-
எம் ஜி ஆர் பலம்
துப்பாக்கி சூடு பட்டு தமிழக ஆட்சியை திராவிடர் ஆளவைத்தது எம் ஜி ஆர் மக்கள் சக்தி
தி மு க வில் ஊழல் மந்திரிகள் சொத்து கணக்கு காட்டவேண்டும் எனகேட்ட எம் ஜி ஆரை தி மு க வை விட்டு விலக்கியதை கண்டித்து தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மந்திரி முதல் எந்த வாகனமும எம் ஜி ஆர் படம் இல்லாமல் வலம் வர முடியாத நிலை உருவானது எம் ஜி ஆர் மக்கள் பலத்தால்
முதல் ஊழல் பட்டிகை கவர்ணரிடம் அளிக்க எம் ஜி ஆர் தலைமை ஊர்வலம் சென்னை குலுங்க வைத்தது எம் ஜி ஆர் மக்கள் பலம்
அ தி மு க தொடங்கி எதிரியை வீழ்த்தி எம் ஜி ஆரை ஆளவைத்தது எம் ஜி ஆர் மக்கள் பலம்
களம் காணமல் வெற்றி காண செய்தது எம் ஜி ஆர் மக்கள் பலம்
எதிரியே வெற்றியை தரவைத்தது எம் ஜி ஆர் மக்கள் பலம்
எம் ஜி ஆரை அல்ல எம் ஜி ஆர் புகழை கூட எவராலும் நெருங்க விடாது எம் ஜி ஆர் மக்கள் பலம்
மக்களுக்காக எம் ஜி ஆர்
எம் ஜி ஆருக்காக மக்கள்
இதுவே எம் ஜி ஆர் யுகம் அன்றும் இன்றும் என்றும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்..... Courtesy: fb.,
-
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
Prepared by Peru Thulasi Palanivel :-
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.
* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.
* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.
எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.
எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா நடிகர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது .
எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.
எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.
எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'ராணி சம்யுக்தா', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.
எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.
எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.
எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
தொடரும்..........
படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....... Thanks fb.,
-
மேற்கண்ட பதிவில் சில திருத்தங்கள்... ""ஆயிரத்தில் ஒருவன்" பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மூன்றாவது (3) வண்ணப்படம், மக்கள் திலகம் அவர்களுக்கு இந்த நிறுவனத்தில் முதல் கலர் படம்.... சென்னை - சத்தியம் 70mm a/c திரையரங்கில் முதன் முதலாக 105 கடந்து வெற்றிகரமான வசூல் படைத்தது வசூல் சக்ரவர்த்தி "இதயக்கனி" காவியம்...
-
அதோடு எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் முதல் முழுநீள வண்ண காவியம் "அடிமைப்பெண்", ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை முதல் வண்ண காவியம். "மாட்டுக்கார வேலன்", சத்தியா மூவிஸ் முதல் கலர் காவியம் "ரிக்க்ஷாக்காரன்", நியோமணிஜெ சினி productions முதல் கலர் காவியம் " நீரும் நெருப்பும்", வள்ளி பிலிம்ஸ் முதல் கலர் காவியம் "சங்கே முழங்கு", நடிகை K R. விஜயா முதல் சொந்த தயாரிப்பு கலர் காவியம் "நான் ஏன் பிறந்தேன், உதயம் ப்ரொடக்ஷன்ஸ் முதல் கலர் காவியம் "இதயவீணை", பி.எஸ். ரங்கா productions முதல் கலர் காவியம் "பட்டிக்காட்டு பொன்னையா", நடிகர் S A. அசோகன் தயாரித்த முதல் கலர் காவியம் " நேற்று இன்று நாளை", ஓரியண்டல் பிக்சர்ஸ் முதல் வண்ண காவியம் "நினைத்ததை முடிப்பவன்" என நிறைய தகவல்கள் விடுப்பட்டுள்ளது...
-
மக்கள் திலகம் அவர்களுக்கு அன்பு வணக்கம் ,
உங்களின் பசுமையான நினைவுகளோடு நாங்கள் தினமும் மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறோம் .நீங்கள் உருவாக்கிய இயக்கம் இன்று இருக்கும் நிலைமையை பார்த்தால் எங்களை போன்ற உணர்வு தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் சற்று வருத்தமாக உள்ளது . இருந்தாலும் உங்கள் திருமுகத்தை கண்டவுடன் எல்லாம் மறந்து போகிறது .
உங்கள் காலத்தில் அமைச்சர்கள் அனைவரும் சிறப்பாக செயலாற்றினார்கள் . கட்சித்தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் எல்லோருமே கட்டுப்பாடுடன் இருந்தார்கள் .உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா தலைமையில் கட்சி சென்றபின் உங்கள் இயக்கம் , உங்கள் சின்னம் கொடி வைத்து கொண்டு ஆட்சி அமைத்தார்கள் .
உங்கள் கொள்கைகள் காற்றில் பறக்க விட்டார்கள்
உங்கள் பெயரை உதட்டளவில் உச்சரித்தார்கள்
உங்கள் புகைப்படத்தை சுருக்கி விட்டார்கள்
உங்கள் பெயரை உச்சரிக்க மறந்தார்கள்
கூடா நட்பு
அளவிற்கு மீறிய சொத்து குவிப்புகள்
அதிகார போதையில் உங்களை மறந்தார்கள்
காலம் விழித்து கொண்டது
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .
உங்கள் நினைவில் நாங்கள் என்றென்றும் வாழ்கிறோம் .
திருந்தாக உள்ளங்கள் திருந்த வேண்டும் .
நம்பிக்கையுடன்
உங்கள் தொண்டர்கள் ........ Thanks fb.,
-
விழா அழைப்பு ...!
*********************
கருணைக் கடவுள் வற்றாத ஜீவநதி வள்ளல் எம்ஜிஆரின் வரலாறு காக்கும் வைராக்கிய பக்தர்களே... தொண்டர்களே...
இனிய உறவு வணக்கம். பாரத்தவர்கள் பரவசம் கொண்டு பாராட்டும் வகையில் ,
எம்ஜிஆருக்கும் -- ஏழை தொண்டனுக்கும் உள்ள வெறித்தனமான பாசப் பிணைப்பை அடையாளம் காட்டும் விழாக்களை எடுத்து , உள்நாடு முதற் கொண்டு அயல்நாடு வரை , மக்கள் ஆதரவுப் பெற்ற பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை (ம) திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் சார்பில் , இருபெரும் விழா இரண்டு ஊரில்...
"புகழ் காக்கும் புகழ் மனச் செம்மல் விழா"
இதயதெய்வத்தின் இதயங்களே...!
உறவுகளோடு ஒன்றிணைந்து விழா சிறக்க வாருங்கள்.
மங்கா புகழின் மாணிக்கத் தலைவர் எம்ஜிஆரின் காலத்தால் அழியாத காவியப் பாடல்கள் பாடி அசத்த ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் , மலேசியா புகழ் பொன்மனச்செம்மல் கலைக்குழு மேகநாதன் வழங்கும் மாபெரும் இசை விருந்து.
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் 1958 , 1968 , 1978 ஆண்டில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆரின் கொள்கை , வீரம், தத்துவம் நிறைந்த (ம) காதல் ரசனை மிகுந்தப் பாடல்கள் உங்கள் இதயங்களை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை... விழா நாள , தேதி மிக விரைவில்....
விவரம் அறிய....
எம்ஜிஆரின் நிழல் கானா க. பழனி (பெங்களூர்) 9900902321
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா (திருவண்ணாமலை) 9443019160
மேலும்.....
மு. தமிழ்நேசன் (மதுரை)
பிரகாஷ் (எ) முருகன்
ஓவியர் என். பாஸ்கரன்
சம்பங்கி GSR
ராஜசேகர்
நன்றி 🙏....... Thanks wa.,............
-
இடையில் வந்தவர்கள் இடையில் போகிறார்கள் .கவலை பட ஏதுமில்லை . உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகளை ஜெயலலிதா துரத்தி அடித்தார் .அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள் . எம்ஜிஆரை மறந்த இன்றைய அதிமுக கூடாரம் இனியாவது விழித்து கொள்ளட்டும் .
எம்ஜிஆர் படத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டும் விளம்பரங்களில் மூலையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு எம்ஜிஆர் படத்தை போட்டும்
எம்ஜிஆரை மறந்து விட்ட நபர்களை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ? ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு எம்ஜிஆரை முன்னிலை படுத்த விரும்பாதது .இன்று மக்கள் ஜெயலலிதாவை மறந்து வருகிறார்கள் ,இது உண்மை ... Thanks wa...........
-
வருகிறார்!! வரவேற்போம்!!
--------------------------------------------------
சமுத்திரத்தின் மேற்புறம் ஆரவாரமாகவும்--
ஆழ் கடல் அமைதியாகவும் இருக்கையில்--
நடுப்பகுதியில் ஒரு சத்தமில்லா அதிர்வு எப்போதும் கண்ணுக்குத் தெரியாத மின்னதிர்வாக ஓடிக் கொண்டே இருக்கும்!!
இது தான் ஒட்டு மொத்தக் கடலுக்கே மூலமான-உயிர் நாடி!!
அஃதைப் போலவே---
அரசியல் கடலின் மின்னதிர்வு??
சைதை சா.துரைசாமி!!
எம்.ஜி.ஆரின் தம்பிகளிலேயே மிகச் சிறந்த-
மனித நேயர்!
முன்னாள் மேயர்!!
ஆண்டு ஒன்றுக்கு ஆயிரக் கணக்கில் மாணவர்களுக்கு இலவசமாக--
அறிவை ஏற்றுமதி செய்து அவர்களின் திறனை உலகம் எங்கும் இறக்குமதி செய்ய வைத்துக் கொண்டிருப்பவர்!!
எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுத்த எம்.ஜி.ஆர்---
இவருக்கு மட்டுமே தன்--
உதவும் மனித நேயத்தையும்--
ஊற்றெடுக்கும் கொடைத் தன்மையையும்-
உயிலாக எழுதி வைத்திருக்கிறார்??
எம்.ஜி.ஆரைப் போலவே அயல் நாட்டில் நம் தமிழகத்தைத் தலை நிமிரச் செய்திருக்கிறார் சைதையார்!!
இங்கிலாந்து இளவரசரால் பக்கிங்காம் அரண்மனையில் அவர் பெற்ற கௌரவம் அகில இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் ஒன்று! அதைப் பற்றி விரைவில் தனிப்பதிவிடுவேன்!!
ஊருக்கும் பேருக்கும் விளம்பரமாக இல்லாமல்-வேருக்கு நீர் பாய்ச்சி சீருக்கு வழிகாட்டும் செம்மல் எம்.ஜி.ஆரை அழகுபடுத்தும்-ஆபரண-
கம்மல் என்று இவரை நினைப்பின்--ஆனந்த--
விம்மல் ஒன்று நம் அனைவர் அடி வயிற்றிலிருந்தும் எழுவது இயல்பே!!
16--02--19!!
அகவை 67க்கு விடை சொல்லி 68இல் அடி வைக்கிறார் நம் சைதையார்!!
களை கட்டுகிறது சென்னை!
களத்தில் ஓமப்பொடியார்!!
ஆம்!! சைதையாரின் பிறந்த நாளில் எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கொண்ட எழுச்சி மிகு போஸ்டர்கள் நகரம் எங்கும் நறு மணத்தோடு இப்போதிலிருந்தே சைதையாரின் பிறந்த நாள் வைபவத்தை முழங்கிக் கொண்டிருக்கிறது!!
தனி ஒரு ஆளாக இந்தத் தகைமையைச் செய்திருப்பவர் நம் ஓமப்பொடியார்!!
எம்.ஜி.ஆரின் பிம்பமாக அவர் வழியில் அவர் கொள்கையைக் கடை பிடிக்கும் சைதையாரை
ஆராதிக்காமல் ஆரை ஆதரிப்பது?? என்று கேட்கும் ஓமப்பொடியார் ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தமது
ஊனை வருத்தி உணவை நிறுத்தி உறக்கம் தொலைத்து இந்த உன்னதப் பணியைச் செய்திருக்கிறார்!!
அண்ணா 67 இல் ஆரம்பித்ததை நம் சைதை--அண்ணா 67 முடிவில் அரசியலில் மீண்டும் ஆரம்பித்தால் நாம் ஆனந்தப் படுவோம் தானே??
உணவு--ஒழுங்கான பழக்க வழக்கங்கள்-இப்படி
அன்றும் பதினாறு இன்றும் பதினாறு என்றும் பதினாறு என்று உலவும் நம் சைதையாரின்--அகவைத் திரு நாளும் பதினாறு??--அந்த நாளில் புக-வை பதினாறையும் அவர் வாழ்வில்! என்று வாழ்த்துவதைத் தவிர நமக்கு வளமான வாய்ப்பு வேறு என்ன இருக்கிறது தோழமைகளே????... Thanks wa., Sharing...
-
இந்திய தாய்த்திரு நாட்டை ஆட்சி புரிந்த பிரித்தானிய இளவரசியின் பக்கிங்காம் அரண்மனையின் அழைப்பும் விருந்தும் தங்களின் சேவைக்காய் கிடைத்த பாராட்டு-எம் செவிகளுக்கு இனிமைச் சேர்க்கும் தாலாட்டு. ஆம்! எண்ணிப்பார்க்க முடியாத மகிழ்ச்சியில் - என் இதயம் பூரிப்படைகிறது! தங்களை நட்சத்திர விடுதியில் தங்க வைத்து பாரம்பரிய ஆடையாம் வேட்டி, சட்டை அணிந்து தங்களின் புதல்வன் 'வெற்றியுடன்' விலை உயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் வாகனத்தில் அழைத்துச் சென்ற காட்சியை அருகிலிருந்து பார்த்து ரசித்த நான் பரவசமடைந்து போனேன்! ஓங்கி உயர்ந்த அரண்மனையின் ஒளிர்விடும் வெளிச்சத்தில் உல்லாசமாய் நடைபயின்று -சேவை எனும் சிறப்பின் மூலம் பக்கிங்காம் அரண்மனையில் காலடி வைத்து விருந்தோம்பலுக்கு விடையம் கற்பித்த வினோத மனிதன் அண்ணன் சைதையாரே! உலக் வல்லரசின் அரண்மனை விருந்தில் பங்குபெறுவது அனைவருக்கும் கிடைக்கின்ற வாய்ப்பல்ல. உம் சேவையால் கிடைத்த அரிய வாய்ப்பு. ஆம்! உமக்கு பெருமை!உமையீன்ற தாய் தந்தையருக்குப் பெருமை! உமை தமிழகத்தின் மேயராக்கிய சென்னை மாநகர மக்களுக்குப் பெருமை! உமை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த சைதை மக்களுக்குப் பெருமை! ஏன்? ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கே பெருமை! சேவையாலும் கொடை தன்மையாலும் உயர்ந்த மனிதப்புனிதன் MGR க்கு புகழ் சேர்த்த உன்னதத் தொண்டரே! உம்மை ஊர் போற்றட்டும்! உங்களின் சேவையை தாய்திரு நாடு போற்றட்டும்! இவ்வுலகம் போற்றட்டும்! சென்னைப் பட்டிணமே சிறப்பு சேர்க்கட்டும்! இதய தெய்வத்தின் இதயங்கள் போற்றட்டும்! சைதை எனும் அடை மொழியால் தங்களின்"சேவை" சரித்திரம் படைக்கட்டும். 05/02/19 மறக்க முடியாத அன்றைய நாள்! இரவு நிகழ்ச்சிக்குப்பின் தங்களுடன் தொலைபேசியில் நிகழ்ச்சி பற்றி கேட்ட போது, தாங்கள் சொன்ன அந்த செய்திகள் எனக்கு பெரிய மகிழ்ச்சியினை தந்தது. இளவரசர் சார்லஸ் அவர்கள் உங்களுடனும் வெற்றியுடனும் சில நிமிடங்களுக்கு மேல் பேசிய நிகழ்வு என் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியது! இவையெல்லம் தங்கள் சேவையின் அடையாளத்திற்க்கானது. ஆம்! தங்கள் வாழ்க்கையின் ஒரு பெரிய வரலாற்றுப் பதிவு இது. மேலும் இப்படி ஒரு பெரும் புகழை, பெருமைக்குரிய நிகழ்வை இப் பிரித்தானிய மண்ணில் விதைத்துவிட்டு சென்ருக்கின்ற தங்களை, புரட்சித்தலைவர் MGR ன் தொண்டன் என்கின்ற முறையில் இருகரங்கள் கூப்பி வணங்கி வழியனுப்பி வைக்கின்றேன். இவண் Dr. வி. சௌந்திர ராஜன் லண்டன் MGR பேரவை, குறைடன்....... Thanks wa., sharing...
-
1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்
மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
3. கம்பெனி முதலாளி
4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்........... Thanks wa.,