இன்றைய நீயா நானா எப்படி இருக்கும் என்பதை முரளி சாரின் முன்னோட்டத்தை வைத்து ஓரளவு யூகித்திருந்தாலும் , அதையும் மீறி ஏமாற்றத்தையே கொடுத்தது . இதை விட திட்டமிட்டு சிறப்பாக செய்திருக்க முடியும் .. கடைசியில் திருச்சி சிவா சற்று ஆறுதல் படுத்தினார்.
Printable View
இன்றைய நீயா நானா எப்படி இருக்கும் என்பதை முரளி சாரின் முன்னோட்டத்தை வைத்து ஓரளவு யூகித்திருந்தாலும் , அதையும் மீறி ஏமாற்றத்தையே கொடுத்தது . இதை விட திட்டமிட்டு சிறப்பாக செய்திருக்க முடியும் .. கடைசியில் திருச்சி சிவா சற்று ஆறுதல் படுத்தினார்.
சரஸ்வதி சபதம் !
வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :
http://i501.photobucket.com/albums/e...ps21608c6b.jpg
சரஸ்வதி சபதம் !
வெளியான தேதி : செப்டம்பர் 3 1966 :
http://i501.photobucket.com/albums/e...ps0f1bb4c2.jpg
5-09-69 - நடிகர் திலகம் மூன்று வேடங்களில் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி OSCAR விருது இந்திய சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் தெய்வ மகன் வெளிவந்தது !
மற்றவர்கள் பார்த்து வயிறு எரியும் வண்ணம் 1969 இல் படு ஸ்லிம்மாக மிக மிக இளமை பொலிவுடன் வலம் வந்த நடிகர் திலகம்.
http://i501.photobucket.com/albums/e...psb38803dc.jpg
இன்றைய விஜய் டி.வி. நடிகர் திலகம் ஸ்பெஷல் நீயா நானா ஒரு பார்வையாளன் என்ற முறையில் பார்த்தால் நிச்சயம் பாராட்டத் தக்கதாய் இருந்தது. நாங்களும் அன்று ஏமாற்றமாக உணர்ந்தது வாஸ்தவம் தான். ஆனால் ஒரு பார்வையாளனாக சரியான முறையில் இந்நிகழ்ச்சி இன்று அமைந்திருந்தது. குறிப்பாக இயக்குநர் சார்லஸ் அவர்களுக்கு முழு பாராட்டும் சேர வேண்டும். We have to rediscover நடிகர் திலகம் என்று அவர் கூறிய போதும் பேராசிரியர் ராமசாமி ஸ்லானிஸ்லாவ்ஸ்கியைப் பற்றிப் பேசும் போதும் நான் கோபாலை பெரிதும் மிஸ் பண்ணி விட்டோம், இந்நிகழ்ச்சியில் அவர் இல்லாமலே போய் விட்டாரே என உணர்ந்தேன். முரளி சாரிடமும் சொன்னேன். அதுவும் குறிப்பாக நாம் தொடங்கிய Sivaji School of Acting என்ற அதே சொற்றொடரை கோபிநாத் கூறிய போது ஒரு கணம் நினைத்தேன், நம் மய்யம் திரியிலிருந்து இதை எடுத்திருப்பார்களோ என்று கூட...
அந்த வகையில் பார்த்தால் இந்நிகழ்ச்சி முழு அளவில் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் சரியான கோணத்தில் மக்களிடம் நடிகர் திலகத்தைக் கொண்டு சென்றுள்ளது எனத் தான் நான் நினைக்கிறேன். அந்த பெண் ரசிகர்கள் இருவரும் இந்த ஒட்டு மொத்த சிவாஜி ரசிக சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இன்று என் கண் முன் காட்சியளித்தனர். எந்த அளவிற்கு நடிகர் திலகம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்வதற்கு இது சரியான அளவுகோலாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.
நம்மைப் போன்றவர்களின் யானைப் பசிக்கு எவ்வளவு கிடைத்தாலும் அது சோளப் பொறிதான். ஆனால் நடிகர் திலகம் என்ற ஆளுமையைப் பற்றிக் கூறிய வரையில் இந்நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக SIVAJI GANESAN SCHOOL OF ACTING, அவருடைய நடிப்பை மிகை நடிப்பு எனக்கூறுவோருக்கு வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் ஒரு அன்பர் கொடுத்த சவுக்கடி இவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழுக்கு விஜய் டி.வி. அளித்த நல்ல Tribute எனவே நான் உணர்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் உலக அளவில் இன்றைய தலைமுறையினரிடையே நடிகர் திலகத்தின் நடிப்பைத் தாண்டி அவருடைய ஆளுமை, அவருக்கு இருந்த இருக்கும் இருக்கப் போகும் ரசிகர்களின் உணர்வு போன்றவற்றிற்கு ஒரு சிவாஜி ரசிகன் என்கிற முறையில் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.
நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் பணிவன்புடன் கூடிய வணக்கங்கள்..!!
http://i1094.photobucket.com/albums/...a789248335.jpg
இந்த எளியவனுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை நல்கிய நல்லிதயங்கள் கனடா சிவா சார், அன்புச்சகோதரர் ராகவேந்திரர், சித்தூர் வாசுதேவன் சார், மதுரை சந்திரசேகர் சார், சிவாஜி பேரவை சந்திரசேகரன் சார், RKS சார், கோபு சார், திருச்சி ராமச்சந்திரன் சார், ஜேயார் சார் ஆகியோருக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!!
http://i1094.photobucket.com/albums/...e2bc92770a.jpg
கைபேசி மூலம் கனிவான வாழ்த்துக்களை வழங்கிய அம்பத்தூர் சுப்பிரமணியன் சார், திருச்சி அண்ணாதுரை சார், நாகர்கோவில் பாலகிருஷ்ணன் சார், பொள்ளாச்சி சுவாமிதுரைவேலு சார், டெல்லி சிவநாத் சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு சார், அருமைச்சகோதரர் ரசிகவேந்தர், ஆருயிர்ச்சகோதரர் திறனாய்வுத் திலகம் முரளி, அருமைச்சகோதரர் சீனிவாசன், பாசமிகு பார்த்தசாரதி சார் ஆகியோருக்கும் எனது பிரத்தியேக நன்றிகள்..!!
பேரன்புடன்,
பம்மலார்.
நான் வாழவைப்பேன்(1979) படப்பாடலையும், நாம் மூவர்(1966) படப்பாடலையும் பிரத்தியேக பிறந்த நாள் பரிசுகளாக வழங்கிய அன்புள்ளங்கள் சித்தூர் வாசுதேவன் அவர்களுக்கும், rks அவர்களுக்கும் எனது சிரந்தாழ்த்திய நன்றிகள்..!!
பாசத்துடன்,
பம்மலார்.
பம்மலார் அவர்களுக்கு மேலும் நூறாண்டு சிறப்பான வாழ்வு காண வாழ்த்துக்கள். ஆசிகள்.
இவர்தான் மிக சிறந்த சிவாஜி ரசிகர் என்று உணர்ந்தோ ,என்னவோ ,விஜய் டீவீ ,அவர் பிறந்த நாளன்று ,நீயா நானா ஒலி பரப்பியது வெகு பொருத்தம்.
ஒரு தேர்ந்த சிவாஜி பக்தன் என்ற விதத்தில் ஏமாற்றம் அளித்தாலும், ஒரு சராசரி பார்வையாளன் என்ற விதத்தில் பார்த்தால், இந்த நிகழ்ச்சி ,சிவாஜியின் சில சிறப்புகளையாவது ,உணர்வு பூர்வமாக உணர்த்த கூடியதாகவே அமைந்திருந்தது. வாழ்த்துக்கள்.
ராகவேந்தர் சார் ,பிரெஞ்சு தாடி இல்லாமல் ,தங்களிடம் ஏதோ குறைந்தது போல இருந்தது. கிருஷ்ணாவும் ,நீங்களும் சகோதரர்கள் போலவே
தோற்றமளித்தீர்கள்.
ஏனோ, சிவாஜியை பற்றி குறிப்பிடும் போது Stanislavsky பற்றி மட்டுமே பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள். அவர் கிட்டத்தட்ட இது போல 10 குறிப்பிடத்தக்க பள்ளிகளின் மொத்த கலவை. என்னை மிஸ் பண்ணியதாக குறிப்பிட்ட ரகவேநதரன் அவர்களுக்கு நன்றி. நானும்தான் மிஸ் பண்ணி விட்டேன்.சில நேரம் எல்லாவற்றையும் உதறி போதும் என்று ஊர் வந்து விடலாமா என்று தோன்றுகிறது.
அடிகளாரே, அகம் குளிர்ந்த நன்றிகள்..!!