Originally Posted by
Yukesh Babu
தாம்பத்யம்....இது..தாம்பத்யம்...
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ..."பாரதியின் இந்த இரண்டு வரிகளை இரவல் வாங்கிக் கொண்டு மீதி சந்தங்களை இதன் பொருளுக்கு முழு நீதி வழங்கி இருக்கிறார் கவியரசர் .இசையமைத்திருப்பவர் திரை இசைத் திலகம்..பாடலுக்கு உடல் நடிகர் திலகம்,பத்மினி அம்மா...உயிர் டி .எம்.எஸ்.......ஏற்ற இறக்கங்களுடன் பாடலை ஒரு இறவாப் பாடலாக்கி இருப்பார்.நடிகர் திலகமும்,பப்பிம்மாவும் வாழ்ந்திருப்பார்கள்.ஒரு ஆங்கிலேயக் கம்பெனியில் தலைமை அதிகாரியாக இருந்து பிரஸ்டிஜ் பத்மநாபன் என்று வலம் வரும் கம்பீரம்....ரிட்டைர்மேன்ட்டுக்குப் பிறகு சுருங்கி தன் நிலை தடுமாறி மனைவியிடம் குமுறும் குழந்தையாய்...குழந்தையை தேற்றி வாரி அணைக்கும் தாயாய் மனைவி ......காட்சி மனசை அரிக்கும் என்றால் பாடல் நெஞ்சைப் பிளக்கும்...பிள்ளைகள் மதிப்பதில்லை,மருமகள் சரியில்லை,மகளுக்குத் திருமணம் செய்யவில்லை...பாரம் நெஞ்சை அழுத்த ஒரு ஈசிச்சேரில் நடிகர் திலகம்..காலடியில் சாதாரண தேவேந்திரா மடிசார் புடவையிலும்,எளிமையில் அழகு மயிலென பப்பிம்மா...காட்சியை ரவி வர்மா பார்த்திருந்தால் சித்திரமாய்த் தீட்டி இருப்பார்...பப்பிம்மா கண்களில் குளமென கண்ணீர்...பாடல் பிறக்கிறது...""உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ?"'உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்வு ஒளிமயமானதடி ..பொன்னை மணந்ததால் சபையில் புகழும் வளர்ந்ததடி 'அவர்களுக்குள் ஒரு ப்ளாஷ் பேக் ......அவர்கள் திருமணம்....அம்மாஞ்சி அய்யராத்து பைய்யன் நடிகர் திலகத்தின் பஞ்சகச்சமும் நெத்தியில் வீபூதியும்....அழகு....மடிசார் புடவை,நெத்தியில் பட்டம்,சுட்டி,ஜடை சிங்காரம்,குஞ்சலம்,கொள்ளைப் பூ,கை கொள்ளாம வளையல்கள்........அந்த எடுப்பான மூக்கில் முத்துந்தளுக்கு,பேசரி........இந்த அழகைச் சொல்ல இதற்கு மேல் வார்த்தை ஏதும் இல்லை.....அவளைக் கரம் பிடித்த நாள் முதல் அவருக்கு ஏறு முகம்...பொன்னை மணந்ததால்....இங்கே சொல்ல வந்திருப்பது அவளுடைய தங்கமான குணம் பற்றி....அவளால் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி அந்தஸ்து...காலம் நகர்கிறது...பிள்ளைகள் ..பல சுமைகள்.."கால சுமைதாங்கி போல வாழ்வில் எனைத் தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுதடி..."'ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன ?வேர் என நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்."....காலச்சுமையில் நான் ஓய்ந்து சாயும் பொழுதெல்லாம் என்னைத் தாங்கி என் கண்ணீரைத் துடைக்கும் பொழுது என் இன்னல்கள் துயரங்கள் தவிடு பொடியாகிறது....ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு நடிகர் திலகம்,அவர் முகம் பார்த்து விம்மும் பப்பிம்மா....சில்வுட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...அதுவே இது..பிள்ளைகள் ஆதரவு இல்லை..."முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும் ..பிள்ளைக் குலமடியோ என்னைப் பேதைமை செய்ததடி பேருக்குப் பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு என் தேவையை யாரறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்"...படுக்கை என்றதும் திருமண முதலிரவு நெஞ்சில் நிழலாடுகிறது...அதை வீழ்த்துகிறது நிகழ்காலம்...முள்ளில் படுக்கை..இமைகள் மூட மறுக்கின்றது....பேருக்குப் பிள்ளைகள் ....சொந்தம் என்று சொல்லிக் கொள்ள...ஆனால் அவர்களால் ஒரு பயனும் இல்லை...என் தேவைகளை உன்னையன்றி வேறு யார் உணர்வார்கள்...அந்த தெய்வம் தவிர?.....அவளை அவரின் காவல் தெய்வம் என்றே சொல்கிறார்....தாம்பத்யம்...இது....ஆஹா....வாழ்ந்திர ுக்கும் இந்த ஜோடியை காலம் உள்ளவரை தாம்பத்யம் உள்ளவரை யார் மறக்க முடியும்.....நெஞ்சில் என்றும் ஒரு ராகமாய்....