http://i66.tinypic.com/zquk2.jpg
Printable View
மேகலா தியேட்டர் அருகில்
http://i65.tinypic.com/30hn6th.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் பட தலைப்புகளும் - நிதர்சனமான நிகழ்வுகளும் .
மதுரை வீரன் ----------- மக்கள் உள்ளங்களில் இன்றும் நிலைத்துவிட்டார் எம்ஜிஆர் .
நாடோடி மன்னன் - 1958ல் பிரகடனம் . 1967ல் அண்ணாவை அமரவைத்தார் .1977ல் தானே அமர்ந்தார் .
மன்னாதிமன்னன் - 1977-1987 நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர் .
நல்லவன் வாழ்வான் - அண்ணாவின் உண்மை தம்பியாக வாழ்ந்தவர் எம்ஜிஆர்
தர்மம் தலைகாக்கும் - 1959 / 1967 /1984 மூன்று முறை காப்பாற்றியது
காஞ்சித்தலைவன் - உயிர் வாழ்ந்தவரை மறக்காத மாபெரும் தலைவர் எம்ஜிஆர்
வேட்டைக்காரன் - காமராஜரே பயந்து போனார் . பந்துலுவும் எம்ஜிஆரின் வெற்றியை உணர்ந்தார்
எங்க வீட்டுப்பிள்ளை - உலகமே வியந்து கொண்டாடியது .
ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவின் அற்புத படைப்பு .
நான் ஆணையிட்டால் சொன்னார் . செய்தார் .எம்ஜிஆர்
கலங்கரை விளக்கம் மக்களுக்கு ...ரசிகர்களுக்கு
தனிப்பிறவி - உண்மை
முகராசி திமுகவை ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர்
ஆசைமுகம் எங்கள் எம்ஜிஆர் மட்டுமே
நம்நாடு எந்த காலத்திற்கும் பொருத்தமான எம்ஜிஆர் படம்
தலைவன் 1972ல் உருவெடுத்தார் .
நல்ல நேரம் எம்ஜிஆரின் புகழ் நிரந்தரமானது
நான் ஏன் பிறந்தேன் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு வேதநூல்
உரிமைக்குரல் 1972ல் எழுப்பினார் .எதிரிகளை பந்தாடினார்
நினைத்ததை முடிப்பவன் - நிகழ்த்தி காட்டினார்
நாளைநாமதே - நம்பிக்கை ஊட்டினார்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - தீய சக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டார் ....... Thanks wa.,.........
மக்கள் திலகம் எம்ஜிஆர் 102 பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படும் இந்த தருணத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நாம் வைக்கும் முக்கிய கோரிக்கைகள் .
1. எம்ஜிஆர் திரைப்படங்களின் நெகட்டிவ் பற்றிய உண்மை தகவல்கள் தெரியவில்லை .நெகடிவ் கள் பாதுகாக்கவேண்டும்
2. எம்ஜிஆர் படங்களை திரையிட வணிக வளாகத்தில் உள்ள அரங்குகள் முன் வர வேண்டும்
3. எம்ஜிஆர் படங்களுக்கு வரி சலுகை பெற்று தரவேண்டும்
4. எம்ஜிஆர் படத்தை விளம்பரத்தில் புறக்கணிக்கும் அதிமுக தலைமைக்கும் அரசுக்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்
5. எம்ஜிஆர் பெயரை சொல்லி ஏமாற்றும் நபர்களை கண்டறியப்படவேண்டும் ...... Thanks wa.,
எம்.ஜி.ஆர். நடித்த “என் அண்ணன்” படத்தை இயக்கிய ப.நீலகண்டன், சோவிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தார்.
பேச்சுவாக்கில் “உங்களுடைய துக்ளக் பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று கேட்டார் நீலகண்டன்.
அதற்கு சோவும், “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...” என்றார்.
நீலகண்டன் தொடர்ந்து கேட்டார், “கலைமகள் பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று.
[ கலைமகள் ஒரு தரமான இதழ் ]
சோவும், “அது சுமாராகத்தான் போகிறது” என்று சொல்ல.... நீலகண்டன் நீண்ட பெருமூச்சுடன் கேட்டாராம்...“துக்ளக்கைப் போன்ற பத்திரிகையெல்லாம் நல்லாப் போகுது...! ஆனால் தரமான கலைமகள் போன்ற பத்திரிகையெல்லாம் சுமாராகத்தான் போகுது... இது எப்படி..?” என்று.
பட்டென்று சோ சொன்னபதில்: “ பாருங்க சார்... எத்தனையோ நல்ல படங்கள் வந்து ஓடாமல் போகுது! ஆனா ‘என் அண்ணன்' எப்படி நல்லா ஓடுது பாருங்க! அதைப் போலத்தான்னு வச்சுக்குங்களேன்.”
அதிர்ந்து போனாராம் நீலகண்டன்...ஏனென்றால், சோ இப்படிச் சொல்லும்போது அருகில் இருந்தவர் யார் தெரியுமா..?
எம்.ஜி.ஆர்.!
பக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். என்ன செய்தார்..?
விலா நோக விழுந்து விழுந்து சிரித்தாராம்....
சிரித்துக் கொண்டே நீலகண்டனிடம் எம்.ஜி.ஆர். கேட்டாராம்..
“சோ கிட்ட ஏன் வாயைக் கொடுக்கறீங்க..?”
என்ன ஒரு தைரியம் சோவுக்கு!
அதை எளிதாக ஏற்றுக் கொள்ள என்ன ஒரு தெளிவான பக்குவம் எம்.ஜி.ஆருக்கு!... அதுதான் mgr சிறப்பான மாண்பு... பக்குவம்...
திரையுலக வசூல் சக்ரவர்த்தி "நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் தற்போது வேலூர்- குறள் dts அரங்கில் வெற்றி நடை போடுகிறார்... Courtesy : wa., Friends...
தமிழ் திரைப்பட சூப்பர் ஸ்டார்
1 எம்ஜிஆர்
2.ரஜினிகாந்த்
3 .விஜய்
4.அஜித்
5.கமல்ஹாசன். எப்போதும் முதல் இடம் புரட்சி தலைவர் அவர்களுக்கே...👍👌
முதல் இடம் புரட்சி தலைவருக்கே💐👌👍.... Thanks wa.,
.மகாபாரத கர்ணனுக்குப் பின் மனித உருவில் கொடை வள்ளல் எம்.ஜி.ஆர்.!
தமிழக கவர்னர் புகழாரம்.
ஒரு கல்லூரி விழாவில் பேசிய போது தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி...
"ஏழை...எளிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலமாகும். அவர் 1977 முதல் 1987 வரை தமிழக முதல்வராக இருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, நாட்டுக்கே வழிகாட்டியாய் விளங்கினார். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தால் பள்ளிகளில் இடை நின்றல் குறைந்தது.
கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து மத்திய மாநில உறவுகள் சீராக அமைய முக்கிய பங்காற்றினார். அவரது ஆட்சியில் மற்ற மாநிலங்களுடன் நல்லுறவு இருந்ததால் கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு கிடைக்கப் பெற்றது.
அரசியலில் யாரும் பெற்றிராத வகையில், முதல்வராக இருந்த போது மக்கள் கொண்டிருந்த ஆதரவால் அவரை யாரும் தோற்கடிக்க முடியவில்லை.
அவர் ஆட்சி காலத்தில் தான் கொடைக்கானலில் பெண்களுக்கு என பல்கலைக்கழகம், மகளீர் மேம்பாட்டுக் கழகமும் தொடங்கப்பட்டது. ராமாபுரம் தோட்டத்தில் காது கேளாதோர் மேல் நிலைப் பள்ளி, சத்யா ஸ்டூடியோவில் தொடங்கிய மகளீர் கல்லூரி ஆகியவை இன்றும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
மகாபாரதத்தில் கர்ணன் கொடையாளராக இருந்ததைப் போல் நிஜ வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் வள்ளலாக இருந்தார். இந்தியா..சீனா யுத்தத்தின் போது ரூ 50 ஆயிரம் நிதி வழங்கி தனது தேசப்பற்றை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். அவர் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதின் மூலம் தமிழகத்தில் உயர்கல்வியில் புரட்சியை உருவாக்கினார்.
நண்பர்களே! மனிதருள் மாணிக்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் இன்றைக்கும் அவர் ஆட்சியில் செய்த சாதனைக்கு புகழாரம் சூட்டப்படுகிறதென்றால் அவரை நாம் பின்தொடர்வதில் நமக்கும் பெருமை சேர்க்கும்.! மக்கள் திலகத்தை மனம் திறந்து பாராட்டி உள்ள மேதகு ஆளுனர் பன்வாரி லால் புரோஹித் அவர்களை மனதார வாழ்த்திடுவோம்.!...... Thanks wa.,
தமிழ் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாடவைத்தது எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம். ‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும். இந்தப் பாடல் காட்சியின் சில பகுதிகள் ஒகேனக்கலில் படமாக்கப்பட்டன. பாறைகள் நிறைந்த பகுதியில் பாய்ந்து வரும் தண்ணீரின் நடுவே எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பார். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும். லாங் ஷாட்டில் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரைச் சுற்றி சுமார் நூறடி தொலைவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
இதைவிட இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே? ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும். இது ஸ்டாக் ஷாட் போலிருக்கிறது, இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருப்பார். காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்.
தி இந்து ...... Thanks wa.,