தன்". 3வது படம் "பாசம்". நான்காவது படம்
"பெரிய இடத்துப் பெண்". 5வது படம் தான் "பணக்கார குடும்பம்". தமிழகத்தில் 1964 ஏப் 23 ம் தேதி வெளியான படம். ஆனால் சென்னையில் மட்டும் ஏப் 24 ம் தேதி வெளியீடு. "வேட்டைக்காரன்" ஏப் 23 அன்று 100 நாட்கள் ஓடியதும் அதே தியேட்டர்களில் வெளியான படம்.
சித்ரா பிராட்வே மேகலா ஆகிய தியேட்டர்களில் வெளியாகி 101 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது எம்ஜிஆர் குடும்ப
கதைகளில் நடித்து அதையும் மாபெரும் வசூல் வெற்றி படமாக்க முடியும் என்பதை நிரூபித்த படம்தான் "பணக்கார குடும்பம்".
தலைவர் எத்தனையோ குடும்ப படங்களில் நடித்தாலும் அதிலும்
கொள்ளை கூட்டம், கள்ளக்கடத்தல் போன்ற காட்சிகளை புகுத்தி. பாதிக்கு மேல் ஆக்ஷன் காட்சிகளாக மாற்றியிருப்பார்.
ஆனால் இதில் முழுக்க முழுக்க குடும்ப படமாகவே எடுத்து படத்தை வெகு சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பார் t.r. ராமண்ணா. படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பாடல்கள் அத்தனையும் மிக அருமையான மெட்டுக்கள். எம்ஜிஆரின் இயல்பான நடிப்பால் "பணக்கார குடும்பம்" பெண்களை மிகவும் கவர்ந்து திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக்கோலம்தான்.
அதிலும் 6 மணிக் காட்சிக்கு பெண்கள் கூட்டத்தை பார்த்தால் பெண்களுக்கென்று தனிக் காட்சி போடலாம் போலிருக்கும். மற்ற நடிகர்களின் குடும்ப படத்தை ஒரு தடவை பார்த்தாலே போதுமடா! குடும்ப வாழ்க்கை, என்று அனைவரும் கேவிக்கேவி அழ ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ஒரு சராசரி நேர்மையான, தன் உழைப்பால் வாழுகின்ற ஒரு ஆண்மகனாக
தலைவர் வாழ்ந்திருப்பார்.
எந்த இடத்திலும் முகத்தை அஷ்ட கோணலாக மாற்றவோ, அதிகமாக கத்தி நடிக்கவோ மாட்டார். முதன் முதலாக குடித்தவர் போல நடித்து ஒரு அருமையான பாடலை பாடும் காட்சி மிகவும் வரவேற்பை பெற்றது.
முதல் பாடல் காட்சியிலேயே சைக்கிளில் பாடும் போது சம உரிமையை பாடி தனி முத்திரை பதித்து விடுவார். "இதுவரை நீங்கள் பார்த்த பார்வை" ஆகா! எத்தனை இனிமையான பாடல். பல நாள் இரவு நேரத்தில் ரேடியோவில் இந்தப் பாடலை கேட்டால் என்னை மறந்து தூங்கி விடுவேன்.
பூ பந்து விளையாடி பாடுவதும் பின்னர் பந்தை, பயன்படுத்தி சண்டையிடும் காட்சியிலும் விசில் சத்தத்தில் தியேட்டரில் தூள் பறக்கும். இன்று இதைப்போன்று காட்சிகள் ஏராளம் இருந்தாலும்
புது யுக்திகளை முதலில் கையாள்வதில் தலைவரை மிஞ்ச
ஆள் கிடையாது. இந்தியில் கலரில் வந்தாலும் தமிழின் இனிமை, அதை
இயல்பான நடிப்பால் வெளிப்படுத்திய விதம், மெல்லிசை மன்னர்களின் பாடல்கள், t.r. ராமண்ணாவின் திறமையான இயக்கம் என்று ஒவ்வொரு அம்சமும் படத்தின் வெற்றியை வெகுவாக உயர்த்தி சென்றது.
இதையெல்லாம் விட கதையோடு இணைந்த நாகேஷின் பரம்பரை காமெடி வெகுவாக ரசிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இந்தக் காமெடியை பற்றி பேசி, ரசித்து சிரிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். முதல் சண்டை காட்சி இசை காமெடியுடன் நீச்சல் குளத்தின் அருகே வெகு இயல்பாக மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். சரோஜாதேவி தோழியருடன் விளையாடும் சடுகுடு என் பேத்தி மிகவும் விரும்பி பார்க்கும் பாடல்.. இதற்கு இணையான, இயல்பான குடும்ப படம் அதுவரை வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மற்ற குடும்ப படங்கள் எல்லாம் ஒரு நடிகரின் பின்னாலேயே கதை காட்சியமைப்பு பின்னப்பட்டு 'மோனோ ஆக்டிங்கை' அதிகமான குளோஸப் காட்சிகள் மூலம்
திணித்திருப்பார்கள். பார்ப்பவர்களுக்கு சற்று நேரத்தில் அலுப்பு தட்டி விடும். ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் தித்திக்கும் தேன் பாகை சுவைத்த இன்பம் அனைவருக்கும் கிட்டும் என்று உறுதியாக கூறலாம்.
சென்னையில் மூன்று தியேட்களிலும் 101 நாட்கள் ஓடி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. மதுரை தேவியில் சித்திரை மாதத்தில் வெளியாகி 126
நாட்கள் ஓடி தனி முத்திரை பதித்தது. மேலும் திருச்சி, கோவை, சேலம் என அத்தனை a சென்டர்களிலும் 100 நாட்களை கடந்தது. தலைவரின் குடும்ப படங்களில் "பணக்கார குடும்பம்" ஒரு குதூகலமான வெற்றியை பதிவு செய்தது. அநேக ஊர்களில் 50 நாட்களை எளிதில் கடந்து எக்காளமிட்டது..
வேலூர் தாஜ் திரையரங்கில் 70 நாட்களை விரைவில் கடந்தது.. தூத்துக்குடி சார்லஸில் வெளியாகி 53 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடி தியேட்டரில் நினைவு பரிசு வைக்கப்பட்டது. சார்லஸில் 50 நாட்கள் ஓடுகிறதென்றால் அந்த படம் வெள்ளி விழா ஓட தகுதியான படம் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் "பணக்கார குடும்பம்" ஏழை எளியவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும். வெற்றிப்
படம் என்றே சொல்ல வேண்டும்..........
-
#உலகம் சுற்றிய எம்ஜியார்#
எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார் மக்கள் திலகம்..ந*டிக*ரான ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
#ர*ங்கூன்
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.
#இலங்கை
1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டுமல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
இலங்கை பிரதமர் டட்லி சேனநாயகாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
#சிங்க*ப்பூர்
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
#மாஸ்கோ
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!
#லண்ட*ன்
பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.
#பாரீஸ்
அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்..
#கிழ*க்கு ஆப்பிரிக்கா
பின்ன*ர் லண்ட*னிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!
#மொரீஷிய*ஸ்
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
#அமெரிக்கா
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!
இனிய மாலை வ*ணக்கத்துடன்............
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 18/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் சித்தர்கள் கூறும் அருள் வாக்கு ,பகைவர்களுக்கு அருள்வது என்றால் என்ன என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாழ்க்கையில் நடத்தி காட்டி இருப்பார் .
சாயா என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன்* ஜோடியாக டி.வி.குமுதினி என்கிற நடிகை நடித்தார் .* அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏதோ குடும்ப சிக்கல். ஒரு காட்சியில் நடிக்கும்போது சரியாக அமையாததால், ஒரு டேக், இரண்டு டேக்,முடிந்து ஆறு டேக் ஆகிவிட்டது .* குமுதினி மடியில் சாயும்போது எல்லாம் அவரது கணவர் ஏன் வேண்டுமென்றே இப்படி செய்கிறார், இப்படியெல்லாம் நடிக்க ஒத்துழைப்பு கொடுக்க முடியாது* என்று கூறி,அவர் தன் மனைவியை அழைத்து கொண்டு போய்விடுகிறார் . படத்தின் இயக்குனர் எம்.ஜி.ஆர். ஏகப்பட்ட டேக் வாங்குகிறார்*இது சரிப்பட்டு வராது* என்று கூறி அத்துடன் படத்தை நிறுத்தி விடுகிறார் .அந்த நிலையில் சாயா படம் நிறுத்தப்பட்டாலும் ,நடிகை குமுதினிக்கு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் . சாயா படம் வெளிவரவேயில்லை . அதன் பிறகு நடிகை குமுதினி பிரபலம் ஆகிவிட்டார் .இந்த படத்தில் கெட்டபெயர் ஏற்பட்டதால் அவர் கதாநாயகன் வேடத்திற்கு நடிப்பதற்கு ஏற்றவரில்லை . அவரை மேற்கொண்டு நடிக்க வைக்க முடியாது என்று,அவதூறு கிளப்பப்பட்டு* திரை துறையில் முடிவு செய்ததால் ,சுமார் 6 ஆண்டு காலம் கதாநாயகன் வேடம் ஏற்க அவர் போராட வேண்டியிருந்தது .அந்த கட்டத்தில் சிறு வேடங்கள், துணை வேடங்களில் நடிப்பது கூட சிக்கலாக இருந்த நேரம் .*
எம்.ஜி.ஆர். முதல்வராகி கோட்டையில் அமர்ந்துள்ளார் . ஒருநாள் நடிகை குமுதினி* தன கணவருடன்* வந்து எம்.ஜி.ஆரை சந்தித்து ,தனது வீடு ஒன்று பிரச்னையால் ஏலம் விடப்படுகிறது,நீங்கள்தான் தகுந்த உதவி செய்யவேண்டும் என்கிறார் . .விவரங்களை கேட்டறிந்த எம்.ஜி.ஆர்.*சாயா படத்தில் நடந்த சம்பவங்கள் எதையும் காட்டி கொள்ளாமல், கவலைப்படாதீர்கள் என்று சொல்லி,அவர்களுடைய வீட்டை ஏலத்தில் இருந்து மீட்டு கொடுத்தார் . வேறு ஏதாவது உதவிகள், தேவைப்பட்டாலோ, பிரச்னைகள் இருந்தாலோ மனதில் எந்த சலனமும் இல்லாமல் என்னை அணுகுங்கள் . நான்*உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அனுப்பினாராம் .
பழம்பெரும் நடிகை கண்ணாம்பா பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு தாயாராக நடித்தவர் . ஒருமுறை சொந்த படம் எடுக்க துணிந்தபோது தன் சொத்துக்களை விற்கவேண்டிய சூழ்நிலை . இருந்த ஒரு வீட்டையும் அடமானம் வைத்த பின் ஏலத்திற்கு வருகிறது . இதை அறிந்த எம்.ஜி.ஆரின் நண்பனான சாண்டோ சின்னப்ப தேவர் ,எம்.ஜி.ஆரிடம், கண்ணாம்பாவின் வீடு அடுத்த வாரம் ஏலத்திற்கு விடப்படுகிறது என்று தகவல் தெரிவிக்கிறார் .* உடனே எம்.ஜி.ஆர். விரைந்து செயல்பட்டு, அந்த வீட்டின் அடமானத்திற்கான பணத்தை கட்டி ,வீடு ஏலத்தில் போகாமல் காப்பாற்றி, பத்திரங்களை பெற்று, கண்ணாம்பாவிடம் ஒப்படைக்கிறார் . கண்ணாம்பா* எம்.ஜி.ஆரிடம் இந்த வீடு உங்களின் பெயரில் மாற்றி விடுகிறேன் .உங்கள் பொறுப்பிலேயே இருக்கட்டும் என்கிறார் . அதை ஏற்க மனமில்லாமல் எம்.ஜி.ஆர். கண்ணாம்பாவிடம் நீங்கள் உயிருடன் இருக்கும்வரையில் இந்த வீட்டில் இருந்து சுதந்திரமாக பயன்படுத்துங்கள் . எப்போது உங்களுக்கு தேவையில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்போது நான் பயன்படுத்தி கொள்கிறேன் என்று கூறினார் . அவருடைய செலவிற்கு சிரமப்படாமல் இருக்க சில படங்களில் நடிக்க சிபாரிசு செய்தார் .*அவரது சொந்த படம் ஒன்று முடிக்கும் தருவாயில் இருந்ததற்கு பண உதவி செய்து அதை முடித்து வெளியிடவும் ஏற்பாடு செய்தார் .
ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வீடு ஏலத்திற்கு வந்ததை அறிந்து பணத்தை கட்டி, பத்திரங்களை மீட்டு வாருங்கள் என்று தன் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனிடம் சொல்லி,அவற்றை கலைவாணரிடம் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று உத்தரவிடுகிறார் .எனக்கு எவ்வளவோ உதவிகள் தம்பி ராமச்சந்திரன் செய்துவிட்டார். செய்தும் வருகிறார் .தொடர்ந்து அவரை* தொந்தரவு செய்வது எனக்கு கஷ்டமாக இருக்கிறது .எனவே இந்த பணத்தை அவரிடமே கொடுத்துவிடுங்கள் . இந்த வீடு ஏலம்* போனாலும் பரவாயில்லை என்கிறார் கலைவாணர் .இதை கேட்ட எம்.ஜி.ஆர். ,மனதில் சஞ்சலத்தோடு ,ஆர்.எம்.வீரப்பனிடம், இந்த வீடு உங்கள், பொறுப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கட்டும் . வேண்டுமானால் நீங்களே தங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றாராம் . அந்த வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன் என்று சமீபத்தில் கூட*ஒரு பேட்டியில் ஆர். எம்.வீரப்பன் கூறியுள்ளார் .
கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி எம்.ஜி.ஆரை சந்திக்க வரும்போதெல்லாம்* ,அலுவலகமாக இருந்தாலும், ராமாவரம் தோட்டமாக இருந்தாலும், அனைவரையும் வரவேற்று* எவ்வளவு பேர் வந்தாலும் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து ,அவர்களை நன்கு உபசரித்து அவர்களுடைய கோரிக்கைகளில் எதைஎல்லாம் நிறைவேற்றலாம்*என்று பின்னர் ஓ.கே. செய்வாராம் . ஒரு நாள் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாண சுந்தரம் இந்த எம்.ஜி.ஆர். எப்போது அவரை சந்தித்து கோரிக்கைகள் பற்றி பேசினாலும், அலுவலகமாக இருந்தாலும், ராமாவரம் தோட்டமாக இருந்தாலும் முதலில் சாப்பிட வைத்து நன்கு உபசரிக்கிறார் . இதனால் நாம் கோபமாக,உணர்ச்சி பூர்வமாக எதையும் பேச முடிவதில்லை .நாம் சிறிய கூட்டத்தினராக செல்வதால்தானே அப்படி செய்கிறார் . பெரிய கூட்டமாக செல்வோம் என்று முடிவு செய்கிறார் வீட்டுக்கு சென்றால்தான் சாப்பிட சொல்கிறார் . நாம் 500 பேராக திரண்டு கட்சி அலுவலகத்திற்கு செல்வோம்*அப்போதுதான் கோரிக்கைகள் நிறைவேற்ற சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் போராட்டம் அறிவிக்கவும், போராடவும் நமக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணி, அ .தி.மு.க. கட்சி அலுவலகம் செல்கிறார் .அங்கிருந்து எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.அதாவது கம்யூனிஸ்ட் தலைவர் சுமார் 500 பேர்களுடன் கோரிக்கைக்கு மனு அளிக்க வந்துள்ளார் .கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்துள்ளதாக*சொல்லப்படுகிறது .இன்னும் 30 நிமிடங்களில் நான் அங்கு வந்துவிடுவேன் .அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் காவல்துறை பாதுகாப்புடன்* தங்கவைத்து உணவளியுங்கள் என்கிறார் .அனைவர்க்கும் தடபுடலாக உணவு ஏற்பாடு செய்து தரப்படுகிறது .எம்.ஜி.ஆர். நேராக கல்யாண மண்டபத்தில் நுழைகிறார்* *நீங்கள் உணவருந்தியபின் பேசலாம் என்றுதான் சற்று தாமதமாக வந்தேன் என்கிறார் எம்.ஜி.ஆர். உடனே கல்யாண சுந்தரம் இது என்ன உங்களின் போர் தந்திரமா ?எங்கு,எப்போது சந்தித்தாலும், எத்தனை பேர் வந்தாலும் ,500 பேர் வந்தாலும் விருந்தோம்பல் செய்து எங்களை சாந்தமாக்கி விடுகிறீர்கள் ,எங்களது கோரிக்கைகள் பற்றி உரிய முடிவு எடுப்பதில்லை என்று கூறுகிறார் . தமிழக முதல்வர் என்கிற வகையில் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை*நிறைவேற்ற* வேண்டியது என் கடமை . அதை நான் நிச்சயம் செய்வேன் . அனால் என்னை பார்க்க வருபவர்கள் யாரும் உணவருந்தாமல் போக கூடாது .இங்குள்ளவர்கள் அனைவரும் தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர்*அவர்கள் அனைவரையும் உபசரிப்பது இந்த ராமச்சந்திரனின் முதல் கடமை .என்று கூறியதும் கல்யாண சுந்தரம் கண் கலங்கியவாறு எம்.ஜி.ஆரின் கைகளை பற்றி கொண்டாராம் .
எம்.ஜி.ஆர். ஒருநாள் ஸ்டுடியோவிற்கு வருகிறார் .அங்கு,படத்தொகுப்பாளர்கள்*காமிராமேன், திரைக்கதை ஆசிரியர் , ஒளி /ஒலி* பொறியாளர்கள் , ஆர்ட் டைரக்டர், இயக்குனர் ,தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் உள்ளனர் .அங்குள்ள கருவிகளை எம்.ஜி.ஆர். சுற்றி பார்த்துவிட்டு ,அனைவரிடமும் பேசி விட்டு வருகிறார் . ஒரு பிரம்மாண்ட மாளிகை செட் போடப்பட்டுள்ளது . அதை பார்த்துவிட்டு, இங்குள்ளவர்கள் எல்லாம் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள்*உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன் .இந்த பிரம்மாண்ட மாளிகையில் ஒரு குறை இருக்கிறது .யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் என்கிறார் .யாருக்கும்* *சொல்ல* தெரியவில்லை. ,உடனே எல்லா விளக்குகளையும் ஒரு நிமிடம் அணையுங்கள் என்றார் .மீண்டும் விளக்கை ஏற்றுங்கள் என்கிறார் .அவர் ஒரு திசையை காட்டி ,தென்பகுதியில் ,ஒரு விரிசல், லைட்டிங் மாறுபாட்டால் தென்படுகிறது . இந்த லைட்டிங் சரி செய்தால் அந்த விரிசல் தெரியாமல்*மாளிகை செட் படமாக்குவதற்கு எளிதாக இருக்கும் என்கிறார் . மாளிகையின் வனப்பு நன்றாக இருக்கும் என்று மிக நுட்பமாக கண்டுபிடித்து சொல்லி அங்குள்ள திரைப்பட கல்லூரி மாணவர்களையும் ஆச்சர்யப்படுத்தி வாத்தியாராக திகழ்ந்தார் .***
எம்.ஜி.ஆர் ஒருமுறை வெள்ள நிவாரண பணிகள் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் .ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 50பேர் கூடியுள்ளனர் .அங்கு எம்.ஜி. ஆருடன்* தலைமை செயலாளர் ,மாவட்ட ஆட்சியர் , சுகாதார துறை அதிகாரிகள்*செல்கிறார்கள் . அங்குள்ளவர்களிடம் எம்.ஜி.ஆர் கேட்கிறார் . உங்களுக்கு என்னென்ன குறைகள் உள்ளன* , என்ன உதவிகள் வேண்டும் இதுவரை அதிகாரிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரிக்கிறார் . அந்த கூட்டத்தில் இருந்து நால்வர் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை, பட்டா தரவில்லை என்று சத்தமாக தொடர்ந்து பேசுகிறார்கள் . சிறிது நேரம் கழித்து ,காவல்துறையினரிடம் அந்த நால்வரை மட்டும் தனியே அழைத்துவர சொல்கிறார் .* உங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்று சொல்கிறீர்களே .நீங்கள் யாரை ,எங்கு சந்தித்து மனு அளித்தீர்கள் என்று கேட்க*நாங்கள் அதிகாரிகளிடம் கூறினோம், ஏன் ,மாவட்ட ஆட்சியரை கூட* சந்தித்தோம் ஒன்றும் பலனில்லை என்றனர் .ஆட்சியர் என்ன சொன்னார் என்று எம்.ஜி.ஆர். கேட்க, அவர் எங்களுக்கு கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்று பதில் கூறினர் . அந்த ஆட்சியர் இந்த கூட்டத்தில் இருக்கிறாரா பாருங்கள் .இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று எம்.ஜி.ஆர். கூற ,அவரை காணோம் .இங்கு வரவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். எம்.ஜி.ஆர். உடனே,இதோ இவர்தான் உங்கள் மாவட்ட ஆட்சியர் ..நீங்கள் வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக இங்கு பிரச்னை செய்கிறீர்கள். உங்களை 15 நாட்கள் காவலில் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றவுடன்,உடனே எம்.ஜி.ஆர். காலில் விழுந்து ஐயா எங்களை மன்னித்து விடுங்கள் ,கட்சிக்காரர்கள் பேச்சை நம்பி தவறாக நடந்து கொண்டோம் என்று புலம்பினார்கள் . ஆட்சியரையோ, அதிகாரிகளையோ முறையாக சந்தித்து மனு அளித்து உங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு விரைவில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்* , அரசியல்வாதிகள் பேச்சை நம்பி, மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொல்லை கொடுக்க கூடாது என்று எச்சரித்து அனுப்பினார் எம்.ஜி.ஆர்.*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*
2.அன்று வந்ததும் இதே* நிலா - பெரிய இடத்து பெண்*
3.பல்லாக்கு வாங்க போனேன் - பணக்கார குடும்பம்*
4.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*
5.எம்.ஜி.ஆர்.-கரி கோல் ராஜு உரையாடல் - நல்ல நேரம்*
6. எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - படகோட்டி*
7.அன்னமிட்டகை நம்மை ஆக்கி விட்ட கை- அன்னமிட்டகை*
8. என்னை தெரியுமா* - குடியிருந்த கோயில்*
-
பூனை விஜய் #சின்னவாத்தியாரே என்று பேனர் போட்டுக்கொண்டால்? எம்ஜிஆர் என்ற புலியாகிவிடுமா?..........."#குறுக்கு_வழியில்_வாழ்வ ு_தேடிடும்_திருட்டு_உலகமடா"-எம்ஜிஆர்!
2021_தேர்தலில் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுபவர்கள் எவரும், தான் உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை எம்ஜிஆர் போல ஏழைகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களா என்ன?
பூனை தன்னுடம்பில் கோடுகளை போட்டுக் கொண்டால் புலியாகி விடுமா?
#திருடர்கள்_ஜாக்கிரதை_போர்டு_வைத்து_விட்டார்கள ்..!
இனிய திங்கள் காலை வணக்கங்கள்!.........
-
தலைவரை நாடி வந்த பந்துலுவுக்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடித்தந்த படம்தான் "தேடி வந்த மாப்பிள்ளை".
1970 ம் ஆண்டு ஆக 29 ல் வெளியான வெற்றிப் படம்தான் "தேடி வந்த மாப்பிள்ளை". அந்த ஆண்டு வெளியான நான்காவது படம். முதல் படமான "மாட்டுக்கார வேலன்" வெள்ளி விழாப் படம். 2வது படமான "என் அண்ணன்" 100 ஓடி வெற்றி பெற்ற படம்.
அடுத்து வந்த கருப்பு வெள்ளை படமான "தலைவன்" சுமாரான வெற்றி. நான்காவது வந்த படம்தான் "தே.வ.மாப்பிள்ளை". இதுவும் சராசரிக்கு மேல் வெற்றியை பதிவு செய்ய தவறவில்லை. படத்தின் சிறப்பே r k சண்முகத்தின் வசனம்.
எல்லாம் எதுகை மோனையில் எழுதி அசத்தியிருப்பார். தோட்டா-பேட்டா
பேட்டா-டாட்டா என்று ஒவ்வொரு வசனத்திலும் எதுகை மோனையில் காமெடியை தூவியிருப்பார்.
சோலைமலை பெயரையே ஏசி பண்ணியிருக்கான் என்ற வசனங்கள் அருமை. "ஆயிரத்தில் ஒருவனு"க்கு பிறகு இந்த படத்தின் வசனத்தில் மீண்டும் பளிச்சிடுகிறார்
மிகவும் பிரபலமான 'வெற்றி மீது வெற்றி வந்து' பாடலே ஆரம்ப காட்சியின் வேகத்தை முடுக்கி விடுகிறது . அதன் பின் சென்னை சென்ற பிறகு ஒவ்வொரு காட்சியும் மின்னல் வேகத்தில் நகரும். 'மாணிக்க தேரில்' பாடல் காட்சி மிகவும் அருமையாக இருக்கும்.
சோவின் காமெடி ரசிக்கும்படி இருக்கும். ஜஸ்டினுடன் ஒரு சண்டை காட்சி மிகவும் நேர்த்தியாக படமாக்கப் பட்டிருக்கும்.
அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்த இந்தப் படம் பெரு வெற்றி பெற வேண்டிய ஒரு படம். ஆனால் காரணம் புரியவில்லை ஏன் அந்த வெற்றியை தவற விட்டதென்று.
அந்த நேரத்தில் சென்னை பாரகனில் வெளியான தலைவர் படங்கள் "நாடோடி மன்னனு"
க்கு பிறகு 100 நாள் வெற்றியை பெறவில்லை. பாரகனில் தலைவர் படம் வெளிவருகிறது என்றாலே நம்ம ரசிகர்கள் சோர்ந்து
விடுவார்கள். அதன்பிறகு
பல தலைவர் படங்கள்
வெளியானாலும் எதுவும் 100 நாட்கள் ஓடவில்லை. அதேபோல் மதுரை தங்கத்தில் "நாடோடி மன்னனு"க்கு பிறகு தலைவருக்கு
மிகப் பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் வரவில்லை.
தங்கத்தில் ஏதாவது ஒரு வெற்றிப் படம் வெளியாகியிருந்தால் அவ்வளவுதான் வசூலில் மிக பெரிய ரிக்கார்டு உருவாகியிருக்கும்.
இருப்பினும் தலைவரின் சாதாரண வெற்றிப் படங்களே பிரமிக்கத் தக்க வசூலை கொடுக்க தவறவில்லை.
தங்கத்தில் 69 நாட்கள் ஓடி சுமார் 2,17,000 ஐ வசூலாக பெற்று சாதனை படைத்தது.
சென்னை பாரகனில் 61 நாட்களில் 198365.00 வசூலாக பெற்றது. சென்னை பாரகன் அகஸ்தியா சரவணா வில் 61 நாட்களும் திருச்சி 84 சேலம் 71 கோவை 68 நாட்களும் ஓடியது. ஈரோட்டில் 64, நெல்லை 53 நாகர்கோவில் 50 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. மொத்தம் 22 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது. 100 நாட்கள் ஓட்டப்பட்ட பல சிவாஜி படங்களின் 50 நாட்களை காட்டிலும் கூடுதல் அரங்குகளில் 50 நாட்கள் ஓடியது.
சென்னையில் முதல் வெளியீட்டிலே சுமார் 7 லட்சத்தை வசூலாக பெற்றது. முதல் வெளியீட்டிலேயே சுமார் 4 மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி அதிரடி நிகழ்த்தியது. ஒரு படத்தின் சாதனை என்பது ஏதாவது ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டினால் போதும் என்பது சிவாஜி ரசிகர்களின் நினைப்பு. ஆனால் திரையிடும் தியேட்டர்களில் பெருவாரியான திரையரங்கத்தில் 50 நாட்கள் ஓடினால்தான் படத்துக்கு வெற்றி என்பது விநியோகஸ்தர்களின் கணிப்பு.
தலைவர் படத்தை பொருத்தவரை அடுத்த தலைவர் படம் வரும்வரை எத்தனை படங்கள் வந்தாலும் வசூலில் அசைக்க முடியாது. ஆனால் அடுத்த தலைவர் படம் வந்து விட்டால் ரசிகர்கள் புது படத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதில் சிக்கி கொண்ட இரண்டு படங்கள் பத்மினி பிக்சர்ஸ் கலர் படங்களான "ரகசிய போலீஸ் 115" மற்றொன்று "தேடி வந்த மாப்பிள்ளை".
"ரகசிய போலீஸை" பொறுத்தவரை
"தேர்த்திருவிழா" சுமாரான படம் என்பதால் பிரச்னை இல்லை.அடுத்து வந்த "குடியிருந்த கோயில்" மெகா பிளாக்பஸ்டர் படம்.
ஆயினும் "குடியிருந்த கோயிலை" தாண்டி ஒரு சில ஊர்களில்100 நாட்கள் ஓடியது. வசூலில் "குடியிருந்த கோயிலி"ன் வசூலில் 80 சதவீதத்துக்கு மேலே வசூலை குவித்தது. அதேபோலதான்
"தேடி வந்த மாப்பிள்ளை"யும். முதல் 40 நாட்கள் வரை அசைக்க முடியாத
வசூலை பெற்ற படம்.
அடுத்து வந்த "எங்கள் தங்க"த்தால் 100 நாட்களை
எட்ட முடியாமல் போனாலும் நல்லதொரு வெற்றியை பதிவு செய்தது எனலாம். பரீட்சையில் ஒரு பாடத்தில் வெற்றி பெற்றால் பாஸாக முடியாது. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்ச மார்க்கை பெற வேண்டும் என்பதை அறியாதவர்களா? சிவாஜி ரசிகர்கள்.
எங்கோ ஒரு இடத்தில் முக்கி முனகி 100 நாளை ஓட்டி விட்டு வெற்றி வெற்றி என்று கதறுவதை பார்த்தால் நமக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா உலகத்துக்கே சிரிப்புத்தான் வருகிறது..........
-
சென்னை: "அதென்ன, அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருக்குமே எம்ஜிஆர்தான் கிடைத்தாரா?" என்கிறது ஒரு தரப்பு.. "ஏன், அவர் ரசிகர்கள் நாங்கள் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக்கூடாதா" என்று கேட்கிறது இன்னொரு தரப்பு!
வழக்கத்துக்கு மாறாக இந்த முறை விஜய் பட போஸ்டர்களில் எம்ஜிஆர் தென்படுகிறார்.. விஜய்யை எம்ஜிஆராக சித்தரித்ததையே மக்கள் ஜீரணித்து கொண்டார்களா என்று தெரியவில்லை, ஆனால் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா கெட்டப்பில் சித்தரித்துள்ளனர்.
இன்னும் அரசியலுக்கு விஜய் வரவில்லை.. ரசிகர் மன்றம் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.. அதை மறுப்பதற்கில்லை.. ஆனால், "எம்ஜிஆரின் மறுஉருவமே" என்று சொல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? விஜயகாந்த் செய்யாததையா விஜய் செய்துவிட்டார்? என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது.
"2021-ல் தமிழகம் தலையேற்க வாங்க தலைவா!" என்றுகூட விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இப்படித்தான் முக அழகிரியையும் போஸ்டர் அடித்து கொண்டு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸையும் கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இருக்கிற ஒரு தமிழ்நாட்டுக்கு எத்தனை பேர்தான் தலைமை ஏற்க முடியும்? இதெல்லாம் ரசிகர்களின் உச்சக்கட்ட அன்பும், அபரிமிதமான பாசமும், ஆதரவாளர்களின் எல்லையற்ற நம்பிக்கையும் என்றே கூட நாம் வைத்து கொள்வோம்!!
ஆனால், எம்ஜிஆரை இவர்கள் இழுத்து கொண்டு வருகிறார்கள்? விஜய்யை விஜய்யாகவே காட்ட வேண்டியதுதானே? அதென்ன எம்ஜிஆரை டார்கெட் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டுவது என்பது அதிமுக தரப்பின் முணுமுணுப்பாக உள்ளது.. இதற்குதான் அமைச்சர் ஜெயக்குமார் "மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது, செஞ்சிக்கோட்டை ஏறியவர்களெல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது" என்று சுடச்சுட ஒரு பஞ்ச் சொல்லி உள்ளார்.
இதுபோலவே கமல்ஹாசனும் "நாளை நமதே" என்ற ஒருவார்த்தையை மய்யத்தில் சொல்கிறார்.. நாளை நமதே படத்தில் சிறுவனாக கமலும் நடிக்க வேண்டி இருந்தது.. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகவும் கமல் அளவுகடந்த வருத்தம் அடைந்துள்ளார்.. இந்த ஆதங்கம் இருக்கவே செய்யும்.. எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அது முடியாமல் போனால் ஆற்றாமைதான்... ஒப்புக் கொள்வோம்.. அதற்காக இவ்வளவு காலம் நாளை நமதே என்ற வார்த்தையை தன் சினிமா டைட்டில்களிலும், படங்களிலும், பயன்படுத்தாதவர், இப்போது திடீரென நாளை நமதே என்று பிரச்சாரத்துக்கு கிளம்ப போகிறார் என்றால், இதை அரசியலின் ஆதாயமாகத்தானே பார்க்க தோன்றுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஆனால் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கும், ஆட்சிக் கட்டிலில் அமலரத் துடிக்கும் நடிகர்களுக்கும் கண்டிப்பாக எம்ஜிஆர் மட்டுமே ரோல் மாடலாக இருக்க முடியும். காரணம் அவர்தான் திரையுலகில் இருந்த கையோடு அரசியலில் புகுந்து அதே வேகத்தில் மக்கள் மனதையும் கவர்ந்து ஆட்சியைக் கைப்பிடித்த முதல் நடிகர். பின்னால் இதே பாணியில் ஆட்சியைப் பிடித்த என்டிஆருக்கே கூட எம்ஜிஆர்தான் ரோல் மாடல்.. அப்படி இருக்க நம்ம ஊர் நடிகர்கள் எம்ஜிஆரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
"சினிமாவில் நடித்து, மக்கள் மனசில் இடம் பிடிச்சிட்டால் ஆட்சியிலும் உட்கார்ந்துடலாம் என்பதற்கு, உலகத்துக்கே 'வெளிப்படுத்தியவர் எம்ஜிஆர்தான்.. அதனால் அவரோட ரசிகர்களான நாங்கள், அவரது ரூட்ல போறதுல என்ன தப்பு?" என்று கேட்கிறார்கள் பிற கட்சி தொண்டர்களும் பிற நடிகர்களின் ரசிகர்களும்! அதுவும் நியாயமானதுதான்.
"வர்றேன்.. வந்துருவேன்.. வந்தே தீருவேன்" என்று பல காலமாக சொல்லிக் கொண்டே இருக்கும் ரஜினிகாந்த் முதல் வந்துட்டேன் மாற்றம் தராமல் போக மாட்டேன் என்று கூறி வரும் கமல் வரை அனைவருக்குமே எம்ஜிஆர் ஆகும் ஆசைதான் இருக்கிறது. இவர்கள் என்றில்லை எந்த சினிமாக் கலைஞராக இருந்தாலும் கூட எம்ஜிஆராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். காரணம் எம்ஜிஆர் சென்ற உயரம், பெற்ற வெற்றி!
அவரை போலவே திரையுலகிலும் மக்கள் மனதிலும் வெல்ல வேண்டும் என்பதே அனைத்து சினிமாக்காரர்களின் கனவாகும்... விஜயகாந்த் அப்படித்தான் நினைத்தார் வந்தார் ஓரளவு வெல்லவும் செய்தார். தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூட சொல்ல வைத்தார்.. ஆனால், அவரது விளம்பரங்களிலும் அவரது கட்சித் தொண்டர்கள் மூலமாகவும்தான் கருப்பு எம்ஜிஆர் என்ற வார்த்தை விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர, பொதுமக்கள் யாருமே விஜயகாந்தை அப்படி அழைத்ததே இல்லை. காரணம் அவர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர்தான்.. கருப்பு, சிவப்பு, பச்சை எம்ஜிஆர்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
அவர் மட்டுமல்ல, அவருக்கு பிறகு வந்த எத்தனையோ பேர் எம்ஜிஆர் பெயரை அரசியல், சினிமாவில் பயன்படுத்தி கொள்ளதான் செய்தனர்.. ஆனால் எம்ஜிஆருக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தது ஒரே ஒருவர்தான். அவர் ஜெயலலிதா மட்டுமே. எனவே அடுத்த எம்ஜிஆர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய முடியுமே தவிர வேறு எந்த சக்தியாலும் அதை தீர்மானிக்க முடியாது.. ஏன் சம்பந்தப்பட்ட நடிகர்களின் செல்வாக்கே கூட அதை தீர்மானிக்க முடியாது என்பதே நிதர்சனம்.. அப்படி இருந்திருந்தால் ரஜினிக்கு இருந்த செல்வாக்குக்கு இன்னேரம் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு அவர் முதல்வராகியிருக்க மாட்டாரா என்ன.. ஆனால் மக்களிடம் எழுச்சி வர வேண்டும் என்று ரஜினியே சொல்லியும் கூட அது சுத்தமாக வராமல் இருக்கிறது என்பதுதான் இங்கு முக்கியமானது!
இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.. இறுதிவரை அரசியலிலும் சரி, ஆட்சியிலும் சரி, தன் உறவினர்கள் யாரையும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட அனுமதிக்காதவர் எம்ஜிஆர்.. அதனால்தான் எம்ஜிஆரின் செல்வாக்கு இன்று வரை அப்படியே உள்ளது. அவரை மிகப் பெரிய இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் மக்கள். ஆனால் அவரைப் பின்பற்றத் துடிப்போரில் 99 சதவீதம் பேர் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதை மக்கள் கண் கூடாக கண்டு வருவதால்தான் எம்ஜிஆர் இடத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் ஓரம் கட்டி வைத்துள்ளனர்.
எம்ஜிஆர் படங்களையே எடுத்து கொண்டாலும், அவரது கேரக்டர்களை பார்த்தாலும் சரி, எம்ஜிஆர் நல்லவர்.. தண்ணி அடிக்க மாட்டார்.. சிகரெட் பிடிக்க மாட்டார்.. தன் மனைவியையோ, காதலியையோ தவிர பிற பெண்களை தாயாக கருதுவார்.. ஏழைகளை பாதுகாப்பார்.. நாளைய எம்ஜிஆர் என்று சொல்லி போஸ்டர் ஒட்டுபவர்கள் தங்கள் ஆதர்ச தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
விஜயகாந்த்
இவரைப் பற்றி தெரிந்து கொள்க
விஜயகாந்த்
அரசியல் வாழ்க்கைநிகர மதிப்புதொடர்பு
அதுமட்டுமல்ல, எம்ஜிஆரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைபவர்கள், அவரது கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ பின்பற்ற தயாராக இருக்கிறார்களா என்பதையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஒருவேளை அப்படி அறிவிக்கும் சூழல் வரும்வரை, யார் வேண்டுமானாலும் தன்னை எம்ஜிஆராக நினைத்து கனவு காணட்டும்.. ஏனென்றால், கனவு காணும் எல்லாருக்குமே உரிமை உண்டு.. கலாமே கனவு காணுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே.. கனவு காண்பதில் தவறே இல்லை..........
-
காவிய தலைவன்--
-----------------------------------
எம்.ஜி.ஆருக்கு இரு புறங்களிலும்--
கண்ணதாசன்--வாலி என கவி இருவர் இருந்தாலும்-
கண்ணதாசன் வரைந்தவை சற்று ஓங்கியே இருக்கும்!
எம்.ஜி.ஆர்ப் பற்றிக் கவிஞர் வரைந்துள்ள இக்கவிதை கொஞ்சம் அபூர்வமானது!
படித்துப் பரவசப்பட மட்டுமன்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ஆகும்!
எம்.ஜி.ஆரைத் தமிழர் இல்லை என்றால்??
கவிதையின் கடைசியில் நச் சென்று நவின்றிருக்கிறார் நற்றமிழியின் நாயகன்!
படித்துத் தான் பாருங்களேன்--
கல்லூரிப் படியேறிக்
கல்லாத போதினிலும்
சொல்லும் மொழியெல்லாம்
சுவையான செந்தமிழாய்
வெல்லும் படி சொல்லும்
வீரனை நாம் பெற்றுள்ளோம்!
மன்னர் இவரொரு நாள்
மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான்
அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில்பேசு எனக்
கேட்டார்கள் தோழரெலாம்--
ஓரளவும் பேசேன் நான்--
உயிர்படைத்த நாள்முதலாய்
உண்ணும் உணவும் உலவுகின்ற வீதிகளும்
எண்ணும் பொருளும்
ஏற்றதொரு தொழில் நலமும்
செந்தமிழால் வந்த
திரு வென்றே பெற்றவன் நான்
அந்தமொழி இன்றி
அடுத்த மொழி பேசுவதோ?
என்று பதிலுரைத்தார்
இவர் பெருமை யார்க்கு வரும்?
பொன்மனத்துச் செல்வர்
புரட்சித் தலைவரிவர்
தமிழரிலை என்றால்
தமிழுக்கேக் களங்கம் வரும்!!!.........
-
தலைவர் பொது கூட்டம் என்றாலே பொங்கு கடல் என கூட்டம் தானே திரளும்.....
கோவை மேற்கு தொகுதியில் நடந்த தொகுதி பிரச்சாரம்....திறந்த வேனில் நின்று கொண்டே தலைவர் சூறாவளி பிரச்சாரம்..
எங்கு வாகனம் நின்றாலும் அங்கே மக்கள் வெள்ளம்... அப்போது ஒரு தொண்டர் தன் குழந்தையை கையில் தூக்கி கொண்டு கடும் கூட்டத்தில் முண்டி அடித்து முன்னேற துடிக்க...
தலைவர் அவர் குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்று அவருக்கு விருப்பம்... எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் ஒரு அளவுக்கு மேல் முன்னேறி செல்ல முடியவில்லை..
திடீர் என்று யாரும் எதிர்பாராவண்ணம் அந்த குழந்தையை தூக்கி புரட்சிதலைவர் நோக்கி வீசி விடுகிறார்.
மொத்த கூட்டமும் உறைந்து போய் நிற்க குழந்தை பறந்து தலைவர் அருகில் வர ஒரு லாவகம் ஆக அந்த குழந்தையை தாவி இரு கைகளால் பிடித்து விடுகிறார் தலைவர்.
சற்று நேரம் அமைதி..அந்த தொண்டனை கை காட்டி அழைக்க மொத்த கூட்டமும் வழி விட என்ன இப்படி செய்து விட்டாய் குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் அந்த அன்னைக்கு என்ன பதில் சொல்வாய் என்று கேட்க.
ஐயா நீங்க பெயர் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அப்படி செய்து விட்டேன் என்று சொல்ல தலைவர் சகஜம் ஆகி இனி இப்படி கூடாது என்று சொல்லி பெயரை மைக்கில் சொல்லி ஜிப்பாவில் இருந்து பணம் கட்டு எடுத்து குழந்தை அப்பா கையில் கொடுத்து குழந்தைக்கு முத்தம் ஒன்றை கொடுக்க.
அப்போது எழுந்த விசில் சத்தம் அடங்க பல நிமிடங்கள் ஆயின.
அதுதான் தலைவர் தன்னை சுற்றி நடப்பதை நன்கு அறிவார்...
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்... உங்களில் ஒருவன்...
மறுநாள் காலையில் அனைத்து நாள் இதழ்களில் இந்த சம்பவமே முக்கிய செய்தியாக வந்தது..........
-
#பாசப்பிணைப்பு
22.05.73 ல் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்த திண்டுக்கல் பாராளுமன்றத்தேர்தல்...
பிரச்சாரத்துக்குச் சென்ற புரட்சித்தலைவரைக் கொல்ல திட்டமிட்டிருந்தது கயவர் கூட்டம்...#தலைவருக்குத் #ரிஸ்க் #எடுக்கிறது #தான் #ரஸ்க் #சாப்பிடுற #மாதிரியாச்சே. அதனால் தொண்டர்கள் "போகவேண்டாம்" என்று வற்புறுத்தியும் தன் உயிரைத் துச்சமாக எண்ணிக் கிளம்பிவிட்டார்...
இருப்பினும் சமயோசிதமாக ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் தான் செல்லும் வழியையும், வாகனத்தையும் மாற்றி மாற்றிப் பயணம் செய்தார். இப்படி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்ததால்
கயவர்கள் ஏமாந்தனர்...
இப்படியே நள்ளிரவாகிவிட்டதால் விடியற்காலையில் பயணத்தைத் தொடரலாம் என்று தனது வேனை அடரந்த புதருக்குள் நிறுத்தச் சொல்லி நடுக்காட்டில், உடனிருப்பவர்களுடன் அப்படியே பாய் விரித்துப் படுத்துவிட்டார்...
அதிகாலை ஐந்து மணியளவில் ஒரு மூதாட்டி இரு அலுமினியச்சட்டியுடன் தன் கால்மாட்டுக்கருகில் இருப்பதைக் கண்டு திகைத்தார். எப்படி தன் இருப்பிடமிருந்து வந்தார் ? ஏன் வந்தார்? என்று அவர் மனதினில் கேள்விகள் !!!
"தாயே ! உங்களுக்கு என்ன வேண்டும்? என கேட்ட எம்ஜிஆரிடம்,
"எனக்கு ஒன்றும் வேண்டாம். இதுல சோறு இருக்கு. உனக்குப் புடிச்ச வெடக்கோழிக் குழம்பு இருக்கு. சாப்பிடு மகராசா ! என்றார் அந்த மூதாட்டி.
குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அந்த மூதாட்டியை அப்படியே வாரி அணைத்த எம்ஜிஆர் ..." தாயே ...! இங்கே நானிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் ? என்று கேட்டார்.... அதற்கு அந்த மூதாட்டி... "ராசா ! என் பேரன் தான் நீ இங்கு தங்கியிருக்கும் விஷயத்தை இட்டறைப்பாதையில் நின்னு பாத்துட்டு வந்து பயந்து போய் என்னிடம் சொன்னான்! அதான் உனக்கு சோறாக்கிக் கொண்டாந்தேன் "
நீ எதுக்கு ராசா பதுங்கியிருக்கணும் ? #உன்ன #தொட்டுமீள #இந்த #உலகத்துல #எவன் #பொறந்திருக்கான்? ஏன்ய்யா...#எங்காச்சும் #நெருப்பைக் #கரையான் #அரிச்ச #அதிசயம் #உண்டாய்யா ? #உன் #நிழலை #நெருங்கக்கூட #எவனுக்கு #தைரியம் #இருக்கு ? என்று மூதாட்டி ஆவேசமாகப் பேச கண்கலங்கிவிட்டார் எம்ஜிஆர். அந்த சாப்பாட்டை காலையில் சாப்பிடுவதற்காக அப்படியே பாத்திரங்களை வேனில் ஏற்றிவிட்டார்.
பிறகு அந்த மூதாட்டியின் விலாசத்தை வாங்கிக்கொண்டார்.... "நீ இந்தப் பக்கம் எப்ப வந்தாலும் ஒரு குரல் கொடுத்தாப் போதும் ஓடியாந்துருவேன் " என்ற மூதாட்டியை வணங்கிப்புறப்பட்டார் எம்ஜிஆர்.
திண்டுக்கல்லில் பிரச்சாரம் முடித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர் காரை நிறுத்தச் சொல்லி விறுவிறுவென நடந்தார். உடனிருந்தவர்கள் திகைத்தனர்.
நேராக அந்த மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற எம்ஜிஆர், திண்ணையில் குளிரில் வாடிக்கொண்டிருந்த. அந்த மூதாட்டியின் உடலில் தான் மதியம் வாங்கிய கம்பளிப்போர்வையை போர்த்தினார்.
அந்த மூதாட்டியைத் தட்டியெழுப்பி ஆயிரம் ரூபாயை சாதாரணமாகக் கொடுக்கவில்லை... அன்பால் திணித்தார். மூதாட்டியினால் பேசமுடியாமல் கண்கள் பனித்தது.
கண்ணீர் மல்க விடைபெற்றார் புரட்சித்தலைவர்.
#இப்பேர்ப்பட்ட #பாசப்பிணைப்பு #என்னும் #சந்தனம் #மணத்தது...
#அன்று ............
-
மக்கள் திலகத்தின் தொடர் வெளியீடான நான்காவது வண்ணப்படம் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் வழங்கும் "என் அண்ணன்" திரைப்படம் ஆகும்.
என் அண்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் 46 ஊர்களில் 58 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை தமிழக சினிமாவில் பெறுகிறது.
திரையிடப்பட்ட 46 திரையரங்குகளிலும் முதன்முறையாக எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை தமிழகத்தில் என் அண்ணன் 48 அரங்கில் 50 நாட்கள் ஆகும்.
முதன்முதலில் பெற்று சரித்திரம் படைத்தது.
மதுரை ஏரியாவில் முதன்முறையாக 8 ஊர்களிலும் 50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த முதல் திரைப்படம் என்ற பெருமையை என் அண்ணன் பெறுகிறது.
வேலூர் கடலூர் புதுச்சேரி இப்பகுதியில் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்ட பெருமைக்குரிய காவியம்
என் அண்ணன் திரைப்படம் ஆகும்.
இரண்டாம் வெளியீட்டில் 8 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி மொத்தம் 56 திரையரங்கில் என் அண்ணன் திரைப்படம் 50 நாளை கொண்டாடி மகிழ்ந்தது.
முதல் ஆறு மாதத்தில் இக்காவியம் 60 லட்சத்தை வசூலாக பெற்று சரித்திரம் படைத்தது.
இந்திய வரலாற்றில் தமிழகத்தில் 108 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை என் அண்ணன் திரைப்படம் பெறுகிறது ...
சேலம் அலங்கார்.
15 திரையரங்குகளில் 10 வாரங்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை படைத்த இரண்டாவது காவியம். சென்னை, மதுரை, திருச்சி, சேலம் தொடர்ந்து வெளியாண நான்காவது படம் 100 நாள் என்ற பெருமையை பெறுகிறது என் அண்ணன் காவியம்.
சென்னை மிட்லண்ட் திரையரங்கில் புதுமைப்பித்தன் ஆயிரத்தில் ஒருவன் அடிமைப்பெண் திரைப்படத்திற்குப் பின் நான்காவதாக 100 நாட்களை கண்ட காவியம் என் அண்ணன் ஆகும்..........
-
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் திலகத்தின் அண்ணன் திரைக்காவியம் 100 நாளில் மூன்று லட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்து புதிய வெற்றியைப் படைத்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்த என் அண்ணன் திரைக்காவியம் அன்று முதல் இன்று வரை வெள்ளித்திரையில் தொடர் பவனி வந்து சாதனையை பதித்தது சிறப்பானதாகும்.
ஒரே ஆண்டில் அதாவது 1969 மே மாதத்தில் வெளியான அடிமைப்பெண் காவியம் முதல் தொடர்ந்து நம்நாடு , மாட்டுக்கார வேலன் 1970 - மே மாதம் வந்த என் அண்ணன் திரைப்படம் வரை நான்கு திரைப்படங்கள் பதித்த சாதனையை இதுவரை திரைப்பட உலகில் ஒரே ஆண்டிற்குள் பதித்த வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது என்பது மகத்தானதாகும்.
நான்கு திரைக்காவியங்கள் சிறப்புகள் சில.---...
அடிமைப்பெண்
16 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது. மாட்டுக்காரவேலன்
14 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது.
நம் நாடு
9 திரையரங்கில்
100 நாட்கள் ஒடியது.
என் அண்ணன்
4 திரையரங்கில்
100 நாட்கள் ஒடி ..... மொத்தம் 43 திரைகளில் நூறு நாட்கள் ஓடி சரித்திரம் படைத்துள்ளது .
அடுத்து நான்கு திரை காவியங்களும் சென்னை மதுரை திருச்சி சேலம் 100 நாட்களை வெற்றி கொண்டுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாகும்.
நான்கு காவியங்களும் 50 க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளுக்கு மேல் 50 நாளை கடந்து வெற்றியை பதித்துள்ளது.என்பது மிகப்பெரிய சாதனையாகும்
நான்கு திரைப்படங்களும் சென்னையில் ஓடி முடிய கிட்டத்தட்ட 45 லட்சத்திற்கு மேல் வசூலை கொடுத்து சாதனையாகும்.
அதிகபட்சமாக மாட்டுக்கார வேலன் சென்னை, மதுரை வெள்ளி விழா ஆகும்.
அடிமைப்பெண் மதுரையில் வெள்ளிவிழா...
நம்நாடு மதுரையில்133 நாட்களும்,
என் அண்ணன் சேலத்தில் 112 நாட்களும் ஒடியது.
இப்படி அடுக்கடுக்கான சாதனையில்...
4 காவியங்கள் மகத்தான வெற்றி ஆகும்.
அடுத்து...
தொடர் வெற்றி...
3 வண்ணப்படங்கள் வரலாறு...
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
ரிக்க்ஷாக்காரன்
சாதனை பற்றி...............
-
சென்னை மாநகரில் தொடர் வெளியீட்டில் இப்படியும் ஒரு மகத்தான சாதனையா.......*
மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி.....
தொடர்ந்து வெளியான பட வரிசையில்........
சென்னை நகர வரலாற்றில் தொடர்ந்து வெளியான இதயவீணை,**
உலகம் சுற்றும் வாலிபன்* இரண்டும் சேர்ந்து அளித்த தொகை 34 லட்சத்தை கடந்தது....
*
1974 - நேற்று இன்று நாளை உரிமைக்குரல்*
சிரித்து வாழவேண்டும்*
3 திரைப்படங்களின் வசூல்*
33 லட்சத்தை கடந்தது.
1975 - நினைத்ததை முடிப்பவன்*
நாளை நமதே, இதயக்கனி பல்லாண்டு வாழ்க*
நான்கு திரைப்படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் சென்னை நகரில் வசூலில்* அதிக தொகையான* 56 லட்சத்தை பெற்றது.*
அடுத்து*
1976 - மூன்று திரைப்படங்களான நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும் கரங்கள்*
ஊருக்கு உழைப்பவன்*
3 திரைப்படங்களின் வசூல்*
35 லட்சத்தை கடந்தது.
1977 - நவரத்தினம்*
இன்று போல் என்றும் வாழ்க*
மீனவ நண்பன்*
மூன்று திரைப்படங்களும்*
40 லட்சத்திற்கும் மேல் வசூலைக் கொடுத்து அசுர சாதனை புரிந்தது.
1978 ல் மக்கள் திலகத்தின் கடைசி திரைப்படமான*
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் வெறும் 8 வாரங்களில் மட்டும் 12 லட்சத்தை நெருங்கியது.*
வசூலில் இப்படி எந்த நடிகர் திரைப்படமும் தொடர்ந்து இவ்வளவு பெரிய தொகையை தொடர்ந்து வசூலிக்கவில்லை என்பது தென்னிந்திய சினிமா சரித்திரத்தில் முக்கிய சாதனையாகும்.
இப்படிப்பட்ட மகத்தான சாதனைகளை வசூலில் தக்கவைத்த தொடர் கதாநாயகன் தனிப்பெரும் கதாநாயகன்*
மக்கள் திலகம் தவிர வேறு எவரும் தென்னிந்திய சினிமா வரலாற்றில் மட்டுமல்ல இந்திய சினிமா வரலாற்றில் தனி ஒரு நகரில் இப்படி ஒரு வெற்றியைப் அளித்ததாக வரலாறு இல்லை.
தொடர்ந்து வெளியான 14 திரைப்படங்கள் இப்படிப்பட்ட சாதனையை உருவாக்கி உள்ளது என்றால் அது மக்கள் திலகம் ஒருவருக்கே உருவான சாதனையாக போற்றப்படுகிறது.
தொடர்ந்து வெளியான பத்து வண்ணப்படங்கள் படுதோல்வி அடைந்த நடிகர்கள் மத்தியில்*
14 படங்கள் தொடர் வெற்றியில்**
முதல் வெளியீட்டில் மட்டும் சென்னை நகரில் பதித்தது...... மக்கள் திலகத்தின் வரலாறு மட்டுமே சாதனையாக இன்றும் போற்றப்படுகிறது.
தொடரும்..............
-
"இதயவீணை" காவியம் 10 லட்சத்திற்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்தது*.
வசூல் : 10,12,765.80
உலகம் சுற்றும் வாலிபன் அதுவரை இல்லாத சாதனையில்*
3 திரையரங்கில் ஓடி 23 லட்சத்தை கடந்தது.
வசூல் : 23,40,064.61.*
*
நேற்று இன்று நாளை சாதாரண திரையரங்குகளில் திரையிடப்பட்டு 10 லட்சத்திற்கு மேல் வசூல் : 10,65,105.45
உரிமைக்குரல் திரைக்காவியம் சாதாரண திரையரங்குகளில வெளியிடப்பட்டு
வசூல் : 11,95,891.32
சிரித்து வாழவேண்டும் திரைக்காவியம் 100 நாட்கள் ஓடாமலேயே
வசூல் : 10,55,974.05.
நினைத்ததை முடிப்பவன்*
12 வாரத்தில் சாதனை.
வசூல் : 12,87,490.51
நாளை நமதே திரைக்காவியம்*
9 வாரத்தில் மட்டும்.. வசூல் : 8,82,734.79
இதயக்கனி..... சரித்திரம் படைத்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பின் அதிக. சாதனை.
வசூல் : 19,87,651.90
பல்லாண்டு வாழ்க
100 நாட்களில் படைத்த
வசூல் : 14,53,287.36.
நீதிக்குத் தலைவணங்கு மிகப்பெரிய சாதனை..
வசூல் : 13,10,697.30
உழைக்கும் கரங்கள் திரைப்படம்*
12 வாரத்தில் பெற்ற
வசூல் : 12,42,050.33
ஊருக்கு உழைப்பவன் 50 நாளில் கொடுத்த
வசூல் : 9,13,395.88
நவரத்தினம்
நகரில் 50 நாளில்....
வசூல் : 9,06,378.00
இன்று போல் என்றும் வாழ்க.
வசூல் : 15,29,371.65
மீனவ நண்பன்
வசூல் : 17,76,518.45
மதுரையை மீட்ட சுந்தரப்
பாண்டியன் 58 நாள்
வசூல் : 11,56,560.52...
இப்படி தொடர் காவியங்களை வெளியீட்டு சரித்திரம் படைத்த வசூல்களை தந்த ஒரே திலகமாக...
மக்களின் மாணிக்க திலகமாக திகழ்ந்தவர்...
திரைப்படவுலகின் பேரரசர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே...
இப்படி எல்லாம் சாதனையை படைக்க முடியும் என நீருபித்து காண்பித்தவர்...
இது தவிர மிகப்பெரிய நகாரங்களில் படைத்த இக்காவியங்களின் வசூல் புள்ளி விபரங்கள் மலைபோல் குவிந்துள்ளது....
இன்றைய டிக்கட் விலையில் பார்த்தால்...
சிகரம் போல் மலைப்பாக இருக்கும்..
மக்கள் திலகத்தின் திரைப்படங்களை எந்த நடிகர் படத்துடனும் 1977 வரை நாம் ஒப்பிட முடியாத ஒன்றாகும்.
மேலும்...
பல நகர சாதனைகள் தொடரும்....
இது தான் வெற்றி...
இது தான் வசூல்......
இது தான் புள்ளி விபரங்கள்.......
இவை தான் உண்மையின் ஆதாரங்கள்.....
பெயருக்கு ஏதாவது ஒரு படத்தை வசூல் என தம்பட்டம் கொள்ளாது...
தொடர் வெற்றி தான் ஒரு கதாநாயகனின் நிரந்தர வெற்றியாகும்...
மேலே குறைந்த நாளில் அதிக வசூலை பெற்ற காவியங்கள்...
மக்கள் திலகத்தின்
அரும்பெரும் காவியமாகும்.....
தொடரும் வெற்றிகள்.............
.
-
இதே முரளி ஸ்ரீனிவாஸ் மையம் திரியில் சென்னையில் ராஜா 3 தியேட்டரில் 100 நாள் ஓடியது என்று தவறான தகவல் பதிவிட்டார்.2 தியேட்டரில் தான் ராஜா திரைப்படம் 100 நாள் ஓடியது. விளம்பர ஆதாரமும் உள்ளது. அதை எல்லாரும் சுட்டிக்காட்டியும் தவறு தெரிந்துவிட்டதால் ஒரு மரியாதைக்கோ, குற்ற உணர்ச்சியாலோ அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. தகவல்களை சரிபார்க்காமல் அடித்துவிடுபவர் முரளி ஸ்ரீனிவாஸ் என்பதற்கு சாட்சியாக மையம் திரியில் இன்னமும் ராஜா திரைப்படம் சென்னையில் 3 தியேட்டரில் 100 நாள் ஓடியது என்ற தவறான தகவல் இடம் பெற்றுள்ளது. அவர் சொன்ன தவறை நம்பி எத்தனை பேர் வீண் வாதம் செய்கிறார்களோ தெரியவில்லை. பாவம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்.....
-
புரட்சித்தலைவரின் திரைப்பட சாதனைகளின் பதிவு.... நாம் உண்மையை தான் வெளியிடுகிறோம்.
1965 முதல் 1977 வரை வெளியான எம்.ஜி.ஆர் மன்றங்கள் வெளியீட்ட என்னிடம் உள்ள 50 க்கும் மேற்பட்ட மலர்கள் மற்றும் பல ஊர்களில் 50,75,100,175, 200 சம்பந்தப்பட்ட வெற்றிகள் வசூல்கள்...
திரையுலகம் இதழ்கள்,
திரைச்செய்தி
இன்னும் பல செய்திகளை திரட்டி கடந்த 1985 முதல் ....
பல தலைவர் அபிமானிகளின் தொடர்ப்பு... அதன் மூலம் கிடைத்த தகவல்கள்...
அன்று வந்த மலரை வைத்து போட்டுள்ளோம்...
சரியான தகவலின் படி மாற்றியும் வந்துள்ளோம்...
விரைவில் அடுத்த ஆண்டு நாம் வெளியீடும்
தலைவரின் 115 திரைப்படங்கள்
பற்றிய
உண்மையாக
எங்கு 100 நாள் 50,75,மற்றும்
வசூல் விபரத்தை தொகுத்து...
எல்லோர் கைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய உள்ளோம்...
மற்ற நடிகரின் கோல்மால் படங்கள், வசூல்கள் பற்றி நமது மலரில்
ஒரு துளி கூட வராது....
ஆகையால்.. பெரிய நகரங்களில் தலைவர் காவியங்கள் உண்மை தகவல்களோடு ஒடியதை பதிவிடவும்... அறியாதவர்களுக்கு தெரிவிக்கவும் நண்பர்களே.........
50,100 அதற்கு மேல் உள்ள தலைவரின் திரைப்பட விளம்பரங்களுடன் வெளியிடப்படும்.
அடுத்த வருடம் 2021 ஏப்ரல் மாதம் அல்லது பொது தேர்தல் முடிந்தவுடன்
கொராணா காலம் முடிந்தப்பின்....
மக்கள்திலகத்தின்
"ரிக்க்ஷாக்காரன்"
காவியத்தின் பொன்விழாவில்
(1971 - 2021)
இம்மலர் சிறப்புடன் வெளியிடப்படும்.
நன்றி :
உரிமைக்குரல் ராஜூ.& நண்பர்கள் குழுவினர்.........
-
நமது மக்கள் திலகம் திரி 1,00,000 பதிவுகள்
கடந்து சாதனை புரிய ஒத்துழைப்பு நல்கிய
மையம் நிர்வாகிகள் - பதிவாளர்கள் - பார்வையாளர்கள்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறேன்.
இப்படிக்கு
எஸ் ரவிச்சந்திரன்
குறிப்பு - எனது அலுவலக தொடர் பணி காரணமாக காலதாமதமாக இன்றுதான் திரிக்கு வந்தேன்
-
தனியார் தொலைக்காட்சிகளில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள் ஒளிபரப்பான விவரம் (01/09/20 முதல்* 08/09/20 வரை)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------01/09/20* * - முரசு டிவி* *- பிற்பகல் 3.30 மணி* - கொடுத்து வைத்தவள்*
* * * * * * * * * * *சன் லைப்* - மாலை 4 மணி* *- நீரும் நெருப்பும்*
* * * * * * * * * *புதுயுகம் டிவி -* இரவு* 7 மணி* - தேர் திருவிழா*
02/09/20* * - சன் லைப் -* * காலை 11 மணி* - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * * * முரசு டிவி - மதியம் 12 மணி / இரவு 7மணி -அலிபாபாவும் 40திருடர்களும்*
* * * * * * * * * மூன் டிவி* - இரவு* 8 மணி* * *- நீதிக்குப்பின் பாசம்*
* * * * * * * * *பாலிமர் டிவி -இரவு* 11 மணி* - தொழிலாளி*
03/09/20 -* *சன் லைப்* *-* மாலை 4 மணி* - எங்கள் தங்கம்*
* * * * * * * * * *புதுயுகம் டிவி* -இரவு 7 மணி - நவரத்தினம்*
04/09/20 -சன் லைப் -* * காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல்* *- இரவு 7 மணி* - குடியிருந்த கோயில்*
05/09/20 -மெகா டிவி - மதியம் 12 மணி - சந்திரோதயம்*
* * * * * * * மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - விவசாயி*
* * * * * * * *மெகா 24 -* *பிற்பகல் 2.30 மணி - நீதிக்குப்பின் பாசம்*
06/09/20-ஜீ திரை -காலை 5.30 மணி - பறக்கும் பாவை*
* * * * * * * * *-சன் லைப்* - காலை 11 மணி - முகராசி*
* * * * * * * *புதுயுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி -ராமன் தேடிய சீதை*
* * * * * * * * பூட்டோ டிவி (உள்ளூர் கேபிள்)-இரவு 8 மணி -அன்பே வா*
07/09/20 -சன்* லைப் - காலை 11 மணி* - குடியிருந்த கோயில்*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -நல்ல நேரம்*
* * * * * * * பாலிமர்* டிவி -பிற்பகல் 2 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி* *- பாசம்*
* * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி* - கன்னி தாய்*
08/09/20 -சன்* லைப் -* மாலை 4 மணி - என் அண்ணன்*
* * * * * * * புதுயுகம் டிவி -* இரவு* 7 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * எம்.எம்.டிவி (உள்ளூர் கேபிள்*) இரவு 8 மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * ஜெயா மூவிஸ்* - இரவு 10 மணி - மீனவ நண்பன்** * * * * * *
* * * * * * * * *
-
சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு நிகழ்ச்சி...தலைவர் முதல்வர் அப்போது..
இசை மேதை பால முரளி கிருஷ்ணா அவர்கள் தெலுங்கு மொழியில் அவர் பாடி இருந்த தியாகராஜர் கீர்த்தனைகளை தமிழ் மொழியில் அவர் பாடி அதை வெளியிடும் விழா...
மொத்தம் 6 கீர்த்தனைகள் அதாவது பாடல்களை அவர் தமிழ் மொழியில் பாடி இருந்தார்...விழாவில் இசை மேதைகள் செம்மங்குடி ஸ்ரீனிவாசன் லால்குடி ஜெயராமன் மற்றும் தமிழ் புலவர்கள் உடன் பலர் கலந்து கொண்டனர்..நடிகர் கமலும் உண்டு விழாவில் ரொம்ப தாமதம் ஆக வந்தார் இவர்...
பாடல்கள் வெளியிடப்பட்டு அனைவரும் பாலமுரளி அவர்களின் முயற்சியை பாராட்டி கொண்டு இருந்த நேரம் விழாவில்...
தலைவர் கண் அசைவில் உதவியாளர் மாணிக்கம் தலைவர் சொன்ன படி அவர் காருக்குள் போய் பார்க்க ஒரு பெட்டி அதில் கட்டு கட்டாக பணம்...எல்லாம் 100 ரூபாய் கட்டுக்கள்.
ஒரு பாடலுக்கு 10000 வீதம் 6 பாடலுக்கு தனி தனி கவரில் 60000 பணம் போட்டு எடுத்து வர சொல்லி அனுப்பினார் தலைவர்.
உடன் பாடல்கள் காப்பி செய்யப்பட்ட தாள்கள் இருக்க அது ஒரு செட்டுக்கு பதில் 2 செட்டுகள் இருக்க 6 பாடல்கள் 12 பாடல்கள் என்று நினைத்து 12 கவர்களில் 120000 ரூபாய் பிரித்து போட பட்டு கொண்டு வர பட..
நம் தங்க தலைவர் அவரை வாழ்த்தி பேசி பொன்னாடை அணிவித்து மகிழ்ந்து மொத்த கவர்களையும் அவர் கையில் கொடுக்கிறார்.. அந்த கவர்களில் பணம் இருக்கும் விவரம் ஐயா பாலமுரளி அவர்களுக்கும் தெரியாது...விழாவில் பங்கு கொண்ட யாருக்கும் தெரியாது.
அதுதான் நமது தலைவர்...கொடுத்த பணம் பற்றி மூச்சு கூட விடவில்லை...புறப்பட்ட பாலமுரளி அவர்கள் மாலைகள் சால்வைகள் உடன் அந்த கவர்களையும் தான் வந்த பியட் காரின் பின் சீட்டில் தூக்கி போட கார் புறப்படும் முன் சொல்லப்பட்டது அவரிடம் கவர் உள் அனைத்தும் தலைவர் கொடுத்த பணம் என்று.
பதறி போனார் பாலமுரளி...கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. 1986 களில் அந்த தொகை இன்றைய மதிப்பில் எவ்வளவு இருக்கும் என்பதை தலைவர் நெஞ்சங்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சரி இது ஒரு புறம் 6 பாடல்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய இடத்தில் 12 பாடல்களுக்கு பணம் கொடுத்து அது பாலமுரளியார் வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டது.
தலைவர் மறுநாள் கணக்கு கேட்பார்..கணக்கு கேட்பதில் கில்லாடி அவர் தானே ...எல்லோருக்கும் பதட்டம்...அவ்வளவு தான் தொலைந்தோம் நாம் என்று..
ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அதிகம் கொடுக்க பட்ட 60000 பணத்தை சரி செய்து விடுவோம் என்று தயங்கி தயங்கி தலைவரிடம் சொல்ல.
அவரோ தமிழ் மீது நான் கொண்டு இருந்த பற்றுக்கு வந்த சோதனை போல இது உண்மையில் அந்த பணமே 120000 நான் கொடுத்து இருக்க வேண்டும் போல என்று சிரித்து கொண்டே அதை கடந்து சென்றார்.
எப்படி பட்ட சிந்தனை உள்ள ஒரு மாமனிதர் அவர்...மற்றவர் என்றால் கூச்சல் போட்டு அலறி இருப்பார்கள்...
அவர் தான் தலைவர்..
அன்னை சத்தியாவின் புதல்வர்...
வாழ்க அவர் புகழ்..நன்றி.... தொடரும்...உங்களில் ஒருவன்.............
-
அர்த்தமுள்ள அறிமுகம்!!
-------------------------------------------
எம்.ஜி.ஆரின் ஆல விழுதுகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம்! ரசித்திருக்கிறோம்! ஆனால்--வியக்கும் விழுதுகள் பட்டியலில் இந்த விழுது சேர்கிறது!
சுஜீத்குமார்!
முக நூலில் இந்த இளைஞரை அறியாதவர் இருக்க முடியாது!
இளையோர்க் கூட்டத்தைச் சேர்ந்த இந்த இளவல் பல விதங்களில் என்னைப் பாதித்திருக்கிறார்!
ஜாலி மேனாக முக நூலில் உலா வரும் இந்த இளவலின் விஷய ஞானம் கண்டு நான் உள்ளுக்குள் பலமுறை ஆனந்தித்திருக்கிறேன்!
எனது எந்தப் பதிவாயினும் சரி,,அதற்கேற்றாற் போல் ஒரு விஷயத்தைத் தேடி எடுத்து அதைப் பின்னோட்டமாக வடிப்பார்!
ராமாவரம் தோட்டத்திற்குப் பின் பகுதியில் இருந்து படிப்பை முடித்த இவரது ஒரே தீராத வருத்தம்--
அவ்வளவு அருகில் இருந்தும் ராமாவரக் கலைக் கோயிலை உரிய முறையில் தரிசிக்காமல் விட்டு விட்டோமே?
பயங்கர எம்.ஜி.ஆர் பக்தனான,,. பி.ஈ.மெக்கானிக்கல் இஞ்சினீயரான நம் சுஜீத்குமார்,,தஞ்சையில் தம் தந்தை நிறுவிய மிகப் பெரிய மேனிலைப் பள்ளியை,,தம் அண்ணாவோடும்,,தந்தையோடும் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்!
அந்த கால தொழிற்படிப்பை முடித்துள்ள இவர் தந்தை அடிப்படையில் ஒரு விவசாயி!
தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம் தான் என்றக் கொள்கையுடையவர்,,இரண்டாம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியை நிறுவி,,பின்னர் தமது அயராத உழைப்பினால் அதை மேனிலைப் பள்ளி ஆக்கியிருக்கிறார்!
6500 மாணவர் படிக்கும்,,தஞ்சையிலேயே பெரிய பள்ளி இவர்களது max well hr Sec மேனிலைப் பள்ளி தான்!
சுஜீத்தின் பாட்டனாரோ அந்த காலத்தில் பெரிய வேட்டைக்காரர். சரபோஜி மகாராஜாவின் நண்பர்!
இன்றளவும்,,தஞ்சையில் நன்கொடை வசூலிக்காத ஒரே மேனிலைப் பள்ளி இவர்களோடது தானாம்!!
300 மாணவர்களுக்கு வருடந்தோறும் ஃபீஸ் வாங்காமலும்--
60 மாணவர்களுக்குத் தங்குமிடம்,,உணவு போன்ற எந்த செலவுமில்லாமல் முற்றிலும் இலவசமாகக் கல்வியை ஈந்து வருகிறது இவர்களது குடும்பம்!
கொரோனா பாதிப்பாளர்கள் 5000 பேர்களுக்கு மேல் மூன்று வேளை உணவு வழங்கி பெருமை அடைந்துள்ளார்கள்!
ஃபோர்ஸ் டெம்போ வண்டிக்கு,,கும்பகோணம்,,புதுக்கோட்டை,,மாயவரம் உள்ளிட்ட ஐந்து பகுதிகளுக்கு டீலராக இருக்கும் இவர்களது இன்னுமொரு செயற்கரிய சேவை--
கொரோனா பாதிப்பின் போது ஆம்புலன்ஸ் 108 வண்டிகள் பழுது பார்த்தலையும்,,வண்டிகளுக்கான சர்வீஸ்களையும் இலவசமாகவே செய்து கொடுப்பது தான்!
இவர்கள் குடும்பம் உட்பட,,இவர்களது ஒட்டு மொத்தப் பணியாளர்களுமே இரவு பகலாக இந்தச் சேவையை செய்து வருகிறார்கள்!!
சுஜீத்தின் பாட்டனார்,,தொழில் மேதை ஜி.டி.நாயுடுவின் மாணவர்!
மேலை நாட்டில் இறந்து,,கரை ஒதுங்கிய அறுபதடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்றைத் தம் சொந்தப் பொறுப்பில் பதப்படுத்தி தஞ்சை மியூசியத்துக்கு அளித்துள்ளார் சுஜீத்தின் தாத்தா!
இன்றும் அவர் பெயர் பொறித்து அந்தத் திமிங்கலம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது!
தன் குடும்பமும்,,தம் சகோதரர் குடும்பமும் ஒன்றாகத் தங்கள் தந்தையுடன் வசித்து வந்து,,கூட்டுக் குடும்பத்தின் மாண்பை மங்காது காத்து வருகிறார்கள்!
ஒவ்வொரு மாதமும் இவர்கள் பள்ளியில் இவர்களது சொந்தப் பொறுப்பில்,, மது மற்றும் போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது!
தன் மகன்களைப் படிக்க வைத்த இவரது தந்தை,,அவர்களை லட்சங்களில் மிதக்க விடாமல் லட்சியங்களில் குளிக்கச் செய்திருப்பது குறிப்பிட வேண்டிய--கும்பிட வேண்டிய ஒன்றே!!
எம்.ஜி.ஆர் நம் உள்ளங்களில் நிறைந்திருக்கிறார்! ஆனால்--
இவரது பாட்டனார் வடிவில் வேட்டைக்காரனாக--
இவர் தந்தை வடிவில்==விவசாயியாக--
அன்னமிடும் இவர்களது ஈகையில்--அன்னமிட்டக் கையாக--
இலவசக் கல்வியில்--புதிய பூமியாக--
கூட்டுக் குடும்ப ஒற்றுமையில்--பணக்கார குடும்பமாக-
108 ஆம்புலன்ஸ் இலவச பழுது பார்த்தலில்--ஆனந்தஜோதியாக--
இப்படிப் பல எம்.ஜி.ஆர்கள் இணைந்திருந்து நிறைந்திருப்பது இவர்கள் குடும்பம் ஒன்றில் தான்!!
எம்.ஜி.ஆரை விரும்பும் நம் போன்றவர் மத்தியில்--
எம்.ஜி.ஆரே விரும்பும் குடும்பமாக
சுஜீத்குமார்,,மற்றும் அவரது குடும்பம் திகழ்கிறது என்பது உண்மை தானே உறவுகளே???.........
-
#புரட்சிதலைவர்
#இதயதெய்வம்
#பாரத_ரத்னா_டாக்டர்
#பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும்_அன்பான
#இனிய_செவ்வாய்க்கிழமை
#காலை_வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜியார் மீது மக்கள் அன்பை பொழிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைத்ததற்கு வெறும் சினிமாக் கவர்ச்சி மட்டுமே காரணமல்ல; அதையும் தாண்டிய அவரது மனிதநேய செயல்பாடுகள்தான் காரணம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு அவற்றில் ஒன்றை இங்கு பதிவிடுகின்றேன்...
எம்.ஜி.ஆர். நடித்த ‘பரிசு’ படம் 1963-ம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிகை சாவித்திரி நடித்திருந்தார். படத்தின் கதையை எழுதிய கே.பி. கொட்டாரக்கரா, படத்தின் இயக்குநர் டி.யோகானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ‘பரிசு’ படத்தின் சில காட்சிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டன.
தேக்கடியில் நடந்த படப்பிடிப்பின் போது ஒருநாள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வேகமாக வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது இரு பெண் குழந்தைகளும் பரிதாபமாக அருகே நின்றன. அவரை எழுந்திருக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., ‘‘என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. ‘‘என் கணவருக்கு குடிப் பழக்கம் உண்டு. வனத்துறையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சரியாக போவதில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு சென்ற என் கணவர் காட்டு யானை தாக்கி இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரவில்லை. எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் அழுதவாறே முறையிட்டார் தேவகி.
அதோடு, ‘‘இரண்டு பெண் குழந்தை களை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் என் குடிசைக்கு இரவு
நேரங்களில் சிலர் தவறான நோக்கத்தோடு வந்து வாசலில் நின்று கலாட்டா செய்கிறார்கள்’’ என்று சொல்லிக் கதறினார். எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கிவிட்டன.
தேவகியிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அழா தேம்மா. உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்குத் தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா. உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து உனக்குத் தெரிந்த டீச்சரையும் கூட்டிக் கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.
அதேபோல, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒரு வரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு தேவகி அழைத்து வந்தார். அவரது அதிர்ஷ்டமோ என்னவோ, அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து மீளவே அவருக்கு வெகுநேரம் பிடித்தது. அவரிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.
‘‘பலமுறை எச்சரித்தும் குடிப் பழக்கத்தால் தேவகியின் கணவர் சரியாக பணிக்கு வருவதில்லை. அவரது சாவுக்குக் கூட குடிதான் காரணம். தெளிவாக இருந்திருந்தால் யானையிடம் இருந்து தப்பித்து இருக்கலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் வனத்துறை அதிகாரி கூறினார்.
அவரிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அது இருக்கட்டும். இப்போது இவர்கள் நிலை ரொம்ப பரிதாபமாக உள்ளது. உங்கள் அலுவலக விதிமுறைகள்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகள் யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் நானே பேசுகிறேன்’’ என்றார்.
அந்த அதிகாரியும், ‘‘நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்றார்.
மேலும், ‘‘இப்போது குடிசையில் இருக்கும் இவர்கள் கவுரவமாக தங்கும் வகையில் வாடகைக்கு சிறிய வீட்டை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?’’ என்றும் வனத்துறை அதிகாரியிடம் கேட்ட எம்.ஜி.ஆர்., அதோடு நிற்கவில்லை. ‘‘தேவகிக்கு ஏதாவது வேலை வாங்கித்தர முடியுமா?’ என்றும் கேட்டார்.
எம்.ஜி.ஆரே கேட்கும்போது அதுவும் அவரது ரசிகரான அதிகாரி மறுப்பாரா? இரண்டுக்கும் ஒப்புக் கொண்டார். வீடு ஏற்பாடு செய்து தருவதுடன் தனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் தேவகியை வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும் கூறினார்.
தேவகியைப் பார்த்து, ‘‘என்னம்மா? வீட்டு வேலை செய்ய உனக்கு சம்மதமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தேவகியும் சம்மதித்தார்.
பின்னர், அவரது பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் டீச்சரை அழைத்து, இரண்டு பிள்ளைகளும் படிப்பதற்கான செலவுகளை எம்.ஜி.ஆர். விசாரித்தார். தயாரிப்பாளர் கொட்டாரக்கராவிடம் தனியாகப் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கினார். அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அந்தத் தொகையை அப்படியே தேவகியிடம் எம்.ஜி.ஆர். கொடுத்தார்.
ஒருவாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அந்த வனத்துறை அதிகாரி வந்தார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் தேவகிக்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும் எனவும் கூறினார். இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சி
அடைந்தார். 1963-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது பெரிய தொகை.
இப்போதும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழுதார் தேவகி. இந்த முறை அவரது கண்களில் இருந்து வந்தது, நன்றிப் பெருக்கால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்...!
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம்
வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டார் நம் வள்ளல் பொன்மனச்செம்மல் ...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
-
*MGR பற்றி இதுவரை வெளியான நூல்கள் பற்றிய தொகுப்பு இங்கே...*
தமிழ் நூல்கள்:
****************
1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977)
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980)
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் புலவர். கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978)
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985)
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983)
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979)
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)
12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984)
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985)
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987)
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975)
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984)
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983)
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986)
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986)
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985)
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985)
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985)
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)
27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985)
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984)
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988)
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984)
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988)
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985)
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985)
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988)
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981)
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986)
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988)
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985)
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988)
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987)
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988)
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981)
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985)
51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985)
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987)
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988)
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985)
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985)
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987)
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987)
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984)
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961)
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987)
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989)
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985)
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978)
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987)
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985)
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985)
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991)
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982)
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986)
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988)
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993)
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993)
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991)
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991)
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993)
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992)
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978)
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985)
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991)
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986)
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982)
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010)
88.வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993)
89.தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
90.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967)
91.ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
92.இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967)
93.தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
94.எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
95.அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
96.அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
97.அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)
98.எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
99.எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
100.வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
101.வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
102.புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
103.யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
104.தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
105. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்
106.எம்.ஜி.ஆர். பதில்களின் தொகுப்பு-கண்ணதாசன் பதிப்பகம்
107.எம்.ஜி.ஆர். திரைப்படக்கருவூலம்-இதயக்கனி வெளியீடு
108.எம்.ஜிஆரின் வசன முத்துக்கள்-இதயக்கனி வெளியீடு
109.எம்.ஜி.ஆர்.ஒரு சகாப்தம்-தொகுப்பாசிரியர் ஆர்.பி.சங்கரன்
110.கோட்டையும் கோடம்பாக்கமும்-ஆரூர் தாஸ்
111.எம்.ஜி.ஆர். 100-சபீதா ஜோசப்
112.வாத்யார்-ஆர்.முத்துக்குமார்
113.எம்.ஜி.ஆர்-நடிகர் முதல்வரானது எப்படி--அருணன்
114.நான் ஆணையிட்டால்--எஸ்.கிருபாகரன்.
115.இருவரின் கதை-எஸ்.திருநாவுக்கரசு
116.இதய ஒலி-பழனி ஜி.பெரியசாமி
117.எம்.ஜி.ஆர் 100-காலத்தை வென்ற தலைவர்-இந்து வெளியீடு
118.விழாநாயகன் எம்.ஜி.ஆர். -கே.ரவீந்தர்
119.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
120.அதிர்ந்தது பூமி -எம்.பி.உதயசூரியன்
121.என் நினைவுத்திரையில்-பி.நாகிரெட்டி
122.வள்ளல் எம்ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு-எம்.ஜி.ஆர்.முத்து
123.எல்லாம் அறிந்த எம்.ஜி.ர்.-எஸ.விஜயன்
124.மறக்க முடியாத மக்கள் திலகம்--என்.சங்கர்.
125.மக்கள் திலகமும் மனித நேயமும்-எம்.ஜி.ஆர்.முத்து
126.மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்-ரங்க வாசன்
127.எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்-மணவை பொன்.மாணிக்கம்
128.மறக்க முடியாத மாமனிதர்-மணவை பொன்.மாணிக்கம்
129..சுட்டாச்சு சுட்டாச்சு-சுதாங்கன்
130.எம்.ஜி.ஆர். பேட்டிகள்--எஸ்.கிருபாகரன்
131.மனிதப் புனிதர்-எம்.ஜி.ஆர்-கே.பி.ராமகிருஷ்ணன்
132.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
133.சொக்கத்தங்கம் எம்.ஜி.ஆர்--பா.அங்கமுத்து
134.தரணி கண்ட தனிப்பிறவி எ.
135..மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்-இயக்குநர் மகேந்திரன்
136.எனக்குள் எம்.ஜி.ஆர். -கவிஞர் வாலி
ஆங்கில நூல்கள் (English Books)
***********************************
1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984)
2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984)
3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984)
4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990)
5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978)
6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992)
7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (
8.Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
9.C.M. Speech's
*வாழ்க புரட்சி தலைவர்*.........
-
அன்பு தோழர்களுக்கு இனிய வணக்கம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு செய்கிறேன்.காரணம்...வேலை பணிகள்.
அதுவும் பத்திரிக்கை செய்திகளை சேகரித்து அனுப்பி வருவதால் தளத்திற்கு வர முடிய வில்லை.
நிற்க...என்னுடைய ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட நமது இதய தெய்வத்தின்...புரட்சி தலைவரின் மாபெரும் வெற்றிகாவியமான காவல் காரன் திரைக்காவியம் நேற்று அதாவது 07.09.1967 அன்று வெளி வந்து தமிழக மெங்கும் திரை அரங்குகளை ஒரு கலக்கு கலக்கிய நாள்.
புரட்சி தலைவரின் சண்டைக்காட்சிகள் நா ன் கிலும் தனி.முத்திரை பதித்து இருப்பார்.பாடல் காட்சிகளில் அவரது வழக்கமான துள்ளல்..துடிப்பு...இளமை அனைத்து வெளிப்பட்டு இருக்கும்.
6 திரை அரங்கில் 100 நாட்களை கடந்து அந்த ஆண்டின் அமோக வசூலை அள்ளி குவித்த காவியம் காவல் காரன்.படத்தின் முக்கிய அம்சம் அதன் விறு விறுப்பு.
சஸ்பென்ஸ்..... திரைக்கதை..மற்றும் தலைவரின் அற்புதமான சண்டை காட்சிகள்.
முதல் அறிமுக காட்சியிலேயே பாக்ஸிங் வீரராக வந்து திரை அரங்கில் கரவொலியை அதிர செய்து இருப்பார்.
அடுத்து உச்ச கட்ட காட்சியில் ஒரு இடத்தில் அசோகனிடம்........ரோஷமிருந்தால் நாக்கை பிடுங்கி கொண்டு ........போயேன்.என்று மிக இயல்பாக அதே நேரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்று பேசி நடித்து இருப்பார்.
அருமையான காட்சி அது....
நினைத்தேன் வந்தாய்...பாடலில் மாவீரன் அலெக்சாண்டரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.
குண்டடி பட்ட பின்பும் அதற்கு முந்தைய காட்சிகளில் அவரது ஆண்மை கலந்த குரலும் தெளிவாக வெளிப்படும்.
வாழ்க..புரட்சி தலைவர் புகழ். முகநூலில் A.Rajahவின் பதிவு............
-
#எம்ஜிஆர் #பதில்
கேள்வி - நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் நாடோடி மன்னன் சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?
எம்.ஜி.ஆர். பதில் – நான் விரும்புவதை என் தொழிலில் செய்து கட்டவேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் தவறாகவும் இருந்து விடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்ததில் படம் எடுக்க இதுதான் காரணம்.
கேள்வி - பழைய உங்களது படம் ஒன்றை பார்த்தேன். அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள். ஏதேனும் ஜெபம் செயது கொண்டிருந்தீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொணடிருந்தேன. இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம் அது ருத்ராடசை மாலை அல்ல. தாமரை மணி மாலை. திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.
கேள்வி – பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
……… குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர், அறியாத்தனத்தால் அல்ல, தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.
சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும் அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதானால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர் என்று நினைக்கிறேன்.
கேள்வி – நடிப்பு கருவூலம் ராஜ்கபூர் நடித்த சங்கம் படம் போல் சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் சிறந்த பாடல்கள் அமைந்த ஒரு படத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அளிப்பீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – அவருடைய பெயர் ராஜ்கபூர், என்னுடைய பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஒருவரைப் போல் இன்னொருவர் ஆக முடியாது. கூடாது. ஒவ்வொருக்கும தனக்கென்று ஒரு பாணி, தனக்கென்று ஒரு பாதை இருந்தே
கேள்வி – நீங்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – அது நான் விரும்பாத பதவி. நான் விரும்பி இருந்தால், அண்ணா காலத்திலேயே மந்திரி ஆகி இருப்பேன். மந்திரி பதவியை நான் ஏற்க மறுத்ததால்தான், மந்திரி பதவிக்குரிய அந்தஸ்து கொண்ட சிறுசேமிப்பு துணைத் தலைவர் பதவியை எனக்கு கொடுத்தார்.
கேள்வி – உங்களுக்கு சேரும் கூட்டமெல்லாம் நீங்கள் பிரபல சினிமா நடிகர் என்பதால் இருக்கலாம அல்லவா?
எம்.ஜி.ஆர். பதில் – நான் நடிகன், ஆனால் என்னைப்போல எத்தனையோ நடிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் என் போலவே இயக்கம் ஆரம்பித்தால் ஒவ்வொருவருக்கும் இப்படிக் கூட்டம் சேரும் என்று சொல்ல முடியுமா?
கேள்வி – 12.1.1973 அன்று வேலுரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சிவாஜி கணேசன், அண்ணா தி.மு.க.வைச் சாக்கடை என்று ஏளனமாகப் பேசினார். அவருக்கு தாங்கள் கூறும் பதில் என்ன?
எம்.ஜி.ஆர். பதில் – நான் படித்த ஏடுகளில் அப்படிப் பேசியதாக எந்தச் செய்தியும் தெரியவில்லை.
கேள்வி – பிலிமாலயா பத்திரிகையில் சந்திரபாபு எழுதும் கதைக்குத் நீங்கள் ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை?
எம்.ஜி.ஆர். பதில் – கதைக்குப் போய் யாராவது மறுப்பு தெரிவிப்பார்களா.
கேள்வி – தங்களுக்கு அரசியல் தெரியாது என்று தமிழ்வாணனும் சிவாஜி கணேசனும் சொல்லி இருக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
எம்.ஜி.ஆர். பதில் – கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்னைப் பொறுத்தவரையில் இது பொருந்தும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கேள்வி – உங்களது கட்சி நாளிதழில் சிவாஜி கணேசனைப் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றனவே?
எம்.ஜி.ஆர் பதில் – சிவாஜி கணேசன் எதிர்கட்சியிலிருந்து கொண்டு அண்ணாவின் தி.மு.கழகத்தை எதிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அமரர் அண்ணா அவர்கள் ஒரு நாள் சிவாஜி கணேசன் அவர்களின் நாடகத்திற்கு தலைமை தாங்கிப் பாராட்டியதை மறந்துவிட்டீர்களா?
எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா வாழ்த்தவில்லையா? அவருடைய தம்பிகளான நாங்கள் அவரைப் பின்பற்றி நமது கடமையை நாம் செய்வோம். (அண்ணா நாளிதழ் 10.11.1976)
கேள்வி – புரட்சித் தலைவர் அவர்களே 1976-க்கு பிறகு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடுவீர்களா? அல்லது கலைத்துறையில் இருந்து பணியாற்றுவீர்களா?
எம்.ஜி.ஆர். பதில் – உங்கள் தீர்ப்பும் சட்டத்தின் தீர்ப்பும் என்ன கட்டளை இடுகிறதோ அப்படி நடப்பேன். .........
-
நெல்லையில் மக்கள் திலகத்தின் தொடர் வண்ணக்காவியங்கள் படைத்த எழில்மிகு சாதனைகள் சில.
1972 இதயவீணை 62 நாட்கள்
1973 உ. சு. வாலிபன் 119 நாட்கள்*
1973 ப.பொன்னையா 62 நாட்கள்.
1974 நேற்று இன்று நாளை 119
1974 உரிமைக்குரல் 180 நாட்கள் 1974 சி.வா.வேண்டும் 62 நாட்கள்
1975 நி. முடிப்பவன் 77 நாட்கள்*
1975 நாளை நமதே 62 நாட்கள்*
1975 இதயக்கனி 100 நாட்கள்*
1975 ப . வாழ்க 100 நாட்கள்*
1976 நீ.த.வணங்கு 79 நாட்கள்*
1976 உ.கரங்கள் 62 நாட்கள்*
1976 ஊ. உழைப்பவன் 50 நாட்கள்.
1977 நவரத்தினம் 38 நாட்கள்*
1977 இ.போ.எ.வாழ்க 77 நாட்கள் 1977 மீனவநண்பன் 77 நாட்கள்
1978 மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் 62 நாட்கள்*
இப்படி தொடர்ந்து வெளியான காவியங்களில் நவரத்தினம் திரைப்படத்தை தவிர்த்து அனைத்து திரைப்படங்களும்*
50, 75, 100, 175 நாட்களை கடந்து அசுர சாதனையை படைத்த ஒரே திரையுலக சக்கரவர்த்தி*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டுமே.
இப்படி எந்த நடிகரும் நெல்லை மாநகரில் இதுவரை தொடர் காவியங்கள் மூலம் சாதனைகள் படைத்ததில்லை............