கார்த்திக் சார்,
ரொம்ப ரொம்ப ரசித்து சிரித்தேன். Only one our Karthik.
Printable View
டியர் கார்த்திக் சார்,
ஸாரி! சொல்ல மறந்து விட்டேன். தங்களது 'பூம்புகார்' பதிவான மாயவநாதன் இயற்றிய
'அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது'
பாடலைப் பற்றிய விவரப் பதிவு உண்மையிலேயே திரிக்கு ஒரு வரபிரசாதம். அருமையான பதிவு. பாடல் வரிகளின் மாற்றங்கள் கூட உங்கள் விரல்கள் நுனியில். அற்புத நினைவாற்றல். அதற்கு மேல் அதை அம்சமாக வழங்கும் தனிப்பட்ட திறன். சொல்ல வார்த்தைகள் எழவில்லை சார். என் மனம் கவர்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். மாயவநாதனுக்கு உண்மையான புகழாஞ்சலி.
ராஜேஷ் சார்,
அற்புதமான கட்டுரைகள் அபூர்வமான பாடலாசிரியர்களைப் பற்றி அதுவும் நுணுக்கமாக.
கவிஞர் மாயவநாதன், காமாட்சி இவர்களைப் பற்றி ஓரளவிற்குதான் தெரியும். அனால் தங்களுடைய இந்த பொன்னான் பதிவுகள் மூலம் மேலும் இந்த அருமையான கவிஞர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.
நிஜமாகவே நீங்கள் எல்லாம் இந்தத் திரியை எட்டா உயரத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். நன்றி ராஜேஷ் சார்.
டியர் ராகவேந்தர் சார்,
இடைக்காலப்பாடல்களை இங்கே அலசிக்கொண்டிருக்கும்போது இடையிடையே நீங்கள் அள்ளி வழங்கும் பழங்கால புதையல்களான அபூர்வ பாடல்கள் திரிக்கு அழகு சேர்ப்பதுடன் அவற்றை அறிந்திராத பலருக்கு அரிய பொக்கிஷங்களாகவும் திகழ்கின்றன.
மிக்க நன்றி சார்.
கோபால்,
சீர்காழியார் பாடல்களில் 'பாட்டோடு ராகம் இங்கே' பாடலை நீங்கள் விட்டிருந்தால் உங்களை ஒரு வழி பண்ணியிருப்பேன். தப்பித்தீர்கள்.
இன்னொன்று
'பூவா தலையா' பாடலை ஜெய் மேல் இருக்கும் வஞ்சத்தால் மறைத்திருக்கிறீர்கள். கேட்டால் பிடிக்காது என்று கோயபல்ஸாக மாறுவீர்கள். ஜனரஞ்சகப் பாடல் என்றாலும் சௌந்தரராஜனும், சீர்காழியும் பின்னி இருப்பார்கள்.
அதற்கு மேல் எம்.எஸ்.வி. மேற்கத்திய இசைக் கருவிகளோடு விளையாடி இருப்பார்.
நடுவில் வரும் அந்த கோரஸ் அப்படியே கோலாகலமாக நம்மை கோலோச்சும்.
அந்த 'மாப்பிள்ளை முறுக்கு'.... எப்படி மறக்க இயலும்?
ராகவேந்திரன் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
இந்தப் பாடலின் ஆரம்ப இசை இடையிசை, கோரஸ் இவற்றை தனியே பிரித்து இங்கே தரவேற்றி அளிக்க முடியுமா? ப்ளீஸ்.
இன்னொன்று 'மனித தெய்வம்' நடித்த படத்தில் சீர்காழி சீர்மிகு அழகில் பாடும்
'ஆறு கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ
அழகிய தா........மரை மலர்களிலே' ('தா' வுக்கு ஒரு இன்ப இழுப்பு. நமக்கு எவ்வளவு பெரிய இழப்பு!)
சூப்பரோ சூப்பர்.
உடனே தலைவரே என்று புராணம் எழுத ஆரம்பிப்பீர்களே!
மாலை நேர மகிழ்ச்சி வேண்டுமா? இதோ!
https://www.youtube.com/watch?v=Aiox...yer_detailpage
rp ராஜநாயகம் மற்றும் எல்லோருக்கும் மூல மந்திரம். கவிஞர்கள்,பாடகர்கள்,இசையமைப்பாளர்கள்
அனைவரையும் பற்றி அத்தனை செய்திகளையும் திரை இசை அலைகளாக தொகுத்த என் நண்பர் வாமனன் அவர்களுக்கு நாம் எல்லோரும் தலை வணங்கியே தீர வேண்டும். அவர் இல்லையென்றால் ஒருவரை பற்றியும் ஒரு செய்தியும் உலகிற்கு வெளி வந்திருக்காது.
நண்பர் யுகேஷ் பாபு,
அண்ணன் தங்கை பாசத்திற்கு உதாரணமாக
ஃபூலோன்-கா...தாரோன்-கா ஸப்கா கஹ்னா' பாடலைத் தந்து அந்தப் பாடலுக்கான அர்த்தத்தையும் தந்து மகிழ்வித்துள்ளீர்கள்.
உங்கள் மேல் ஒரு செல்லக் கோபமும் வரச் செய்து விட்டீர்கள். இப்படத்தின் பாடல்களை திரும்பவும் வெறி பிடித்தாற் போன்று கேட்கச் செய்து விட்டீர்கள். ஏற்கனவே என் டெஸ்க்டாப்பில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் பாடல்கள்.
குறிப்பாக
'காஞ்சீரே காஞ்சீரே' மும்தாஜ், தேவ் கலக்கல். பைத்தியம் பிடிக்க வைத்த காலத்தால் அழியாத பாடல்.
நடிகர் திலகத்தின் 'பாச மலரை' நீங்கள் அனுபவித்து ரசித்து எழுதியதற்கு எனக்கு ஏற்பட்டது மகிழ்ச்சிப் பெருக்கு.
கிருஷ்ணா சார்,
நல்ல நீச்சல் குளத்தில் நீந்த வைக்க முற்பட்டீர்கள். அதற்குள்....???
இதுகெல்லாம் கவலைப் படாதீர்கள். ருத்ரைய்யா படத்தை நினைத்துக் கொள்ளுங்கள். 'ள்' ளுக்கு பதிலாக 'ர்' போட்டுக் கொள்ளுங்கள். ('ன்' போட்டுக் கொண்டாலும் சரி!):) தட்ஸ் ஆல். சிம்பிள். இதுவும் சொல் புத்திதான். இதையும் கேட்டு நடவுங்கள்.
எனக்கு மிக பிடித்த பாடல் ஆங்கிலத் தழுவலாக இருந்தாலும்
honey honey லவ் லவ் தித்திப்பது honey ஹோநே
honey honey லவ் லவ் புத்தம் புது honey honey
சுகம் தேடும் இரவு நேரம்
தாராபுரம் தாம்பரம்
தலையிலே கனகாம்பரம்
https://www.youtube.com/watch?v=XeQMB0_wH0s&feature=player_detailpage
இது வரை அலசிய ராகங்கள் .
சிந்து பைரவி - #178
சுபபந்துவராளி-#192
மாயா மாளவ கவுளை-#270
சாருகேசி- # 276
நட பைரவி-#368
பாகேஸ்வரி-#439
ஆபேரி/பீம்ப்ளாஸ் -#570.
கல்யாணி-#583.
மோகனம்-#675.
பிருந்தாவன சாரங்கா-#687.
பேஹாக்- #1011.
ரீதி கவுளை- #1048.
காபி/பிலூ- #1052.
கீரவாணி- #1113.
சிம்மேந்திர மத்தியமம்-#1117.
ஷண்முக ப்ரியா- #1351.
ஆபோகி- #1166.
ஹம்சத்வனி - #1249.
தர்மாவதி/மதுவந்தி- #1322.
வகுளாபரணம் - 1323.
ஹமீர் கல்யாணி- # 1387.
ஹரி காம்போதி/காம்போதி/- #1411
'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் ஒன்று
இந்த படமே ஒரு ஜஸ்ட் ரிலாக்ஸ் படம்தான். எல்லா பாடல்களுமே ஜஸ்ட் ரிலாக்ஸ் பாடல்கள்தான். நான்கு பெண்களுக்கு ஒரே நேரத்தில் கல்யாணம் என்றால் அது சாதாரண கல்யாணமாக இருக்க முடியுமா? நிச்சயம் கலாட்டா கல்யாணமாகத்தானே இருக்க முடியும்?. (அப்பாடா படம் பேர் வந்தாச்சு). அதில் ஒரு கலாட்டா பாடல்.
பணக்காரன் வீட்டு பச்சைக்குழந்தையை கடத்தியாச்சு. ஆனால் அதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?. அதுவும் இரண்டு ஆண்களால்?. படாத பாடு படுகிறார்கள் இருவரும். அந்த குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் தங்கள் அவஸ்தையை சொல்லத்தான் இந்தப்பாட்டு. பாட்டு கதாநாயகனுக்கு மட்டும்தான். இந்த பாடல் முழுக்க கொஞ்சம் கூட சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதுதான் நடிகர்திலகத்தின் அசாதாரண திறமை. உடன் இருக்கும் நாகேஷ் கூட இதில் சறுக்கி விடுவார்.
பாடகர் திலகத்தின் குரலில்...
லு...லு..லு...ஆரி ஆரி ஆரி ஆரிரரோ
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கைமீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
உனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சும்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
திராவிட மன்மதன் மெலிந்து அழகோவியமாக திகழ்ந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. இப்பாடலில் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, சுருள் சுருளான சொந்த தலைமுடியில் சிம்பிளாக ஆனால் வெகு அழகாக இருப்பார். கையில் கைக்குழந்தை.
உடன் நாகேஷ் வழக்கம்போல கோமாளித்தனங்கள் செய்து கொண்டிருப்பார்.
மெல்லிசை மன்னர் வித்தியாசமான தாளக்கட்டில் அமைத்த, எப்போது பார்த்தாலும் மனம் ரிலாக்ஸாகும் பாடல். (வீடியோ ப்ளீஸ்)...