இந்த பாட்டோட அடுத்த வரியை அல்லது பாடியாவர்கள் ஏதாவது சொல்ல முடியுமா கொஞ்சம் முயற்ச்சி செய்து பாப்போம்
Printable View
டிங் டாங் டிங் டாங் டிங்கிலல்லோ...
அடுத்த வீட்டுப் பெண்
கோபாலின் மனம் கவர்ந்த கீதாஞ்சலி கதாநாயகியாக நடித்த பாரஸ்மணி ஹிந்திப் படத்தின் பாடல்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டு மிகப் பிரபலமடைந்தன. அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் கோதை உன் மேனி ஒளியோ.... மாய மணி என்ற அப்படத்தின் பாடல் இதோ நம் பார்வைக்கு.
மஹிபாலுக்கு குரல் தந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்
http://www.youtube.com/watch?v=0WINiy0h4sU
குறிப்பு.. மாயமணி தமிழ் மொழிமாற்றுத்திரைப்படம் டிவிடியாக வெளிவரவில்லை. இதை இணையத்தில் தரவேற்றிய புண்ணியவான் யாரோ செய்த கைங்கரியம். ஹிந்தி வீடியோ தமிழ் ஆடியோ
இரண்டு வார்த்தை விட்டாயிற்று
'வந்ததென்ன தந்ததென்ன' க்குப் பிறகு 'சொந்தமென்ன பந்தமென்ன' போடணும். அப்புறம்தான் சிங்காரச் சிட்டல்லவா.
'ஹலோ பார்ட்னர்' படத்தில் ராட்சஸி பாடிய கலக்கல் பாடல். விஜயலலிதா நாகேஷ் ஜோடி தேன் கிண்ணத்திற்குப் பிறகு.
தேன் கிண்ணத்'தில் வி.கே.ஆர் முதலாளி எம்.ஆர்.ஆர்.வாசு ஜால்ரா
'ஹலோ பார்ட்னரி'ல் அப்படியே தலைகீழ்.
'வெள்ளி நிலவோ.. வீசும் தென்றலோ' என்று அருமயான பாடகர் திலகத்தின் பாடல் ஒன்று பார்ட்னரில் உண்டு. பின்னால் வரும்.
இந்தப் படத்தை அப்படியே உல்டா பண்ணி 'எல்லாம் இன்ப மயம்' என்று கமலை வைத்து எடுத்தார்கள். வாசு பண்ணின ரோலை ஜெய் பண்ணினார். நாகேஷ் ரோல் கமலுக்கு வித்தியாசமான 5 வேடங்களுடன். மாதவி ஜோடி. கன்னட லூஸ் மாப்பிள்ளை கமல் தும்மல் போட்டு மாதவியின் கவுன் தும்மலில் பறப்பதை கிருஷ்ணா எழுதுவார். அதை விலாவாரியாக கோபால் விவரிப்பார். நம் வேலை முடிந்தது.
பேராசிரியர் மீது ஒரே சமயத்தில் மூன்று மாணவிகள் பாலியல் புகார் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் பேராசிரியர் குற்றமற்றவர். மாணவிகள் ஒவ்வொருவரும் அவரை அடைய விரும்பியே பழி சுமத்துகின்றனர். பழியைத்துடைக்க பேராசிரியரின் விசுவாசமான மாணவர்கள் களத்தில் இறங்குகின்றனர்.
இந்நிலையில் பேராசிரியரின் காதலி அவரை அந்த மூன்று பெண்களுடன் சம்மந்தப்படுத்தி நினைத்துப் பார்க்கும்போது இந்த பாடல் உருவெடுக்கிறது.
இந்தப்பாடலில் சம்மந்தப்பட்ட அனைவருமே எனக்குப்பிடித்த நட்சத்திரங்கள். கனவு காணும் லட்சுமி, கனவில் பேராசிரியருடன் ஆடிப்பாடும் ஸ்ரீவித்யா, விஜயலலிதா, ஜெய்குமாரி என எல்லோரும் கண்களுக்கு விருந்து படைக்கின்றனர்.
நித்தம் நித்தமொரு புத்தம் புதிய சுகம்
நான் தேடினேன்
இளமை கொஞ்சும் விழி தலைமை தாங்கும் உன்னை
என்றும் நாடினேன்
கையணைக்க மெய்யணைக்க
விழி மொழிகள் கூறாதோ
மெய்யெழுத்தும் உயிரெழுத்தும்
ஒரு மொழியில் சேராதோ
ஓராயிரம் பாவையர் பார்வை பட்டும்
உன்மேல் விழுந்தன கண்கள்
ஈராயிரம் ஆண்டுகள் தவமிருந்தாலும்
உன்போலில்லை பெண்கள்
வேளைக்கு வேளை புது ரோஜா
வேண்டுகின்ற ஒரு மகராஜா
மலருக்கு மலர் ஒரு சுவை கண்டான்
வாடா மலராய் உன்னைக்கண்டான்
கவிஞர் வாலியின் பாடலுக்கு கலைமாமணி வி.குமார் இசையமைத்திருக்க, சிறப்பாக படமாக்கியிருந்தார் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர். பாடலின் முடிவில், காதலியின் மதிப்பில் பேராசிரியர் 0/100 என்று காட்டியிருப்பது டைரக்டோரியல் 'டச்'. பாடலில் நடிகையர் நால்வருமே 'நச்'.
பேராசிரியராக (நமது கோபால் சாருக்கு மிகவும் பிடித்த) மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்திருந்தார்.
படம்: "நூற்றுக்கு நூறு" பாடலோ 100 / 100.
நீங்க ஏதோ ஒரு ஆள் பெயரை சொன்னீர்களே, அந்த ஆள் பாலசந்தர் இயக்கத்தில் நடித்த நூற்றுக்கு நூறு என்னுடைய விருப்ப படம்.சுமாராக நடிக்கவும் வைத்திருப்பார் பாலச்சந்தர். யானை,புலி,சிங்கங்கள் ,குழந்தைகள் நடிக்கும் போது ,இந்த தொழிலில் இருக்கும் ஆட்கள் ஒரு படத்தில் கூடவா ,இயக்குனர் சொல் படி நடிக்க முடியாது?
டியர் கார்த்திக் சார்,
குமாரின் இசையில் பின்னி எடுக்கும் நூற்றுக்கு நூறு படத்தின் 'நித்தம் நித்தம் ஒரு' பாடலின் வரிகளையும், அப்பாடலின் விசேஷங்களையும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.
இப்பாடலைப் பற்றி விரிவாக எழுத மிகவும் ஆசை. ஏனென்றால் மிக மிக மிக மிகப் பிடித்த ஒரு பாடல். குமார் பைத்தியம் வேறு. ஸ்பெஷலில் எழுதுவதை விட அலச ஆவல். நேரம் வாய்க்கும் போது மன்மத லீலை போல லீலைகள் புரியலாம்.
இன்றைய ஸ்பெஷல் (28)
'சீதா' என்றொரு வெளியில் அவ்வளவாகத் தெரியாத படம். ஜெமினியும் அவர் பெண்டாட்டியும் நடித்திருப்பார்கள். சாவித்திரி முற்றலின் உச்சகட்டத்தில் இருப்பார். அதனால் நெற்றியில் முடிக் கற்றைகளைப் படர விட்டு இளமை காட்ட முயற்சிப்பார். ஆனால் 'சுழி' யாரை விட்டது? புரியாதவர்கள் பின்னால் கேள்விகள் கேட்கலாம். அதனாலோ என்னவோ ஜெமினியும் சோர்ந்து போய் சாவித்திரியைப் பார்த்து 'காலங்களில் அவள் வசந்தம்' என்று உன்னைப் பார்த்து இப்போது பாட முடியுமா?' என்று மனதுக்குள் சபித்தபடி 'தேமே' என்று உட்கார்ந்து இந்தப் பாடலில் புத்தகம் பார்த்துக் கொண்டிருப்பார். சாவித்திரி அவர் பாட்டுக்கு பாடிக் கொண்டிருப்பார்.
'எப்படி ஆனால் என்ன?
'கண்ணியப் பாடகி'யின் இந்தப் பாடல் சிறு வயதிலேயே என் நெஞ்சில் ஆழப் புதைந்து விட்டது. 'லஷ்மி கல்யாணம்' 'ராமன் எத்தனை ராமனடி' ஞாபகம் வந்தாலும் இந்தப் பாடலும் அலாதியான இன்பத்தை அள்ளித் தருகிறது.
மிகவும் அரிதான ஒரு பாடல். ஆனால் அப்போது ரேடியோவில் ரொம்ப பிரசித்தம். இப்போது பெரும்பாலும் மறந்திருக்கலாம்.
இந்தப் படங்களைப் பற்றிய விவரம் வேண்டாம். ஏனென்றால் எனக்குத் தெரியாதே!
பாடலை வீடியோவுடனேயே பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பார்க்க முடிந்தால் பாருங்கள். இல்லையேல் கண்களை மூடிக் கொண்டு பாடலை செவி வழி மட்டும் கேட்டு இன்புறுங்கள்.
ஆனால் நல்ல பாடல். கவிஞரின் வரிகள். இசை மெல்லிசை மன்னரோ?
'காவியத்தின் தலைவன் ராமனடி
தோழி கற்பனைகெட்டாத அழகனடி
அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி
அந்த அழகுமகள் பேர் சீதையடி
காவியத்தின் தலைவன் ராமனடி
தோழி கற்பனைகெட்டாத அழகனடி
அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி
அந்த அழகுமகள் பேர் சீதையடி
காவியத்தின் தலைவன் ராமனடி
அன்றொரு நாள் அந்தி மாலையிலே
நேரில் அவன் முகம் அவள் கண்ட வேளையிலே
கண்ணோடு கண் சேர்ந்து கொண்டதடி
வார்த்தை நின்றதடி மௌனம் வந்தடி
காவியத்தின் தலைவன் ராமனடி
தோழி கற்பனைகெட்டாத அழகனடி
அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி
அந்த அழகுமகள் பேர் சீதையடி
காவியத்தின் தலைவன் ராமனடி
அழகுக்குக் கல்யாண ராமனடி
தந்தை அன்பினில் கட்டுண்ட சேயனடி
நீதியிலே ராஜா ராமனடி
சீதை நெஞ்சினிலே சீதா ராமனடி
காவியத்தின் தலைவன் ராமனடி
தோழி கற்பனைகெட்டாத அழகனடி
அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி
அந்த அழகுமகள் பேர் சீதையடி
காவியத்தின் தலைவன் ராமனடி
https://www.youtube.com/watch?featur...&v=w64-dq5JzCA
டியர் வாசு சார்,
'சீதா' அவ்வளவு பிரபலமில்லாத படமல்ல. கொஞ்சம் பிரபலமான படம்தான். ஜெமினி கணேசனுக்கு இது 100-வது படம். சாவித்திரிக்கு இதுவே 150-வது படம். சாவித்திரி தெலுங்கிலும் நடித்ததால் எண்ணிக்கை அதிகம். புதுக்கோட்டைக்காரர் லோக்கல் வண்டி மட்டுமே. பல நடிகர்களுக்கு 100-வது படம் சறுக்கியது போல இவருக்கும் சறுக்கியது. அது சரி, எல்லோருமே 'நவராத்திரியில் ஒளிவிளக்கு' ஏற்றிவிட முடியுமா?. ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் கணவருக்கு வேண்டுமானால் முடியலாம். ஆனானப்பட்ட 'ரா..., ரா...,'க்களே சறுக்கிவிட்டனரே (ராஜபார்வை, ராகவேந்திரர்) .
'காவியத்தின் தலைவன் ராமனடி' பாடல் கேட்க இனிமைதான். காட்சி நீங்கள் சொன்னதுபோல 'சப்'. உங்களுடைய இன்றைய ஸ்பெஷல்கள் ஒன்றையொன்று மிஞ்சிக்கொண்டிருந்தபோது கண்பட்டுவிட்டது போலும். இப்போது சீதாவால் திருஷ்டி கழிந்தது...