-
ரத்த திலகம் விமர்சனம்
http://i872.photobucket.com/albums/a...iewkalkifw.jpg
இத் திரைக்காவியத்தைப் பற்றிய சில துளிகள்
நடிகர் திலகத்தை இயக்குநர் தாதா மிராசி முதல் முதலாக இயக்கிய படம்
இந்திய சீன யுத்தத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப் பட்டது.
அன்பு திரைக்காவியத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் திலகம் நடித்த ஒத்தெல்லோ நாடகம் இடம் பெற்றது.
மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டியது. நடிகர் திலகத்தின் படங்களின் தொடர் அணிவகுப்பினால் சற்றே பாதிக்கப் பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
பிரிவுபச்சாரத்திற்கென்று எந்த விழாவிலும் கட்டாயமாக இடம் பெறும் பாடல்
பசுமை நிறைந்த நினைவுகளே
இப்படத்திற்காக பதிவு செய்யப் பட்ட இனிமையான டூயட் பாடல் படத்தில் இடம் பெறவில்லை. சௌந்தர் ராஜன், ஈஸ்வரி குரல்களில் மிகவும் அருமையான பாடல் இதோ கேட்டு மகிழுங்கள்
தாழம்பூவே தங்க நிலாவே
மற்ற பாடல்கள்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - கவியரசர் கண்ணதாசன் தோன்றி நடித்த காட்சி
வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா - ஈஸ்வரியின் குரலில் இனிமையான பாடல்
பனிபடர்ந்த மலையின் மேலே - மிகச் சிறந்த பாடல். தேச பக்திக்கு மிகச் சிறந்த உதாரணம். மேலே பம்மலார் தந்துள்ள நிழற்படம் இப்பாடல் காட்சியில் இடம் பெற்றதாகும்.
அன்புடன்
-
-
'இரத்தத் திலகம்' சிறப்பு நிழற் படம்.
http://i1087.photobucket.com/albums/...1355/jjjjj.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
'ஒதெல்லோ' வாக உயர்ந்த மனிதர். (இரத்தத் திலகம் ஸ்பெஷல்)
http://i1087.photobucket.com/albums/...5/VTS_03_1.jpg
ராணுவ அதிகாரியாக நம் அன்புத் தெய்வம்.
http://i1087.photobucket.com/albums/..._003287531.jpg
வித்தியாசமான தோற்றத்தில் 'விளையாட்டுப் பிள்ளை'
http://i1087.photobucket.com/albums/..._000142623.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
தங்கள் அன்புக்கு நன்றிகள் பம்மலார் சார்.
டியர் ராகவேந்திரன் சார்,
பெங்களூரில் வசந்த மாளிகை ரிலீஸாகும் போது அரங்கில் பேனர்கள் எப்படியிருக்கும் என்ற உங்கள் கற்பனைக்கு அன்பான பாராட்டுக்கள். நேரிடையாக பெங்களூருக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். படத்தையும் பார்த்தது போன்ற உணர்வையும் ஏற்படுத்தி விட்டீர்கள். அருமையான அபாரமான உழைப்பு. மனமுவந்த பாராட்டுக்கள்.
செந்தாமரை பாடல் புத்தகத்தின் நிழற் படம், படத்தின் பாடல்களைப் பற்றிய குறிப்புகள்,கல்கி இதழில் வெளிவந்த விமர்சனம்,முதல் வெளியீட்டுக்கு முன்னமே வந்த விளம்பர கட்டிங்,எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போன்று அந்த' வாரணம் ஆயிரம்' அற்புதப் பாடலின் வீடியோக் காட்சி என அசத்தல்களாக அமுது படைத்து விட்டீர்கள். சூப்பர் சார்.
மகிழ்ச்சியுடன்,
வாசுதேவன்.
-
ஒப்புயர்வில்லாத எங்கள் 'ஒதெல்லோ'
ஒதெல்லோவாக நடிப்புலகச் சக்கரவர்த்தி வாழ்ந்து காட்டி உலக அரங்கில் உள்ள அனைவரையும் அதிசயப் பட வைத்த, இரத்தத் திலகத்தில் வரும் ஓரங்க நாடகத்தின் அரிய காட்சி. நாம் காண்பது தமிழ்ப்படம்தானா தமிழ் நடிகர்தானா அல்லது ஹாலிவுட் படமா நடிப்பது ஆங்கிலத் திரைப்பட நடிகரா என்ற அளவில்லா ஆச்சரியத்தையும், வியப்பையும்,பிரமிப்பையும் ஏற்படுத்திய அபார நடிப்புத்திறமையை நம்மவர் வெளிக்கொணர்ந்த காட்சி. மெய் சிலிர்க்க வைக்கும் கம்பீர போஸ்கள். கண்டு களிப்போமா!...
http://www.youtube.com/watch?v=lSAcV...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
திரு. பம்மலார், திரு.ராகவேந்திரன், திரு.வாசுதேவன் ஆகியோரின் - செந்தாமரை, ரத்தத்திலகம் படவரிசை பதிவுகள் அருமை. திரு . ராகவேந்திரன் அவர்கள் பதிவு செய்த கல்கி விமர்சனத்தில், ரத்த திலகம் திரைப்படத்தில் வரும் ஒத்தெல்லோ நாடகத்தைப் பற்றி குறிப்பிட்டிருப்பதே ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல அமைந்துள்ளது. நன்றி.
-
'தாவணிக் கனவுகளுக்காக' நம்மை வரவேற்கும் தாரணி போற்றும் தவப்புதல்வன்.
http://i1087.photobucket.com/albums/...n31355/tha.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
Mr. PAMMALAR,
neenggal ungal friendsai vittu kodukkamal pesureenga. thats ok.
But it is my duty to admire and appreciate your 'vilai madhikka mudiyaatha' efforts to collect and publish the very very rare advertisements of Shivaji movies, which are the records of the past history of the movies. These apprecialtions come from the bottom of my heart.
Very good and keep it up.
Mr. RAGHAVENDHAR,
Thanks for your nice response, which shows you are a true gentleman.
-
சக்திப்ரபா மற்றும் ராஜேஷ்,
நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் இருவரின் பதிவுகளை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'எப்பவாவது சந்திக்கும்போது கொஞ்சம் சந்தோஷம்தான் கிடைக்கும், அடிக்கடி சந்தித்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்' (சிவந்த மண் வசனம்).
சக்திப்ரபா,
உங்கள் 'அவன்தான் மனிதன்' விமர்சனம், 'இவர்தான் ரசிகை' என்று சொல்லும் அளவில் சிறப்பாக அமைந்துள்ளது. வழக்கமாக நடிகர்திலகம் படங்களில், அவர் இறந்துபோவது போன்ற கிளைமாக்ஸ் அமைந்த படங்கள் உங்களுக்குப்பிடிக்காது என்பது நாங்கள் அறிந்தது. அதனால்தான், ஆனானப்பட்ட 'ராஜபார்ட் ரங்கதுரை'யே தங்களுக்குப்பிடிக்காது என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள். அந்த விஷயத்தையும் மீறி 'அவன்தான் மனிதன்' உங்களூக்குப் பிடித்திருப்பது எங்களுக்கு சந்தோஷமளிக்கிறது.
ஒருகாலத்தில் நீங்களும் உங்கள் நெருங்கிய தோழி (எங்கள் சகோதரி) சாரதாவும் இந்த திரியில் நிறைய எழுதுவீர்கள். இப்போது உங்களையும் ரொம்ப நாளாக காணோம். அவரும் நிறைய இடைவெளி விட்டுத்தான் வருகிறார். இனிமேலாவது உங்கள் பங்களிப்புகளை (பழையபடி) எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை இங்கே பதியுங்கள்,