என் இனிய நடிகர் திலக ரசிக நண்பர்களுக்கு
வலைகடலில் அழகாக நடிகர் திலகத்தின் புகழ் முத்துக்கள் கோர்த்திருப்பதை மன உவகையுடன் படித்து மகிழ்ந்து இருக்கும் இத்தணுண்டு ரசிகனான சின்னக் கண்ணனின் வணக்கங்கள் :)
எனவே.. மெளனம்...கலைகிறது...;)
முரளி சாருக்கும் ராகவேந்திரர் சாருக்கும் எனது வாழ்த்துக்கள்..
ம்ம் அறிவாளி - எனக்கு மிகவும் பிடித்த ந.தியின் படங்களில் ஒன்று.. இளமை கொப்பளிக்கும் நடிகர் திலகம், டபக்கென்று வாணலியில் பொரித்த பொன்னிற வ்டையை வென்னீரில் போட்டு எடுக்காமல் நேராகத் தயிரில் போட்டு ஊறிய தயிர்வடையைப் போன்று சற்றுப் பூசினாற்போன்ற உடலமைப்புடன் பானுமதி..ந.தியுடன் போட்டி போட்டு முடியாமல் நடிப்பிலும் படத்திலும் அழகாக அடங்கி நடித்திருப்பார்..பின் தங்கவேல் முத்துலட்சுமியின் அதான் தெரியுமே..ம்ம்பாலையா வேறு உண்டு என நினைக்கிறேன். நடிகர்தில்கம் வெகு அழகாக ஜம்மென்று நடித்திருப்பார்.
ரவியின் முன்னுரை ராண்டார்கையின் கட்டுரையினால் எனக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்தன.
எனில் எம்.எஸ்வி- ராமமூர்த்தி போல நமது ரவி-ராகுல் ராம் இடுகைகளைப் படிப்பதற்கு சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறேன்..
அன்புடன்..
சி.க
வாசக தோஷ சந்தவ்யஹ.