http://i68.tinypic.com/263wpqs.jpg
Printable View
தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஒரு தாய் மக்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/34y61qc.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. அவர்கள் ஆற்றிய சிறப்புரை .
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னதாக திரு.வை.கோ. அவர்கள் ராமாவரம் தோட்டத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கும் , அண்ணா சாலையில் உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்துவிட்டு , பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்தியபின் , எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது சொன்னவை "
காலத்தால் அழியாத ,புகழ் பெற்று, கோடான கோடி தமிழ் மக்கள் நெஞ்சங்களில் குடியிருந்தும், கொலுவீற்றிக்கும் மனிதநேய சிகரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் கடமை ஆற்ற ம.தி.மு.க.. சார்பில் வந்துள்ளோம் .
தனக்கென எதையும் தேடி கொள்ளாமல், நாடி கொள்ளாமல் , இந்த தமிழ்நாட்டிற்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக மகத்தான சேவை புரிந்து சாதனை படைத்த மாமனிதர் எம்.ஜி.ஆர்.அவர்கள்..தந்தை பெரியார் நினைவு நாள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மறைந்த நாளில் அமைந்துள்ளது .தந்தை பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்பதை, அங்கீகரித்து, நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடி ஏற்பாடு செய்து மனமகிழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். எனவே, தமிழ் மண்ணில் , தமிழ் நாட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகழ், நீடித்து , நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
எள்ளளவும், தன்னலமின்றி, பொதுவாழ்வில் வாழ்ந்து , பத்தாண்டுகள் தமிழகத்தில் முதல்வராக இருந்து பேரறிஞர் அண்ணாவின் பெயரும், நினைவும் யுகா யுகாந்திரம் காலம் நிலைத்திருப்பதற்கு , அவரது மனதில் எண்ணியதை , பேரறிஞர் அண்ணாவை முன்னிறுத்தி வாழ்வாங்கு வாழ்ந்து செயல்பட்டதனால் அந்த மனித நேய மாணிக்கத்திற்கு புகழஞ்சலி செலுத்துகிறோம் .
காமராஜர் அரங்கில் சிறப்புரை ஆற்றும்போது :
நான் ராமாவரம் தோட்டம், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சதுக்கங்களுக்கு சென்று வந்ததனால் சற்று காலதாமதமாக வர நேரிட்டது .அதன் காரணமாக சில முக்கிய விருந்தினர்களை நேரில் வரவேற்க முடியாமல் போய்விட்டது . அதற்காக
நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் .
இந்த நிகழ்ச்சி எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி நடத்தப்படுகிறது .மேடையில் உள்ள பேனரில் ம.தி.மு.க. என்ற பெயரே இருக்காது. இந்த அரங்கிலும் , அரங்க வளாகத்திலும் என் புகைப்படம் கூட எங்குமே இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறேன் .ஆனால் என் கட்சி தோழர்கள், மாவட்ட செயலாளர்கள் சுமார் ஒரு மாத காலம் இந்த நிகழ்ச்சிக்காக ஓடியாடி உழைத்து இருக்கின்றனர் .அவர்களின் வற்புறுத்தலின் காரணமாக மேடையில் உள்ள பேனரில் என் பெயரை மட்டும் நீங்கள் காணலாம் . இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நடத்துகிற விழா . எம்.ஜி.ஆர். அவர்களை மட்டுமே முன் நிறுத்துகிற , அவர் புகழ் பாடுகின்ற விழா .
அறிவாசான் பெரியார் , நம்மை ஆளாக்கிய பெரியார் ,நம்மை மனிதனாக உலவவிட்ட பெரியார் .பெரியார் பற்றி பேசுவதற்கு , தகுதியோ, வயதோ எனக்கு இல்லை.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சொன்னது ,எனக்கு இரு குருநாதர்கள் தந்தவர் தந்தை பெரியார். ஒருவர் கலையுலகில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் , இன்னொருவர் அரசியலில் பேரறிஞர் அண்ணா ..1935/36 ம்
ஆண்டுகளில் கலைவாணர் , எம்.ஜி.ஆர். அவர்களிடம் , ராமச்சந்திரா , நீ மனிதனாக ,நல்லவனாக ,துணிச்சல்காரனாக இருக்க வேண்டுமானால் நான் தருகிற இந்த குடியரசு பத்திரிகையை படித்தாக வேண்டும் என்கிறார் . தந்தை பெரியார் அவர்கள் தனி மனிதரல்ல ,ஒரு சகாப்தம் , உலக வரலாற்றில்ஈடு இணையற்ற ஒரு தத்துவத்தின் சிகரம் , அப்படிப்பட்ட தந்தை பெரியார் , எனக்கு தலைவனாக அண்ணாவை உருவாக்கி தந்ததற்காக , பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்துவேன் என்று எம்.ஜி.ஆர். சொன்னார் .
அண்ணா ஆட்சிக்கு வந்ததும் பெரியாருக்கு காணிக்கை இந்த அரசு என்றார் .
இன்று நடப்பது அண்ணாவின் அரசு . பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை
சட்டமாக்குவோம் என்று உணர்வுபூர்வமாக சொன்னார் எம்.ஜி.ஆர். 1964 நவம்பரில் அறிஞர் அண்ணா எழுதுகிறார் .நமக்கும் ,எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் ஏற்பட்ட உறவு சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஏற்பட்டது அல்ல.சிலர் ஊக்குவித்தது அல்ல .பாச உணர்வுகளின் பிணைப்பால் ஏற்பட்ட உறவு . தி.மு.க. அவரை இழப்பதோ , தி.மு.க. வை அவர் துறப்பதோ நினைத்துக்கூட பார்க்க முடியாது .
எங்க வீட்டு பிள்ளை வெள்ளி விழாவின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா பேசுகிறார் . எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றிக்கு காரணங்களை சிலர் ஆராய்ச்சி செய்ய முயல்கிறார்கள் . அது முடியாது . மயிலின் அழகுக்கு தோகையின் நீல வண்ணமா ,பச்சை வண்ணமா , மஞ்சள் வண்ணமா,பொன்னிற வண்ணமா என்று எப்படி ஆராய முடியாதோ அது போலத்தான் இதுவும் . எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த துறையிலும் வெற்றிக்கொடி நாட்டுவார் .ஒரு கதாநாயகனாக , கதாசிரியராக , இயக்குனராக , இசை அமைப்பாளராக ,ஒளிப்பதிவாளராக ,சிறந்த தொழில்நுட்ப கலைஞனாக எந்த துறையிலும் ஜொலிப்பார் .ஏன் , அரசியல் துறைக்கு வந்தாலும் , அதிலும் நிகரற்ற வெற்றியை எம்.ஜி.ஆர். பதிவு செய்வார் என்று அறிஞர் அண்ணா சொன்னார் .
1972 அக்டொபர் 10ம் தேதி, என் தந்தையை புற்றுநோய் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு , நானும், சண்முகசுந்தரமும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வந்தோம் . நாவலர் நெடுஞ்செழியன் வெளியே வந்து சொன்னார் எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டோம் என்று. என் தலையில் இடி விழுந்தது போலிருந்தது .அந்த நேரத்தில் மூதறிஞர் ராஜாஜி சொன்னார் எம்.ஜி.ஆரை நீக்கியது அண்ணாவை தி.மு.க.வில் இருந்து நீக்கியதற்கு சமம் .
அர்ஜுனன் போல் நிற்கிறார் எம்.ஜி.ஆர். அணி திரண்டு வாருங்கள் ஆதரவிற்கு .
இதை சொல்ல காரணம் . ஒருசமயம் அண்ணா தொழுதூர் (விழுப்புரம் மாவட்டம் )அருகில் காரில் செல்கிறார். உடன் சி.வி.ராஜகோபால் விகடமாக பேசிக்கொண்டு வருபவர் பின் சீட்டில் உள்ளார் .விடிந்துவிட்டது .தேநீர் அருந்திவிட்டு , எங்களுக்கு தேநீர் வாங்கிக்கொண்டு வரும்படி டிரைவரை அனுப்புகிறார்கள்.
காரிலே தி.மு.க. கொடி பறக்கிறது .வேலைக்கு செல்லும் பெண்கள் தி.மு.க. கொடியை பார்த்துவிட்டு ,அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேடகிறார்கள் . அண்ணா இல்லை என்கிறார் .மீண்டும் கேடகிறார்கள் தி.மு.க.
கட்சியின் கார்தானே இது. காரிலுள்ள சி.வி.ராஜகோபால் கோபமடைகிறார் .
பெண்கள் சென்றதும், அண்ணாவிடம் ராஜகோபால் கேடகிறார் .என்ன அண்ணே
உங்களிடமே எம்.ஜி.ஆர். பற்றி கேட்க்கிறார்கள் . அண்ணா சொன்னார் .கோபம்
கொள்ளாதே ராஜகோபால், நமது கட்சியையம் , சின்னத்தையம், கொள்கைகளையம் திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்வதே எம்.ஜி.ஆர்.தான் ..நான் மனம் விட்டு சொல்கிறேன் ,நான் அரசியலுக்கு வந்து 53 ஆண்டுகள் ஆகிவிட்டன .இந்த நிகழ்ச்சியை எப்படி ஏற்பாடு செய்தேன் தெரியுமா
மூன்று மாதங்களுக்கு முன்பாக எனது மேலாளரை வைத்து இந்த அரங்கினை ஒப்பந்தம் செய்தேன் .வை.கோ.வின் பொதுவிழா பொன்விழா நிகழ்ச்சியாகத்தான் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . ஒரு வாரத்திற்கு முன்புதான் இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவாக உருவெடுத்தது .என் வாழ்வில் இனி
பொன்விழா கிடையாது. என் தோழர்கள் வருத்தப்படலாம் . எனக்கென்று நான் விழா நடத்தப்போவதில்லை .நான் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் தமிழ் பேச்சால்,எழுத்தால் உணர்வால் ,கல்கியின் படைப்புகளால்
திராவிட இயக்கத்தில் சேர்ந்தேன் .5 ஆண்டுகள் சிறையில் இருந்தேன் .மனம் விட்டு சொல்கிறேன். கோடானுகோடி மக்களின் இதயங்களில் அண்ணாவின் இயக்கத்தை கொண்டுபோய் ஒளிச்சுடர் ஆக்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
என்கிற உண்மையான வரலாற்றை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது .
எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள்சொல்ல, சொல்ல நான் வியந்து போயிருக்கிறேன் .இலங்கையிலே , ஈழ தமிழர்கள் நாதியற்று கிடந்தபோது அவர்களுக்கு வாழ்வளித்த ஒரே தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான் என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது .கடந்த 15 நாட்களில் சுமார் 40 புத்தகங்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி படித்து தெரிந்து கொண்டேன் .மெய் சிலிர்த்து போனேன்
தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!
தினமணி கதிர் -09/04/2017
http://i63.tinypic.com/ztivc0.jpg
தினமலர் -வாரமலர் -09/04/2017
http://i66.tinypic.com/imuyp1.jpg
http://i65.tinypic.com/28roak2.jpg
நாளை காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/1z1h1ue.jpg
கோவை வேல்முருகன்
திரை அரங்கில்
இன்று முதல்
நேற்று இன்று நாளை