http://i66.tinypic.com/2hztqvt.jpg
http://i66.tinypic.com/2je75hu.jpg
http://i65.tinypic.com/208k9ch.jpg
http://i66.tinypic.com/r0xx5g.jpg
Printable View
கடந்த ஞாயிறு (14/08/2016) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் , சென்னை ராஜா
அண்ணாமலை மன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் , கண்டிராத, திரைப்படங்களில்
மட்டுமே பார்த்து ரசித்த , இளைய தலைமுறையின் பக்தர் திரு. சத்யா அவர்கள்
ஏற்பாடு செய்திருந்த அற்புத நிகழ்ச்சி.
நிகழ்ச்சிக்கு முன்பு, எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் உள்ள மார்பு அளவு சிலைக்கு , பன்னீர் தெளித்து , மாலை அணிவித்து, வணங்கிய பின் ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.சமாதியில் பூஜைகள், ஆராதனைகள், மற்றும் ஆரத்தி எடுத்த பின்பு , அங்குள்ள பக்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார் .அவருடன் மதுரை பக்தர் திரு. எஸ். குமார் அவர்களும் உடன் இருந்து கலந்து கொண்டார்.
பிற்பகல் , ராஜா அண்ணாமலை மன்றத்தில் கவிஞர் திரு. முத்துலிங்கம்
அவர்கள் தலைமையில் குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சி துவங்கப்பட்டது .
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு எச் வி. ஹண்டே அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆரம்பத்தில், பரத நாட்டியம் , மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பாடலுக்கும், மாணவிகள் நடனமாடி
கைதட்டல்கள் பெற்றனர் , மாணவிகளுக்கும், ஆசிரியருக்கும், முன்னாள் அமைச்சர் திரு. ஹண்டே நினைவு பரிசுகள் வழங்கினார் .
பின்பு, மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் கவிஞர் முத்துலிங்கம், முன்னாள் அமைச்சர் ஹண்டே, இசை அமைப்பாளர்
லக்ஷ்மன் சுருதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மெய்க்காப்பாளர் திரு.
கே.பி.ராமகிருஷ்ணன் மகன் திரு. கோவிந்தராஜன், ஈ. பாஸ்கரன், திண்டுக்கல் மலரவன், திருப்பூர் ரவிச்சந்திரன், மதுரை எஸ். குமார், தமிழ் நேசன், மர்மயோகி மனோகர், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாட்சா, நெல்லை ஆறுமுகம், பெங்களூரு கா. நா. பழனி ஆகியோர் அழைக்கப்பட்டனர் .
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற தோழர்கள் பெருந்திரளாக வந்திருந்து கலந்து
கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
விழாவில் சிறப்பு அம்சமாக, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள் அடங்கிய வண்ண மலர் திரு. ஹண்டே அவர்கள் வெளியிட, திரு. கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார் .
முன்னதாக , வண்ண மலரில் அடங்கிய புகைப்படங்கள் பற்றிய வீடியோ தொகுப்பு மற்றும், திரு. சத்யா அவர்கள் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி, ஆராதனை ,பூஜைகள், சிலைக்கு மாலையிடுதல் , இனிப்பு வழங்குதல் ,
திரு. சத்யா அவர்களின் பேட்டி , ஆகியன அனைவருக்கும் காண்பதற்கு
ஒளிபரப்பு செய்யப்பட்டது .
நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக திரு. ஹண்டே, திரு. முத்துலிங்கம் , திரு லக்ஷ்மன் ஸ்ருதி ஆகியோர் பேசினார்கள்
விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ததாகவும், புரட்சி தலைவர் மீது பற்று வைத்து
வண்ண மலர் வெளியிட்டதற்காகவும் , திரு. சத்யாவுக்கு, திரு. லக்ஷ்மன் ஸ்ருதி
ஆளுயர மாலை அணிவித்து கௌரவித்தார்.
விழா முடிவில் , சிறப்பு விருந்தினர்களுக்கும்,அழைப்பாளர்களுக்கும் ,பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்..ஜி ஆர் பக்தர்கள் குழு வைத்த பேனர்
http://i66.tinypic.com/6sa06x.jpg
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே அவர்களை , கலைவேந்தன் பக்தர்கள் குழு தலைவர் திரு. பாஸ்கரன் வரவேற்கும் காட்சி.
http://i67.tinypic.com/jg2liw.jpg
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i67.tinypic.com/ivg5rn.jpg