டியர் esvee சார்,
ஏவிஎம் பொன்விழாவில் நடிகர் திலகம் : அனைத்து நிழற்படங்களும் கண்கொள்ளாக் காட்சிகள்..!
இடுகை செய்தமைக்கு இனிப்பான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் esvee சார்,
ஏவிஎம் பொன்விழாவில் நடிகர் திலகம் : அனைத்து நிழற்படங்களும் கண்கொள்ளாக் காட்சிகள்..!
இடுகை செய்தமைக்கு இனிப்பான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் வினோத் சார்,
இது வரையில் இந்த மய்யத்தில் எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்திராத மிக மிக மிக அபூர்வமான பொக்கிஷமான ஸ்டில்லைத் தந்து அசத்தியுள்ளீர்கள்.. உண்மையிலேயே இந்த நால்வர் இணைந்து வெளிவந்திருக்கக் கூடிய மிக அபூர்வமான ஸ்டில் இது... தங்களுக்கு கோடான கோடி பாராட்டுக்களும் நன்றிகளும்...
அன்புடன்
டியர் ராகுல்ராம்,
'சந்திப்பு' பதிவிற்கான தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி!
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
தங்கள் அன்பான பாராட்டிற்கு என் மனம் குளிர்ந்த நன்றிகள்.
டியர் சந்திரசேகரன் சார்,
பதிவுகளுக்கான தங்கள் பாராட்டுதல்களுக்கு உளம் கனிந்த நன்றிகள். ஆங்கில சப் டைட்டிலோடு "உள்ளத்தில் நல்ல உள்ளம்" கண்டு மகிழச் செய்ததற்கு நன்றிகள். ஒய்.ஜி.எம் சாருக்கும் நன்றி!
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்பு பாராட்டு மழையில் நனையச் செய்து விட்டீர்கள். அதற்காக என் மனப்பூர்வமான நன்றிகளை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நல்ல பதிவுகள் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் தங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் உண்டு என்பதை சொல்லவும் வேண்டுமோ! தாங்கள் கூறியுள்ளது போல் என்ன தான் வார்த்தைகளும் வாக்கியங்களும் அமைத்து ஒரு விஷயத்தை விளக்கினாலும் ஒரு படம் அவ்வளவு விஷயங்களையும் எவ்வளவு அற்புதமாக எடுத்துரைத்து விடுகிறது! அன்றைய நாட்கள் திரும்ப வருமா என்று நீங்கள் ஏக்கத்துடன் கேட்டிருப்பது அந்தக் காலங்களில் நாம் எவ்வளவு சந்தோஷமாக சுற்றித் திரிந்தோம் என்பதை உள்ளடக்கியுள்ளது. சந்தோஷங்களை நமக்கு அள்ளிக்கொட்டிய அந்த அருமை நாயகனுக்குத்தான் அவ்வளவு பெருமைகளும் போய்ச் சேரும்.
டியர் வினோத் சார்,
'கம்பீரத் திலகம்' கலந்து கொண்ட ஏ.வி.எம் நிறுவன் விழாவின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் கண் கொள்ளாக் காட்சிகள். நடிக தெய்வத்திற்குத்தான் அந்த தூய வெள்ளை கதாரடை எவ்வளவு பாந்தமாகப் பொருந்துகிறது அவர் வெள்ளை மனது போல! அற்புதமான ஸ்டில்களுக்கு ஆழ்ந்த நன்றிகள். அந்த விழாவின் வீடியோக் காட்சிகள் தங்களிடம் உள்ளனவா?
தெய்வப் பிறவியின் புகழ் பெற்ற ஸ்டில்லை பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி! நடிகர் திலகம் குடையை பின்னால் பிடித்துக் கொண்டு ssr ஐ
விடும் அந்த 'லுக்' குக்காகவே லட்சம் முறை இந்த ஸ்டில்லை கண்டு அனுபவித்து மகிழலாம். அதே போல இருதிலகங்களும் தத்தம் அன்பு மனைவியரோடு நிற்கும் புகைப்படம் இதுவரை காணாதது. அதற்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்.
அன்பு கார்த்திக் சார்,
நன்றிகள் பல. வாவ்!. எங்க மாமா பற்றிய விளக்கங்கள் டாப்பிலும் டாப். சும்மா டாக்ஸிக்காரனின் மீட்டர் போல ஸ்பீடோ ஸ்பீட். இரு தயாரிப்பாளர்களுக்கும் நடந்த பனிப்போரை பக்காவாக விளக்கி விட்டீர்கள். எத்தனை உள்குத்துக்கள் நடந்திருக்கின்றன? நீயா நானா போட்டிகள், விட்டேனா பார் என்ற சவால்கள், போட்டியில் சற்று பின்வாங்கியவர் மறுபடியும் மண்ணைக் கவ்விவிடுவார் என்ற தவறான கணிப்பு, தராசுத் தட்டு ஒருபக்கமாகவே சாயாது மறுபக்கமும் சாயும் என்று தெரிந்து புரிந்து கொள்ளாத அறியாமை, சூது வாது சூழ்ச்சிகள், இடையில் எனது உயிர்ப்படமான 'ஞானஒளி' பண்ணிய ரகளை, 'பட்டிக்காடா பட்டணமா'வின் பட்டி தொட்டி படு வெற்றி என அனைத்தையும் ஒரு சேரத் தொட்டு விட்டீர்கள். அற்புதமாக வெளிவராத பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். இதற்குத்தான் எங்கள் கார்த்திக் சார் வேணுமென்பது.
சபாஷ் சார்! நிறைய விஷயங்களை தங்கள் உன்னதப் பதிவு மூலம் தெரிந்து கொண்டோம். இப்போது என்னையே நான் பாராட்டிக் கொள்கிறேன். எங்க மாமா பதிவை தற்செயலாக நான் போடப் போனதினால் தானே இப்படி ஒரு அற்புத விஷயங்களைக் கொண்ட கட்டுரையை தங்களிடமிருந்து இன்று பெற முடிந்தது? (இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் பதியத்தான் போகிறீர்கள்) கவிழ்ந்து போன கனகசபை அன்புச் சகோதரர்களை வைத்து அருமையாக மீண்டும் நல்ல காசு பார்த்தார்.
ஹரீஷ் சார்,
ஹேப்பி...ஹேப்பி...ஹேப்பி.
நன்றி...நன்றி...நன்றி.
எப்போது நமது அடுத்த 'சந்திப்பு'?
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
நல்ல உள்ளம் படைத்தவரான தங்களிடமிருந்து 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' வீடியோ பதிவு வந்தது கூடுதல் சிறப்பு..!
ஆங்கில சப்-டைட்டில்களை அம்சமாக வழங்கியுள்ள திருமதி. ரேகா ஹரிசரண் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் கல்நாயக் சார்,
கடலூர் OT- யில் இருந்த கமர் திரையரங்கை அற்புதமாக ஞாபகம் வைத்துள்ளீர்கள். தங்கள் நினைவாற்றலுக்கு ஒரு அன்பு ஷொட்டு. நான் பேபி கிளாஸ் (அப்போதைய L.K.G) முதல் 10th std வரை படித்தது (St.David High School) கடலூர் ஓல்ட் டவுன் என்று கூறப்படும் OT- யில் தான். சொந்த ஊராகையால் பல படங்கள் பார்க்கும் வாய்ப்பு. கமர் தியேட்டர் பிரபல .....கடத்தல் புகழ் ஹாஜி மஸ்தான் அவர்களின் தியேட்டர். கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். 'பேசும் தெய்வம்' இங்கு ரிலீஸ் ஆன தலைவரின் முதல் படம்.
கடலூர் துறைமுகத்திற்கே இந்த ஒரு தியேட்டர் தான். மீனவர்கள், சிமென்ட் சாக்கு தைப்பவர்கள், தீக்குச்சி அடுக்கும் தொழிலாளிகள், இறால் தோல் உரிப்புப் பணியாளர்கள், மீன் வலை பின்னுபவர்கள் என்று பல்வேறு சிறு தொழில்கள் நடத்தும் உண்மை உழைப்பாளிகளின் உறைவிடம் இந்த ஊர். பகல் காட்சியை விட இரவுக் காட்சிக்கு நாள் முழுதும் உழைத்துக் களைத்த தொழிலாளிகள் கவலைகள் மறக்க கமருக்கு படையெடுப்பது வழக்கம். சும்மா ஜெகஜோதியாய் இருக்கும் சார்!
பாட்டி வீட்டில் தங்கி படித்தேனா...அவர்களும் தங்கள் வீட்டாரைப் போல கண்டிப்பானவர்களா.. அதனால் இரவுக் காட்சிக்கு தலைவர் படம் பார்க்க போகும் போது என்னுடைய ரூமில் நான் படுக்கும் பெஞ்ச்சில் பாயை நன்றாக ஆள் போல சுருட்டி வைத்து விட்டு, தலைக்கு பதிலாக தண்ணீர் சொம்பை பாயின் தலைப்பகுதியில் வைத்து விட்டு, அதன் மேல் போர்வையை முழுதுமாகப் போட்டு மூடிவிட்டு, அப்படியே நான் படுத்திருப்பது போன்ற செட்டப்பை பக்காவாகப் பண்ணிவிட்டு, தோட்டத்துப் பக்கம் வழியாக காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து படம் பார்க்க கம்பி நீட்டி விடுவேன். படம் முடிந்து வீட்டிற்கு வந்து பூனை போல் சுவர் ஏறிக் குதித்து ஒன்றும் தெரியாத பிள்ளை போல வந்து படுத்துக் கொள்வேன். அதெல்லாம் ஒரு காலம் சார். அந்த திரில்லே தனி... கமரில் தலைவரின் கிரஹப்பிரவேசம், என்னை ஆட்டிப்படைத்த படமான கருடா சௌக்கியமா, வா கண்ணா வா, துணை போன்ற காவியங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.
கமர் தியேட்டரைப் பற்றி எழுதிவிட்டு என்னை கலங்க வைத்து விட்டீர்களே! இருந்தாலும் ஆனந்தக் கலங்கல்கள் தான். ஞாபகப்படுத்தி மகிழ வைத்ததற்கு நன்றியோ நன்றிகள். (ப்ச்...அந்த கமர் தியேட்டர் முற்றிலுமாக கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் தரையோடு தரையாக இடிக்கப் பட்டு செங்கல் குவியல்களாகக் கிடக்கிறது சார்)
நீங்கள் குறிப்பிட்டிருந்த 'பாதிரிக்குப்பம்' ஊரில் முன்பு ஒரு 'டூரிங்' டாக்கீஸ் இருந்தது. திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சரியாக மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும். அந்த 'டூரிங்' டாக்கீஸ் பெயர் 'ஜெகதாம்பிகா'. பின்னாட்களில் அது எடுக்கப்பட்டு அந்த இடத்தில் பெரிய தியேட்டர் கட்டப்பட்டு அதற்கு 'முருகாலயா' என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த ஏரியாவிற்கு அது ஒரே தியேட்டர் என்பதால் நன்றாகவே தியேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் அது நம்ம தலைவரின் கோட்டை. நம் படங்கள் அங்கு பட்டையைக் கிளப்பும். அங்கு படம் பார்த்த அனுபவங்களை எழுதினால்... நேரம் வரும் போது எழுதலாம்...பின்னாட்களில் ஏற்பட்ட புரட்சி மாறுதல்களால்(!)அந்த தியேட்டரும் கல்யாண மண்டபமாகிப் போய் பல ஆண்மகன்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது தற்சமயம் வரையிலும்.
முத்தையா பங்குதாரார்களின் பிரச்னைகளால் அப்படியே இடி விழுந்தாற்போல நிற்கிறது. அதனால்தான் மாற்று ஏற்பாடுகள் எதுவும் நடக்க வில்லை. இப்போது பிரச்சனை தீந்து விட்டதகாக் கூறுகிறார்கள். இனி மாற்று ஏதாவது ஏற்படலாம்.
என்ன ஒரு இரண்டு நாட்களாய் நம்ம திரியில் ஒரே தியேட்டர்கள் மயமாகவே இருக்கிறதே! சரி ! கடலூரில் எந்த ஏரியாவில் இருந்தீர்கள் என்று கூற முடியுமா?
தவறே இல்லாமல் அழகாகத் தமிழ் வரைகிறீர்களே! கடலூர்காரரா!.. கொக்கா!... ஒப்பீடெல்லாம் எதற்கு சார்... நாமெல்லோருமே ஒன்றுதான். வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு எழுதுங்கள். தங்கள் பதிவுகளை வேறொரு திரியில் ரசித்துப் படித்து தங்கள் காமெடி சென்ஸை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தவன் நான். அந்த 'அண்ணன்' ஒன்று போதாதா. இப்போது புரியுமே...
கடலூர் வந்து கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை அசை போடும் அதே வேளையில் அப்படியே எங்கள் இல்லத்திற்கும் வந்து எங்களைப் பெருமைப் படுத்துங்கள்.
சூப்பர் சார். தற்சமயம் விடைபெறுகிறேன். தங்களது பதிவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.
தி கிரேட் பம்மலார் சார்,
நடிகர் திலகத்துக்கு 'செவாலியே' விருது வழங்கும் விழா 'தினத்தந்தி' ஆவணத்தைப் பதிவிட்டு அந்த மகானுக்கு ஆவ(ண)ன மரியாதை செய்து எங்களையும் கோலாகலப் படுத்தியுள்ளீர்கள். மாசறு பொன்னிற்கு, பாசத்தின் ஊற்றுக்கு உலக மரியாதை கிடைக்கச் செய்த அலங்கார, அற்புத, அதிசய, ஆர்ப்பாட்ட, ஆரவார, ஆணித்தரமான விழா நிகழ்வுகளை அற்புதமாகப் பதித்து அத்தோடு நில்லாது வரிசையாக ஆவணங்களின் 'செவாலியே' தொகுப்பு வைரப் பதிவுகள் அணிவகுத்து வரும் என்ற பேரின்ப அதிர்ச்சியை வேறு ஊட்டியுள்ளீர்கள். கைம்மாறு கருதாமல் பணி புரியும் பம்மலார் சார்! (அன்பு) மாற்று யாரும் வையகத்தில் இல்லை தங்களுக்கு.
நன்றி சொல்ல வார்த்தையின்றித் தவிக்கும்
டியர் கல்நாயக் சார்,
தங்களின் இடுகைகள் தகவலார்ந்த பதிவுகளாக ஒளிர்கின்றன. காமெடியாக பதிப்பதில் கலக்கும் தாங்கள், சீரியஸான பதிவுகளையும் சிறப்பாகத் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்..! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்று இனிய பதிவுகளை இங்கே இடலாமே..!
அன்பு கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
'செவாலியே விருது விழா' ஆவணப்பதிவுக்கு தாங்கள் வழங்கிய அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி..! இவ்விழா குறித்து 'விகட'னில் வந்த (அகடவிகட) விவரங்களைத் தந்து அசத்திவிட்டீர்கள்..!
தாங்கள் பதித்த, இடிப்பதற்கு முன் உள்ள சென்னை 'புவனேஸ்வரி' அரங்கின் தோற்றம், இதயத்தை இன்று மீண்டும் கனக்கச் செய்தது. தாங்கள் எழுதியது போல் நமது மன்னர் தமது கோட்டைகளையும் தம்மோடு எடுத்துச் சென்றுவிட்டாலும், இன்று மீண்டும் புதுப்பொலிவோடு பற்பல புதுக்'கோட்டை'களில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். இதன்மூலம் நமக்கெல்லாம் மீண்டும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தந்து கொண்டிருக்கிறார்.
தங்களை இனி 'தமிழ்த் திரையுலக வரலாற்று விற்பன்னர்' என்றே விளிக்கலாம். 1969 முதல் 1972 வரையிலான காலகட்ட சுவாரஸ்யங்களை எத்தனை அழகாகத் தந்துள்ளீர்கள். கடலை கமண்டலத்துக்குள் கொண்டுவந்த 'கார்த்திகேயன்' நீங்கள்..! அத்தனை விஷயங்களையும் ஒரு அருமையான பதிவில் அடக்கிவிட்டீர்களே, பாராட்டுக்கள்..!
[எந்தவொரு பதிவிலும் தங்களின் ஹியூமருக்கும், பஞ்ச்சுக்கும் பஞ்சமில்லை].
அன்புடன்,
பம்மலார்.
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 6
நடிகர் திலகத்தின் முழுமுதற்காவியம்
பராசக்தி [முதல் வெளியீட்டுத் தேதி : 17.10.1952]
முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாவையும் தாண்டி அயல்நாடான இலங்கையில் 42 வாரங்கள் [294 நாட்கள்] ஓடிய மகாமெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(திருச்சி) : 14.8.1997
http://i1110.photobucket.com/albums/...GEDC6281-1.jpg
முதல் வெளியீட்டில்,
திருச்சி : வெலிங்டன் : 245 நாட்கள்,
குடந்தை : டைமண்ட் : 50 நாட்கள்
[குடந்தையில் சற்றேறக்குறைய 45 வருட இடைவெளியில் மீண்டும் அதே திரையரங்கில்...!]
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
'சந்திப்பு' திரைக்காவியத்தின் '35 நாட்களில் 75 லட்சம் ரூபாய் வசூல்' 'தினத்தந்தி' விளம்பர கட்டிங் எங்களுக்கு தாங்கள் அளித்த பொற்கிழி. விலைமதிப்பில்லாதது. பொற்கிழி வழங்கிய பொன்னான கைகளுக்கு நன்றிகள். இந்த நேரத்தில் 'திரிசூலம்' மெகா ஹிட் காவியம் '6 வாரங்களில் 60 லட்ச ரூபாய்' வசூல் ஈட்டிய 'தினத்தந்தி' விளம்பரம் நினைவுக்கு வருகிறது. நோக்கம் புரிகிறதா? நன்றிகள் சார்.
80க்குப் பிறகு .... வசூலில் சாதனை படைத்த படங்களின் மூலம் தன்னுடைய ஆளுமையை நிரூபித்தார் நடிகர் திலகம் என்பதற்கு சந்திப்பு வசூல் ஒரு சாட்சி. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள் பம்மலார் சார்.
வாசு சார்,
கடலூர் திரையரங்குகளின் நினைவுகளை எடுத்துரைத்து இலவசமாக கடலூருக்கு அதுவும் Time Machineல் சுற்றிக் காட்டி விட்டீர்கள். சூப்பரோ சூப்பர்.
திரிசூலம் வசூல் எம்.ஜி.ஆர். அவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கு முக்கிய பங்கு வகித்தது என்பது அந்நாளில் பிரசித்தம்.
பம்மலார் சாரே,
திரியின் வேகம் மலைக்க வைக்கிறது.. இன்னும் ஓரிரு நாளில் 25,000 பார்வையாளர் எண்ணிக்கையைத் தாண்டி விடும்...ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான கால கட்டத்தில் 20 நாட்களில் 23000 பதிவுகள். ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்த பட்சம் 1000 பார்வையாளர்களை ஈர்த்து வரும் வேகம். பாகம் பத்திலேயே தொடர்ந்திருந்தால் கூட இந்நேரம் நிச்சயமாக அடுத்த பாகத்தைத் தொடர்ந்திருக்கும். எப்படி யிருந்தாலும் புதிய திரியின் வரவு உண்டு. அது சற்று முன்னமேயே வந்து விட்டது.
விரைவில் இத்திரியின் இரண்டாம் பாகத்தையும் சந்திப்போம் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள் மீண்டும் மீண்டும்.
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் அந்தக் காலகட்டத்திற்கே அழைத்து செல்கின்றன. இந்தப் பக்கம் குளோப்பில் சிவந்த மண், அந்தப் பக்கம் வெலிங்டனில் எங்க மாமா, மிட்லண்டில் விளையாட்டுப் பிள்ளை, மூன்று படங்கள் ஒரே சமயத்தில் சென்னையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே வியட்நாம் வீடு வருகையின் அறிவிப்பு ... இப்படி இருந்தால் எங்கிருந்து படங்கள் 100 நாட்களைக் காணும். எங்க மாமா படம் கடைசி நாள் வரையில் இரு வகுப்புகள் நிறைவு பெற்றுத் தான் ஓடிக் கொண்டிருந்தது.
இப்படி ஒரே சமயத்தில் மூன்று படங்களும் அதற்கு மேலும் புதிய படங்கள் அதுவும் பல முறை ஓடியது நடிகர் திலகத்திற்கு மட்டும் தான் சாத்தியம்.
அன்புடன்
ராகவேந்திரன்
நடிகர் திலகத்தைப் பற்றி ராஜு ஆரோக்கியசாமி என்கிற ரசிகர் வரைந்துள்ள கவிதை
http://i872.photobucket.com/albums/a...juarokpoem.jpg
பம்மலார் சார்
பராசக்தி மறு வெளியீட்டு விளம்பரம் ... அட்டகாசம்...
முதல் வெளியீட்டு விளம்பரம் மட்டுமல்ல், மறு வெளியீட்டு விளம்பர ஆவணங்களிலும் தங்களை மிஞ்ச முடியாது என்பதைப் போல் தங்கள் பொக்கிஷங்களை பாதுகாத்து வருகிறீர்கள் ...
மீண்டும் மீண்டும் ... பாராட்டுக்கள்...
http://i46.tinypic.com/34xgt1v.png
இனிய நண்பர் திரு சந்திர சேகர் சார்
தங்களின் அன்பு பாராட்டுக்கு மிக்க நன்றி .
இனிய நண்பர் திரு .ராகவேந்திரன் சார் அவர்களுக்கு,
தங்களின் பாராட்டுக்கு இதயங்கனிந்த நன்றிகள் .
ஆவண திலகம் திரு பம்மலார் அவர்களுக்கு
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி .
இனிய நண்பர் திரு .வாசுதேவன் சார்
தங்களின் பாராட்டுக்கு நன்றி . ஏவிஎம் வீடியோ தொகுப்பு dvd விரைவில் உங்களுக்கு வந்து சேரும் .
என்றும் அன்புடன்
esvee
நம்ம தலைவருடைய ஸ்டைல்தான் என்ன! ப்பா...என்ன ஒரு அழகு!
http://i1087.photobucket.com/albums/...n31355/avm.jpg
வாசு சார், பெருந்தலைவருடன் தலைவர் ஸ்டில் சூப்பர்...
இந்த போஸில் அவரை போட்டோவில் பார்ப்பவர்களுக்கே அவ்வளவு மகிழ்வுணர்வு இருக்குமென்றால், இதே ஸ்டைலில் அவரை பல முறை நேரில் பார்த்திருக்கும் நாமெல்லாம் என்ன புண்ணியம் செய்திருப்போம் ...
நினைக்கும் போதே பெருமையாகவும் மலைப்பாகவும் உள்ளது ..
அவருடன் வாழ்ந்து, அவருடன் பழகி, அவருக்குத் தொண்டாற்றி ..
வள்ளுவர் கூறியது போல் பிறவிப் பயன் என்று ஒன்றிருந்தால், அது இதுவாகத் தான் இருக்கும் ...
உண்மைதான் ராகவேந்திரன் சார். அந்த மதிவதன முகத்தைக் கண்டாலே உச்சி முதல் பாதம் வரை ஏற்படும் சிலிர்ப்பை சொல்லி மாளாது. உணர்ச்சிப் பிரவாகமெடுக்கிறது. எல்லா அம்சங்களும் அவருக்கு எப்படிப் பொருந்தியிருக்கின்றன!. இப்படியெல்லாம் ஒரு அதிசயப் பிறவி இனிமேல் பிறக்க முடியுமா! அந்த மகா மாமனித தெய்வம் வாழ்ந்த காலத்தில் வாழும் பெருமையை நாம் அடைந்தது என்னே ஒரு பெரும் பாக்கியம்! நடிகராக அவரை விட்டு விட்டுப் பார்த்தால் அதைவிட மனிதராக எல்லா விஷயங்களிலும் மேலோங்கி நிற்கிறார் என்றுதான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. கண்கள் பனிக்கின்றன சார்.
Anbai Thedi
I was searching for this movie long time as I saw this movie long time back around 10 years back. After seeing the pictures in thread my interest grew more. Luckily I saw the movie today.
Sivaji is a youngster who dreams all day imaging anything and everything he sees thereby lands in trouble and everyone plays pranks on him . He stays with his uncle Major, sister Vijayakumari, daughter Indira, Cho.
He is bullied by his uncle’s sister, servants, co worker. His only solace is cho, baby Indira ,his sister and fruit vendor Jayalalitha.
He is innocent to a great extent that even his servants beat him. His uncle’s sister is engaged to Srikanth,working in Major’s factory who plans to kidnap Major’s daughter with Manohar and kidnaps her toy store. She is presumed dead. Major gives all properties to NT, NT revelas that his daughter is kidnapped.Major& his family leave their home gives curses that if was a saint then he would curse NT baby to death based on manuneethi chozan cow story NT decides to sacrifice his baby .Jayalalitha agrees.
What happens next?
Does NT becomes brave? Does NT baby is sacrificed? Will the family unite forms the climax.
Performance:
Major as usual good.
Vijayakumari just apt
Jayalalitha acted well just like other NT movies especially last half an hour explaining his desire not to sacrifice his child
Cho comedy satire on politics evokes laughter along with manorama especially his reference to Indira would have brought either whistle or commotion in theatre. Cho also sends solid support to story. His VPKB dialogue and reveals his secret is laugh riot
Retention of
Ramu is helped by Indira
Could Pammalar, Ragavenderan,Vasu sirs throw light on this Cho comedy track about his satire.
Last but least NT
NT shows various facets in this movie Navarasas
In the beginning he is innocent, helpless but at the same time nice & happy person
Buddha one act play is very inspiring. To see NT & JJ in those 7 min play is absolute treat particularly Buddhist preachings uttered by NT is a gem.
NT portrayal is finest underplay wonder why this movie didn’t celebrate 100 days.
Those who say NT overacts cannot handle subtle roles can very well see this movie to verify it
One of our hubbers say Muktha films has mixed track record of hits & flops with NT .
Hits or flops Muktha films give variety to NT multidimensional acting skills & explore his talents
Ragul,
http://static2.dmcdn.net/static/vide...20110812114011
short and sweet. keep it up.
Dear Raghul,
Happy that you chose a rare movie of NT neglected much by even his so called die hard fans. I saw this on the first day, Deepavali of 1974 at Villivakkam Royal, special morning show for fans since couldn't get ticket at Devi Paradise. To be frank, I liked this movie very much. The frequent dreams were one of the reasons for the failure of the movie, if at all it can be said so. In every movie, Muktha had created a disease or phobia for the main character. In Thava Pudhalvan, hero would be blind. In Niraikudam heroine would be blind. In Arunothayam the hero would suffer with stomach pain and like that. In Anbai thedi the phobia of dream was the weakness of the character played by NT, which he essayed with utmost dedication and reality.
The film had class songs composed by Mellisai Mannar, sung by T.M.S., P.Susheela, Jayalalitha, Pushpalatha.
Here are the video of the songs:
Buddhi ketta ponnu onnu
http://www.dailymotion.com/video/xd5...thedi_creation
Chithra mandapathil
http://youtu.be/ig46cl5coVo
Sippiyile Muthu
http://www.oruwebsite.com/music_vide...84df74973.html
Ammavum Appavum
http://youtu.be/Fy3jEzr8Rbc
movie link
http://www.dailymotion.com/video/xs2zho_anbai-thedi_shortfilms
அன்பு வாசுதேவன் சார்,
உங்கள் நினைவை நானும் கிளறிவிட்டேன் போல. சுகமான ரகசியங்களை வெளிப்படுத்தி எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றீர். பெரும்பான்மையோருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும்.
நாங்கள் கடலூர் புதுப்பாளையத்தில் வசித்தோம். தங்கள் அன்பான அழைப்பிற்கு தலை வணங்குகிறேன். நிச்சயம் சந்திப்போம். மேலும் பல விவரங்கள் பேசுவோம். உங்கள் உற்சாக தூண்டுதல்களுக்கும், பாராட்டிற்கும் மீண்டும் மீண்டும் நன்றி.
அன்புடன்.
வரலாற்று ஆவணங்களை, நிகழ்ச்சிகளை, கொண்டாட்டங்களை பதிவு இடுவதில் மாமன்னரான பம்மலார் அவர்களே,
நான் எழுதியது மிக மிகக் குறைவு என்றாலும், தங்கள் பாராட்டு என்னை மிகுந்த உற்சாகமூட்டுகிறது. நேரம், வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய எனக்குத் தெரிந்தவைகளை பதிவாய் இடுகிறேன்.
எழுதத்தூண்டி, உற்சாகம் ஊட்டும் தங்களுக்கும், வாசுதேவனாருக்கும் கடமைப் பட்டவனாகினேன். மீண்டும் மீண்டும் நன்றி, நன்றி.
அன்புடன்.
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்
http://i872.photobucket.com/albums/a...uda/VCGCSS.jpg
அவருடைய நடிப்பு முறை உலக அளவிலான வீச்சை ஏற்படுத்தி வளர்த்த்து.Quote:
His system of actinghas developed an international reach.
அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவை உண்மையாக தேவைப்பட்ட நாடக உருவாக்கத்தை அவர் ஒரு தவமாக்க் கருதி மேற்கொண்டார்.Quote:
He treated theatre-making as a serious endeavour, requiring dedication, discipline and integrity.
தன்னுடைய நடிப்பினை கலைத்தன்மைக்குட்பட்ட தீவிர சுயபரிசோதனைக்கும் அதன் வெளிப்பாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுமையாக உட்படுத்திக் கொண்டார்..Quote:
Throughout his life, he subjected his own acting to a process of rigorous artistic self-analysis and reflection.
பழக்கம் என்பதை கேள்வி வடிவமாகவும் கோட்பாடு என்பது ஆக்கபூர்வமான உருவாக்கத்திற்கான விளக்கமாகவும் அடிப்படையாக்க் கொண்டு அவர் உருவாக்கிய கோட்பாடு செயலாக்கம் – அவரை முதன்மையான சிறந்த நாடக தொழிலராக அறிய வைக்கிறது.Quote:
His development of a theorized praxis – in which practice is used as a mode of inquiry and theory as a catalyst for creative development – identifies him as the first great theatre practitioner.
மேற்கண்ட வாசகங்கள் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களைப் பற்றி விக்கிபீடியா இணைய தளத்தில் அறிமுகமாக உள்ளவை. ஒவ்வொரு வார்த்தையும் நடிகர் திலகத்திற்கு எந்த அளவிற்குப் பொருந்துகிறது.
இது நம்முடைய அலசலின் துவக்கம் தான். இனி வரும் காலங்களில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புக் கோட்பாடு பற்றியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய நடிப்பிற்கும் உள்ள ஒற்றுமை அல்லது வேற்றுமை அல்லது இரண்டும் ... என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
அன்புடன்
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார் மற்றும் ராகவேந்தர் சார்....
எனது பதிவுகளைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
பம்மலார் அவர்களே, தாங்கள் தவணைமுறையில் தந்துகொண்டிருக்கும் 'சந்திப்பு' வெற்றிக்காவியத்தின் விளம்பரப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. ராகவேந்தர் அவர்கள் சொன்னதுபோல, 80க்கு முன்பே தலைவரின் சாதனைகள் முடிந்துவிட்டதுபோல பரப்பப்பட்டு வரும் மாயையை இவை தகர்த்து வருகின்றன. 'சந்திப்பு' வெள்ளிவிழாப்படம் என்பது நம்மில் பலருக்கே தெரியவில்லை என்பதுதான் சோகம். அந்த குறையை தங்கள் ஆவணங்கள் போக்கி வருகின்றன.
எங்க மாமா பற்றி பதிவுகள் இடப்படும் இவ்வேளையில் 'எங்க மாமா'வின் ஆவணப்பதிவுகளையும் தரலாமே. நம்முடைய வனவாச காலத்தில் இடம்பெற்ற படங்களில் அதுவும் ஒன்றல்லவா?. தங்களின் 'பராசக்தி' மறுவெளியீட்டு விளம்பரம் அட்டகாசம். மறுவெளியீடுகளின் விளம்பரங்களையும் தாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பது வியக்க வைக்கிறது.
கலக்குங்கள்.....
அன்புள்ள வாசுதேவன் சார் & கல்நாயக் சார்...
நீங்களிருவரும் என் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கடலூர் திரையரங்குகளுக்கு மினி சுற்றுலா அழைத்துச்சென்றுவிட்டீர்கள். நல்ல தெளிவான நடை. அங்கங்கே நகைச்சுவை செருகல்கள். படிக்க அருமையாக இருந்தது. நான் கடலூர் வழியாக பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் சென்றிருந்தபோதிலும், அங்கே இறங்குவதற்கோ, தங்குவதற்கோ இதுவரை வாய்ப்பு அமைந்ததில்லை. இருப்பினும் தங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், நிழற்படங்கள் மூலமாகவும் கடலூரை மானசீகமாக தரிசிக்க வைத்து விட்டீர்கள்.
மிக்க நன்றி. இதுபோன்ற சுவாரஸ்யப் பதிவுகளை இருவரும் தொடர்ந்து அள்ளி வழங்குங்கள்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'அன்பைத்தேடி' திரைப்பட பாடல்களை காணொளியாய் வழங்கியமைக்கு நன்றிகள். 'புத்திகெட்ட பொண்ணு ஒண்ணு' பாடலில் நடிகர்திலகமும் கலைச்செல்வியும் மிக வித்தியாசமான உடையலங்காரத்துடன் ஆடும் அழகு அருமை. மெல்லிசை மன்னரின் மிகவும் வித்தியாசமான இசையும், என்.பாலகிருஷ்ணனின் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவும் பாடலின் தரத்தை உயர்த்திக்காட்டின.
'சித்திர மண்டபத்தில்' பாடல் காட்சியில் க்யூட்டான ஃபுல்சூட்டில் நடிகர்திலகமும், மிஸ்மெட்ராஸ் எம்ப்ளத்துடன் எங்கள் கலைச்செல்வியும் செம தூள். (இந்த வார்த்தை நீங்கள் உள்பட பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நடிகர்திலகத்தின் இணைகளில் தேவிகாவுக்கு அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்தவர் 'கலைச்செல்வி' ஜெயலலிதா. அதே சமயம் அரசியலில் எனக்கு அறவே பிடிக்காதவர் 'புரட்சித்தலைவி (?)' ஜெயலலிதா). அதுவும் இப்பாடலில் ஜெ. சொந்தக்குரலில் கொஞ்சுவார். இப்பாடலிலும் மெல்லிசை மன்னர் மற்றும் பாலகிருஷ்ணன் அணி அசத்தியிருந்தனர்.
நீங்கள் அன்பைத்தேடி படத்தை முதல்காட்சி வில்லிவாக்கம் ராயல் தியேட்டரில் பார்த்தது போல, அந்த தீபாவளிக்கு கும்பகோணத்துக்கு அத்தை வீட்டுக்குச்சென்றிருந்த நான், இப்படத்தை கும்பகோணம் 'செல்வம்' தியேட்டரில் முதல் காட்சி பார்த்தேன். பின்னர் சென்னை வந்தபின் தேவிபேரடைஸ் தியேட்டரிலும் பார்த்தேன்.
தங்கள் பதிவுகள் அனைத்துக்கும் நன்றிகள்.
'நட்புத்திலகம்' வினோத் (esvee) அவர்களே,
தங்களின் அசத்தல் பதிவுகளை நடிகர்திலகம் திரியிலும், மக்கள் திலகம் திரியிலும் தொடர்ந்து கண்டுகளித்து வருகிறேன். அவற்றில் பல நிழற்படங்கள் உண்மையிலேயே மிக அரிதானவை. அதுபோல திரையரங்குகளின் நிழற்படங்களும் சூப்பர். அவ்வப்போது இடம்பெறும் விளம்பரப்பதிவுகளும் அப்படியே. தங்கள் வரவுக்குப்பின் மக்கள் திலகம் திரி புத்துயிர் பெற்றதோடு வேகமும் எடுத்துள்ளது.
தொடர்ந்து தொய்வின்றி அசத்துங்கள்.
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-3)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (3) கிருஷ்ண குமாரி.
படம்: 'திரும்பிப்பார்' '
நடிகை சௌகார் ஜானகி அவர்களின் தங்கை கிருஷ்ண குமாரி. தமிழை விட தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டியவர். காந்தாராவ், என்.டி. ராமாராவ் போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 'மாயாஜால மன்னன்' விட்டலாச்சார்யா அவர்களின் அன்றைய ஆஸ்தான நடிகை என்றும் சொல்லலாம். நல்ல அழகான நடிகை. நடிகர் திலகத்துடன் முழுப் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் 'திரும்பிப்பார்' திரைக்காவியத்தில் சில காட்சிகளில் ஜோடியாக வருவதால் நடிகர் திலகத்தின் நாயகியர் லிஸ்டில் சேருகிறார்.
http://i1087.photobucket.com/albums/...1355/1-123.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-73.jpg
(ஜோடிகள் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புக்குரிய நெய்வேலியாரே,
அடியேன் வழங்கியது பொற்கிழியானாலும் அதனை பெறும் நீங்கள் 'தருமி'யல்ல..! எப்படியோ நானும் 'கருமி'யல்ல..! அதுசரி, கடலூரில் 'உருமி'யை ஊதித் தள்ளிவிட்டுத்தானே நமது 'கொடை வள்ளல்' நான்கு காட்சிகளில் உலா வந்தார். தருமி, கருமி, உருமி...அய்யா சாமி...,பட்டாக்கத்தி பைரவபாஷையில் 'எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்...!'
தங்களுடைய பாராட்டுக்கு அன்பான நன்றி..!
ரொம்ப ரொம்ப ஜாலிமூடில்,
பம்மலார்.
ராகவேந்திர ஐயா,
அளித்த பாராட்டுக்களுக்கு அடியேன் அளிக்கும் நன்றிகளை பிடித்துக் கொள்ளுங்கள். 'நன்றிகள்' ஓடிவிடப் போகின்றன..!
விடாக்கண்டர்...கொடாக்கண்டர்...என்றால் அது நீங்கள்தான் ஐயா..! புலிபோல் பாய்ந்துவந்து புள்ளிவிவரங்களை அள்ளி அளித்த தாங்கள் உண்மையிலேயே 'புள்ளிவிவரப்புலி'தான்..!
கவிஞர் ராஜூ ஆரோக்கியசுவாமியின் அருமையான கவிதை ஆரோக்கியமான முறையில் நமது கலையுலக சுவாமியை ஆராதனை செய்கிறது..! [நமது திரியில் ஏதாவது 'கவிதை' என்றாலே எனக்கு தெனாலிராமன் பூனைக்கு [கோ] பால் வைத்த க[வி]தையாய் கொஞ்சம் பயமாகவே இருக்குது].
[இக்கவிதையில் கீழ்க்கண்ட வரிகளை திரும்பத் திரும்பப் படித்தேன். அவ்வரிகள் அவ்வளவு என்னை ஈர்த்தன.]
"நீயும் நீரும் ஒன்று...
இல்லை...இல்லை...
நீர் பாத்திரவடிவங்கொள்ளும்..
நீயோ பாத்திரமாகவே மாறிவிடுவாய்...!"
செம ஜாலிமூடில்,
பம்மலார்.