I confirmed on jan 9...
Printable View
I confirmed on jan 9...
பாஜகவில் இணைகிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்
http://tamil.thehindu.com/multimedia...1_2249730h.jpg தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவுடன் கங்கை அமரன்| படம்: ஸ்ருதிசாகர் யமுனன்.
இளையராஜாவின் சகோதரரும் திரை இசையமைப்பாளருமான கங்கை அமரன் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் நாளை (சனிக்கிழமை) பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், கங்கை அமரன் பாஜகவில் இணையவிருப்பதாகத் தெரிகிறது.
முன்னதாக, இன்று காலை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை அவர் சந்தித்தார். இதனால், அவர் பாஜகவில் இணையப்போவது உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கப்பல் படத்தில் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்திய இயக்குநர் -தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
Read more at: http://tamil.oneindia.com/
So its I vs aambala for pongal...really have to appreciate the guts of vishal....kakki sattai and darling might join pongal race...komban expected on jan 30...now big question is will str's vaalu gets release on feb 4 as announced..?
ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவி? - குஷியில் ஆந்திரா ரசிகர்கள்
சிரஞ்சீவி இதுவரை 149 படங்கள் நடித்துவிட்டார். 150 -வது படம் மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று காத்திருந்து கதை கேட்டார். கதை பிடித்தால் கதாசிரியருக்கு ஒரு கோடி சம்பளம் என்றும் அறிவித்தார்.
ஆனால், இதுவரை அவரது மனதுக்குப் பிடித்த கதையை யாரும் கூறவில்லை. அதனால் கடந்த பிறந்தநாளின் போது 150 -வது படத்தை அறிவிப்பேன் என்றவர், இன்றுவரை வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் ஷங்கர் சிரஞ்சீவியை இயக்கப் போவதாக ஆந்திராவில் வதந்தி கிளம்பியுள்ளது. ஐ வெளியானதும் இருவரும் சந்திக்கயிருப்பதாகவும் தகவல்.
உறுதி செய்யப்படாத இந்தத் தகவலுக்கே உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறது தெலுங்கு சினிமா.
Thamizh nattai nOkki vandha puyal, Andhra pakkam dhisai maarugiradhu..
C2H திட்டம் தீடீர் ஒத்திவைப்பு - காரணம் என்ன?
புதிதாக ரிலீஸ் ஆகும் படங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் அனுமதியுடன் 5.1. டி.வி.டிக்களாக வீடுகளில் சென்று சேர்க்கும் நோக்கமாக ஆரம்பிக்கப்பட்ட திட்டமே சி2எச். இந்த திட்டம் பொங்கல் தினத்தில் துவங்கப்பட இருந்ததாக அறிவித்திருந்தனர்.
தற்போது, சி2எச் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனரும், இயக்குநருமான சேரன் அறிவித்திருக்கிறார்.சி2எச் “திரைப்படத்துறையின் நலன் கருதி, சிறு தயாரிப்பாளர்களின் நலன் கருதி திரைப்படங்களை நல்ல நோக்கத்தோடு மக்களிடம் கொண்டு சேர்க்க தொடங்கப்பட்டதே சி2எச் நிறுவனம்.
http://cinema.vikatan.com/uploaded/C...ome-Piracy.jpg
திரையரங்கங்கள் அல்லாமல் பிற வழிகளிலும் திரைத் துறைக்கும் வரும் வருமானத்தை ஒன்று சேர்த்து தயாரிப்பாளர்கள் நலம் பெறும் எண்ணத்தோடு கடந்த ஒரு வருட காலமாக உழைத்து, தமிழகம் முழுவதும் 156 வினியோகஸ்தர்களையும், 5000 முகவர்களையும் உருவாக்கியுள்ளோம்.
இவர்களின் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் தலை விரித்தாடும் ‘பைரஸி மார்க்கெட்’ திருட்டு டிவிடி வியாபாரத்தைத் தடுக்க திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை, வெளியாகும் அதே நாளில் ரூ.50 விலையில் மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்து தயாரிப்பாளர்களின் முதலீட்டை மீட்டெடுக்க வழி செய்வது தான் இந்நிறுவனத்தின் நோக்கம்.
அதே நேரம் ஆரம்பத்தில் இருந்து திரையரங்கங்களிலும் கண்டிப்பாக சி2எச் ன் திரைப்படங்கள் வெளியிடப்படும் என சொல்லி வந்தோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டோம். தற்போது திரைப்படத்துறையின் சூழலை புரிந்து கொண்ட திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பேசி முடிவெடுக்க முன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை ஏற்று, அனைவரது நன்மைகளையும் கருதி அவர்களோடு பேசி முடிவெடுத்த பின் சி2எச் தங்களின் முதல் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
ஜனவரி 15ம் தேதி வெளியிடுவதாக இருந்த முயற்சியை ஒத்தி வைத்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முடிவுக்குப் பின் தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும், மற்ற முறைகளிலும் வெளியிடலாம் என சி2எச் நிறுவனம் முடிவு செய்திருப்பதால், தற்போதைய ஜனவரி 15 வெளியீடு என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம்,” என சேரன் தெரிவித்துள்ளார்
ஆம்பள 'வெற்றி' படக்குழு கூட்டத்தில் விஷால், சுந்தர்.சி உருக்கம் - tamil hindu
இனிமேல் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு நண்பர்களை அழைக்கப் போவதில்லை என்று விஷால் கூறியுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, பிரபு, சதீஷ், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஆம்பள'. இப்படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.
இச்சந்திப்பில் விஷால் பேசும்போது, "2012 பொங்கல் வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் 'மதகஜராஜா'. அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்ற கோபம் எனக்குள் இருந்தது. ஆகையால் மீண்டும் சுந்தர்.சி உடன் இணையும் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அந்தப் படம் வராதது ஒரு நடிகரா எனக்கு மிகப்பெரிய வருத்தம். இனி மேலாவது இந்த வெற்றியைப் பார்த்து அந்த படத்தோட தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார்னா பரவாயில்லை என்று நினைக்கிறேன். இப்போது மட்டுமல்ல, இன்னும் பத்து வருடங்கள் கழித்து வெளிவந்தாலும் ‘மதகஜராஜா’ வெற்றிப் படமாக அமையும் என்பதி சந்தேகமில்லை.
பொங்கல் வெளியீடு என்று முடிவு செய்தவுடன், வேறு என்ன படங்கள் வெளியாகின்றன என்பது எனக்கு தெரியாது. 'ஆம்பள' இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா "நான் எவனா இருந்தாலும் வெட்டுவேன்" என்று சொன்னதாக பேசினார். அவ்வாறு நான் கூறவில்லை. அது அவருடைய கற்பனைப் பேச்சு.
'நான் சிகப்பு மனிதன்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷ்ணு கூட "எனக்கு லட்சுமி மேனனுக்கும் காதல்" என்று பேசினார். இனிமேல் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா வைக்கக் கூடாது என்று முடிவு பண்ணியிருக்கிறேன். அவ்வாறு வைத்தாலும் நண்பர்களைக் கூப்பிடக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய சுந்தர். சி, "80-களில் வெளியான கமர்சியல் படங்களைப் போலதான் ஆம்பள படம் இருக்கும் என்று சொல்லித் தொடங்கினோம். அது அப்படித்தான் தயாரானது. அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஒரு வருத்தம் உள்ளது. மெட்ராஸில் இருக்கும் இரண்டு மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் வசூலை வைத்து தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலைக் கணிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை. மொத்த வியாபாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து இந்த வருடத்தின் இறுதியில், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாணியில் விஷாலோடு ஒரு படத்தைத் துவங்கவுள்ளேன். அது இன்னும் பிரம்மாண்டமாக, பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு தயாராகும். ஆம்பள படத்தின் வெற்றி, அந்தப் படத்தை இயக்கும் தைரியத்தைத் தந்துள்ளது. மேலும் ஹிப் ஹாப் தமிழன் ஆதி, எனது பேனரில் தயாராகும் படத்துக்கு இசையமைத்து, நாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார்" என்றார்
ஐம்பது வயதிலும் ஷார்ட்ஸ் அணிவேன் - கலாச்சார காவலர்களை விளாசிய கனிகா
நடிகை கனிகா சமீபத்தில் தனது கணவர், குழந்தையுடன் வெளிநாடுகளுக்கு டூர் சென்றார். அப்போது குட்டையான ஷார்ட்ஸ் அணிந்து அவர் கடலில் குளித்த புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கலாச்சார காவலர்கள் கனிகாவின் குட்டை ஷார்ட்ஸை காட்சிப் பொருளாக்கி கண்டனம் செய்யத் தொடங்கினர்.
அவர்களை விளாசி தள்ளியுள்ளார் கனிகா.
மலையாள சினிமாவில் கனிகா தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கண்ணியமான குடும்பப் பெண்ணாக மட்டுமே திரையில் அவரைப் பார்த்தவர்களுக்கு அவரது ஷார்ட்ஸ் அணிந்த புகைப்படங்கள் அலர்ஜியை தோற்றுவித்தன. உங்க வயசு என்னன்னு தெரியாம இப்படி ஷார்ட்ஸ் அணியலாமா என்று ஒரு கேள்வி. அதற்கு பதிலளித்த கனிகா, ஐம்பது வயதிலும் நான் ஷார்ட்ஸ் அணிவேன். நான் போனது கடற்கரைக்கு. அங்கு சேலை அணிந்தா செல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளார். இன்னொரு பெண், உங்களுக்கு ஒரு குழந்தை இருப்பது மறந்துவிட்டதா என்று கேட்டுள்ளார்.
கனிகாவுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
நான் ஷார்ட்ஷ் அணிவதால் குறைந்தபட்சம் அவனாவது குறுகிய மனம் கொண்டவனாக இல்லாமல் பெண்களை அவர்களின் வேல்யூவை வைத்து மதிக்கிறவனாக உடையை வைத்து மதிப்பிடாதவனாக வளர்வான் என பதிலடி தந்துள்ளார்.
பெண்களை உடைகளை வைத்து மதிப்பிடும் கலாச்சார காவலர்களுக்கு கனிகா போன்று விமர்சனத்துக்குள்ளாகிறவர்களே தக்க பதிலடி தரவேண்டும். அப்போதுதான் கலாச்சார வாட்ச்மேன்களுக்கு உறைக்கும்.
50 vayasula shorts POttaa yaaru kekka pOraanga...