கரஹர ப்ரியா.
மையலான ராகத்தை சமையல் கொண்டே விவரிக்கலாம்.நன்கு சர்க்கரை பாகு காய்ச்சி வையுங்கள். ஒரு கம்பி பதம். இதை வைத்து லட்டு,பூந்தி,மைசூர் பாகு,ஜாங்கிரி,பாதுஷா என்று பல பல item செய்து வெட்டலாம் இல்லையா ,அப்படி ஒரு சர்க்கரை பாகு இந்த ராகம்.
இதமான மெலடியுடன் இழையோடும் மெல்லிய சோக ரசம் கொண்ட கருணை சுரக்க வைக்கும் அதிசயம் இந்த ராகம்.
ஹரப்ரியா என்ற பெயர் பின்னால் திரிந்தது. ஹிந்துஸ்தானியில் காஃ பி என்ற பிரிவில் வரும் மேளகர்த்தா சம்பூர்ணமே. பல ஜன்ய உறவினர்கள் வச வசவென்று. உங்களுக்கு ஏற்கெனெவே சிலரை அறிமுக படுத்தி விட்டேன்.ஆபேரி,ஆபோகி,பிருந்தாவன சாரங்கா,காபி,ரீதி கௌளை ஆகியவர்களை உங்களுக்கு தெரியும்.
இந்த ராகம் versatile ,fluid and flexible என்ற வகையில் கற்பனை நீட்சியை தடையின்றி அனுமதிக்கும் நண்பன்.ஸ்வரங்களின் இடைவெளி மிக சீரானது.கமகம் (variation of pitch of notes )கொண்டு டோனை மேல் அழுத்தம்,கீழ் அழுத்தம்,ஊசலாட்டம்,திடீரென்று மேலெழுப்பும் உயர் பிட்ச் என்று இஷ்டத்துக்கு விளையாட அனுமதிக்கும் ராகம்.
ஒரு பாடல் டூயட் தான் .சிறு வயதில் எனக்கு மிக மிக பிடித்த இரட்டையர்களின் இசையில் டி.எம்.எஸ் சுசிலாவில் பாடல்.ரொம்ப அழகான பாடல்.peppy ஆக இருக்கும்(recording கொஞ்சம் தேய்ந்தாற்போல ஒலிக்கும். ஆனால் archestration ஆரம்பமே களை கட்டும்.)என்ன ஏமாற்றம் .படம் பார்க்கும் போது மகாராஜன் உலகை ஆளவில்லை.இரவும் நிலவுமே வளர்ந்தது.நண்பன் குறிப்பிட்ட காரணம் தஞ்சை கோவிலில் படமாக்கியதால்,தமிழ் nativity வந்து,கைவிட பட்டது என்றான் .இன்னும் ஒரு ஓரத்தில் என் மூன்றாவது பிரிய ஜோடியுடன் இந்த பாடலை காணாமல் போனோமே என்று மனம் எங்கும்."மகாராஜன் உலகை ஆளலாம்"
கவிஞர் தான் பிரித்து ,ஆதரித்து, போஷித்த ஒரு இசையமைப்பாளரை குழந்தை என்றே எண்ணி போஷித்து,ஒரு தமிழ் மேதையை வஞ்சித்தார்.இந்த கேரள குழந்தையோ கவிஞர்தான் உண்மையில் குழந்தை என்று நிரூபித்து விட்டது. ஒரு போட்டியாளரை ,கவிஞருக்கு எதிரான நடிகருடன் சேர்த்து வளர்த்து கண்ணதாசன் வயிற்றில் அடிக்க பார்த்தது. கவிஞர் முதலில் சிணுங்கி ,பிணங்கினாலும் ,ஒரு பாடலை கேட்டு போட்டியாளரை அங்கீகரித்து தடவி கொடுத்தார்.
"மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் ".
அந்த நடிக மேதையின் 1976 க்கு பிந்திய படங்கள் பிரம்மாண்ட வெற்றிகளை பெற்று மேதைக்கு மகுடம் கொடுத்து கொண்டிருந்தாலும் ,உண்மையான கலை ரசிகர்கள் வருத்தத்தில் மிதந்தார்கள்.அந்த வாட்டம் போக்க நடிக இமயமும் ,அவரின் பரம ரசிகரான இயக்குன இமயமும் இணைந்து உரிய மரியாதை செய்தனர் உண்மை ரசிகர்களுக்கு. ஆனால் மத்திய அரசோ ,ராஜீவின் நண்பரின் விஷ பாம்பு குணம் கொண்ட வஞ்சக மனைவி எம்.பீ விவகாரத்தில் கணவரின் தோல்வியை தாங்காமல் கழுத்தறுக்க ,தனக்கு இந்த கலைஞனை கவுரவித்து ,அந்த பட்டத்துக்கு உரிய பட்டத்தை மறுத்து விட்டு ,தீரா பழியை தேடி கொண்டது.வேஷம் மாறியும் ,இந்த சாமிக்கு மகுடம் ஏறலை."பூங்காற்று திரும்புமா ,என் பாட்டை விரும்புமா".
என்னை கவர்ந்த பிற பாடல்கள்.
இளங்காற்று வீசுதே- பிதா மகன்.
பச்சை நிறமே பச்சை நிறமே-அலை பாயுதே.