Enge brahmaNan part 2 (prologue)
Quote:
'முன்பு - விட்டகுறை வந்து தொட்டாச்சு!' என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தைப்போல் என்னை மதிமயங்கச் செய்தது. அந்தக் கடற்கரை மணலில் அதே மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன் எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திருந்ததாகத் தோன்றியது.
முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது கடலிலே ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன. கரையிலே கூட்டங் கூட்டமாக ஆடவரும் பெண்டிரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரத்தில் உச்சியில் ரிஷபக் கொடிகளும் சிங்கக் கொடிகளும் உல்லாசமாகப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக் கருவிகளிலிருந்து எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கிற்று. கண்ணுக்குத் தெரிந்த பாறைகளில் எல்லாம் சிற்பிகள் கையில் கல்லுளியை வைத்துக் கொண்டு வேலை செய்தார்கள். எங்கேயோ யாரோ காலில் கட்டிய சதங்கை ஒலிக்க நடனமாடிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
சிறிது நேரத்துகெல்லாம் அந்த அகக் காட்சிகள் தெளிவடைந்தன. உருவங்களும் முகங்களும் இனந்திரியுமாறு எதிரே தோன்றின.
ஆயனரும் சிவகாமியும் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் பார்த்திபனும் விக்கிரமனும் அருள்மொழியும் குந்தவியும் பொன்னனும் வள்ளியும் கண்ணனும் கமலியும் புலிகேசியும் நாகநந்தியும் என்னுடைய மனக்கண் முன்னால் பவனி வந்தார்கள். அப்படிப் பவனி வந்தவர்கள் என் உள்ளத்திலேயே குடிபுகுந்துவிட்டார்கள்.
இவ்வளவு பாரத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு வருஷகாலம் என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். 'சிவகாமியின் சபத'த்தில் கடைசிப் பாகம், கடைசி அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்துகொண்டிருந்த பாரம் என் அகத்திலிருந்து நீங்கியது.
மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும் விக்கிரமனும் குந்தவியும் மற்றும் சில கதாபாத்திரங்களும் என் நெஞ்சிலிருந்து கீழிறங்கி, 'போய் வருகிறோம்' என்று அருமையோடு சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.
எங்கேயோ படித்தது போல் இருக்கிறதா? என்ற கேள்விக்கே இடமின்றி தமிழகத்து இலக்கிய ரசிகர்களின் நெஞ்சத்தில் ஆழ அமர்ந்திட்ட எழுத்தல்லவா இது!! அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் முன்னுரையை வாசகர்கள் மறக்கவும் முடியுமா? சிவகாமியும் மாமல்லரும், நம் மனதில் ஆசனமிட்டு உட்கார்ந்ததோடு மட்டுமின்றி, நம்முள் இரண்டற கலந்துவிட்டதற்கு மேலே கூறிய ஒரு அமானுஷ்ய முன்னுரையும் காரணமாக இருக்கலாம் என திட்டவட்டமாய் எனக்கு பல முறை நினைத்ததுண்டு. அப்படி ஒரு ஷக்தி இந்த முன்ன்ரைக்கே உண்டு என்றால் கதையைப் பற்றி பேசவும் வார்த்தை உண்டோ?!
என்ன ஒரு உயிர்ப்புள்ள முன்னுரை! அமானுஷ்யமும் சரித்திரமும் கலந்து கண் முன் தீட்டப்பட்ட எப்பேர்பட்ட அருமையான ஓவியம்! எப்படி இல்லாமல் போகும்? எழுதியவர் கல்கி ஆயிற்றே.
இதே போல் சோவிற்கும் தன் கதாபாத்திரங்கள் பேசினால் எப்படியிருக்கும் என்ற ஆசையை, இரண்டாம் பாகம் ஆரம்பித்த அன்றே தீர்த்து நிம்மதி அடைந்தார். ஆம். ஆயனரும், சிவகாமியும், மாமலரும் போல் இங்கே வசுமதியும், நீலகண்டனும், சாம்புவும் கதாபாத்திரத்தினின்று எழும்பி உயிர்பெற்று இவர் முன் கேள்விகள் கேட்கின்றனர்.
"எனக்கு கேள்விகளை கேட்க மட்டும் தான் தெரியும்" என்ற நாகேஷ் வசனம் நினைவு வருகிறது. சோ-வுக்கும் ஏறக்குறைய அதே நிலை தான். கேள்விகளை மட்டும் கெட்டு விட்டு, அதற்கு உபாயம் சொல்லமலேயே கழண்டு கொண்டு போக முடியுமா? 'எங்கே பிராமணன்' என்ற தேடலுக்கு பதில் சொல்லுங்கள் என கதாபாத்திரங்கள் உறும.....
அய்யயோ அஃப்சரை விட்டுவிட்டு வேறு அஷோக்-கை கொண்டு வந்து விடுவார்களோ என்று "அஃப்சர் ரசிகமன்ற"த் தலைவி ஷக்திப்ரபா பயந்தவண்ணம்.....வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்ட.....அஃப்சரே அஷோக்காக மீண்டும் பாலை வார்த்து..இனி
இரண்டாம் பாகம் தொடர்கிறது.......
Re: Enge brahmaNan part 2 (prologue)
Quote:
Originally Posted by Shakthiprabha
..இனி
இரண்டாம் பாகம் தொடர்கிறது.......
கேள்விகளை மட்டும் கெட்டு விட்டு,
ஆஹா..
தொடரட்டும் ...