மகராசி வாழ்க... மெல்லிசை மன்னரின் இசையில் மறக்க முடியாத அத்தாணி மண்டபத்தில் பாடல் நம் அனைவர்க்கும் நினைவிருக்கும். ஆனால் இதே படத்தில் வாணி பாடிய இப்பாடல் எப்பேர்ப்பட்ட ஈடு செய்ய முடியாத குரல் வளம் கொண்ட பாடகியை இந்தித் திரையுலகம் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பது நம் மனதில் தோன்றும் எண்ணம்.
குறிப்பாக இப்பாடலில் உள்ள நுணுக்கங்கள் வாணி ஜெயராம் அவர்களால் மட்டுமே சாத்தியம்.
பாடலின் பதிவுத்ததரம் நடுவில் சற்றே குறைகின்றது. என்றாலும் நினைவில் நீங்கா பாடலாயிற்றே..
வேகம் என்ற வார்த்தை சொல்லும் போது அவர் தரும் சங்கதியும் பின்னணியில் தபேலாவின் இணைப்பும் நம்மை சொக்க வைக்கும்.
http://www.inbaminge.com/t/m/Maharasi%20Vazhga/